வியாழன், 10 ஜனவரி, 2013

உலக நாயகன் ஆதவன்

*** உலக நாயகன் ஆதவன் ஆதவனின் சக்தியாகிய வெப்பம் மற்றும் வெளிச்சத்தின் சக்தியைக் கொண்டுதான், இப்புவியில் மரம், செடி, கொடி, புல் பூண்டு மற்றும் மிருகம், பறவை இன்னும் புழு, பூச்சி இனங்கள் முதல் மனித குலம் வரை அனைத்துமே தோன்றி வளர்ந்து, இப்புவியைத் தழைக்கச் செய்கின்றன. சூரியனின் உதவியின்றி எந்த ஓர் உயிரினமும் பூமியில் தனது உணவைப் பெற்றுவிட முடியாது. அதுமட்டும் அன்றி, புவியின் அனைத்து உயிரினங்களின் வாழ்வுக்கும் ஒவ்வாதவற்றை அழித்து, அவற்றின் சுகாதாரமான நலவாழ்வை உறுதி செய்வதும் சூரியனே! இயற்கைப் படைப்புகளின் இயக்கத்திற்கும், பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுக்கும் மூலாதாரக் காவலனாக விளங்குவதும் சூரியன்தான். சூரிய வழிபாடு பழைய வழிபாடு உலகின் தொன்மைப் படைப்பான வேதங்களில்,சூரியனின் பெருமைகள் கூறப்பட்டுள்ளன. பண்டைய எகிப்தில் பல சூரியக் கோயில்கள் இருந்துள்ளன. சூரிய வழிபாடு நடந்துள்ளன. இங்கிலாந்தின் பூர்வ குடிகள், திறந்த வெளியில் சூரிய பூஜையை நடத்தினர். வேறு சில நாடுகளில் சூரியச் சிலைகள் அரசனின் உருவத்தில் அமைக்கப்பட்டன. அவற்றுக்குத் தலைக் கவசம், உடற் கவசம் மற்றும் காலணிகள் இருந்தன. நேபாளத்தில் இன்றும் சூரியக் கோயில்கள் உள்ளன. அங்கு முறைப்படி சூரிய வழிபாடு நடைபெறுகிறது. பொங்கல் பலவிதம் பொங்கல் பண்டிகை இந்தியா முழுவதும் பல பெயர்களில் கொண்டாடப் படுகின்றது. அஸ்ஸாம்,மணிப்பூர் போன்ற இடங்களில் ‘போகாலி பிகு’ என்ற பெயரில் இந்த விழா அறுவடைத் திருவிழாவாகக் கொண்டாடப் படுகின்றது. பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களில் ‘லோகிரி‘ என்று அழைக்கப் படுகின்றது. குஜராத், மஹாராஷ்ட்ரா போன்ற மாநிலங்களில் ‘மகர சங்கராந்தி‘ என்ற பெயரில் அழைக்கப் படுவதுடன் அன்று எள்ளுடன் சேர்த்த இனிப்புகளையும் பரிமாறிக் கொள்வார்கள். பஞ்சாப், ஹரியானாவில் சோளப்பொரி, அரிசி போன்றவற்றில் இனிப்புச் சேர்த்து நெருப்பில் இட்டு ஆடிப் பாடுவார்கள். காஷ்மீரத்தில் இந்நாளில் பருப்பு, அரிசி, நெய் கலந்த கிச்சடி செய்து அனைவருக்கும் விநியோகித்துக் கொண்டாடுகின்றனர். சூரிய நமஸ்காரம் செய்யலையா? <தை அமாவாசைக்குப்பின் வரும் சப்தமி நாளன்று சூரியனின் சக்தி அதிகமாக இருப்பதால், இதுவரை சூரிய நமஸ்காரம் முறையாகச் செய்யாதவர்கள், அன்று முறைப்படி தொடர்ந்து கடைப்பிடித்தால் உடல் நலம் வளம் பெறும்; கண்ணொளி பிரகாசிக்கும்.< <சூரியனுக்குப் பல பெயர்கள் சூரியன் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு பெயரைப் பெறுகிறான். தை மாதத்தில் விஷ்ணு, மாசியில் வருணன், பங்குனியில் பூஜா, சித்திரையில் அம்சுமான், வைகாசியில் தாதா, ஆனியில் சவிதா, ஆடியில் அரியமான், ஆவணியில் விஸ்வான், புரட்டாசியில் பகன், ஐப்பசியில் பர்ஜன்யன், கார்த்திகையில் துவஷ்டா, மார்கழியில் மித்திரன்.< குதிரை பொங்கல்! <பொங்கல் விழா ஜப்பானிலும் கொண்டாடப்படுகிறது. நாம் பால் பொங்கும்போது ‘பொங்கலோ பொங்கல்’ என்று குரல் கொடுப்பதுபோல், ஜப்பானியர்கள் ‘ஹங்கரோ... ஹங்கரோ...’ என்று குரல் கொடுப்பார்களாம். பொங்கலுக்கு மறுநாள் நாம் மாட்டுப்பொங்கல் கொண்டாடுவதுபோல, ஜப்பானில் குதிரைப் பொங்கல் கொண்டாடுவார்கள். அன்று குதிரைகளை நன்கு தேய்த்துவிட்டு அலங்காரம் செய்து, மலர் மாலைகள் சூட்டி, குதிரைகளுக்கு இனிப்புக் கொடுப்பது வழக்கம். - தேவராஜன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக