சனி, 19 ஜனவரி, 2013

குட்டீஸ் கேள்விபதில் 7

குட்டீஸ் கேள்விபதில் 7 மார்ச்16 பிக் பேங் தியரி என்பது என்ன? விளக்கம் சொல்லுங்க அங்கிள்! - ஜி. ஸ்ரீநிதி, ஸ்ரீரங்கம் பெரு வெடிப்புக் கோட்பாடு என்பது இதன் பொருள். உலகம் எவ்வாறு தோன்றியது என்பது பற்றி விளக்க முயலும் ஒரு கோட்பாடு. இதுவரை முன்வைக்கப்பட்ட உலகின் தோற்றம் பற்றிய கோட்பாடுகளில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது இதுதான். இந்தக் கோட்பாடு 20ம் நுõற்றாண்டுத் தொடக்கத்தில் வெளியான இரண்டு முக்கிய கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் உருவானது. ஒன்று ஐன்ஸ்டீனுடைய பொதுச்சார்புக் கோட்பாடு, மற்றது அண்டவியற் கொள்கை. பொதுச்சார்புக் கோட்பாடு, உலக வெளியில் உள்ள பொருட்களிடையே காணப்படும் ஈர்ப்புத் தோற்றப்பாடானது மேற்படி பொருட்களின் திணிவுகளினால் பாதிக்கப்பட்டு வெளியும், காலமும் திரிபடைந்த ஒரு நிலையே என்று கூறுகின்றது. உலக வெளியில் உள்ள பொருள்கள் வெளியில் ஒரே சீராகப் பரவியிருக்கின்றன என்பதை அடிப்படையாகக் கொண்டது அண்டவியற் கொள்கை. பெரு வெடிப்புக் கொள்கையின்படி உலக வெளியில் உள்ள பொருட்கள் அனைத்தும் 14 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் மிக அதிகமான அடர்த்தியுடன் கூடிய, சிறிய அளவிலான தீப்பிழம்பாக இருந்திருக்கிறது. இன்று அறியப்படுகின்ற உலகத்திலுள்ள பொருட்கள் அனைத்தும் சில மில்லி மீட்டர்கள் அளவுக்குள் அடங்கி இருந்திருக்கும் எனக் கணிப்பிடப்படுகின்றது. இத்தீப்பிழம்பானது, இன்று அறியப்படாத ஏதோ ஒரு காரணத்தினால் மிக வேகமாக விரிவடையத் தொடங்கிற்று. இதுவே பெரு வெடிப்பு எனப்படுகின்றது. ஒவ்வொரு விநாடியும் பல மடங்காக இவ் விரிவாக்கம் நடந்ததாக அறிவியலாளர்கள் கூறுகின்றனர். இவ்வாறு விரிவடைந்தபோது வெப்பம் தணிந்த வாயுக்கள் ஆங்காங்கே நட்சத்திரக் கூட்டங்களாக உருவாகி இருக்கக்கூடும் என அவர்கள் கூறுகிறார்கள். * பனை வெல்லம் எப்படி தயாரிக்கப்படுகிறது? - கணேசன், காரைக்கால். கரும்பு அல்லது பனையிலிருந்து வெல்லம் தயாரிக்கப்படுகிறது. கரும்புச் சாறோ பனம்பாலோ ஒரு பெரிய அகண்ட வாணலியில், திறந்தவண்ணம், 200 டிகிரி சென்டிகிரேட் சூட்டில் வெகு நேரம் கொதிக்க வைக்கப்படுகிறது. இதனால் கரும்புச்சாறில் அல்லது பனம்பாலில் உள்ள நீர் ஆவியாகி பாகு போன்ற பதம் பெறப்படுகிறது. கொதி நிலையில் உள்ள பாகை அச்சில் ஊற்றி, உலர வைத்த பின், வெவ்வேறு வடிவங்களில் விற்பனை செய்யப்படுகிறது. கைகளால் பிடித்து உருட்டப்பட்ட வெல்லம், மண்டை வெல்லம் எனவும் அச்சுக்களில் ஊற்றி வடிவமைக்கப்பட்ட வெல்லம், அச்சு வெல்லம் எனவும் அழைக்கப்படுகிறது. * அங்கிள்,கோபப்படும்போது சிலருக்கு கண்கள் சிவப்பது ஏன்? - எஸ். செந்தில்குமார், தண்டராம்பட்டு. செந்தில், உங்கள் கேள்விக்கான பதில் இதோ! நம் உடலில் அட்ரினலின் என்ற ஹார்மோன் சுரக்கிறது. இந்த ஹார்மோன் அவசர காலத்தில் அதாவது சண்டையிடுதல்,கோபப்படுதல், பயப்படுதல், ஓடுதல், அதிக எடையுள்ள பொருட்களை மூச்சைப் பிடித்து துõக்குதல் போன்ற செயல்களில் ஈடுபடும்போது, அதிக அளவில் ரத்தத்தில் இருந்து விடுவிக்கப்படுகின்றது. இதன் விளைவாக நம் உடல் துரிதமாக செயல்படும். அப்போது இதயத்துடிப்பு அதிகரிக்கும். ரத்தக்குழாய்கள் சுருங்கி, அழுத்தம் அதிகரிக்கும். இந்த சமயத்தில் காதுமடல், கண், மூக்கு நுனி, முகப்பரு அனைத்தும் சிவப்பேறி காணப்படும். *************************************************************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக