சனி, 19 ஜனவரி, 2013

குட்டீஸ் கேள்வி பதில்30

குட்டீஸ் கேள்வி பதில்30 விலங்குகளுக்கு வேர்க்குமா அங்கிள்? 31/8/12 - ஜே. டேவிட், தரங்கம்பாடி மனிதர்களைப்போல விலங்குகளுக்கும் வேர்க்கும். மனிதனை போன்று விலங்குகளுக்கு வியர்வை சுரப்பி உடல் முழுவதும் பரந்து இருக்காது. விலங்குகளுக்கு சில பகுதிகளில் மட்டுமே வியர்க்கும். பொதுவாக விலங்குகளின் மூக்கும் வாய்ப்பகுதியும் இணைந்த உறுப்பு ‘மசில்’ என்று பெயர். ஆடு,மாடு, ஒட்டகம், மான், நாய் போன்ற விலங்குகளுக்கு இந்த மசிலை சுற்றியும் கறுப்பாக இருக்கும். அந்தப்பகுதியில் வேர்க்கும். மற்ற விலங்குகளைவிட நாய்க்கு இந்தக்கறுப்பு வட்டம் குறைவாக இருக்கும். அதனால் வியர்ப்பதும் குறைவுதான். அதை ஈடுகட்ட நாக்கில் அதிகமாக நீர் சுரக்கும். ஓஸோன் என்றால் என்ன? அதுபற்றி விளக்கம் வேண்டும்? - ஆர். எம். ராமகிருஷ்ணா, திருச்செங்கோடு. ஓஸோன் என்பது ஆக்ஸிஜனின் ஒரு வடிவம். ஆனால், ஆக்ஸிஜன் போல் அல்லாமல் இது ஒரு விஷ வாயு. ஒவ்வொரு ஓஸோன் மூலக்கூறும் மூன்று ஆக்ஸிஜன் அணுக்களைக் கொண்டது. இதனுடைய வேதியியல் சூத்திரம் 03. பூமியின் மேற்பரப்பிலிருந்து 15-50 கி.மீ துõரத்தில் ஸ்ட்ரேடாஸ்பியர் படலம் உள்ளது. இப்படலத்தில்தான் இயற்கையாகவே ஓஸோன் படலம் அமைந்துள்ளது. இது சூரியனின் புற ஊதாக் கதிர்கள் பூமிக்கு வந்து சேராமல் தடுக்கிறது. அதன் மூலம் உயிர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கின்றன. பூமியின் மேற்பரப்புக்கு மிகவும் நெருக்கமாக உள்ள வாயு மண்டலப் படலம் வாகனங்களினால் உண்டாகும் புகை, நைட்ரஜன் ஆக்ஸைடுகள் மற்றும் ஹைட்ரோ கார்பன்கள் இவற்றின் அளவுகள் அதிகரிப்பதால் மாசு படுகிறது. சூரிய ஒளி இருக்கும் போது, இந்த வேதிப்பொருட்கள் ஓஸோனை உருவாக்குகின்றன. இந்த ஓஸோன், இருமல், தொண்டை எரிச்சல், ஆஸ்துமா, போன்ற நோய்களை உண்டாக்குகின்றன. என் அப்பா டிஸ்கவரி சேனல் பாரு என்கிறார். டிஸ்கவரி எப்போது உருவாக்கப்பட்டது. அதன் நிகழ்ச்சிகள் பற்றி சொல்லுங்க அங்கிள்! - பா.மணிமாறன், குடவாசல். டிஸ்கவரி நிறுவனம் 1985ம் ஆண்டு அமெரிக்காவில் துவங்கப்பட்டது. இப்போது 170 நாடுகளில் 40 மொழிகளில் தன் சேவையை வழங்கிக் கொண்டிருக்கிறது. இதில் நம் தமிழ் மொழியும் அடங்கும். இந்தியாவில் இந்தி மற்றும் தமிழ் மொழிகளில் மட்டுமே தனியாக டிஸ்கவரி அலைவரிசை உள்ளது. தமிழில் தனி அலைவரிசை 15.8.2011 முதல் ஒளிபரப்பப்படுகிறது. டிஸ்கவரி தமிழ் சேனலின் நிகழ்ச்சிகள் அனைத்துமே பெரியவர் முதல் சிறியவர் வரை அவரவர் ரசனைக்கேற்றவாறு ரசிக்கும்படி இருக்கின்றன. உலக அளவில் நடைபெற்ற முக்கிய நிகழ்ச்சிகளை இவர்கள் தொகுத்து வழங்கும் விதம் பிரமிப்பாக இருக்கும். லைப், ஜாய் ஆப் த டிஸ்கவரி, டிஸ்கவர் மோர், பாக்ட்ரி மேட், டர்ட்டி ஜாப்ஸ்,சர்வய்வர் மேன்,டுயல் சர்வய்வர், மென், வுமன் விசஸ் வைல்ட்,வொர்ஸ்ட் கேஸ்ட் செனாரியோ,கன்டர் இப்படி எண்ணற்ற நிகழ்ச்சிகளை பட்டியலிட்டுக் கொண்டிருக்கலாம். அனைத்துமே இயற்கையின் எழிலையும் ,கோபத்தையும் நமக்கு உணர்த்துகிறது. ********************************************************************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக