சனி, 19 ஜனவரி, 2013

குட்டீஸ் கேள்வி பதில்44

குட்டீஸ் கேள்வி பதில்44 பரிணமாம வளர்ச்சி என்றால் என்ன? - ஆர்.ஸ்ரீநிஜா, ஸ்ரீரங்கம். *பரிணாமம் என்றால் மாற்றம் என சொல்லலாம், வளர்ச்சி என்பது எல்லாவற்றிலும் உண்டு, ஆனால் உள்ளது சிறத்தல் என்பதே பரிணாம வளர்ச்சியின் முக்கிய கோட்பாடு! பரிணாம வளர்ச்சி என்பது உயிரினத்தில் மட்டுமல்ல; எல்லாவற்றிலும் பரிணாம வளர்ச்சி உண்டு. எவையெல்லாம் முன்னை விட சிறப்பான தோற்றமோ, மாற்றமோ பெறுகிறதோ அவைகளின் பரிணாம வளர்ச்சி! உதாரணத்திற்கு துõரத்தில் இருக்கும் எதிரியையோ, உணவையோ தாக்க முதன் முதலில் மனிதன் கல் என்னும் ஆயுதத்தை பயன்படுத்தினான், அதை விட சரியான இலக்கை தாக்க ஈட்டி, அதைவிட வேகமாக தாக்க வில், பின் துப்பாக்கி, இயந்திரதுப்பாக்கி, ஏவுகணை இவையெல்லாம் என்ன காட்டுகிறது! கல் என்னும் ஆயுதம் சிறப்பு பெற்று பயன்படுத்த இலகுவான ஆயுதமாக மாறி ஆயுத பரிணாமத்தின் வளர்ச்சியை காட்டுகிறது அல்லவா? வங்கிகளில் ஆர்.டி.ஜி.எஸ்/ என்.இ.எப்.டி வசதிகள் உள்ளது என எழுதியிருக்கிறார்களே அப்படி என்றால் என்ன? 14.12.12 - பி. சிவப்பிரகாசம், திருவையாறு. வங்கிகளில் பணம் மாற்றம் பரிவர்த்தனைகள் எல்லாம் செக், டிமாண்ட் டிராப்ட் மூலமாக நடைபெறும். இக்காலத்தில் இணையதள பயன்பாடு வந்தப்பிறகு வங்கிகளில் இணையதள சேவைகள் நடைமுறைக்கு வந்தன. அவற்றில் ஒன்றுதான் நீங்கள் கேட்டிருக்கும் வசதிகள். இது ஆன்லைன் இணையதள பணம் மாற்றல் பரிவர்த்தனையாகும். ஆன் லைன் வாயிலாக மேற்கொள்ளப்படும் பண பரிமாற்றங்களில், தேசிய மின்னணு பணப் பரிவர்த்தனை (என்.இ.எப்.டி.)பெரும் பங்கை வகிக்கிறது. இதுபோன்ற இன்னொரு வசதிதான் ஆர்டிஜிஎஸ். ஆர்டிஜிஎஸ் சேவையில் 2 லட்சம் முதல் அதிகபட்சம் 5 லட்சம் வரை பணம் பரிமாற்றம் செய்யலாம். என்இஎப்டி சேவையில் குறைந்தபட்சம் இல்லை.அதிகபட்சம் 5 லட்சம். 2முதல்5 லட்சம் வரை பணம் பரிவர்த்தனைக்கு கமிஷன் ரூ.25 5 லட்சம் மேல் என்றால் ரூ.50. 12 மணிக்கு மேல் சனிக்கிழமைகளில் கூடுதலாக ரூ.1. என்இஎப்டிக்கு 1லட்சம் வரை ரூ.5. 1முதல் 2 லட்சம்வரை ரூ.15 2 லட்சத்திற்குமேல் ரூ. 25. சோப்புகளில் டிஎப் எம் 76 % என்று குறிப்பிட்டிருக்கிறதே, அதன் அர்த்தம் என்ன? - எஸ். சிவகாமசுந்தரி, நெடுங்காடு. டோட்டல் பேட்டி மேட்டர் என்பதன் சுருக்கமே டிஎப்எம் . அதாவது குளியல் சோப்பில் இருக்கக்கூடிய கொழுப்பின் சதவீதத்தை குறிப்பதாகும். நல்ல தரமான, நீடித்து உழைக்கக்கூடிய, நன்கு அழுக்கு நீக்கக்கூடிய ஒரு குளியல் சோப்பின் தரம் அதில் அடங்கி உள்ள கொழுப்பு அளவு 76 சதவீதம் இருக்கவேண்டும் . இப்படி சோப்பில் டிஎப்எம் 76 சதவீதம் என்ற குறிப்பு இருந்தால் அது தரமான நம்பர் ஒன் சோப்பு என்று பொருள் கொள்ள வேண்டும் . சோப்பில் 60 சதவீதம் மற்றும் அதற்கு கீழ்க் கொழுப்பு சதவிகிதம் இருந்தால் அதன் கிரேடு 3 ஆகும். *********************************************************************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக