திங்கள், 21 ஜனவரி, 2013

குட்டீஸ் கேள்வி பதில் 50

குட்டீஸ் கேள்வி பதில் 50 *பலுõன் மேலே பறப்பது எப்படி? 18/01/03/ - எஸ்.ஏ. காவேரி, தம்மம்பட்டி. ஒரு பொருள், அது தனது பருமனுக்குச் சமமான எடையைவிட லேசாக இருந்தால் பறக்கும். இது பலுõன் மேலே பறப்பதற்கான அறிவியல் காரணமாகும். மேலே செல்லச் செல்ல காற்றின் அடர்த்தி குறைவாகின்றது. அதனால் மேலே சென்ற பலுõனின் உள்ளே இருக்கும் வாயுவின் அடர்த்திக்கு சமமான காற்று வெளியே இருக்கும் வரை பலுõன் மேலே செல்லும். நாம் வாயால் ஊதும் பலுõன் குறிப்பிட்ட உயரம் வரைதான் செல்லும். காரணம் பலுõலினுள் இருப்பது சாதாரண காற்று. அதனால் அதன் எடையும் அது ஏற்படுத்தும் இடத்தின் காற்றின் எடையும் சமமாகிறது. பலுõன்களில் காற்றைவிட அடர்த்தி (எடை) குறைவான ஹீலியம் வாயுவால் நிரப்பப் படுகின்றது. ஹீலியம் நிரப்பப்பட்ட பலுõன் வெளிக்காற்றின் எடையைவிடக் குறைவான காற்றைக் கொண்டிருப்பதால் மேலே பறக்கிறது. *நாம் அழும்போது கண்களில் நீர் சுரந்து வருவது எப்படி? - தேஷ்ராஜ், சத்திரம்புதுõர். கண்ணீர் என்பது நம் கண்களில் அமைந்துள்ள கண்ணீர் சுரப்பிகளிலிருந்து உண்டாகிறது. கண்ணீரில் மூன்று விதம் உண்டு. அடிப்படை கண்ணீர்: (ஆச்ண்ச்டூ tஞுச்ணூண்) இது நமது கண்களை ஈரப்பசையுடன் வைக்கவும், துõசியை அகற்றவும் உதவுகிறது. எதிர்வினைக் கண்ணீர்: (கீஞுடூஞுது tஞுச்ணூண்) கண்களில் ஏதாவது விழுந்து விட்டாலோ, அதிக நெடியினால் கண்கள் பாதிக்கப்பட்டாலோ அல்லது இருமும்போதும், தும்மும்போதும், வெங்காயம் நறுக்கும்போதும் வருவது இந்தவகைக் கண்ணீர். உணர்வுசார் கண்ணீர்: (ஞுட்ணிtடிணிணச்டூ tஞுச்ணூண்) பலமான உணர்ச்சிக் கொந்தளிப்பு, கோபம், பயம், மன அழுத்தம், துக்கம், சில சமயம் மித மிஞ்சிய சந்தோஷம் இவை இந்த வகைக் கண்ணீருக்குக் காரணம். கடைசியாக சொன்ன உணர்வுசார் கண்ணீர்தான் நாம் அழும்போது கண்களில் கண்ணீராக வருகிறது. உணர்வுசார் கண்ணீர் நம் உடலில் மன அழுத்தத்தாலும், கவலையினாலும் சேர்ந்து இருக்கும் வேண்டாத நச்சுப் பொருட்களை வெளியேற்ற உதவுகிறது. உணர்வுசார் கண்ணீர் வருவதற்கு மிகப் பலமான, உணர்வுபூர்வமான துõண்டுதல் இருக்க வேண்டும். அழுகையோ, சிரிப்போ உணர்வுபூர்வமான சூழலை மூளை உணர வேண்டும். அதனால் ஒருவர் அழும்போது மூளையின் பல பகுதிகள் வேலை செய்கின்றன. இதன் காரணமாக, உடல்ரீதியாகவும் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. * மண்வாசனை எப்படி வருகிறது? - எஸ். அருண்குமார், திருவையாறு. காய்ந்த நிலத்தில் மழை பொழிந்த உடன் ஒரு மணம் வெளிப்படுகின்றது. இதனை மண்வாசனை என்பர். நிலத்தில் ஸ்ட்ராப்டோமைசிஸ் , ஆக்டினோமைசிஸ் போன்ற எண்ணற்ற பாக்டீரியாக்களும், பிற நுண்ணுயிர்களும் உள்ளன. இவை வறண்ட நிலத்தில் அதிக அளவு உள்ளன. ஒரு கிராம் நிலத்தில் பத்து லட்சத்துக்கும் அதிகமான நுண்ணுயிர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. வறண்ட நிலத்தில் மழை பொழிந்தவுடன் இந்த நுண்ணுயிர்கள் ஜியோஸ்மின் மற்றும் டை - மிதைல் ப்ரோமியால் போன்ற எளிதில் ஆவியாகக் கூடிய வேதியல் பொருட்களை உற்பத்தி செய்கின்றன. இந்த வேதியல் பொருட்கள் காரணமாகவே, காய்ந்த நிலத்தில் மழை பொழிந்தவுடன் மணம் கிளம்புகின்றது. ...................................................********************************************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக