சனி, 19 ஜனவரி, 2013

குட்டீஸ் கேள்விபதில் 8

குட்டீஸ் கேள்விபதில் 8 மார்ச்9/ பேஸ் புக் என்றால் என்ன? - ஏ. முத்து, வாழைப்பந்தல். பேஸ்புக் 2004ல் தொடங்கப்பட்ட இணையவழி சமூக வலையமைப்பு. 13 வயதிற்கு மேற்பட்டவர்கள் தங்களின் பெயரைப் பதிவு செய்து கொண்டு பேஸ்புக்கில் உள்ள மற்றவர்களை நண்பர்களாக்கிக் கொண்டு தங்கள் கருத்துக்களை பரிமாறிக் கொள்ளலாம். இதை மார்க் சக்கர்பர்க் தன் நண்பர்களான எடுடாரோ சாவ்ரின், டஸ்டின் மாஸ்கோவிட் போன்ற ஹார்வர்ட் பல்கலை நண்பர்களுடன் தொடங்கினார். பிறகு ஐவி லீக், ஸ்டான்போர்டு பல்கலைக்கழக மாணவர்களும் பேஸ்புக்கில் சேர்ந்தனர். 2008ல், பேஸ்புக்கின் தலைமையகம் அயர்லாந்து நாட்டின் டப்ளின் நகரில் தொடங்கப்பட்டது. 2010ல், பேஸ்புக்கின் மதிப்பு 41 மில்லியன் டாலராக உயர்ந்து, கூகுள் , அமேசானைத் தொடர்ந்து அமெரிக்காவின் மூன்றாவது பெரிய இணைய தள நிறுவனமாக உயர்ந்தது. 2011ல் பேஸ்புக் தலைமையகம் மென்லோ பார்க், கலிபோர்னியாவிற்கு மாற்றப்பட்டது. பேஸ்புக் உபயோகிப்பாளர்கள் தங்களுடைய புகைப்படம், சொந்த விருப்பங்கள், தொடர்பு கொள்ளும் விவரம் போன்ற தகவல்களைக் கோப்புகளாக இத்தளத்தில் பதிவு செய்யலாம். ஏப்ரல் 2011ல் பேஸ்புக்கில் அரட்டை அடிப்பதை நேரடிக் குரல் அழைப்பு மூலம் உலகெங்கும் உள்ள நண்பர்களுடன் பேசும் முறை கொண்டு வரப்பட்டது. ஜூலை 2011ல், ஸ்கைபை என்ற நிறுவனத்தின் உதவியுடன் நேரடி ஒளிப்பதிவாக ஒருவருக்கொருவர் பேசுவதைப் பார்க்கும் முறையைக் கொண்டு வந்தனர். * கரப்பான் பூச்சிக்கு ரத்தம் வெள்ளையாக இருக்கும் என்பது உண்மையா? - ரா. வீரபாண்டியன், புதுக்கோட்டை. ஆமாம்! கரப்பான் பூச்சிகள் எதையும் உண்ணக் கூடிய ஒரு அனைத்துண்ணி இனம். இதன் உடலில் ஓடும் ரத்தத்தில் ஹீமோகுளோபின் இல்லாததால் இவற்றின் ரத்தம் வெள்ளை நிறமாக இருக்கும். * நாம் துõங்கும் போது ஏன் கனவு வருகிறது? கனவு பற்றிய நம்பிக்கைகள் உண்மையா? - கே. விக்னேஷ், ஆரணி. கனவு என்பது மனிதனின் துõக்கத்தில் உலாவரும் உள்மன வெளிப்பாடு. கனவு காணாத மனிதனே இல்லை என்னும் அளவிற்கு மனிதனின் இயல்பான செயலாய் இது இருக்கிறது. கனவு என்பது ஒருவர் துõங்கும் பொழுது அவரது மனத்தில் எழும் மனப் படிமங்கள், காட்சிகள், ஓசைகள், உணர்வுகள், நிகழ்வுகளைக் குறிக்கிறது. ஒருவர் கனவு காணும் பொழுது அவரது கண்களின் அசைவுகள் காணப்படுவதும் உண்டு. கனவு என்றால் என்ன என்பது தொடர்பாக இதுவரை ஒரு நிச்சயமான அறிவியல் புரிதல் இல்லை. இருப்பினும், வாழ்வில் பின்னர் நிகழப்போவதைக் குறிப்பால் உணர்த்தும் ஒன்றாகக் கனவு நம்பப்படுகிறது. கனவில் வரும் நிகழ்வின் அடிப்படையில் நல்ல கனவு, கெட்ட கனவு என்றும் கருதப்படுகிறது. கனவில் நல்லது நிகழ்ந்தால் வாழ்க்கையில் அதற்கு நேர்மாறாகத் தீயது நடக்கும். கனவில் தீயது நிகழ்ந்தால் வாழ்க்கையில் நல்லது நடக்கும். இது கனவு நம்பிக்கைகளுக்கு மட்டுமே உரிய சிறப்புத் தன்மை. இப்படி நாட்டுப்புற மக்களிடம் கனவு குறித்த நம்பிக்கைகள் நிறைய காணப்படுகின்றன. கனவு நிகழ்வுகளோடு நனவு நிகழ்வுகளைப் பொருத்திப் பார்த்து வியந்து பேசும் வழக்கமும் மக்களிடம் உள்ளது. உளவியல் அறிஞர் சிக்மண்ட் பிராய்டின் கனவுகள் பற்றி ஆராய்ச்சி செய்துள்ளார். கனவு பற்றிய நம்பிக்கைகள் சில: ஏர் உழுவதாகக் கனவு கண்டால் எடுத்த காரியங்கள் தாமதமாகும். திருமணம் பற்றிக் கனவு கண்டால் தீயது நடக்கும். கனவில் தாமே இறந்துவிட்டதாகக் கனவு கண்டால் ஆயுள் பெருகும். மரணத்தைக் கனவில் கண்டால் சுகமாகும். இறந்தோர் கனவில் வந்து அழைத்தால் மரணம் வரும். அதிகாலையில் காணும் கனவு பலிக்கும். ******************************************************************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக