திங்கள், 21 ஜனவரி, 2013

குட்டீஸ் கேள்வி பதில் 51

குட்டீஸ் கேள்வி பதில் 51 25.01.2013 உலகளாவிய வலைப்பின்னல் எப்படி தோன்றியது? - மு. கலைவாணன், களம்பூர். ஙிணிணூடூஞீ ஙிடிஞீஞு ஙிஞுஞ என்பது அலுவலகரீதியாக இடையில் இணைக்கோடு எதுவும் இன்றி, மூன்று தனித்தனி சொற்களாக, ஒவ்வொன்றும் பேரெழுத்தாகக் குறிக்கப்படுகிறது. உலகளாவிய வலை (ஙிணிணூடூஞீ ஙிடிஞீஞு ஙிஞுஞ, தீதீதீ, பொதுவாக ’வலை‘ எனச் சுருக்கமாக அழைக்கப்படுவது) என்பது இணையத்தின் வழியாக அணுகப்படும், ஒன்றுக்கொன்று இணைக்கப்பட்ட ஆவணங்களைக் கொண்டுள்ள அமைப்பாகும். ஓர் வலை உலாவியைக் கொண்டு செய்திகள், படங்கள், வீடியோக்கள் மற்றும் பிற பல்லுõடகக் கூறுகளை வலைப் பக்கங்களைக் காணவும், இணைப்புகளைப் பயன்படுத்தி அவற்றில் ஒன்றிலிருந்து ஒன்றுக்கு செல்லவும் முடியும். இதற்கு முன் உள்ள அடிப்படைகளைப் பயன்படுத்தி, 1989ம் ஆண்டு ஆங்கில இயற்பியல் ஆய்வாளரும் உலகளாவிய வலைச் சங்கத்தின் இயக்குநருமான சர் டிம் பெர்னெர்ஸ்-லீ என்பவர் உலகளாவிய வலையைக் கண்டறிந்தார். பின்னாளில் சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் உள்ள இஉகீN நிறுவனத்தில் இவருடன் ஒன்றாகப் பணிபுரிந்த ராபர்ட் கயில்லியவ் என்ற பெல்ஜிய கணினி விஞ்ஞானி இதற்கு உதவியாளராக இருந்தார். இவர்கள் 1990ம் ஆண்டு ஒரு இணையத்தில் ‘உலாவிகள்‘ மூலமாகக் காணக்கூடிய வகையில் ஏற்கனவே எடுத்த தகவல்களையும் சேகரித்து வைக்கக்கூடிய ‘வெப் ஆஃப் நோட்ஸ்‘ என்னும் அமைப்பிற்கான திட்டத்தை உருவாக்கி, வெளியிட்டனர். உலகளாவிய வலையில், தகவல்களை இணையத்தின் வழியே, பயன்படுத்த எளியதாக வடிவமைப்புகளின் மூலம் பரப்புவதைச் சாத்தியமாக்கியது. இவ்வாறாக, உலகளாவிய வலையானது இணையத்தின் பயன்பாட்டைப் பிரபலமாக்குவதில் முக்கியப் பங்கு வகித்தது. உலகளாவிய வலை மற்றும் இணையம் ஆகிய இரண்டு சொற்களும் வழக்கில் ஒரே பொருள்படக்கூடியவையாகப் பயன்படுத்தப்பட்டாலும், உலகளாவிய வலை என்பது இணையம் என்ற சொல்லுக்குப் பொருள் ஆகாது. வலை என்பது இணையத்தில் உருவாக்கப்பட்ட ஓர் பயன்பாடாகும். * ஜம்போ என்ற பெயர் யானைக்கு வந்தது எப்படி? - எஸ். அருண்குமார், திருவையாறு. மிகப் பெரியனவற்றை ஆங்கிலத்தில் ஜம்போ என்பர். மிகப்பிரபலமான ஒரு யானையின் பெயர்‘ஜம்போ’ . சூடானிலிருந்து இந்த ஜம்போ யானை பாரிஸ் மிருகக்காட்சி சாலைக்கு கொண்டுவரப்பட்டது. பின்னர் 1865ம் ஆண்டு லண்டன் மிருகக்காட்சி சாலைக்கு கொண்டு வரப்பட்டது. இது ஆப்பிரிக்க யானை. இந்த யானையின் எடை 6.5 டன். லண்டன் மிருகக்காட்சி சாலையில் இருந்தபோது இந்த யானை எல்லாரையும் கவர்ந்தது. குறிப்பாக சிறுவர்கள் மத்தியில் இதற்கு அமோக வரவேற்பு இருந்தது.இந்த யானை மிகவும் அழகாகவும், எல்லாராலும் விரும்பப்பட்டதாகவும் இருந்தது. இந்த யானை, 1882ம் ஆண்டு சர்க்கஸ் நிறுவனமொன்றுக்கு விற்கப்பட்டது. இயல்பிலேயே குறும்புக்கார குணம் கொண்ட ஜம்போ யானை சர்க்கசில் பல சாகசங்கள் செய்து ரசிகர்களையும் , குழந்தைகளையும் கொள்ளை கொண்டது . ஜம்போ யானை மிகவும் பிரபலமானதால், ஒரு பணக்காரர் அதைப் பணம் கொடுத்து வாங்க முன்வந்தார் . ஆனால் அது தடுக்கப்பட்டுவிட்டது. 1885ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி, இந்த யானையை ரயிலில் ஏற்றிச் சென்றபோது விபத்தில் இறந்தது. ஜம்போ இறந்த பிறகு, அதன் நினைவாக ஒரு சிலை இங்கிலாந்தில் நிறுவப்பட்டது. ****************************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக