சனி, 19 ஜனவரி, 2013

குட்டீஸ் கேள்வி பதில்34

குட்டீஸ் கேள்வி பதில்34 28.9.2012 ஐ.நா. சபையின் தோற்றம், அதன் பணிகள் என்ன? - ச. திருநாவ், ப. குமாரபாளையம். ஐக்கிய நாடுகள் என்பது, நாடுகளைக் கொண்ட ஒரு பன்னாட்டு அமைப்பு. உலகின் அனைத்து நாடுகளும்(ஒருசில நாடுகளைத்தவிர) இதில் உறுப்பினராக இருக்கின்றன. இது, வாஷிங்டனில் நடைபெற்ற டம்பார்ட்டன் ஓக்ஸ் மாநாட்டைத் தொடர்ந்து அக்டோபர் 24, 1945ல், கலிபோர்னியாவிலுள்ள, சான் பிரான்சிஸ்கோவில் தொடங்கப்பட்டது. ஐநா அங்கத்தினர் தகுதி, ஐநா சாசனத்தில் உள்ள நிபந்தனைகளை ஏற்று, அந்நிபந்தனைகளை செயல்படுத்த முடியும் என ஐநாவினால் நம்பத்தகுந்த எல்லா ’சமாதான விரும்பி’ நாடுகளுக்கும் உண்டு. செப்டம்பர் 2010 நிலைவரப்படி, 192 உறுப்புநாடுகள் உள்ளன. ஐ.நா தனது சமாதானம் மற்றும் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்கிறது. உலக அமைதி மற்றும் உலகநாடுகளின் பாதுகாப்பு முக்கியமான நோக்கமாகவும், உலகநாடுகளுக்கிடையே நல்லுறவை ஏற்படுத்துதல், பொருளாதார சமூக பண்பாடு மற்றும் மனிதாபிமான பிரச்னைகளை தீர்த்து வைப்பதில் ஒத்துழைத்தல், சுதந்திரம் மற்றும் உரிமைகளை மதித்து அவைகளுக்கு ஆதரவு தருதல் ஆகியன இவற்றின் குறிப்பிடத்தக்க பணிகளாகும். கிரகணம் என்றால் என்ன? - எல். ஸ்ரீமதி, திருச்சி. இது ஒரு வானவியல் நிகழ்வு. வானில் பல பொருட்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. அவை நகர்ந்து செல்லும்போது சில சமயம் ஒன்றின்பாதையில் மற்றொன்று குறுக்கிட நேரிடும். அப்போது அந்த வான்பொருள் நம் பார்வையிலிருந்து மறைக்கப்படும். இந்நிகழ்வு, சூரிய குடும்பத்துக்குள் நிகழும்போது மறைக்கப்படும் பொருளின் பெயரை வைத்து, அதன் கிரகணம் என்று சொல்லப்படுகிறது. சந்திரன் பூமியைச் சுற்றி வரும் போது 29 1/2 நாட்களுக்கு ஒருமுறை பூமிக்கும் சூரியனுக்கும் இடையேயும், சூரியனுக்கு எதிர் திசையிலும் வருகின்றது. அதனால் பூமியில் இருப்போருக்கு இருட்டாக அமாவாசையாகவும் சூரிய ஒளிவெளிச்சம் பெற்று பிரகாசமாக பவுர்ணமியாகவும் சந்திரன் தோற்றமளிக்கின்றது. இதற்கான காரணம் சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும் குறித்த தினங்களில் ஒரே நேர் கோட்டில் வருவதே. பவுர்ணமி தினத்தில் பிரகாசமாக தோற்றமளிக்க வேண்டிய சந்திரன் சில சமயங்களில் பூமியின் நிழலால் மறைக்கப்பட்டும், அமாவாசை தினத்தில் சூரியன் சந்திரனின் நிழலால் மறைக்கப்பட்டும் விடுகின்றது. இவ் நிகழ்வையே சந்திர, சூரிய கிரகணம் என்று அழைக்கின்றோம். வெட்டி வேர் வாசனையாக இருப்பது எப்படி? - சுதாகர், ஈரோடு. ஒரு வகை புல் இனத்தை சேர்ந்த வெட்டிவேர் மருத்துவ குணம் நிறைந்தது. நான்கு முதல் ஐந்து அடி உயரம் வரை வளரும். வேர் கொத்துக் கொத்தாக இருக்கும். இதன் வேரை வெட்டி எடுத்த பின் புல்லையும் வேரையும் வெட்டி நடுவில் உள்ள துண்டை மீண்டும் புதிதாக நட்டு பயிரிடுவதால் வெட்டி வேர் என வழங்கப்படுகிறது. இதில் ரெசின், நிறமி, அமிலம், லைம், உப்பு, இரும்பு ஆக்சைடு, எளிதில் ஆவியாகும் எண்ணெய் உள்ளது.இதனால் வெட்டி வேர் குளிர்ச்சியைத் தருவதுடன் நல்ல நறு மணத்தையும், உச்சாகத்தையும் தரக்கூடியதாக இருக்கிறது. வெட்டி வேரைக்கொண்டு செய்யப்படும். விசிறியைக் கொண்டு வீசி வர உடல் எரிச்சல், நாவறட்சி தாகம், இவை நீங்கும். *****************************************************************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக