சனி, 19 ஜனவரி, 2013

குட்டீஸ் கேள்விபதில்கள் -2

குட்டீஸ் கேள்விபதில்கள் -2 *புரை ஏறுதல் எப்படி ஏற்படுகிறது? - பா.கிருத்திகா, அரையபுரம். உணவுக்குழலும் மூச்சுக்குழலும் வாய்க்குக் கீழ்புறம் அடுத்தடுத்து உள்ளன. உணவை விழுங்கும்போது, மூச்சுக் குழல் தானாக மூடிக்கொள்ளும். உணவு மூச்சுக் குழலில் போய்விடாமல் இருக்கவே இயற்கையாக அமைந்துள்ள ஏற்பாடு இது. சில சமயம் தப்பித் தவறி உணவுத் துணுக்கு அல்லது நீர்த்துளி மூச்சுக்குழலில் சென்று விடுகிறது. அப்போது மூச்சுக்குழலின் தசைகள் அதை வெளியேற்றத் தீவிரமாக இயங்குகின்றன. இதைத்தான் புரை ஏறுதல் என்கிறோம். புரை ஏறினால் யாரோ நினைத்துக் கொள்கிறார்கள் என்று தலையில் தட்டுவார்கள். யாரோ நினைத்துக் கொள்வதற்கும் இதற்கும் சம்பந்தம் எதுவும் இல்லை. * போலீஸ் துறையின் முன்னோடி ரோமாபுரியை ஆட்சி செய்த அகஸ்டஸ் சீசர் தான் போலீஸ் துறையின் முன்னோடி என்று கூறலாம். இவர் தனது நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதற்காக தனியாக ஒரு படையை முதன் முதலாக ஏற்படுத்தினார். இந்த முறை ஏழாம் நுõற்றாண்டிற்கு பிறகு இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவிலும் பரவியது. இந்தியாவில் 1792 ம் ஆண்டு டிசம்பர் 7 ம் தேதி கிழக்கிந்திய கம்பெனியரால் காவல்துறை ஆரம்பிக்கப்பட்டது. அப்போது முக்கியமான ஊர்களில் காவல் நிலையம் அமைக்கப்பட்டது. அந்த காவல் நிலையத்தில் சப் - இன்ஸ்பெக்டர் தலைமையில் ஒரு உதவி இன்ஸ்பெக்டரும் 10 போலீசரும் ஒரு எழுத்தரும் இருந்தனர். இவர்கள் அனைவரும் இணைந்த குழுவிற்கு காவல்குழு என்று பெயர் வைத்தனர். 1867 ல் முதலாவது காவல் சட்டம் நடைமுறைக்கு வந்தது. அதன்படி காவலர்களின் சீருடை, சம்பளம், மற்றும் பணி தொடர்பான விதி முறைகள் வகுக்கப்பட்டன. *யானையை ஜம்போ என்று சொல்லக்காரணம் என்ன? / டிச.23/ - எஸ். தையல்நாயகி, ராமந்தீஸ்வரம். மிகப் பெரியனவற்றை ஆங்கிலத்தில் குறிப்பிடுகின்றபோது ஜம்போ என்பர். மிகப்பிரபலமான ஒரு யானையின் பெயர்‘ஜம்போ’ சூடானிலிருந்து இந்த ஜம்போ யானை பாரிஸ் மிருகக்காட்சி சாலைக்கு கொண்டுவரப்பட்டு, பின்னர் 1865ம் ஆண்டு லண்டன் மிருகக்காட்சி சாலைக்கு கொண்டு வரப்பட்டது. இது ஆப்பிரிக்க யானை. இந்த யானையின் எடை 6.5 டன். லண்டன் மிருகக்காட்சி சாலையில் இருந்தபோது இந்த யானை எல்லாரையும் கவர்ந்தது. குறிப்பாக சிறுவர்கள் மத்தியில் இதற்கு அமோக வரவேற்பு இருந்தது.இந்த யானை மிகவும் அழகாகவும், எல்லோராலும் விரும்பப்பட்டதாகவும் இருந்ததாம். இந்த யானை, 1882ம் ஆண்டு சர்க்கஸ் நிறுவனமொன்றுக்கு விற்கப்பட்டது. இயல்பிலேயே குறும்புக்கார குணம் கொண்ட ஜம்போ யானை சர்க்கசில் பல சாகசங்கள் செய்து ரசிகர்களையும் , குழந்தைகளையும் கொள்ளை கொண்டது . ஜம்போ யானை மிகவும் பிரபலமானதால், ஒரு பணக்காரர் அதைப் பணம் கொடுத்து வாங்க முன்வந்தார் . ஆனால் அது தடுக்கப்பட்டுவிட்டது. 1885ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி, இந்த யானையை ரயிலில் ஏற்றிச் சென்றபோது விபத்தில் இறந்தது. ஜம்போ இறந்த பிறகு, அதன் நினைவாக ஒரு சிலை இங்கிலாந்தில் நிறுவப்பட்டது. *******************************************************************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக