சனி, 19 ஜனவரி, 2013

குட்டீஸ் கேள்வி பதில் 22

குட்டீஸ் கேள்வி பதில் 22 ஜூலை6 *கனமான பொருள் தண்ணீருக்கு அடியில் கனம் குறைந்து காணப்படுவது எதனால்? - ஆர். ஸ்ரீநிதி ராம்குமார், ஸ்ரீரங்கம். நீருக்கு அடியில் ஒரு பொருள் இருந்தால் அதன் எடையில் மாற்றங்கள் இருக்கத்தான் செய்யும். காற்றின் அடர்த்தியைவிட நீரின் அடர்த்தி அதிகம். நீருக்கு மேலே தள்ளும் ஆற்றல் உண்டு. அதாவது மிதப்பு ஆற்றல் இயல்பாக இருக்கும். இதனால் கனமான பொருள் லேசாகத் தெரியும். குளத்தில் கழுத்தளவு தண்ணீரில் நிற்கும் போது உடல் முழுவதும் தண்ணீரில் இருக்கும். தலை மட்டும் மேலே இருக்கும். இந்நிலையில் உடல் பாகத்தை தண்ணீர் மேல் நோக்கி தள்ளும். இதனால் நம் உடல் லேசாகத் தெரியும். *இரவு நேரத்தில் மட்டும் துõக்கம் வருவது ஏன்? - எஸ். ஐஸ்வர்யா, கோபி. இயற்கையாகவே இரவு நேரத்தில் உடலில் ஏற்படும் ரசாயன மாற்றங்கள்தான் இதற்குக் காரணம். அதாவது, மனித உடலில் உறக்க – விழிப்புச் சுழற்சியைக் கட்டுப்படுத்தும் ‘மெலட்டோனின்’ எனப்படும் ஹார்மோன் இருள் கவிழும் இரவு நேரத்தில்தான் அதிகமாகச் சுரக்க ஆரம்பிக்கிறது. காலையில் சூரிய வெளிச்சம் பரவ ஆரம்பித்ததும், இந்த ‘மெலட் டோனின்’ சுரக்கும் அளவும் தானாகவே குறைய ஆரம்பித்து விடுவதால், பகற்பொழுதில் நல்ல விழிப்பு நிலையுடன் கூடிய புத்துணர்வு தொடர்கிறது. ஆனால், இதைத் தவிர்த்தும் பகல் வேளையில் துõக்கம் வருவதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. உட ல் களைப்பாக இருக்கும் சமயத்திலோ அல்லது நன்றாகச் சாப்பிட்டு முடித்த பிறகோ, சுகமான துõக்க உணர்வு ஏற்படும். ஆரோக்கியமான உடல்வாகு கொண்ட அனைவருக்கும் ஏற்படும் இயல்பான நிலைதான் இது. *போனை எடுத்தவுடன் ஹலோ எனக் கூறுவது ஏன்? - பா. கவிபாரதி, அந்தியூர். எல்லாரும் போனில் உரையாடும் போது முதல் வார்த்தை ஹலோ சொல்வது பழக்கமாகிவிட்டது. ஆனால், இந்த சொல் எப்படி வந்தது என்பதற்கு ஒரு சம்பவம் இருக்கிறது. கிரகாம் பெல் போனை உருவாக்கி இருந்தாலும், இந்த சொல்லிற்கு சொந்தக்காரர் எடிசன் . கிரகம் பெல்லின் அல்லது தொலைபேசியில் உரையாடிய முதல் வார்த்தை ‘Mணூ. ஙிச்tண்ணிண, ஞிணிட்ஞு டஞுணூஞு. ஐ தீச்ணt tணி ண்ஞுஞு தூணித.‘ வாட்சன் உன்னை பார்க்க வேண்டும் இங்கே வா என்பதே.’ பணிபுரியும் ஓரிடத்தில் இருவர் பேச எண்ணும் போது எப்படி மற்றொருவருக்கு புரியும். ஒருவர் அழைப்பை ஏற்படுத்தும் போது ஒரு மணி போல சத்தமிடும் அமைப்பை திட்டமிட்டிருந்தனர் . ஆனால், எடிசன் தொலைபேசி இணைப்புகள் வழங்க இருந்த நிறுவன அதிபருக்கு ஒரு கடிதம் எழுதினார். அழைப்பு மணிக்கு மாற்றாக ஹலோ என்ற வார்த்தையை ஏன் பாவிக்க கூடாது? அது 10 ல் இருந்து 20 அடிகள் வரை கேட்க கூடியது எனக் கூறியிருந்தார். அது முதல் ‘ஹலோ’ வார்த்தை பிரபலமானது. அகோய் என்ற சொல்லே ஹலோ வர முதல் பாவனையில் இருந்தது . ஆனால் ஆதி காலங்களில் ஹெலோ சொல் பலரை சத்தமாக அழைப்பதற்கு பாவிக்கப்பட்டுள்ளது. ********************************************************************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக