சனி, 29 ஜூன், 2013


ஹிந்துத்துவத்தின் மேன்மை!/100/ உலகத்தின் ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு தனித்தன்மை உள்ளது. நம் நாட்டுக்கென்று உள்ளது தொன்மையான தன்மை, அது ஹிந்துத் தன்மை. அதாவது ஹிந்துத்துவம். இதன் சிறப்புகள் பல. ஆண் - பெண் உறவில் புனிதம், விருந்தோம்பல், குடும்ப முறை, அன்னை, பிதா, ஆசிரியன் ஆகியோரை இறைவனுக்குச் சமமாகக் கருதல் போன்றவை. “எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல்” எனப் பாடியவர் நமது தாயுமானவர். ‘சர்வே ஜனா சுகினோ பவந்து’ எனச் சொன்னவர்கள் நம் முன்னோர்கள். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று குரல் கொடுத்தவன் ஒரு தமிழன். ஹிந்து மதத்தில் தினந்தோறும் அனைவரும் சொல்லும் பிரார்த்தனை மந்திரமாக,‘லோகாஸ் ஸமஸ்தோ சுகினோ பவந்து‘ -அனைத்து லோகங்களும் சுகமுடையதாக ஆகட்டும்‘ என்ற மந்திரம் பிரபஞ்சம் அனைத்தின் நலத்தையும் வேண்டுகிறது. ’சர்வே ஜனா: சுகினோ பவந்து’ என்ற மந்திரம் எல்லா மக்களும் சுகமுடன் இருப்பார்களாகுக என்ற பிரார்த்தனையைப் புரிய வைக்கிறது. ’ஆத்மனோ மோக்ஷார்த்தாய; ஜகத் ஹிதாய ச‘ என்ற குறிக்கோளை விவேகானந்தர் ராமகிருஷ்ண மடத்தின் குறிக்கோளாகப் பொறித்தார். அதாவதுஆத்மா மோக்ஷம் அடையட்டும்; உலகம் சுகத்தைப் பெறட்டும் என்ற குறிக்கோள் சகலரின் மோக்ஷத்தையும் சுகத்தையும் தழுவிய குறிக்கோளாக, பிரார்த்தனை மந்திரமாக அமைந்திருக்கிறது. இவைகள் எல்லாம் இந்திய நாட்டின் பண்பின் பிரதிபலிப்பாக உதிர்ந்த வார்த்தைகள். எல்லா ஜீவராசிகளிடமும் அன்பு செலுத்தும் பண்பு இந்த நாட்டின் பண்பு. மனித நேயம் என்பது மனிதனிடத்து அன்பு செலுத்துவது. மாறாக விலங்குகள்,பறவைகள், தாவரங்கள் என அனைத்திடமும் அன்பு செலுத்துவது இந்திய நாட்டின் பண்பாடு. ஹிந்துத்வாவின் மேன்மை என்றால் ‘சர்வதர்ம சம்மான்‘ அதாவது அனைத்து தர்மங்களையும் சமமாக பாவியுங்கள் என்று. இந்த நாட்டில் யாருக்கேனும் இதில் முரண்பாடான கருத்து இருக்கிறதா ? ஹிந்துவம் சொல்கிறது ‘ஏகம்சத் விப்ராஹ, பஹுதா வதந்தி‘ அதாவது சத்தியம் ஒன்றுதான் ஆனால் பலவிதமாக சொல்லப்படுகிறது என்று. ஒவ்வொரு மணிதர்களும் தங்கள் வழிகளில் அதை சொல்கிறார்கள் அவ்வளவுதான். அவர்கள் கீதையை பின்பற்றலாம், குரானை பின்பற்றலாம், இராமாயனத்தையோ, மஹாபாரதத்தையோ பின்பற்றலாம். ஹிந்துத்வா சொல்கிறது ‘சர்வே பவந்து சுகினஹ‘, ‘சர்வே சந்து நிராமயா‘ , ‘சர்வே பத்ரானி பஷ்யந்து‘, ‘மா கஷ்சித் துகபாக் பவேத்‘ !! அதாவது எல்லோரும் நன்றாக இருக்கட்டும், எல்லோரும் ஆரோக்கியமாக இருக்கட்டும், எல்லோருக்கும் நல்ல கல்வியும் ஞானமும் கிடைக்கட்டும். இந்த கருத்தில் இந்திய நாட்டில் இருப்போர் யாருக்கேனும் முரண்பாடு இருக்கிறதா என்ன? ஹிந்து மதத்தின் வேண்டுதல் எல்லாம் பிரபஞ்சமளாவிய நன்மையைத் தவிர வேறு என்ன இருக்கிறது. - தேவராஜன்.

தமிழ் பக்தி மொழி!/97/ 14.7.2013/ உலகில் பல மொழிகள் இருக்கின்றன. நம் தமிழ் மொழிக்கென்று தனிச்சிறப்பு உள்ளது. பக்தி இலக்கியங்கள் அதிகமுள்ள ஒரே மொழி நம் தமிழ்மொழி மட்டுமே. தமிழ் பக்தி மொழி. தமிழ் பேசினாலே தெய்வ அருள் கிட்டிவிடும். ஆழ்வார்களில் ஒருவர் திருமாழிசையாழ்வார். திருமாலே அவர்முன் தோன்றி, எட்டெழுத்து மந்திரத்தை உபதேசித்துள்ளார். ‘ நாராயணனை தொழுதால் நல்ல குலம், சிறந்த செல்வம், அருளுடன் கூடிய பணம் கிடைக்கும்’ என்பதை தனது பாசுரத்தில் தெளிவாக குறிப்பிடுகிறார். குலசேகர ஆழ்வார், தன்னை தசரதனாக பாவித்து, பெருமாளை ராமனாக பாவித்து, துõய தமிழில் தெய்வத்துக்கே தாலாட்டு பாடினார். தமிழகத்தில் தோன்றிய மகான்கள் நாம் சிறப்பாக வாழ்வதற்கு ஏராளமான கருத்துக்களைத் தமிழில் கூறிச் சென்றுள்ளனர். தவறுகளை திருத்திக் கொள்வதற்காக, திருவள்ளுவர் நமக்கு திருக்குறளை கொடுத்துள்ளார். ஆழ்வார், நாயன்மார் பாடல்கள் தெய்வத்தின் குரல் என்றே சொல்லலாம். அவர்கள் பாடல்கள் துறவறத்தை பழிக்கவில்லை; இல்லறத்தை வெறுக்கவில்லை. நிலையாமை உணர்த்தப்படுகிறது. இந்த உலக இன்பங்களைஅனுபவித்து இறைவனிடத்தில் பக்தி செலுத்தலாம் என்ற தெளிவை பன்னிரு திருமுறைகளும், நாலாயிரம் திவ்விய பிரபந்தமும் தருகிறது. உலக வாழ்வைக் கண்டு அஞ்சும் அச்சம் நீங்கி, மக்கள் கூடி வழிபாடு செய்து பக்தியில் “மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்” என்கிறது திருஞான சம்பந்தர் பாடிய தேவாரப் பாடல். ஆழ்வார் நாயன்மார்களின் பக்திப் பாடல்கள் கடவுளுக்குமுன் மக்கள் எல்லோரும் சமமானவர்கள். கடவுள் ஒருவரே எல்லா மக்களுக்கும் தலைவர் என்ற கருத்தை வலியுறுத்தின. தமிழுக்கென்று, தமிழர்களுக்கென்று பண்பாடு இருக்கிறது. மற்ற மொழியினர் தங்கள் குழந்தைகளுக்கு பொருட்களை காட்டித்தான் எழுத்துக்களை அறிமுகப்படுத்துவர். நாம் மட்டும் தான், ‘அ’ அறம் செய்ய விரும்பு என்று மொழியோடு சேர்த்து பண்பையும் கற்றுக்கொடுக்கிறோம். அ + உ + ம் = ஓம் இதனை- தனித்தனியாக உச்சரித்துப்பாருங்கள்! ‘அ’என்னும் அகாரம் அடிவயிற்றிலிருந்து ஒலிக்கும். ‘உ’ என்னும் உகாரம் நெஞ்சுக்குழியிலிருந்துஒலிக்கும். ‘ம்‘ என்னும் மகாரம் தொண்டையிலிருந்து ஒலிக்கும். இம்மூன்றையும் சேர்த்து ஒன்றாக உச்சரிக்கும்போது, நம் உடலில் மூலாதாரம் தொடங்கி... ஆக்கினை வரையிலான ஆறு ஆதாரங்களும் (சக்கரங்கள்) சீரடையும். இந்த ஓங்காரத்தை நாம் இயல்பாக பயன்படுத்தும் வழியை தமிழ் தந்திருக்கிறது. வருவோம் = வரு + ஓம் செல்வோம் = செல் + ஓம் இப்படி பல வார்த்தைகள் ஓங்காரத்தை இயல்பாக நம்மை உச்சரிக்க வைத்துவிடுகிறது தமிழ்! நாம் தமிழை சரியாக உச்சரித்து, பேசினால் அதுவே பெரிய யோகப்பயிற்சிதான்! மனிதனாய் பிறப்பது அரிது. தமிழனாய் பிறந்து தெய்வத்தமிழில் பேசுவது அதனினும் அரிது! -தேவராஜன். *************************
பூட்டைத்திற! மகிழ்ச்சி வரட்டும்!/96/ 7.7.2013/ நாம், நாள்தோறும் செய்ய வேண்டிய கடமைகள், செயல்கள் பல இருக்கின்றன. காலை எழுவது, பல் துலக்குவது, உடல் சுத்தம் செய்வது, உண்பது, அலுவலகப் பணிகள் செய்வது, உறங்குவது என்பது போன்ற பணிகள் நாள்தோறும் இருக்கின்றன. இதுதவிர, இன்னும் சில கடமைகள் இருக்கின்னற. அது, மனதின் அமைதிக்காகத் தியானம், கடவுள் வழிபாடு, யோகா போன்ற செயல்களையும் செய்யவேண்டும். உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்க உதவ நம் உடம்பில் கோசம் என்ற தொகுதி இருக்கிறது. இக்கோசங்கள் ஐந்து . அவை அன்னமய கோசம், பிரணாமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞான மய கோசம், ஆனந்த மய கோசம். தினமும் நம் உடலில் இருக்கும் இந்த ஐந்து கோசங்களும் ஒழுங்காகச் செயற்பட்டால் மட்டுமே அமைதியாக, ஆனந்தமாக உயிர் வாழஇயலும். தினமும் குளிக்கிறோம். வயிற்றின் அழுக்கு நீக்குகிறது. இதன் மூலம் அன்னமய கோசம் சுத்தம் ஆகின்றது. மூச்சுப் பயிற்சியின் காரணமாக பிரணாமய கோசத்தை சுத்தப்படுத்தலாம். தினம் தினம் மனதின் அழுக்கை நீக்க, இறைவனை தவறாது வணங்கி, வழிபாடு செய்தால் மனோமய கோசமும் சுத்தம் பெறும். எதிலும் நன்மை, தீமை இருப்பது போல அறிவிலும் அழுக்குச் சேரும். அந்த அழுக்கைப் போக்க நல்ல நுõல்களைப் படிக்கவேண்டும். இவற்றின் காரணமாக துன்பம், கவலைகளை போக்கி ஆனந்த மய கோசத்தின் எல்லையைத் தொட முடிகின்றது. இவை எல்லாம் தினமும் நம்மால் செய்ய முடிந்தவைதான்! இதற்கு மேலான தத்துவ மயத்தை நல்லகுருவின் துணையால் அடைய முடியும். வாழும் வாழ்க்கையில் நாள்தோறும் உடல், மூச்சு, மனம், அறிவு ஆகியன இயங்குகின்றன. தினம் தினம் ஓய்வின்றி அவை செயல்படுவதால் அவை பழுது ஆகலாம் இல்லை? அசுத்தம் ஆகலாம் இல்லையா? அதனால் அவற்றைத் தினமும் சுத்தம் செய்ய வேண்டியுள்ளது. நல்ல எண்ணங்கள் மூலமாக, நல்ல செயல்களை செய்வதும், நல்லதே நினைப்பதும், நம் துணையாக இறைவனை எப்போதும் வைத்திருக்கும் செயல்கள் வழியாக ஐந்து கோசங்களை தினம் தினம் சுத்தி செய்யலாம். அப்படி செய்து வந்தால் என்றும் மனதில் ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம்தான்! எனவே நாளும் பொழுதும் குற்றம் நீக்க வேண்டும். நாளும் குறைகள் களைய வேண்டும். உடல் வளர்க்கவேண்டும். உயிர் வளர்க்க வேண்டும். நல்ல மணம் வளர்க்க வேண்டும். நல்லறிவு வளர்க்க வேண்டும். நல் ஆனந்தம் துõய்க்க வேண்டும். இறைவன் நம் உடலில் கொடுத்த ஐந்து கோசங்கள்தான் நிம்மதிக்கான, ஆனந்தத்திற்கான சாவி. அந்தச் சாவியை நாம் நன்றாக பராமரித்து, பயன்படுத்தி வந்தால் போதும். கையில் சாவி இருக்கும் போது கவலை எதற்கு? பூட்டைத் திற, மகிழ்ச்சி வரட்டும்! - தேவராஜன். *********************************

சனி, 15 ஜூன், 2013

நல்லது நல்லபடியே நடக்கும்!

நல்லது நல்லபடியே நடக்கும்!/ 93/ 16.6.13/ மனித வாழ்க்கை என்பது அற்புதமானது. மேன்மையானது. இந்த வாழ்க்கை மூலம் ஒருவர் சொர்க்கமோ, மோட்சமோ அடையவும் முடியும். இவ்வளவு புனிதமான மனிதப்பிறவி கிடைத்ததற்கே நாம் இறைவனுக்கு கடமைப்பட்டிருக்கிறறோம். ‘அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது’ என்று அவ்வை மூதாட்டி சொன்னதன் மகிமையும் இதனால்தான். வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும் அர்த்தத்தோடு வாழவேண்டும். தினமும் மனிதன் கடைபிடிக்கவேண்டிய வாழ்வியல் நெறிமுறைகளை சாஸ்திரங்கள் தெளிவுறுத்துகின்றது. வாழ்வியல் நெறிமுறைகள் முதல்படிகளாக அமைவன ஐந்து வழிகள். அவை துõய்மை, திருப்தி(மனநிறைவு), பிராயாச்சித்தம்(கழுவாய்), தற்சோதனை, இறைவனிடம் சரணடைதல் ஆகியனவாகும். ஒரு பக்தனுக்கு உடலும், உள்ளமும் துõய்மையாக இருத்தல் வேண்டும். துõய்மையான உணவு, நீர் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி நமது உடலைச் சுத்தமாக வைத்திருக்கின்றோம். ஆசனங்கள், பிராணாயாமம் , தியானம்,கிரியைகள் (நற்செயல்கள்) போன்றவற்றைச் செய்து நமது உள்ளத்தைத் துõய்மையாக வைத்திருக்க வேண்டும். ‘புறந்துõய்மை நீரான் அமையும் அகந்துõய்மை வாய்மையாற் காணப் படும்’ -என்கிறார் திருவள்ளுவர். உடம்பு தண்ணீராலும் உள்ளம் உண்மையாலும் துõய்மையாகும் என்பது இதன் பொருள். மனதுள் எந்தவிதமான தீய எண்ணங்களையும் வரவிடாது ஒருவன் நல்லொழுக்கத்தைக் கடைபிடித்து வாழ வேண்டும் என்பதை காலையில் கண்விழித்தவுடன் மனதில் சங்கல்பம் எடுத்துக்கொள்ள வேண்டும். அதுவே உளத்துõய்மைக்கு வழிவகுக்கும். ‘மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல நீர பிற’- என்று வள்ளுவர் சுட்டிக்காட்டுவதும் இதைதான். திருப்தி ஒவ்வொருவரும் நிறைவான மனநிலையுடன் வாழ்தல் வேண்டும். ‘போதுமென்ற மனமே பொன்செய்யும் மருந்து’. ‘இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற புன்மையில் காட்சி யவர்’ மனநிறைவு பெற்றவர்கள் எதற்கும் ஆசைப்படமாட்டார்கள் என்பது வள்ளுவர் கருத்து. பிராயச்சித்தம் எதனைக் கண்டும் கலங்காது பொறுத்துக் கொண்டு அதிலிருந்து மீண்டு வரும் பக்குவம் பெறவேண்டும். துன்பம் வந்துவிட்டது. அதனைக் கண்டு கலங்கக் கூடாது. அத்துன்பத்திலிருந்து மீள்கின்ற (வழியை) தேடி அதிலிருந்து நாம் மீண்டு வரவேண்டும். இப்பிராயச்சித்தம் என்பதற்கு நாம் செய்த தவறுகளுக்காக மனம் வருந்தி அதற்குப் பரிகாரம் தேடுதல் வேண்டும். அதாவது அதற்குரிய நன்மையினைச் செய்துவிடுதல் வேண்டும். தற்சோதனை நம்மை நாமே விமர்சனம் செய்துகொள்ள வேண்டும். நாமே நீதிபதியாக இருந்து நம்மையே நாம் கூர்ந்து விசாரிக்க வேண்டும். மனசாட்சிபடி நடக்க வேண்டும். சரணடைதல் வாழும்போதும், இவ்வுலக வாழ்க்கைக்குப்பிறகும் நமக்கு இறுதிவரை துணையாக இருப்பது இறைவனே! ஆதலால், அவனையே நம் உறவாக பற்றிக்கொண்டு சரணடைய வேண்டும். மேலே சொன்னபடி வாழ்ந்தால் நல்லது நல்லபடியே நடக்கும்! - தேவராஜன். *******************

உணவு போதனை!/

******************* உணவு போதனை!/94/ 23.6.13/ உணவு என்பது உடலை மட்டுமல்ல; மனிதனின் புத்தியையும் உணர்வையும் சுபாவத்தையும் வளர்க்கிறது. பகவத்கீதையில் கிருஷ்ணன், காரசாரமான உணவுகள் மனிதனுக்கு கோபதாபங்களை கொடுப்பதாகவும், அழுகிய கெட்டுப்போன உணவுகள் சோம்பேறித்தனத்தையும், மனச்சோர்வையும் தருவதாகவும் உடனடியாக செரிக்க கூடிய காரம், புளி, உப்பு சுவைகள் கட்டுப்பட்டு இருக்க கூடிய புதிய உணவுகளே மனிதனுக்கு நல்ல எண்ணங்களையும் நல்ல ஆரோக்கியத்தையும் தருவதாக சொல்கிறார். உணவு சமைக்கும் போது அந்த உணவு பதார்த்தங்களை கையாளுகின்ற மனிதர்களின் உணர்வுகளும், அந்த உணவுக்குச் சொந்தக்காரனின் உணர்வுகளும் ஊடுருவி செல்லும். நல்லவர்கள் தரும் உணவும், நல்ல எண்ணங்களால் சமைக்கப்பட்ட உணவும் நல்ல பலனைத் தரும். கெட்ட எண்ணங்களால் உருவாக்கப்பட்ட உணவு செரிமானம் ஆகாமல் இடைஞ்சலை தான் தரும். நாம் நன்றாக இருக்கவேண்டும் என்று நம் அம்மாவும், அப்பாவும், மனைவியும், பிள்ளைளும் ஏன் நண்பர்களும் கூட நினைப்பார்கள். அவர்கள் கையால் உணவருந்துவது என்பது வேறு; மற்றவர்கள் கையால் உணவருந்துவது வேறு. உணவு பற்றி ஒரு கதை: குருசேஷத்திரப் போர். பீஷ்மர், அர்ஜூனனின் அம்புகளால் துளைக்கப்பட்டு, அம்புப்படுக்கையில் விழுந்தார். யுத்தம் முடிவுக்கு வந்தது. பாண்டவர்கள் வெற்றியடைந்தார்கள். தர்மருக்கும் கண்ணனுக்கும், பீஷ்மரின் உலக ஞானம்பற்றி நன்குத் தெரியும். தர்மன் தன் சகோதரர்களுடன் பீஷ்மர் முன் நின்றான். தங்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களை எல்லாம் கேட்டனர். பீஷ்மரும்,ஓர் அரசன் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதில் தொடங்கி, பல விஷயங்களை முப்பது நாட்களுக்கு உபதேசித்தார். கடைசியாக சகாதேவன் ஒரு நக்கலான கேள்வியை எழுப்பினான். “ பீஷ்மரே, இப்போ நீங்க நல்லா வக்கணையா நியாயம், தர்மம் பேசறீங்க. ஆனால், இவ்வளவு நாளா ஒரு அயோக்கியனான துரியோதனனோடு சேர்ந்துதானே போர் செய்தீங்க. அப்போ எங்கே போச்சு, இப்ப நீங்க எங்களுக்கு சொல்ற நியாயம், நீதி ,நேர்மை எல்லாம்? நீங்க நியாயத்துக்கு எதிரா போர் செஞ்சதா அர்த்தமாகாதா?” “ உண்மைதான் சகாதேவா. அதற்கு காரணம் நான் சாப்பிட்ட உணவுதான் காரணம்” என்றார் பீஷ்மர். “ என்ன உணவா?” “ஆமாம். உணவு உணர்வைக் கெடுக்கும். நான் பல ஆண்டுகளாக துரியோதனனின் உணவை உண்டேன். அது என்னை நியாயம் மறக்கச் செய்து விட்டது. தர்மத்துக்கு எதிராகப் போரிடச் செய்து விட்டது. ஆனால், இப்போது, அர்ஜூனனின் அம்புகள் அந்தக் கெட்ட ரத்தத்தை நீக்கி விட்டது. நான் மீண்டும் தர்மத்தின் பக்கம் திரும்பி விட்டேன்” என்றார் பீஷ்மர். ஆளாளப்பட்ட பீஷ்மருக்கே இந்த கதி என்றால், நாம் எம்மாத்திரம்? ஒவ்வொரு நாளும் உறங்கச் செல்வதற்கு முன், இன்றைக்கு நாம் உண்ட உணவு, நியாயமான வழியில் சம்பாதித்ததுதானா? என்று சிந்தனை செய்யுங்கள்! - தேவராஜன்

தாராளமா இருக்கனும் தயாள குணம்!

தாராளமா இருக்கனும் தயாள குணம்!/95/ 30.6.13/ இல்லறத்தில் இருப்பவர்கள் தயாள குணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதற்காக தினசரி ஆயிரம் ருபாய்க்குக் காசோலை எழுதி அநாதை இல்லங்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதல்ல. இக்காலத்தில் வசதிமிக்கவர்கள் கூடச் சற்றுக் கருமிகளாகவும், வசதியற்றவர்களில் சிலரோ தங்கள் வாழ்க்கைக்கே இடையூறு வரும் அளவிற்குத் தானம் செய்கிறார்கள். இந்த இருவேறு நிலையும் இருக்கக்கூடாது. யாருக்கோ எதையோ கொடுத்த பிறகு எதாவது நல்ல விளைவு கிடைக்கும் என்று காத்துக்கொண்டிருப்பதும் சரியல்ல. தானத்தை அவ்வப்போது மட்டும் அல்ல; வருடம் ஒருமுறை என்றில்லாமல் தினமும் ஒரு முறை செய்தால் மிகவும் நல்லது. கொடுக்கும் போது சந்தோஷமாக கொடுக்க வேண்டும். கரும விளைவுப்படி வினைப்பயன் நமக்குத் திரும்ப வரும்போது பன்மடங்கு பெரிதாக வரும். ஆனால் வரும் பயன் கொடுக்கும் போது இருந்த அதே மன உணர்ச்சியுடன் வரும். கொடுத்த பிறகு என்றைக்கும் அதற்காக வருத்தப்படக் கூடாது. கொடுத்த தானம் தவறாகப் பயன் படுத்தப் பட்டாலும் சரி, தொலைக்கப் பட்டாலும் சரி, கொடுத்ததற்கு நன்றி உணர்வு தெரிவிக்கப்படாமல் இருந்தாலும் சரி - கொடுத்ததைப் பற்றி வருந்தாதீர்கள். எந்த மனநிலையில் நீங்கள் பொருளை முந்தைய வாழ்விலோ இந்த வாழ்விலோ கொடுத்திருந்தாலும் அது பன்மடங்காகி கொடுத்த அதே மனநிலையில் உங்களிடமே திரும்ப வரும் . கொடுப்பதென்பது பொருள் மட்டுமில்லாமல் நேரத்தையோ உழைப்பையோகூடக் கொடுக்கலாம், அன்பைக்கூடக் கொடுக்கலாம். உள்ளம் சார்ந்த தானமாகவும் இருக்கலாம் - அதாவது ஒருவரிடம் அன்பாக பேசுவதே ஒரு வகைத் தானம் தான். உங்கள் பூஜைஅறையில் ஒரு உண்டியலை வைத்து அதில் ஒவ்வொரு நாளும் ஒரு ரூபாயையோ, ஐந்து ரூபாயையோ போட்டு வாருங்கள். அப்படி ஒரு மாதம் சேமியுங்கள். ஒவ்வொரு நாளும் எழுந்தவுடன் இந்தத் தயாளச் செயலைச் செய்யுங்கள். தினசரி காலைக் கடன்களை முடித்துக் குளித்த பின்பு உங்கள் உண்டியலில் சற்று மகிழ்ச்சியான மன நிலையில் ’இந்தப் பணம் ஒரு நல்ல காரியத்திற்குப் பயன்படட்டும்’ என்று எண்ணிப் பணம் போடுங்கள். மாதக் கடைசியிலோ வருடக் கடைசியிலோ உங்கள் விருப்பமுள்ள கருணை நிறுவனத்திற்கோ, ஒரு கோயிலுக்கு விளக்கெரிக்கவோ, ஓர் ஏழையின் கல்விக்கோ கொடுத்துப்பாருங்கள்.இப்படிக் கொடுப்பதில் ஏற்படும் மகிழ்வு நீடித்து நிலைத்திருக்கும். பிறருக்கு உதவிட தினமும் ஆயிரம் வாய்ப்புகள் வருகின்றன. அதில் ஒன்றையாவது உதவி, தயாள குணத்தை வளர்த்துக்கொள்ளுங்கள். ஏனெனில், தயவு அதிகம் இருப்பவரிடம் கடவுள் இருக்கிறார். தயவு இல்லாதவர்களிடம் கடவுள் இருந்தும் இல்லாமையாய் இருக்கிறார். - தேவராஜன். *****************************

புதன், 5 ஜூன், 2013

ஆன்மிகம்: பாகம் ஐந்து (85முதல் 94 வாரம் வரை)

ஆன்மிகம்: பாகம் ஐந்து (85முதல் 94 வாரம் வரை) (தினமலர்- வாரமலரில் ஆன்மிகம் பகுதியில் 11.9.2011 தேதியில் இருந்து நான் எழுதிவரும் ஆன்மிக தொடரின் ஐந்தாம் பாகம்) எட்டில் இரண்டு/85/ 21.4.2013/&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&& அஷ்டாங்க யோகங்கள் என்பது எட்டுவகை யோகங்கள். அவை இயமம், நியமம், ஆசனம், பிராணயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம். சமாதி. இந்த யோகங்கள் எல்லாம் காடுகளில் மலைகளில் குகைளில் இருக்கும் சித்தர்களும் யோகிகளும் செய்ய வேண்டியவை; அவை தவம் செய்வோர்மட்டும் கடைபிடிக்க வேண்டியவை என்று நாம் நினைத்து விடுகிறோம். இந்த யோக நெறிகள் சாமனியர்களுக்கும் இல்லறத்தாருக்கும் மிகவும் பயன்படுபவை. பலன் தரக்கூடியவைதான். ஒருவர் வாழும் வாழ்க்கையில் இந்த யோகங்கள் எல்லாவற்றையும் கடைபிடிக்க இயலாவிட்டாலும் கூட, எல்லாரும் இயமம், நியமம் இரண்டையும் கடைபிடிக்க முடியும். கடைபிடிக்க வேண்டும். இயமம் என்ற யோக நெறி வாழ்க்கையின் அடிப்படைத் தகுதியை சோதனை செய்துகொள்ளவும், சுத்தகரித்துக் கொள்ளவும் போதிக்கிறது. இயமம் என்பது வாழ்வியல் சார்ந்த நல்லொழுக்கத்தைக் குறிக்கும். அதாவது நாள்தோறும் இறைவனை வணங்குதல், உயிர்களிடத்தில்அன்பு, உண்மையைக் கடைபிடித்தல், கொல்லாமை, புலன் அடக்கம், ஆசை இல்லாமை ஆகியவற்றைக் கடைபிடித்து வாழ்தலே இயமம் எனும் முதல்படிநிலையாகும். இந்த யோக நெறியை கடைபிடிப்பதின் வழியாக நாம் இறைவனை உணர எடுத்து வைக்க முதல் படியாக அமையும். அடுத்த யோக நெறி நியமம் . இது ஒழுக்கத்தின் மூலம் ஆத்ம சுத்தத்தை அடைய மேற்கொள்ளும் செயல் வடிவங்களைக் குறிக்கும். அதாவது துõய்மை, நிறைவு, நோன்பு, கல்வி,அபயம் அடைதல் ஆகியனவை. இந்த இரு யோக நெறிகளை நாம் கடைபிடிப்பதன் மூலம் நமக்குள் ஒரு கட்டுப்பாடு ஏற்படும். தன்னைக் கட்டுப்படுத்தி ஆளும் ஆற்றளுடையவனால்தான் மற்றவற்றையும் கட்டுப்படுத்த முடியும். இந்த பண்புகள் மூலம் உள்ளத்திற்குத் தீயன செய்கின்ற செயல்களை விலக்குகின்றபோது அகத்துõய்மையைப் பெற முடிகின்றது. அகத்துõய்மை பெற்றவர்களால்தான் புறத்துõய்மையை எளிதில் பெற இயலும். இயமம், நியமம் தரும் அனுபவமாக வருவது அடக்கம். அடக்கம் அனைத்து உயர்வுகளையும் நல்கும் தன்மையுடையது. அதனால் அவ்வடக்கத்தைப் பொருளாகக் கருதிக் காத்தல் வேண்டும். உயிருக்கு அடக்கத்தைப் போன்ற செல்வம் வேறு எதுவும் கிடையாது. ஆமைபோன்று ஐம்பொறிகளையும் அடக்கி வாழ வேண்டும் அது மிகப்பெரிய ஆற்றலாக வெளிப்படும் என வள்ளுவர் எடுத்துரைக்கின்றார். பதஞ்சலி முனிவர் அகிம்சை, சத்தியம், திருடாமை, பிரம்மச்சரியம், ஆசை இன்மை ஆகிய ஐந்து கட்டுப்பாடுகளை இயம நெறியில் பின்பற்றக்கூடியவை என்கிறார். இதனையே வள்ளுவரும் இன்னாசெய்யாமை, வாய்மை, கள்ளாமை, துறவு, அவா அறுத்தல் என்று திருக்குறளில் எடுத்துரைக்கின்றார். எட்டு யோகங்களில் முதல் இரு யோகங்களை பின்பற்றினாலேயே வாழ்க்கை லட்டுப்போல தித்திக்கும். இறையருளும் சித்திக்கும்! -தேவராஜன். **************************************** ************************************** *************************************** இறைவன் மீது ஆசைபடலாமா?/86/ 28.4.2013/&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&& இந்த வாழ்கை நாம் மகிழ்ச்சியாக வாழத்தான். பிறக்கும் எவ்வுயிரும் கஷ்டப்படுவதற்காகப் பிறப்பதில்லை. இது இயற்கை. இந்த இயற்கையை நாம் புரிந்து கொண்டு வாழ்ந்தால் நல்லது. புரியாமல் வாழ்ந்து கொண்டிருந்தால், அதை சரி செய்து கொள்வதுதான் புத்திசாலித்தனம். ஒரு உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சிக்கு செல்கிறோம். நிகழ்ச்சி தடபுடலாக நடக்கிறது. அறுசுவை விருந்து. அறுசுவை உணவை கண்டவுடன் அளவுக்கு மீறி சாப்பிட்டு விடுகிறோம். அதிகம் சாப்பிட்டதால், செரிமாணம் ஆகவில்லை. அதனால் வயிறுவலி. அதையடுத்து, வயிற்றுப் போக்கு. அடுத்தடுத்து சோர்வு என சில துன்பங்களை அனுபவிக்கிறோம். இந்தத் துன்பத்திற்கு காரணம் உணவோ, அந்த உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சியோ காரணம் ஆகாது. நாம் செய்த தவறு அதிகமாக சாப்பிட்டது. இதுபோல், நாம் ஏதாவது தவறு செய்தால் தண்டனையை அனுபவிக்கிறோம். அதிகமாக சாப்பிடும்போது இறைவா உனக்கு நன்றி என்கிறோம். வயிற்று வலி வந்ததும் ஆண்டவா, ஏன் இப்படி என்னை சோதிக்கிறாய்? என்று கூச்சலிடுகிறோம். இதில் எங்கிருந்து இறைவனின் செயல்பாடுகள் வருகிறது. உணவை படைத்தது இறைவனாக இருக்கலாம். அதை அளவுக்கு மீறி சாப்பிட்டது நம் தவறுதானே? ஒருவனுக்கு பெயர், பணம், புகழ் போன்றவை கிடைத்து, அதனைக் கொண்டாட சுற்றமும், நட்பும் அமைந்து விட்டால் அதுவே பெரிய சந்தோஷம். இந்த சந்தோஷத்திற்காகவே, நமது வாழ்க்கை பயணம் அமைகிறது. சிலருக்கு இத்தகைய சந்தோஷம் கிடைக்கிறது, பலருக்கு அது கிடைக்காமல் போய் விடுகிறது. இப்படி பட்ட சந்தோஷங்கள்தான் வாழ்க்கை முழுவதும் சந்தோஷத்தைத் தருமா? அப்படியே தந்தாலும், அது இவ்வுலக வாழ்க்கையோடு முடிந்துவிடும். ஆனால், இவ்வுலகத்திற்கும், அவ்வுலகத்திற்கும் நிரந்தரமாக சந்தோஷத்தைக்கொடுப்பது இறைவனை நினைப்பதும், வணங்குவதும், இறைவனை உணருவதுமேயாகும். நமக்கு ஆசைகள் ஆயிரம் இருக்கின்றன. ஆனாலும், என்றோ ஒரு நாள் நாம் ஆசைப்படும் பொருட்கள் நம்மை விட்டுப் பிரிவதும், நாம் அவற்றைவிட்டுப் பிரிவதும் நிச்சயம். இப்பிரிவு நம் இறப்பின் மூலம் ஏற்படுவதற்கு முன்பாக, நாமாக ஆசைகளை படிப்படியாக விட்டுவிட்டால், அத்தனைக்கத்தனை ஆனந்தமாக இருக்கலாம். நமக்கு எத்தனை ஆசைகள் இருக்கின்றனவோ அத்தனை ஆசைகளுக்குரிய துன்பமும் உண்டு. ஆசைகளை குறைக்கக் குறைக்க துன்பமும் குறையும். ‘யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன்.’என்கிறார் வள்ளுவர். எந்த எந்தப் பொருள்களின் மேல் விருப்பம் இல்லாதவனாய் விலகுகிறானோ அவன் அந்த அந்த பொருள்களால் துன்பப்படமாட்டான் என்பது குறளின் பொருள். இப் பிறவி முடியுமுன் நாம் சகல ஆசைகளையும் விட்டு, இறைவன் மீது ஆசைப்பட பழகிவிட்டால் அவஸ்தைப்படவே வேண்டாம். அப்படியே இறைவனோடு கரைந்து ஆனந்தமாகி விடலாம். - தேவராஜன். ******************************************** ************************************************ ************************************************** தசாவதாரமும் மனித இன பரிணாமமும்/87/5.5.13/&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&& மகா விஷ்ணு எடுத்த பத்து அவதாரங்கள் ஒவ்வொன்றிலும் மிக நுட்பமான, ஆழமான தத்துவங்கள் இருக்கின்றன. அந்த பத்து அவதாரங்களும் இந்த உலகின் தோற்றம், மனித இனம் வளர்ச்சியின் ஒவ்வொரு படிநிலைகளை விரிவாக எடுத்து கூறும் கருவூலம். உலகத்தைக் காத்து அருள்வதற்காக மகாவிஷ்ணு எடுத்த பத்து அவதாரங்கள் தான் தசாவதாரங்கள். இந்த உலகில் உயிர்கள் எப்படி படிப்படியாக வளர்ச்சிப் பெற்று உருமாற்றம் பெற்றுத் தோன்றின என்பதை விளக்கும் விதியை டார்வின் கோட்பாடு என்பர் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள். இந்த உலகத்தில் உயிர்களின் பரிணாம வளர்ச்சியின் ஆரம்பம் முதன் முதலில் நீரில் இருந்து வருகிறது. அல்லது துவங்குகிறது. இதை உணர்த்தும் விதமாக இருப்பது தான் தசாவதாரத்தின் முதல் அவதாரமான மச்ச அவதாரம். மச்சம் என்றால் மீன் என்று பொருள். மீன் என்பது தண்ணீர் தொடர்புடையது. இரண்டாவது அவதாரம் கூர்ம அவதாரம். கூர்மம் என்றால் ஆமை. ஆமை என்பது நீரில் இருந்து நிலத்துக்கு வரும். அதாவது நீரில் தோன்றிய உயிரினம் அடுத்தப்படியாக நிலத்துக்கு வருகிறது என்பது கூர்ம அவதாரத்தின் பொருள். மூன்றாவது அவதாரம் வராகம். வராகம் என்றால் பன்றி. இந்த உயிரினம் தரையில் வாழ்வன. நான்காவது அவதாரம் நரசிம்மம். அதாவது மனித உருவில் உள்ள சிங்கம். மனிதனும் மிருகமும் கலந்தது. படிப்படியாக இந்த <உலகில் மனிதனும் அவனைச் சார்ந்து விலங்குகளும் வாழத்தொடங்கின என்பது பொருள். ஐந்தாவது அவதாரம் வாமனன். உயினத்தின் பரிணாம வளர்ச்சியில் இரு காலில் நடக்கும் மனித இனம். ஆறாவது பரசுராம அவதாரம். வளர்ச்சி அடைந்த மனிதன் கோபத்தைக் கட்டுப்படுத்தத் தெரியாத நிலையைச் சொல்வது. ஏழாவது ராமவதாரம். இந்த அவதாரம் மனப் பக்குவம் பெற்ற ஒரு மனிதனின் நிலையை அப்படியே படம்பிடித்து காட்டுவது. எட்டாவது அவதாரம் பலராம அவதாரம். இந்த அவதாரம் ஒரு மனிதனின் ஆற்லை, திறமையை, மதி நுட்பத்தை சொல்வது. ஒன்பதாவது அவதாரம் கிருஷ்ண அவதாரம். இந்த அவதாரம் மற்ற உயிர்களிடமிருந்து வேறுபட்டு, முழுமையடைந்து இந்த உலகையே எப்படி வென்று காட்டுகிறான் என்பதைப் பற்றிசொல்வது. பத்தாவது அவதாரமான கல்கி - கலியின் முடிவில் நிகழும் என்று புராணங்கள் கூறுகின்றன. இந்த அவதாரம் அயல்கிரகவாசிய இருக்கப்போகிறதோ என்னவோ? உலகில் உயிரின தோற்ற வளர்ச்சியில் படிப்படியாக வளர்ந்து மனித சாயல் பெறும் ஸ்ரீநரசிம்மர் அவதாரத்திற்கும், முழு மனித சாயலும், மனிதத்தன்மையும் பெற்ற அவதாரங்களான ஸ்ரீராமபிரான், ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவுக்கு அதிக அளவில் திருக்கோயில்கள் காணப்படுகின்றன. இக்கோயில்களின் நம் முன்னோடிகளான ஸ்ரீநரசிம்மர், ஸ்ரீராமர், ஸ்ரீகிருஷ்ணரை வணங்கி வாழ்வாங்கு வாழ்வோம்! - தேவராஜன். ************************************************* **************************************************************************************************** இதுவும் புண்ணியம்தான்!/ 88/12.5.2013/&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&& ‘ஆலயம் தொழுவது சாலமும் நன்று!’ என்றார்கள் முன்னோர்கள். நாம் தினமும் ஆலயம் சென்று வணங்குகிறோமா, என்ன? எல்லாராலும் தினமும் ஆலயம் சென்று, இறைவனை வணங்கி வருவது என்பது இக்காலத்தில் இயலாத செயலாக இருக்கிறது. அதற்கு பல பணி நிமித்த காரணங்கள் இருக்கிறது. தினமும் ஆலயம் சென்று இறைவனை தரிசிக்க இயலாத சைவர்கள் வாரத்தில் திங்கள் கிழமை, செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமைகளிலும், மாதத்தில் பிரதோஷம் , பவுர்ணமி , அம்மாவசை , திருவாதிரை , கார்த்திகை , மாசப்பிறப்பு , சூரிய கிரகணம் , சந்திர கிரகணம் , சிவராத்திரி , நவராத்திரி , விநாயக சதுõர்த்தி , விநாயக சஷ்டி , கந்த சஷ்டி முதலிய புண்ணிய காலங்களிலாவது தவறாது ஆலய சென்று இறைவனை தரிசனம் செய்தல் வேண்டும். அப்படி செய்து வந்தால் புண்ணியம் உண்டு என்று ஆலய தரிசன விதி சொல்கிறது. சுவாமி தரிசனம் செய்ய விரும்புவோர் திருக்கோயிலுக்கு அருகில் உள்ள புண்ணிய தீர்த்தத்தில் குளித்து, உடைகளை தோய்த்து, அதை உலர்த்தி அணிந்து கொண்டு சுத்தமாக கோயிலுக்கு செல்ல வேண்டும். அப்படி போகும் போது சும்மா கை வீசிக்கொண்டு செல்லாமல் ஒரு பாத்திரத்தில் தேங்காய் , பழம் , பாக்கு , வெற்றிலை , கற்பூரம் , பத்திர புஷ்பம் முதலியன எடுத்துக்கொண்டு செல்ல வேண்டும். கோயில் அருகே வந்ததும் ஸ்துõல லிங்கமாகிய திருக்கோபுரத்தை வணங்கி, இரண்டு கைகளையும் தலைமேல் குவித்துக் கடவுளை மனதிலே தியானித்துக் கொண்டே உள்ளே சென்று, பத்திர லிங்கமாகிய பலிபீடத்தின் அருகே நமஸ்காரம் செய்ய வேண்டும். கோயிலுக்குச் செல்வது மட்டுமல்ல; கோயிலுக்குச் செல்ல இயலாதவர்கள் இறைவனை நம் வீட்டு விருந்தினர் போலப் பாவித்து சில பணிவிடைகள் செய்யலாம். அப்படி செய்வதிலு<ம் புண்ணியம் உண்டு. அப்படி செய்ய வேண்டிய பணிவிடைகள் எவை என தெரிந்து கொள்ளுங்கள்: ஆசனம் -அமர்வதற்கு தவிசு அளித்தல் . பாத்யம் - கால் அலம்ப நீர் தருதல் . அர்க்யம் -கை கழுவ நீர் கொடுத்தல் . ஆசமனீயம் - பருகுவதற்கு நீர் வழங்குதல் . அபிஷேகம் -திருமுழுக்கு நீர் ஆட்டுதல் . வஸ்திரம் - அணிந்து கொள்ள ஆடைகள் வழங்குதல் . கந்தம் -நறுமணப் பொருட்கள் தருதல் . புஷ்பம் - மலர் மாலைகள் சூட்டுதல் . துõபம் -அகில் சந்தனம் முதலிய நறுமணப் புகையிடுதல் . தீபம் -ஒளி விளக்குகள் ஏற்றி மும்முறை வலமாகச் சுற்றுதல். இப்படி பல வகையான பணிவிடைகள் செய்வதும், கோயிலுக்குச் சென்று வழிபடுவதும் நாம் வாழும்போதே தேடிக் கொள்ளும் புண்ணியச் செயல்களாகும். மனிதர்களாகப் பிறந்த நாம் கட்டாயம் செய்ய வேண்டியதுமான இந்தப் புண்ணியச் செயல்களை இன்று முதல் செய்யலாமே! - தேவராஜன். ************************************************************************************************************************************************************************* அன்பெனும் பிடிக்குள் அகப்படும் மலை/89/ 19.5.13/&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&& ஒரு பக்தனின் உண்மையான, உள்ளன்பான, முழுநம்பிக்கையான பக்திக்கு இறைவன் நிச்சயமாக அருள்பாலிக்கிறார். பிரகலாதனின் முழுநம்பிக்கையான பக்திக்கு மகா விஷ்ணு, நரசிம்ம அவதாரம் எடுத்து காட்சியளித்தார். இதே போல, இன்னொருவருக்கும் அவர் நரசிம்மர் அவதார காட்சிகொடுத்துள்ளார். அந்தக் கதையைத் தெரிந்துகொள்வோமே! ஸ்ரீஆதிசங்கரரின் சீடர் ஸ்ரீ பத்மபாதர். அவருக்கு ஸ்ரீ நரசிம்ம மந்திரம் உபதேசிக்கப்பட்டது. அவர், சித்தி அடைய வேண்டி, ஒரு காட்டில் தனிமையில் அமர்ந்து ஜபம் செய்யலானார். காட்டில் தனிமையில் அவர் அமர்ந்திருப்பதைப் பார்த்தான் ஒரு வேடன். ‘சுவாமி, பயங்கர மிருகங்கள் இருக்கும் இந்தக் காட்டில் இப்படி தனியாக அமர்ந்திருக்கீங்களே! இங்கிருந்து போய்விடுங்கள்’ என்று எச்சரித்தான் அந்த வேடன். பத்மபாதரோ, ‘நான் ஒரு அதிசய மிருகத்தைத் தேடி வந்திருக்கிறேன். அது இங்கே தான் இருக்கிறது. அதைப் பிடிப்பதற்காக அமர்ந்திருக்கிறேன்’ என்றார். ‘இந்தக் கானகத்தில் எனக்குத் தெரியாத மிருகமா? நீங்கள் அடையாளம் சொல்லுங்கள், நான் பிடித்துத் தருகிறேன்’ என்றான். பத்மபாதரும், ’சிங்கத் தலையும் மனித உடலும் உள்ள விசித்திர மிருகம் அது ’ என்றார். ’நான் இன்று சூரிய அஸ்தமனத்திற்குள் அதைப் பிடித்து வருகிறேன்’ என்று கூறிவிட்டுத் தேடப் புறப்பட்டான் வேடன். காட்டில் எங்கு தேடியும் அந்த மிருகம் கிடைக்கவில்லை. ‘அந்த தவசி உண்மையைத் தான் கூறுவார்’ என்ற நம்பிக்கை அவனுக்கு. ஆதலால் உணவின்றி, நீரும் அருந்தாமல் தேடினான். மாலையும் வந்தது. கிடைக்கவில்லை என்று அந்தத் தவசியிடம் எப்படிப் போய்ச் சொல்வேன், அவர் என்மீது நம்பிக்கை வைத்துக் காத்திருப்பாரே!!’ என்று வருத்தப்பட்டான். ‘அந்த மிருகம் கிடைக்கவில்லை என்று சொல்வதைவிட, எனக்கு மரணமே மேல்’ என்று சாகத்துணிந்து விட்டான் வேடன். அப்போது இடி இடிப்பதுபோல் பெருமுழக்கம் கேட்டது. ஆதிமூலமான இறைவன், ஸ்ரீ நரசிம்மர், வேடன் முன் தோன்றினார். ‘ வந்து விட்டாயா, உன்னை எங்கெல்லாம் தேடுவது?’ என்று கூறி, கொடிகளால் நரசிம்மரைக் கட்டினான். ’அன்பெனும் பிடிக்குள் அகப்படும் மலை’ யாக நரசிம்மர் சாதுவாக அவனுக்குக் கட்டுப்பட்டார். அவரை பத்மபாதரிடம் அழைத்துச் சென்று, ‘பாருங்கள், பிடித்து விட்டேன். நீங்கள் சொன்ன மிருகம் இதுதானா என்று பாருங்கள்’ என்றான். பத்மபாதருக்கு கொடிகளால் கட்டப்பட்டிருக்கும் பகவானைத் தெரியவில்லை. அவர் பிரமித்து நின்றிருந்த போது, நரசிம்மரின் கர்ஜனை கேட்டது. ‘முழு நம்பிக்கையுடன் தேடியதால், இவனுக்குக் கட்டுப்பட்டிருக்கிறேன். பக்தியில் சந்தேகம் கூடாது. இவனின் சம்பந்தம் இருந்ததால்தான் என் குரலையாவது கேட்கிறாய், காலம் வரும்போது நான் உனக்குக் காட்சியளிப்பேன் என்று கூறி மறைந்தார். இறைவன், தன்னையே கதி என்றிருப்போருக்குக் கட்டாயம் அருளுவான். - தேவராஜன். **************************************************************************************************************************************************************************** பக்தியினிலே ஒன்பது வகை/90/ 26.5.2013/&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&& சாஸ்திரங்கள் கடவுள் மீது நாம் கொள்ள வேண்டிய பக்தியை இப்படி இப்படி என்று வகைப்படுத்தியுள்ளன. அப்படி பக்தி செய்தவர்கள் பெற்ற இறை அருளையும் புராணங்கள் எடுத்துக்காட்டி உள்ளன. சாஸ்திரங்கள் வகைப்படுத்தியுள்ள பக்தியினிலே ஒன்பது வகையில் நீங்கள் எந்த நிலையில் இருக்கிறீர்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். பக்தியில் நீங்கள் இருக்கும் நிலையைத் தெரிந்து கொண்டு தொடர்ந்து அன்போடு, நம்பிக்கையோடு இடைவிடாது இறைவனிடம் பக்தி செய்து வாருங்கள். நிச்சயம் அதற்குரிய பலனை அப்படியே இறைவனிடம் பெறலாம். ச்ரவணம்: குருமார்களிடமும் சமய சான்றோர்களிடமும் நாம் இறைவனின் அருமை பெருமைகளைப்பற்றி கேட்டு, அறிந்து இறைவனிடம் பக்தி கொள்வது ச்ரவணம் ஆகும். சாபத்துக்கு உள்ளான மன்னன் பரீக்ஷித்து பாகவதம் கேட்டு, தன் பாவங்களில் விடுபட்டான். கீர்த்தனம்: இறைவனின் புகழ்பா டும் பாடல்கள் கீர்த்தனங்களாகும். இந்தக் கீர்த்தனங்களை பஜனை செய்து, இறைவனை வழிபடுவது கீர்த்தனம். சுக முனி பாடிய பாகவதக் கதையால் சுகம் அடைந்தனர் கேட்டவர் எல்லாம். ஸ்மரணம்: ‘இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான்’ என்று மாணிக்க வாசகரின் எண்ணப்படி முழு நம்பிக்கையுடன் எப்போதும் இறைவனை பற்றி நினைத்துருகுவது ஸ்மரணம். எத்தனையோ துன்பங்கள், இடர்கள் வந்தபோதும் பிரஹலாதன், தன் ஹரியை மறக்காமல் நினைத்துக்கொண்டிருந்தான்! பாதஸேவனம்: இறைவனின் திருவடிகளை விட்டு நீங்காது நல்ல உள்ளத்துடன் இறை சேவை செய்தல் பாதஸே வனமாகும். இந்த பாக்கியத்தை பெற்றவள் லக்ஷ்மி தேவி. அர்ச்சனை: உள்ளன்புடன் நாளும் பொழுதும் மலர்களைக் கொண்டு ஈசனுக்கு பூஜை செய்வது அர்ச்சனை. பிருது மகாராஜா என்பவர் இறைவனுக்கு இடைவிடாது அர்ச்சனை செய்தவர்களில் பிரசித்தி பெற்றவர். இவர் இறை அருள் பெற்றவர். வந்தனம்: இந்த உடல் இறைவன் கொடுத்தது. எனவே இந்த உடலோடு என் உள்ளத்தையும் உனக்களித்தேன் எனும்படி கீழே விழுந்து சாஷ்டாங்கமாய் இறைவனை வணங்கி எழுதலுக்குப் பெயர் வந்தனம். கண்ணனை தினமும் வணங்கி கண்ணனைக் கண் கூடாகக் கண்டவர் பக்த அக்ரூரர். தஸ்யம்: எப்போதும் இறைவனுக்கு தம்மை அடிமையாய் கருதி திருப்பணிவிடை செய்தல் தஸ்யம் ஆகும். இதற்கு சிறந்த உதாரணம் அனுமன். ஸக்யம்: ஒரு பக்தன், இறைவனை தம் தோழனாய், தம் அன்பிற்குரியவனாய் கருதி நேசத்துடன் பக்தி செய்வது. முப்பொழுதும் கண்ணனோடு இருந்து,உண்டு , உறங்கி, பேசிப் பழகிய, அன்பு, நட்பு, பக்தி செய்த அர்ஜுனன் கொண்ட பக்தி சக்யம். சக்ய பக்தியினாலேயே அர்ஜூனன் கண்ணனுக்குப்பிரியவனாகி, கீதை உபதேசம் பெற்றான். ஆத்ம நிவேதனம்: இந்த ஆத்மா அவனுடையது. அது அவனுக்கு உரிமையுடையது என நினைத்து, இறைவனுக்கு தன்னையே ஒப்புக்கொடுப்பது ஆத்ம நிவேதனம் . இதற்கு சிறந்த உதாரணம் அரசன் மகாபலி. - தேவராஜன். ********************************************************************************************************************************************************************************* 15 வகை திதிகள்/ 91/ 2.6.2013/&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&& இன்றைய தலைமுறை தமிழ் வருடப்பிறப்பு நாளில் பஞ்சாங்கம் படிக்கும் பழக்கம் கொண்டிருப்பதில்லை. அவர்களுக்கு பஞ்சாங்கத்தில் திதி பார்க்கத் தெரிவதில்லை. திதி எத்தனை, அவைகளை எப்படி தெரிந்து கொள்வது என்பதை தெரிந்து கொள்வதும் பக்தியின் ஓர் வகைதான்! திதி என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள துõரம். அம்மாவாசை அன்று சூரியனும் சந்திரனும் சேர்ந்திருப்பார்கள். அதன் பின் சந்திரன், சூரியனிடம் இருந்து விலகி செல்வார். ஒவ்வொரு மாதமும் 30 திதிகள் கடைபிடிக்கப்படுகின்றன. இதில் இரண்டு பட்சங்கள் உள்ளன. அவை கிருஷ்ண பட்சம் அல்லது தேய்பிறை மற்றும் சுக்கில பட்சம் அல்லது வளர்பிறை ஆகும். திதியை பவுர்ணமி அல்லது அமாவாசை நாளில் இருந்து கணக்கிடலாம். பிரதமை: அமாவாசை நாளிற்கு அடுத்த நாள் (திதி). பிரதம எனும் சொல் முதலாவது எனப் பொருள்படும். துவிதியை: ‘துவி’ என்றால், இரண்டு. இது அமாவாசை நாளிலிருந்து இரண்டாவது நாள் (திதி). திரிதியை: என்றால், மூன்று. அமாவாசை நாளிலிருந்து மூன்றாவது நாள் (திதி). சதுர்த்திதி: சதுர் என்றால் நான்கு. கடவுளின் நான்கு கரங்களை, சதுர்புஜம் என்பர். அமாவாசை நாளிலிருந்து நான்காவது நாள் (திதி). இது விநாயகருக்குரிய சிறப்பு நாளாகும். பஞ்சமி: பாஞ்ச் என்றால், ஐந்து. அமாவாசை நாளிலிருந்து ஐந்தாவது நாள் (திதி). சஷ்டி: சஷ்டி என்றால், ஆறு. முருகனுக்குரிய திதி. இதனால் தான் அவருக்கு ஆறு முகம்இருக்கிறது.அமாவாசை நாளிலிருந்து ஆறாவது நாள் (திதி). சப்தமி: சப்தம் என்றால், ஏழு. அமாவாசை நாளிலிருந்து ஏழாவது நாள் (திதி). அஷ்டமி: அஷ்ட என்றால், எட்டு. அமாவாசை நாளிலிருந்து அல்லது பவுர்ணமி நாளிலிருந்து எட்டாவது நாள் (திதி). திருமாலின் அவதாரமான கண்ணன் அஷ்டமி நாளில் அவதரித்ததால் இந்நாள் ஜென்மாஷ்டமி அல்லது கோகுலாஷ்டமி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. நவமி: ஒன்பதாம் திதி. அமாவாசை நாளிலிருந்து ஒன்பதாவது நாள் (திதி). ராமபிரான் நவமி திதியில் பிறந்ததால் அவருடைய பிறந்த நாள் ராம நவமி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. தசமி: தசம் என்றால், பத்து. ராவணனை, தசமுகன் என்பர். அம்மாவாசை நாளில் இருந்து 10 வது நாள் திதி. ஏகாதசி: ஏகம் – தசம் என பிரிக்க வேண்டும். ஏகம் என்றால் ஒன்று. தசம் என்பது, பத்து. இரண்டையும் கூட்டினால், 11. இது, 11ம் திதி. அமாவாசையிலிருந்து மற்றும் பவுர்ணமியிலிருந்து 11வது நாளாகும். மற்ற விரதங்களை விட ஏகாதசி விரதம் கடைபிடிப்பது நல்லது. துவாதசி:அமாவாசை நாளிலிருந்து 12வது நாள் (திதி). திரயோதசி:அமாவாசை நாளிலிருந்து 13வது நாள் (திதி). சதுர்த்தசி: அமாவாசை நாளிலிருந்து 14வது நாள் (திதி). பூர்ணமான அமாவாசை அல்லது பவுர்ணமி ஆகியவை, 15ம் திதி. - தேவராஜன். ***************************************************************************************************************************************************************************** ஆன்மிகத்தின் பெருமை!/92/ 9.6.13/&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&& மெய்ஞானம் என்பது அகத்தாய்வு செய்தல். விஞ்ஞானம் என்பது புறத்தாய்வு செய்தல். வெளியில் என்ன இருக்கிறது என்பதை அறிய, சூரியன், சந்திரன், நட்சத்திரம், சூரிய குடும்பம், பால் வெளிகளுக்கு விண்கலம் அனுப்பி அல்லது தொலை நோக்கி கருவியால் பார்த்து ஆராய்ச்சி செய்வது விஞ்ஞானம். மனதை ஒருநிலைப்படுத்தி, தவம், தியானம் செய்வது என்பது அகத்தாய்வு. நாம் கண்களை மூடி ஆராய்ச்சி செய்கிறோம். அதாவது நமது பார்வையை உள் செலுத்தி ஆய்வு செய்கிறோம். உடல் எனும் மெய்யை அல்லது மெய்யின் மூலம் ஆய்வு செய்து பிரபஞ்ச ரகசியத்தை, ஞானத்தை பெறுவதால் அகத்தாய்வு செய்பவர்களை மெய்ஞானி என்கிறோம். விண்ணில் பார்வையை செலுத்தி விண்ணை பற்றிய ஞானம் பெறுதலால் அறிவியலாளர்களை விஞ்ஞானி என்கிறோம். இந்தப் பிரபஞ்சத்தில் என்னென்ன உள்ளதோ, அது மனிதனின் உடலிலும் உள்ளது. இந்த உலகம் எப்படி பஞ்ச பூதங்களான நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றால் ஆனதோ, அதேபோல் நமது உடலும் இதனால் தான் ஆனது. அதுமட்டுமல்ல; உலகில் உள்ள அனைத்து பொருளுக்கும் நமக்கும் ஏதாவது ஒரு தொடர்பு இருக்கும். அண்டத்தில் உள்ளதுதான் பிண்டத்திலும் உள்ளது . சின்ன உதாரணம்: அணுவுக்குள் என்ன இருக்கிறதுஎன்று அறிய, அணுவை அதை விட நுட்பமான ஆல்பா கதிர்களால் துளைத்துப்பார்த்தார்கள் விஞ்ஞானிகள். அணுவுக்குள் உள்ளே பெரும்பாலும் வெட்ட வெளியாக இருப்பதையும் மையத்தில் கரு போல சில புரோட்டான் துகள்களும் அவற்றைச் சுற்றியபடி சில எலக்ட்ரான் துகள்களும் இருப்பதைக் கண்டனர். அணுவைப் பிளந்த விஞ்ஞானம் உள்ளே இருக்கும் துகள்களை சக்தியின் வெளிப்பாடான பல வடிவங்களாகக் கண்டது. அவை சதா சஞ்சரித்துக்கொண்டிருப்பதையும், ஒன்றுடன் ஒன்று உறவாடுவதையும், தத்தம் சக்திகளைப் பரிமாறிக்கொள்வதையும் விஞ்ஞானிகள் கண்டனர். விஞ்ஞானத்தின் புறத்தாய்வை அறிந்தோம். இதோ மெய்ஞானத்தின் அகத்தாய்வையும் தெரிந்துகொள்ளலாம். சாண்டோக்கிய உபநிடதத்தில் பிரபஞ்சத்தின் மூலத்தை விளக்க ஒரு குட்டிக்கதை. ஒரு குரு தன் சிஷ்யனிடம் ஒரு ஆலமரத்தின் பழத்தைக் கொண்டு வரச்சொன்னார். ‘இந்தாருங்கள் குருவே!’ ‘அதை உடை’ ‘உடைத்தேன்குருவே’ ‘உள்ளே என்ன இருக்கிறது?’ ‘மிக நுணுக்கமான சில துகள்ப்பொடிகள்’ ‘அதையும் உடை’ ‘உடைத்தேன் குருவே’ ‘அதனுள் என்னப்பார்க்கிறாய்?’ ‘ஒன்றும் இல்லையே குருவே’ ‘உன் கண்ணுக்குப் புலப்படாத அந்த சூட்சும சூனியத்தில் தான் அந்தப் பெரிய ஆலமரத்தின் மூலம் இருக்கிறது. அந்த மூலத்தை ஒளித்து வைத்து, ஒளிந்திருப்பவன்தான் இறைவன்’ என்றார் குரு. அணுவை உடைத்து விஞ்ஞானிகள் கண்டதும் இதையேதான் அல்லவா? - தேவராஜன். ********************************************************************************************************************************************************************************* நல்லது நல்லபடியே நடக்கும்!/ 93/ 16.6.13/&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&& மனித வாழ்க்கை என்பது அற்புதமானது. மேன்மையானது. இந்த வாழ்க்கை மூலம் ஒருவர் சொர்க்கமோ, மோட்சமோ அடையவும் முடியும். இவ்வளவு புனிதமான மனிதப்பிறவி கிடைத்ததற்கே நாம் இறைவனுக்கு கடமைப்பட்டிருக்கிறறோம். ‘அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது’ என்று அவ்வை மூதாட்டி சொன்னதன் மகிமையும் இதனால்தான். வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும் அர்த்தத்தோடு வாழவேண்டும். தினமும் மனிதன் கடைபிடிக்கவேண்டிய வாழ்வியல் நெறிமுறைகளை சாஸ்திரங்கள் தெளிவுறுத்துகின்றது. வாழ்வியல் நெறிமுறைகள் முதல்படிகளாக அமைவன ஐந்து வழிகள். அவை துõய்மை, திருப்தி(மனநிறைவு), பிராயாச்சித்தம்(கழுவாய்), தற்சோதனை, இறைவனிடம் சரணடைதல் ஆகியனவாகும். ஒரு பக்தனுக்கு உடலும், உள்ளமும் துõய்மையாக இருத்தல் வேண்டும். துõய்மையான உணவு, நீர் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி நமது உடலைச் சுத்தமாக வைத்திருக்கின்றோம். ஆசனங்கள், பிராணாயாமம் , தியானம்,கிரியைகள் (நற்செயல்கள்) போன்றவற்றைச் செய்து நமது உள்ளத்தைத் துõய்மையாக வைத்திருக்க வேண்டும். ‘புறந்துõய்மை நீரான் அமையும் அகந்துõய்மை வாய்மையாற் காணப் படும்’ -என்கிறார் திருவள்ளுவர். உடம்பு தண்ணீராலும் உள்ளம் உண்மையாலும் துõய்மையாகும் என்பது இதன் பொருள். மனதுள் எந்தவிதமான தீய எண்ணங்களையும் வரவிடாது ஒருவன் நல்லொழுக்கத்தைக் கடைபிடித்து வாழ வேண்டும் என்பதை காலையில் கண்விழித்தவுடன் மனதில் சங்கல்பம் எடுத்துக்கொள்ள வேண்டும். அதுவே உளத்துõய்மைக்கு வழிவகுக்கும். ‘மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல நீர பிற’- என்று வள்ளுவர் சுட்டிக்காட்டுவதும் இதைதான். திருப்தி ஒவ்வொருவரும் நிறைவான மனநிலையுடன் வாழ்தல் வேண்டும். ‘போதுமென்ற மனமே பொன்செய்யும் மருந்து’. ‘இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற புன்மையில் காட்சி யவர்’ மனநிறைவு பெற்றவர்கள் எதற்கும் ஆசைப்படமாட்டார்கள் என்பது வள்ளுவர் கருத்து. பிராயச்சித்தம் எதனைக் கண்டும் கலங்காது பொறுத்துக் கொண்டு அதிலிருந்து மீண்டு வரும் பக்குவம் பெறவேண்டும். துன்பம் வந்துவிட்டது. அதனைக் கண்டு கலங்கக் கூடாது. அத்துன்பத்திலிருந்து மீள்கின்ற (வழியை) தேடி அதிலிருந்து நாம் மீண்டு வரவேண்டும். இப்பிராயச்சித்தம் என்பதற்கு நாம் செய்த தவறுகளுக்காக மனம் வருந்தி அதற்குப் பரிகாரம் தேடுதல் வேண்டும். அதாவது அதற்குரிய நன்மையினைச் செய்துவிடுதல் வேண்டும். தற்சோதனை நம்மை நாமே விமர்சனம் செய்துகொள்ள வேண்டும். நாமே நீதிபதியாக இருந்து நம்மையே நாம் கூர்ந்து விசாரிக்க வேண்டும். மனசாட்சிபடி நடக்க வேண்டும். சரணடைதல் வாழும்போதும், இவ்வுலக வாழ்க்கைக்குப்பிறகும் நமக்கு இறுதிவரை துணையாக இருப்பது இறைவனே! ஆதலால், அவனையே நம் உறவாக பற்றிக்கொண்டு சரணடைய வேண்டும். மேலே சொன்னபடி வாழ்ந்தால் நல்லது நல்லபடியே நடக்கும்! - தேவராஜன். ***************************************************************************************************************************************************************************** உணவு போதனை!/94/ 23.6.13/ &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&& உணவு என்பது உடலை மட்டுமல்ல; மனிதனின் புத்தியையும் உணர்வையும் சுபாவத்தையும் வளர்க்கிறது. பகவத்கீதையில் கிருஷ்ணன், காரசாரமான உணவுகள் மனிதனுக்கு கோபதாபங்களை கொடுப்பதாகவும், அழுகிய கெட்டுப்போன உணவுகள் சோம்பேறித்தனத்தையும், மனச்சோர்வையும் தருவதாகவும் உடனடியாக செரிக்க கூடிய காரம், புளி, உப்பு சுவைகள் கட்டுப்பட்டு இருக்க கூடிய புதிய உணவுகளே மனிதனுக்கு நல்ல எண்ணங்களையும் நல்ல ஆரோக்கியத்தையும் தருவதாக சொல்கிறார். உணவு சமைக்கும் போது அந்த உணவு பதார்த்தங்களை கையாளுகின்ற மனிதர்களின் உணர்வுகளும், அந்த உணவுக்குச் சொந்தக்காரனின் உணர்வுகளும் ஊடுருவி செல்லும். நல்லவர்கள் தரும் உணவும், நல்ல எண்ணங்களால் சமைக்கப்பட்ட உணவும் நல்ல பலனைத் தரும். கெட்ட எண்ணங்களால் உருவாக்கப்பட்ட உணவு செரிமானம் ஆகாமல் இடைஞ்சலை தான் தரும். நாம் நன்றாக இருக்கவேண்டும் என்று நம் அம்மாவும், அப்பாவும், மனைவியும், பிள்ளைளும் ஏன் நண்பர்களும் கூட நினைப்பார்கள். அவர்கள் கையால் உணவருந்துவது என்பது வேறு; மற்றவர்கள் கையால் உணவருந்துவது வேறு. உணவு பற்றி ஒரு கதை: குருசேஷத்திரப் போர். பீஷ்மர், அர்ஜூனனின் அம்புகளால் துளைக்கப்பட்டு, அம்புப்படுக்கையில் விழுந்தார். யுத்தம் முடிவுக்கு வந்தது. பாண்டவர்கள் வெற்றியடைந்தார்கள். தர்மருக்கும் கண்ணனுக்கும், பீஷ்மரின் உலக ஞானம்பற்றி நன்குத் தெரியும். தர்மன் தன் சகோதரர்களுடன் பீஷ்மர் முன் நின்றான். தங்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களை எல்லாம் கேட்டனர். பீஷ்மரும்,ஓர் அரசன் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதில் தொடங்கி, பல விஷயங்களை முப்பது நாட்களுக்கு உபதேசித்தார். கடைசியாக சகாதேவன் ஒரு நக்கலான கேள்வியை எழுப்பினான். “ பீஷ்மரே, இப்போ நீங்க நல்லா வக்கணையா நியாயம், தர்மம் பேசறீங்க. ஆனால், இவ்வளவு நாளா ஒரு அயோக்கியனான துரியோதனனோடு சேர்ந்துதானே போர் செய்தீங்க. அப்போ எங்கே போச்சு, இப்ப நீங்க எங்களுக்கு சொல்ற நியாயம், நீதி ,நேர்மை எல்லாம்? நீங்க நியாயத்துக்கு எதிரா போர் செஞ்சதா அர்த்தமாகாதா?” “ உண்மைதான் சகாதேவா. அதற்கு காரணம் நான் சாப்பிட்ட உணவுதான் காரணம்” என்றார் பீஷ்மர். “ என்ன உணவா?” “ஆமாம். உணவு உணர்வைக் கெடுக்கும். நான் பல ஆண்டுகளாக துரியோதனனின் உணவை உண்டேன். அது என்னை நியாயம் மறக்கச் செய்து விட்டது. தர்மத்துக்கு எதிராகப் போரிடச் செய்து விட்டது. ஆனால், இப்போது, அர்ஜூனனின் அம்புகள் அந்தக் கெட்ட ரத்தத்தை நீக்கி விட்டது. நான் மீண்டும் தர்மத்தின் பக்கம் திரும்பி விட்டேன்” என்றார் பீஷ்மர். ஆளாளப்பட்ட பீஷ்மருக்கே இந்த கதி என்றால், நாம் எம்மாத்திரம்? ஒவ்வொரு நாளும் உறங்கச் செல்வதற்கு முன், இன்றைக்கு நாம் உண்ட உணவு, நியாயமான வழியில் சம்பாதித்ததுதானா? என்று சிந்தனை செய்யுங்கள்! - தேவராஜன் ************************************

திங்கள், 3 ஜூன், 2013

ஆன்மிகத்தின் பெருமை!/92/ 9.6.13/

ஆன்மிகத்தின் பெருமை!/92/ 9.6.13/ மெய்ஞானம் என்பது அகத்தாய்வு செய்தல். விஞ்ஞானம் என்பது புறத்தாய்வு செய்தல். வெளியில் என்ன இருக்கிறது என்பதை அறிய, சூரியன், சந்திரன், நட்சத்திரம், சூரிய குடும்பம், பால் வெளிகளுக்கு விண்கலம் அனுப்பி அல்லது தொலை நோக்கி கருவியால் பார்த்து ஆராய்ச்சி செய்வது விஞ்ஞானம். மனதை ஒருநிலைப்படுத்தி, தவம், தியானம் செய்வது என்பது அகத்தாய்வு. நாம் கண்களை மூடி ஆராய்ச்சி செய்கிறோம். அதாவது நமது பார்வையை உள் செலுத்தி ஆய்வு செய்கிறோம். உடல் எனும் மெய்யை அல்லது மெய்யின் மூலம் ஆய்வு செய்து பிரபஞ்ச ரகசியத்தை, ஞானத்தை பெறுவதால் அகத்தாய்வு செய்பவர்களை மெய்ஞானி என்கிறோம். விண்ணில் பார்வையை செலுத்தி விண்ணை பற்றிய ஞானம் பெறுதலால் அறிவியலாளர்களை விஞ்ஞானி என்கிறோம். இந்தப் பிரபஞ்சத்தில் என்னென்ன உள்ளதோ, அது மனிதனின் உடலிலும் உள்ளது. இந்த உலகம் எப்படி பஞ்ச பூதங்களான நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றால் ஆனதோ, அதேபோல் நமது உடலும் இதனால் தான் ஆனது. அதுமட்டுமல்ல; உலகில் உள்ள அனைத்து பொருளுக்கும் நமக்கும் ஏதாவது ஒரு தொடர்பு இருக்கும். அண்டத்தில் உள்ளதுதான் பிண்டத்திலும் உள்ளது . சின்ன உதாரணம்: அணுவுக்குள் என்ன இருக்கிறதுஎன்று அறிய, அணுவை அதை விட நுட்பமான ஆல்பா கதிர்களால் துளைத்துப்பார்த்தார்கள் விஞ்ஞானிகள். அணுவுக்குள் உள்ளே பெரும்பாலும் வெட்ட வெளியாக இருப்பதையும் மையத்தில் கரு போல சில புரோட்டான் துகள்களும் அவற்றைச் சுற்றியபடி சில எலக்ட்ரான் துகள்களும் இருப்பதைக் கண்டனர். அணுவைப் பிளந்த விஞ்ஞானம் உள்ளே இருக்கும் துகள்களை சக்தியின் வெளிப்பாடான பல வடிவங்களாகக் கண்டது. அவை சதா சஞ்சரித்துக்கொண்டிருப்பதையும், ஒன்றுடன் ஒன்று உறவாடுவதையும், தத்தம் சக்திகளைப் பரிமாறிக்கொள்வதையும் விஞ்ஞானிகள் கண்டனர். விஞ்ஞானத்தின் புறத்தாய்வை அறிந்தோம். இதோ மெய்ஞானத்தின் அகத்தாய்வையும் தெரிந்துகொள்ளலாம். சாண்டோக்கிய உபநிடதத்தில் பிரபஞ்சத்தின் மூலத்தை விளக்க ஒரு குட்டிக்கதை. ஒரு குரு தன் சிஷ்யனிடம் ஒரு ஆலமரத்தின் பழத்தைக் கொண்டு வரச்சொன்னார். ‘இந்தாருங்கள் குருவே!’ ‘அதை உடை’ ‘உடைத்தேன்குருவே’ ‘உள்ளே என்ன இருக்கிறது?’ ‘மிக நுணுக்கமான சில துகள்ப்பொடிகள்’ ‘அதையும் உடை’ ‘உடைத்தேன் குருவே’ ‘அதனுள் என்னப்பார்க்கிறாய்?’ ‘ஒன்றும் இல்லையே குருவே’ ‘உன் கண்ணுக்குப் புலப்படாத அந்த சூட்சும சூனியத்தில் தான் அந்தப் பெரிய ஆலமரத்தின் மூலம் இருக்கிறது. அந்த மூலத்தை ஒளித்து வைத்து, ஒளிந்திருப்பவன்தான் இறைவன்’ என்றார் குரு. அணுவை உடைத்து விஞ்ஞானிகள் கண்டதும் இதையேதான் அல்லவா? - தேவராஜன். ***

நல்லது நல்லபடியே நடக்கும்!/93/

நல்லது நல்லபடியே நடக்கும்!/93/ மனித வாழ்க்கை என்பது அற்புதமானது. மேன்மையானது. இந்த வாழ்க்கை மூலம் ஒருவர் சொர்க்கமோ, மோட்சமோ அடையவும் முடியும். இவ்வளவு புனிதமான மனிதப்பிறவி கிடைத்ததற்கே நாம் இறைவனுக்கு கடமைப்பட்டிருக்கிறறோம். ‘அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது’ என்று அவ்வை மூதாட்டி சொன்னதன் மகிமையும் இதனால்தான். வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும் அர்த்தத்தோடு வாழவேண்டும். தினமும் மனிதன் கடைபிடிக்கவேண்டிய வாழ்வியல் நெறிமுறைகளை சாஸ்திரங்கள் தெளிவுறுத்துகின்றது. வாழ்வியல் நெறிமுறைகள் முதல்படிகளாக அமைவன ஐந்து வழிகள். அவை துõய்மை, திருப்தி(மனநிறைவு), பிராயாச்சித்தம்(கழுவாய்), தற்சோதனை, இறைவனிடம் சரணடைதல் ஆகியனவாகும். ஒரு பக்தனுக்கு உடலும், உள்ளமும் துõய்மையாக இருத்தல் வேண்டும். துõய்மையான உணவு, நீர் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி நமது உடலைச் சுத்தமாக வைத்திருக்கின்றோம். ஆசனங்கள், பிராணாயாமம் , தியானம்,கிரியைகள் (நற்செயல்கள்) போன்றவற்றைச் செய்து நமது உள்ளத்தைத் துõய்மையாக வைத்திருக்க வேண்டும். ‘புறந்துõய்மை நீரான் அமையும் அகந்துõய்மை வாய்மையாற் காணப் படும்’ -என்கிறார் திருவள்ளுவர். உடம்பு தண்ணீராலும் உள்ளம் உண்மையாலும் துõய்மையாகும் என்பது இதன் பொருள். மனதுள் எந்தவிதமான தீய எண்ணங்களையும் வரவிடாது ஒருவன் நல்லொழுக்கத்தைக் கடைபிடித்து வாழ வேண்டும் என்பதை காலையில் கண்விழித்தவுடன் மனதில் சங்கல்பம் எடுத்துக்கொள்ள வேண்டும். அதுவே உளத்துõய்மைக்கு வழிவகுக்கும். ‘மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல நீர பிற’- என்று வள்ளுவர் சுட்டிக்காட்டுவதும் இதைதான். திருப்தி ஒவ்வொருவரும் நிறைவான மனநிலையுடன் வாழ்தல் வேண்டும். ‘போதுமென்ற மனமே பொன்செய்யும் மருந்து’. ‘இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற புன்மையில் காட்சி யவர்’ மனநிறைவு பெற்றவர்கள் எதற்கும் ஆசைப்படமாட்டார்கள் என்பது வள்ளுவர் கருத்து. பிராயச்சித்தம் எதனைக் கண்டும் கலங்காது பொறுத்துக் கொண்டு அதிலிருந்து மீண்டு வரும் பக்குவம் பெறவேண்டும். துன்பம் வந்துவிட்டது. அதனைக் கண்டு கலங்கக் கூடாது. அத்துன்பத்திலிருந்து மீள்கின்ற (வழியை) தேடி அதிலிருந்து நாம் மீண்டு வரவேண்டும். இப்பிராயச்சித்தம் என்பதற்கு நாம் செய்த தவறுகளுக்காக மனம் வருந்தி அதற்குப் பரிகாரம் தேடுதல் வேண்டும். அதாவது அதற்குரிய நன்மையினைச் செய்துவிடுதல் வேண்டும். தற்சோதனை நம்மை நாமே விமர்சனம் செய்துகொள்ள வேண்டும். நாமே நீதிபதியாக இருந்து நம்மையே நாம் கூர்ந்து விசாரிக்க வேண்டும். மனசாட்சிபடி நடக்க வேண்டும். சரணடைதல் வாழும்போதும், இவ்வுலக வாழ்க்கைக்குப்பிறகும் நமக்கு இறுதிவரை துணையாக இருப்பது இறைவனே! ஆதலால், அவனையே நம் உறவாக பற்றிக்கொண்டு சரணடைய வேண்டும். மேலே சொன்னபடி வாழ்ந்தால் நல்லது நல்லபடியே நடக்கும்! - தேவராஜன்.