திங்கள், 21 ஜனவரி, 2013

குட்டீஸ் கேள்வி பதில்48

குட்டீஸ் கேள்வி பதில்48 *காலண்டர் எவ்வாறு உருவானது?/ 4.01.2013/ - வீ. பவானி, மலைக்குடிப்பட்டி. குட்டீஸ்! நம் வீடுகளில் புது ஆண்டின் விதவிதமான வடிவமைப்புகளில் காலண்டர்கள் வாங்கி மகிழும் வேளையில் காலண்டர்கள் எப்படி உருவானது என்று கேள்வி கேட்டிருக்கும் வீ. பவானிக்கு பாராட்டு! கணக்கு கூட்டுவது எனும் பொருள் தரும் ‘கலண்டே’ எனும் லத்தீன் உச்சரிப்பிலிருந்து உருவானதுதான் காலண்டர் (இச்டூஞுணஞீஞுணூ) எனும் ஆங்கிலச் சொல். புவியியல் மற்றும் கால நிலைகளில் ஏற்பட்ட பெரும் மாற்றங்களே துவக்ககால காலண்டர்களுக்கு அடிப்படையாக அமைந்தன. நைல் நதியில் ஆண்டுதோறும் ஏற்படும் வெள்ளப்பெருக்கை அடிப்படையாகக் கொண்டு புராதன எகிப்தியர் உருவாக்கிய காலண்டர் இதற்குச் சான்று. இன்று நம் முன்னே இருக்கும் காலண்டரின் அடிப்படை கி.மு. 45ல் ஜூலியஸ் சீசரால் உருவாக்கப்பட்ட ஜூலியன் காலண்டரே. இன்று உலகெங்கும் பரவலாகப் பயன்படுத்தப்படும் காலண்டரே முறையே கிரிகோரியன் காலண்டர். பதிமூன்றாம் போப் ஆண்டவராக இருந்த போப் கிரிகோரியின் ஆணைப்படி, அலோயிஷியஸ் என்னும் மருத்துவரே 1582 பிப்ரவரி 24 ல் ஜூலியன் காலண்டரில் காணப்பட்ட குறைபாடுகளைத் திருத்தியமைத்து கிரிகோரியன் காலண்டரை உருவாக்கினார். இந்திய தேசியக் காலண்டர்: கி.பி. 78ல் துவங்கும் சக காலண்டரே இந்தியாவின் தேசியக் காலண்டராக கருதப்படுகிறது. சாதவாஹன மன்னரான சாலிவாஹன் உஜ்ஜைனி மன்னர் விக்ரமாதித்தனை போரில் வென்றதையடுத்து சக ஆண்டு துவங்கியது. இந்தியாவில் கிரிகோரியன் காலண்டரும் சக ஆண்டு காலண்டரும் அதிகாரப் பூர்வமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. தமிழ்க் காலண்டர்: சூரியனை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. கிரிகோரியனைப் போன்றே சித்திரை முதல் பங்குனி வரையிலான 12 மாதங்கள் இதிலும் உண்டு. இஸ்லாமியக் காலண்டர்: முகமது நபி மெக்காவிலிருந்து மதினாவுக்குச் சென்ற நாளிலிருந்துதான் இஸ்லாமியக் காலண்டரின் ஆண்டு துவங்குகிறது. கி.பி. 622ல் நிகழ்ந்தது நபியின் பயணம். சந்திரனை அடிப்படையாகக் கொண்ட இது 12 மாதங்கள் கொண்டது. ஜூலியன் காலண்டர் கி.மு.45 ல் பிரபல வானியல் நிபுணராக இருந்த கோஸிஜின்ஸி என்பவரின் அறிவுரைப்படி இக்காலண்டரை நடைமுறைப்படுத்தியவர் ஜூலியஸ் சீசரே. இப்போது பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வரும் கிரிகோரியன் காலண்டரின் முன்னோடி இது. *அடுப்பில் இருக்கும் பாத்திரத்தில் கொதிக்கும் பாலை துழாவிக்கொண்டே இருந்தால் பால் பொங்கி வழிவதில்லை ஏன்? - எஸ். கமலா, திருச்சேறை. கொதிக்கும் பாலை ஒரு கரண்டியால் தொடர்ந்து துழாவிக் கொண்டே இருந்தால், பாலின் மேற்பரப்பில் ஏடு படிவது தடுக்கப்படுகிறது. எனவே, கொதிக்கும் போது தோன்றும் காற்றுக் குமிழ்கள் ஆவியாக வெளியேறிவிடும். ஆதலால் பால் பொங்கி வழிவது தடுக்கப்படுகிறது. *துõய நீரில் மின்சாரம் பாயாது என்பது உண்மையா? -டி.சி. சீனு, ராமநந்தீஸ்வரம். மிகவும் சுத்தமான தண்ணீரில் மின்சாரம் பாயாது என்பது சரிதான். அதாவது, பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் தண்ணீரைப் போல, பலமடங்கு சுத்தமான தண்ணீரில் மின்சாரம் பாயாது. தண்ணீரில் இரு மடங்கு ஹைட்ரஜனும் ஒரு மடங்கு ஆக்சிஜனும் உள்ளது. ஆனால், சாதாரண தண்ணீரில் அயனிகள் எனப்படும் மின்காந்தத் துகள்கள் இருக்கும். அதில் எலக்ட்ரான்களும் இருக்கும். அணுத்துகள்களில் உள்ள எலக்ட்ரான்கள், ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு பாயும்போது, மின்சாரம் ஏற்படும். மிகவும் சுத்தப்படுத்தப்பட்ட தண்ணீரில், எலக்ட்ரான்கள் இருப்பதில்லை என்பதால், அவை மின்சாரத்தைக் கடத்துவதில்லை. ..............................................**************************************************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக