சனி, 19 ஜனவரி, 2013

குட்டீஸ் கேள்வி பதில்கள் 4

குட்டீஸ் கேள்வி பதில்கள் 4 அடிக்கடி தாகம் எடுப்பது எதனால்? /6.1.12/ - ஆர். பாலா, பள்ளூர். உடலில் திரவப்பொருட்கள் குறையும்போதோ, உப்பின் அடர்த்தி அதிகமாகும் போதோ தாக உணர்வு ஏற்படுகிறது. இதுபோன்ற நிகழ்வுகளின்போது மூளை வேகமாக செயல்பட்டு தாக உணர்வை ஏற்படுத்துகிறது. உடலில் தொடர்ந்து நீரிழப்பு இருக்குமானால் அது பலவகையான சிக்கல்களின் அறிகுறியாக இருக்கலாம். மேலும் நரம்பியல் கோளாறுகளின் விளைவாக மூளையின் செயல்திறன் குறையும்; சிறுநீரக பாதிப்புகள் ஏற்படும். அளவுக்கதிகமான தாக உணர்வை பாலிடிஸ்பிசியா என்றும் அதிகப்படியாக சிறுநீர் போதலை பாலியூரியா என்றும் கூறுகின்றனர். தாக உணர்வு மைய நரம்பு மண்டலத்தினால் உணரப்படுகிறது. எக்ஸ்ட்ரா செல்லுõலர் தர்ஸ்ட் என்பது உடலில் நீரின் அளவு குறைவதால் ஏற்படும் தாக உணர்வு ஆகும். இன்ட்ரா செல்லுõலர் தர்ஸ்ட் என்பது உடலில் உப்பின் அடர்த்தி அதிகரிப்பதால் ஏற்படும் தாக உணர்வு ஆகும். இரண்டுவகையான தாக உணர்வுகளுமே மூளையின் மைய நரம்புமண்டலத்தால்தான் உணரப்படுகின்றன. மீன் தண்ணீரில் அசைவற்று நிற்பது எப்படி? - டி. சிவகாம சுந்தரி, ஈரோடு. அசைவற்று நிற்கக்கூடிய திறமை மீனுக்கு உண்டு. மீன்கள் இப்படி தண்ணீரில் நிலையாக நிற்பதற்கு, அவற்றின் உடலுக்குள்ளே உள்ள பிரத்யேகமான வாயு பை உதவி செய்கிறது. ஒரு பலுõனின் வடிவில் உள்ள இந்த வாயு பை, மீனின் வயிற்றுக்கும், குடலுக்கும் மேலே அமைந்திருக்கிறது. மீனின் மொத்த உடற்பரப்பில் 5-லிருந்து 6 சதவீதம் வரை இந்தப் பை இருக்கும். ஆக்சிஜன், கார்பன்டை ஆக்சைடு, நைட்ரஜன் ஆகிய வாயுக்களின் கலவை இந்தப் பையில் நிறைந்திருக்கும். பைக்குள் உள்ள வாயுவின் பரப்பை அதிகரிப்பதாலும், குறைப்பதாலும் தன் உடல் எடையை முறைப்படுத்துகிறது. அதனால், தண்ணீருக்குள் அசைவற்று ஆழ்ந்திருக்கிறது. வாயுப்பை முழுமையாக நிறைந்திருக்கும்போது, மீன் தண்ணீரின் மேல் தளத்தில் மிதந்துகொண்டிருக்கும். ஓரளவு வாயுவை வெளியே விடும்போது கீழே வந்து தண்ணீருக்குள் தங்கி நிற்க மீனால் முடியும். தண்ணீரின் ஆழத்திற்கு ஏற்ற வகையில் வாயு பையின் பருமனையும், அதில் அடங்கியுள்ள வாயுவின் அளவையும் முறைப்படுத்துவதற்கான தன்மைகள் மீனின் உடலில் உண்டு. மோட்டார் வைக்காமலேயே மரத்தின் அவ்வளவு உயரத்திற்குத் தண்ணீர் ஏறுகிறதே, அது எப்படி? - எஸ். தையல்நாயகி, வடக்காலத்துõர். மரங்கள் மற்றும் தாவரங்களில் உள்ள வேர் முடிச்சுகளில் சர்க்கரைக் கரைசலும், உப்புப் பொருட்களும் இருக்கும். இதனால், வேர்களின் உள்ளே அழுத்தத்தில் ஏற்படும் மாற்றம் காரணமாக, வெளியே இருக்கும் தண்ணீர் வேருக்குள் செல்கிறது. இதற்கு சவ்வூடு பரவல் என்று பெயர். இப்படி வேர் முடிச்சுகளில் தண்ணீர் சேர்ந்துகொண்டே இருக்கும். இதனால் அதிகரிக்கும் தண்ணீரின் அழுத்தம் காரணமாக, தண்ணீர் மேல் நோக்கி உயரும். அடி மரம் வழியாக, கிளை வழியாக இலைகளுக்கு, ஒரு செல்லில் இருந்து மற்றொரு செல் வழியாகத் தண்ணீர் எடுத்துச் செல்லப்படுகிறது. அத்துடன் ஊட்டச் சத்துக்களும் சென்று சேர்கின்றன. மரங்கள், வளரும் காலத்தில் இலைகள் மூலமாக ‘டன்’ கணக்கான தண்ணீரை வளி மண்டலத்தில் வெளியேற்றுகின்றன. ஆவியாதல் எனும் செயல்பாடு மூலமாக இப்படிப் பல மடங்கு தண்ணீர் வெளியேறுகிறது. இதன் காரணமாக, இலைகளில் ஏற்படும் தற்காலிக வெற்றிடத்தை அடியிலிருந்து வேர் வழியாக வரும் தண்ணீர் நிரப்புகிறது. தண்ணீர் மூலக்கூறுகள் எப்போதும் நெருக்கமாகப் பிணைந்து கிடக்கும். ஆவியாதலால் தண்ணீர் மூலக்கூறு வெளியேறும் நிலையில், கீழ்ப்படியிலிருந்து மேல் படிக்கு இழுக்கப்படுவது போல்,புதிய தண்ணீர் மூலக்கூறுகள் சங்கிலித் தொடர்போல மேலே வந்து சேர்கின்றன. இப்படித்தான் மரத்தினுள் தண்ணீர் கீழிருந்து மேலே வருகிறது. இப்படிப் பல அடி துõரம் மேலே ஏறிய தண்ணீர்தான் இளநீராகவும் பதநீராகவும் நம்மை வந்தடைகின்றன. ********************************************************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக