திங்கள், 21 ஜனவரி, 2013

குட்டீஸ் கேள்வி பதில்47

*** குட்டீஸ் கேள்வி பதில்47 28/12/2012/ உலகத்தில் இருக்கும் தண்ணீர் 97 சதவீதம் உப்பு நீர் என்கிறார்களே, அப்படியா? - எஸ். முத்துராமன், ராமநந்தீஸ்வரம். பூமியில் உள்ள 97 சதவீதம் உப்பு தண்ணீரால் ஆனது. மீதமுள்ள 3 சதவீதம் துõய்மையான நீர் என குறிப்பிடப்படுகிறது. அவற்றில் 2 சதவீதம் பனிக்கட்டிகளாகவும் பனிப்பாறைகளாகவும் காணப்படுகிறது. இதன் மூலம் 3 ல் 1 சதவீதம் துõய்மையான தண்ணீர்தான் ஆறுகள், ஏரிகள் மற்றும் பூமிக்கு அடியிலும் காணப்படுகிறது. பூமியின் பரப்பளவில் 10 ல் ஒரு பங்கு பனிக்கட்டிகளால் ஆனது. பனிக்கட்டிகளில் 90 சதவீதம் அண்டார்டிகாவில் உள்ளது. பனிக்கட்டிகள் உப்பு தண்ணீரால் ஆனாலும், எவ்வித உப்பையும் பெற்றிருக்காது. எஸ்கிமோஸ் போன்றப் பனிப் பிரதேசங்களில் வாழும் மக்கள் உணவுகளை சமைக்கவும் குடிக்கவும் பனிக்கட்டிகளை உறையவைத்து தான் பயன்படுத்துகிறார்கள். மேலும் இது மிகவும் துõய்மையான தண்ணீராகத்தான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. உப்பு தண்ணீரில் 96 சதவீதம் துõய்மையானதும், 3 சதவீதம் உப்பாகவும், மீதமுள்ள 1 சதவீதத்தில் சல்பேட், மெக்னீசியம், புரோமைட், கால்சியம், பொட்டாசியம், ஸ்ட்ரோன்டியம், போரான், புலுரைடு, தங்கம் உள்ளிட்ட 80 தனிமங்களைக் கொண்டதாகக் காணப்படுகிறது * குளிரில் காது அடைத்துக்கொள்வது ஏன்? - வெ. அருள்மொழி, நாகப்பட்டினம். பருவ நிலை மாறும்போது நம் உடல் நிலையிலும் மாறுதல்கள் ஏற்படுகின்றன. அதிக குளிர், குளிர் காற்று, பனி இவை பலருக்கு பலவிதமான தொந்தரவுகளைக் கொடுக்கின்றன. பனியினால் மூட்டுவலி, வீக்கம் முதலியவை வரக்கூடும். பனிக்கு நம் எலும்புகளில் நெகிழ்வுத் தன்மை குறைவதால் இந்த குளிர் காலத்தில் பல வலிகள் ஏற்படுகின்றன. குளிர்ந்த காற்று நம் காதுகளைத் தாக்கும் போது ஒரு வகை வலியும் உண்டாவதால் பலருக்குக் குளிர் காலம் என்பது பயத்தை ஏற்படுத்துகிறது.வெளியில் போகும்போது காதுகளை ஸ்கார்ப் அல்லது இப்போது கிடைக்கும் காது மூடிகளை கொண்டு நன்றாக மூடவும். இதனால் காது துளைகள் வெதுவெதுப்பாகவும் உலர்ந்தும் இருக்கும். * தொப்பை எப்படி உருவாகிறது? - மு. மனோகரன், வடக்காலத்துõர். கட்டுப்பாடில்லாத உணவு பழக்கவழக்கம் மற்றும் உடற்பயிற்சியில்லாத வாழ்க்கை முறைகளால் தான் மனிதர்களுக்கு இந்த தொப்பை ஏற்படுகிறது. நமது உடல் என்கின்ற இயந்திரம் இயங்க கலோரி தேவை, அந்த கலோரியை நமது உடல், நாம் தினந்தோறும் உண்கின்ற உணவின் வழியாக பெற்றுக்கொள்கிறது. அப்படி உணவின் வழியாக பெறப்படும் கலோரிகள் தேவையான அளவையும் தாண்டி கிடைக்கும் போது அந்த கலோரிகளை அவசர காலத்தில் பயன்படுத்திக் கொள்ள எஞ்சியிருக்கும் கலோரிகளை கொழுப்பாக மாற்றி உடலின் ஒரு பகுதியில் சேமிக்க உத்தரவிடுகிறது மூளை. உடம்பில் கொழுப்பு சேர ஆரம்பித்ததும் 24 மணிநேரமும் செயல்படும் உறுப்புகளான மூளை, இதயம், சிறுநீரகம் உறுப்புகள் தவிர்த்து, உடலின் அதிக வேலையின்றி இருக்கும் அடிவயிற்றில் மூளையின் உத்தரவின் பேரில் நமது உடலின் வயிற்று தோலின் அடிப்பகுதியில் கொஞ்சம் கொஞ்சமாய் கொழுப்பை சேர்த்துவைக்கும் வேலை துவங்குகிறது. அடிவயிற்றில் கொழுப்பு கொஞ்சம் கொஞ்சமாக சேர்ந்து வயிறை கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாக்கி இறுதியில் ஒரு பானையின் அளவிற்கு பெரிதாக்கிவிடுகிறது. ......................................................*******************************************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக