சனி, 19 ஜனவரி, 2013

குட்டீஸ் கேள்வி பதில்கள் 5

குட்டீஸ் கேள்வி பதில்கள் 5 பிப்.24/ *பாம்பு போல் தோலுரிக்கும் விலங்கு உண்டா? ஏன் தோலுரிக்க வேண்டும்? -ஜெயகவிதா, மயிலாடுதுறை. பாச்சை, வெட்டுக்கிளி, தேள் போன்ற சில பூச்சிகள் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் கெட்டி அடைந்த தோலின் புறச் செல்களிலிருந்து நாம் சட்டையைக் கழற்றி விடுவது போல வெளியே எடுத்துவிடுகின்றன. நீங்கள் குறிப்பிட்டது போல பாம்பும் அவ்வப் போது தன் சட்டையைக் கழற்றிப் போடும். பாம்பு சட்டை உரிப்பது அதனுடைய வளர்ச்சிக்காக அல்ல. மேல் தோலினைக் கடித்து அதில் உள்ள சத்தினை உறிஞ்சும் பூச்சிகளிடமிருந்தும், வேறு பல கிருமிகளிடமிருந்தும் விடுதலை பெறவும், கீறல்கள், காயங்கள் மிகுந்த மற்றும் இறந்து போன வெளி செல்களை விட்டெறியவும் பாம்பு தன் தோலை உரிக்கின்றன. பாம்பு சட்டை உரிக்கும் நேரம் வந்தால், வெளிப்புறச் செல்களுக்கு உள்ளாக அருகில் இருக்கும் செல்கள் திரவமாக மாறி வழுக்கலை அளிக்கிறது. சட்டையின் வால் பக்கத்தை சொரசொரப்பான குச்சிகளில் ஒட்டச் செய்து அதிலிருந்து தன் உடலை மெல்ல வெளியே இழுத்துக் கொள்கிறது. மணிபர்ஸ், பெல்ட் இவை செய்வதற்காக சிலர் பாம்பின் தோலை உரிப்பதும் உண்டு. *தீயிலோ, கொதிக்கும் நீரிலோ கைப்பட்டால் படக் என்று எடுத்து விடுகிறோமே, அது எப்படி? - பழ. வீரபாண்டியன், பேரளம். உடலில் பெருமூளையின் முடிவு இல்லாமலேயே நிகழும் செயல்களை அனிச்சைச் செயல்கள் என்பார்கள். உணர்ச்சி நரம்புகளுக்கும், தண்டுவடத்துக்கும் இணைப்பு ஏற்படுவதால் இத்தகைய அனிச்சைச் செயல்கள் நிகழ்கின்றன. உடலின் அனிச்சைச் செயல்கள் பல, உடலுடன் கூடப் பிறந்தவையாகும். அதாவது அவை இயல்பாக, பயிற்சி இல்லாமல் நிகழ்கின்றன. மேலும் பயிற்சியின் மூலம் அனிச்சைச் செயல்களை உடல் கற்றுக்கொள்ளும். துõங்கும் போது கொசு கடிக்கிறது. உடனே கை கொசுவை அடிக்கிறது. இந்த செயல் துõக்கத்திலேயே நடைபெறுகிறது. இதுவும் அனிச்சைச் செயல் தான். இந்த அனிச்சைச் செயல் செயல்படும் விதம் எப்படி எனில், கொதிநீரில் விரலை வைத்த செய்தி பெருமூளைக்குச் சென்று, அது நரம்புகள் மூலம் கைத்தசைகளை ஏவிவிட்ட பிறகு கையை எடுப்பது மூளையின் கட்டளைப்படி நடப்பதாகும். ஆனால், நீரின் சூடு விரல்களில் பட்டதுமே நரம்புகள் அச்செய்தியைத் தண்டுவடத்துக்கு அனுப்புகின்றன. தண்டுவடத்தில் இருந்து நரம்புகள் மூலம் கைத்தசைகளுக்குக் கட்டளை போகிறது. உடனே கைத்தசைகள் சுருங்கிக் கரத்தை நீரில் இருந்து எடுத்துவிடுகின்றன. *நம் நாட்டின் தேசிய கீதம், தேசிய பாடல் இவற்றுக்கு உள்ள வித்தியாசம் என்ன? - எஸ். தங்மிஸ்தான், திருவேட்டக்குடி. தேசிய கீதத்தை எழுதியவர் ரவீந்திர நாத் தாகூர். தேசியப் பாடலை எழுதியவர் பங்கிம் சந்திர சட்டர்ஜி. தேசிய கீதம் 19ம் நுõற்றாண்டில் எழுதப்பட்டது. தேசிய பாடல் 18ம் நுõற்றாண்டில் எழுதப்பட்டது. இந்திய அரசியலமைப்பு குழு 1950 ஜனவரி 24 ல் ‘ஜன கண மன’ பாடலை நாட்டின் தேசிய கீதமாக அங்கீகரித்தது. 1911 டிசம்பர் 27ல் கோல்கத்தாவில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் முதன் முதலாகப் பாடப்பட்டது. 1912ல் தாகூரின் ‘தத்துவ போதினி’ பத்திரிகையில் பாரத விதாதா என்னும் தலைப்பின் கீழ் வெளியிடப்பட்டது. இந்த பாடலை ஏறக்குறைய 52 விநாடிகளில் பாடி முடிக்க வேண்டும். தேசிய கீதத்தை விட ‘வந்தே மாதரம்’ எனத் தொடங்கும் தேசியப்பாடல் பழமையானது. 1882 ல் பங்கிம் சந்திர சட்டர்ஜியின் ‘ஆனந்த மடம்’ நுõல் வெளியானது. எனவே அதற்கு முன்பே இது எழுதப்பட்டிருக்க வேண்டும். 1896 ல் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் இது முதன்முதலாகப் பாடப்பட்டது. இதற்கு இசையமைத்தவர் ரவீந்திர நாத் தாகூர். *************************************************************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக