சனி, 19 ஜனவரி, 2013

குட்டீஸ் கேள்வி பதில் 15

குட்டீஸ் கேள்வி பதில் 15 *ஆறறிவு என்றால் என்ன? அவை எவை? மே11 -கே.அபிஜித், ஸ்ரீரங்கம். ஆறறிவு என்பவை பார்க்கும் அறிவு, கேட்கும் அறிவு, தொடும் அறிவு, நுகரும் அறிவு, ருசிக்கும் அறிவு மற்றும் பகுத்தறியும் அறிவு போன்றவையாகும். விலங்கினத்திற்கு ஐந்தறிவு மட்டுமே உள்ளன என்றும், மனிதனுக்கு அதனையும் விட ஒரு சிறப்பு அறிவான பகுத்தறிவையும் கொண்டு பார்க்கப்படுகின்றது. மனிதனுக்கு இருக்கும் இப்பகுத்தறிவே மற்றைய விலங்கினத்தில் இருந்து வேறுபட்டும், உயர்ந்தும் இருப்பதற்கான காரணமாக பார்க்கப்படுகின்றது. 1. உடலால் மட்டும் உணர்வது ஓரறிவு - இது தாவரங்களுக்கு. 2. உடல், நாக்கால் உணர்வது ஈரறிவு - இது கடல்வாழ் உயிரினங்களுக்கு. 3. உடல், நாக்கு, மூக்கால் உணர்வது மூன்றறிவு- இது ஊர்வனங்களுக்கு. 4. உடல், நாக்கு, மூக்கு, கண்ணால் உணர்வது நான்கறிவு- இது பூச்சி இனங்களுக்கு. 5. உடல், நாக்கு, மூக்கு, கண், காது ஆகிய ஐந்தால் உணர்வது ஐந்தறிவு- இது விலங்கினங்களுக்கு. 6. உடல், நாக்கு, மூக்கு, கண், காது, மூளை ஆகியவற்றால் அறிவது ஆறறிவு- இது மனிதர்களுக்கு. * அக்னி ஏவுகணை பற்றி விரிவாக சொல்லுங்க அங்கிள்! - எம். நிகேஷ்குமார், காட்டூர். அக்னி ஏவுகணை இந்தியாவினால் அமைக்கப்பட்ட குறுகிய முதல் நடுத்தர துõர ஏவுகணை வகைகளைக் குறிக்கும். 2007ம் ஆண்டு வரையில் அக்னி திட்டத்தில் பின்வரும் ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டன: அக்கினி தாக்குகணை - எல்லாவற்றையும் விடப் பேராற்றல் கொண்ட இடைத்துõர ஏவுகணை , அக்கினித் தாக்கு கணைகளின் நீட்சித் துõரம் : 2,500 கி.மீ. உலகிலேயே இது போன்ற தாக்குகணையைப் பெற்ற ஐந்து நாடாக அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், சீனா, இந்தியா கருதப்படுகிறது. 1989ல் அக்கினி-1 ஏவுகணையின் சோதனைப் பயிற்சி வெற்றிகரமாகச் செய்து முடிக்கப்பட்டது. 2007 ஏப்ரல் 12 ம் தேதி 3000 கி.மீ. பயணம் செய்யும் அக்கினி-3 பரிசோதிக்கப்பட்டது. 2012 ஏப்ரல் 12 ம் தேதி 3,000 கி.மீ. பயணம் செய்யும் அக்கினி-5 பரிசோதிக்கப்பட்டதன் மூலம், இந்திய வரலாற்றில் ஒரு மைல் கல்லை நட்டது. அக்னி-1 குறுகிய துõரம் பாயும் துõரம்: 700- 800 கிமீ. அக்னி-2 நடுத்தர துõரம் பாயும் துõரம்: 2000- 2,500 கிமீ. அக்னி-3 இடைத்தர துõரம் பாயும் துõரம்: 3,500- 5,000 கிமீ. அக்னி-4 இடைத்தர துõரம் பாயும் துõரம்: 3,000 கிமீ. அக்னி-5 கண்டம் விட்டுக் கண்டம் பாயும் துõரம்: 5,000- 6,000 கிமீ. அக்னி- 1 மற்றும் அக்னி-2 சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகியவற்றைக் குறி பார்த்து ஏவக்கூடியவை. அக்னி-2 சீனாவின் மேற்கு, நடு, மற்றும் தெற்குப் பகுதிகளை சென்றடையக்கூடியன. அக்னி- 3 இது சீனாவின் முக்கிய நகரங்களான பெய்ஜிங் , மற்றும் ஷங்காய் ஆகியவற்றை தாக்கக்கூடியன. அக்னி-5 மே19, 2012ல் ஏவப்பட்டது. இது பாயும் துõரம்: 5,000 முதல் 7,000 கி.மீ வரை. *கொட்டாவி எப்படி உருவாகிறது? -ஆர். எம். ராமகிருஷ்ணா, திருச்செங்கோடு. நமது மூளையில் துõக்கம் வருவதற்கான அறிகுறிகள் தொடங்கிய உடனேயே இதயம் மூச்சுவிடும் வேகத்தை சற்று குறைத்துக்கொள்கிறது. இதை ஈடுசெய்து மூளைக்கு அதிக ரத்தத்தை ஏற்றுவதற்கு பிராணவாயு வேகமாக உள் எடுக்கப்பட்டு, கரியமில வாயு வெளியேறி இதயம் சுருங்கி விரிந்து ரத்தம் சுத்திகரிக்கவேண்டும். இதற்கு வசதியாக நமது வாய் அகல திறந்து காற்றினை உள்ளே இழுத்துக்கொள்கிறது. இந்த செயல்பாடு தான் கொட்டாவி. கொட்டாவி விலங்குக்கும் வரும். *******************************************************************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக