சனி, 19 ஜனவரி, 2013

குட்டீஸ் கேள்வி பதில்42

குட்டீஸ் கேள்வி பதில்42 30.11.2012 மடிக்கணினி என்பது என்ன? அதை உருவாக்கியவர் யார்? - கே. ராணி, ஈரோடு. மடிக்கணினி என்பது மடியில் வைத்து பயன்படுத்தும் வசதியில் அதன் அளவிலும் வடிவத்திலும் வடிவமைக்கப்பட்ட, இடத்து இடம் கொண்டு செல்லப்படக்கூடிய சாதனம். இதில் திரையை மடித்து மூடிவைக்கக்கூடிய வசதி இருப்பதாலும் இதற்கு மடிக்கணி என்று பெயர் பெற்றது. முதல் மடிக்கணினியை பில் மாக்ரிட்ஜ் 1979 ல் வடிவமைத்தார். 70களின் தொடக்கத்தில் ஆலம் கே என்பவர் டைனாபுக் என்ற ஐடியாபடி முதன்முதலில் விற்பனைக்கு வந்த மடிக்கணினி 1981 ல் அறிமுகமானது. இதன் பெயர் ஒஸ்போர்ன் 1. மடிக்கணினிகள் 2.3 கி.கி. எடை முதல் 1.3 கி.கி.அளவு குறைந்த எடை உள்ள மடிக்கணினிகள் இருக்கின்றன. கணித்திரையின் அளவு பெரும்பாலும் 35 செமீ முதல் 39 செ.மீ. அளவு கொண்டிருக்கும். சிறிய திரைகள் 30.7 செமீ உண்டு. இடத்துக்கு இடம் எடுத்துச் செல்வதால், தனியாக ஒரு மின்கலம் தேவைப்படும். இவை பெரும்பாலும் குறைந்த எடையில் அதிக மின்னாற்றல் தரக்கூடிய லித்தியம்-மின்மவணு வகை மின்கலங்களாக இருக்கும். *தவளை தன்னுடைய கண்ணினால் பார்க்கவும் கேட்கவும் முடியுமாமே, அப்படியா? - ம. கதிரேசன், புதுக்கோட்டை. கேள்வியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கும் கதிரேசன் சொல்வது ஆச்சரியம் மட்டுமல்ல, அது உண்மையும் கூட. தவளையே ஒரு ஆச்சிரியமான உயினம்தான்! தவளைகள் நீரிலும் நிலத்திலும் வாழும் இயல்புடையவை. இயற்கையாகவே தவளைகள் தமது கண்களால் கேட்கவும் செய்கின்றன. தவளைகளின் கண்களே காதுகளாகவும் இயங்குகிறது. தவளைகளுக்கு அதனுடைய கண்களுக்குப் பின்புறம் மூளையிலிருந்து வரும் நுண்ணிய நரம்பு அமைந்துள்ளது. அந்த நரம்புகள்தான் காதுகளின் பணியினைச்செய்கிறது. * கண்ணாடி கப்பில் சூடான பானங்களை விடும்போது, சில சமயம் சூட்டினால் கப் உடைகிறதே ஏன்? - எஸ். சந்திரன், மன்னார்குடி. பொதுவாக எந்தப் பொருளும் வெப்பத்தால் விரிவடையும். குளிர்ச்சியில் சுருங்கும். இயற்கை விதி. கண்ணாடியில் ஆன பொருளில் அதிகம் சூடான திரவத்தையோ, சூடான பானங்களை ஊற்றும்போது, அதில் உள்ள வெப்பம் கண்ணாடி பாத்திரத்தில் பரவும். அப்படி பரவும் வெப்பம் முதலில் கண்ணாடி பாத்திரத்தின் உள்பகுதியில் பரவி, பாத்திரத்தை முதலில் வெப்பத்தால் விரிவடைய செய்கிறது. பின்னர், வெப்பம் சிறிது சிறிதாகப் பரவி சற்று தாமதமாகவே வெளிப்பகுதியை விரிவடை செய்யும். சில சமயம் வெப்பம் அதிகம் இருந்தால், உட்பரப்பு முதலில் விரிவடைந்து , வெளிப்பரப்பு விரிவடைய தாமதமாகும்போது பாத்திரம் உடைந்து விடுகிறது. ********************************************************************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக