சனி, 19 ஜனவரி, 2013

குட்டீஸ் கேள்வி பதில்37

குட்டீஸ் கேள்வி பதில்37 கிறிஸ்துமஸ் தீவு எங்குள்ளது? அதைப்பற்றி சொல்லுங்க அங்கிள்! - எஸ். சவுமியா, தேவனாங்குறிச்சி. 19/10.12 கிறிஸ்துமஸ் தீவு இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள ஆஸ்திரேலியாவின் ஒரு சிறிய ஆட்சிப்பகுதி. இது பெர்த் நகரிலிருந்து 2600 கி.மீ. வடமேற்கில் ஜாகார்த்தா நகரிலிருந்து 500 கி.மீ. தெற்காகவும் அமைந்துள்ளது. இந்த தீவில் காணப்படும் சில குடியேற்றங்களில் 1600 பேர் வரை வசிக்கின்றனர். இத்தீவிற்கே உரிய பல உயிரினங்கள் காணப்படுகின்றன. இத்தீவு 135 ச.கி.மீ. கொண்டிருக்கிறது. அந்த பரப்பளவில் பரப்பில் 65% மழைக்காடுகளாகக் காணப்படுகின்றது. 1643 ம் ஆண்டில் கிழக்கிந்தியக் கம்பெனியைச் சேர்ந்த ரோயல் மேரி கப்பலின் கேப்டன் வில்லியம் மைனர்சு, கிறிஸ்துமஸ் நாளில் இத்தீவைக் கடந்த போது கிறிஸ்துமசு தீவு எனப் பெயரிட்டார். தகவல் அறியும் சட்டம் என்பது என்ன? அதன் மூலம் என்ன தகவல் பெறலாம்? - எல். ஸ்ரீமதி, திருச்சி. அரசு அலுவலகங்கள் பொது மக்களுக்கு தகவல் சொல்லக் கடமைப்பட்டிருந்தாலும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் இயற்றப்படுவதற்கு முன் நீங்கள் கேட்கும் தகவலை அவ்வளவு எளிதில் பெற இயலாது. 2005 ம் ஆண்டு தகவல் அறியும் உரிமைச் சட்டம் இயற்றப்பட்ட பிறகு பொதுமக்கள் கேட்கும் தகவலைத் தர மறுத்தால் அரசு ஊழியர் சட்டத்தை மீறியவராகக் கருதப்படுவார். அவருக்கு தண்டனை கிடைக்கும் என்ற அச்சத்தால் தகவல் கிடைக்கும் வாய்ப்பு உறுதியாகிறது. இந்த தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி மத்திய மாநில அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், அரசு நிதி பெறும் நிறுவனங்கள் ஆகியவற்றிலிருந்து நீங்கள் அறிய விரும்பும் தகவலைப் பெறலாம். நமது மாவட்ட எம்.பிக்கு மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் வழங்கக்கூடிய நிதியில் ( 5 கோடி ரூபாய் ) இருந்து நமது ஊருக்கு என்ன என்ன நலத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது ? நமது தொகுதி எம்.எல்.ஏ.க்கு மாநில அரசு ஒவ்வொரு ஆண்டும் வழங்கக்கூடிய நிதியில் ( 2 கோடி ரூபாய் ) இருந்து நமது ஊருக்கு என்ன என்ன நலத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது ? நம் ஊரில் எத்தனை குளங்கள், வாய்க்கால்கள் உள்ளன ? அதில் ஏதும் துõர்வாரப்பட்டு உள்ளதா ? ஆக்கிரமிப்புகள் எதுவும் உள்ளதா ? நம் ஊரில் புதிய பஸ் நிலைய கட்டுமானப் பணிகள் எப்பொழுது ஆரம்பமாகும் ? இப்பணிகள் எப்பொழுது நிறைவு பெரும் ? இப்படி பல தகவல்களை நீங்களும் கீழ்கண்ட சம்பந்தப்பட்ட மாநில, மத்திய பொதுத்துறை தகவல் அதிகாரிகளிடம் இருந்து கேட்டுப்பெறலாம். மாநில அரசு தகவல்கள் பெற :- எஸ். இராம கிருட்டிணன், ( இ. ஆ. ப, ஓய்வு ) மாநில தலைமை தகவல் ஆணையர், காமதேனு கூட்டுறவு பல்பொருள் அங்காடி கட்டடம், முதல் மாடி, ( வானவில் அருகில் ) பழைய எண் : 273, புதிய எண் : 378 , அண்ணா சாலை, ( தபால் பெட்டி எண் : 6405 ) தேனாம்பேட்டை, சென்னை -18 * சங்கை காதில் வைத்தால் அலை ஓசை சத்தம் வருகிறதே, எப்படி? -டி.சி. சீனு, ராமநந்தீஸ்வரம். சங்கை எடுத்து காதில் வைத்துக் கேட்டால் அதில் இருந்து அலை ஓசை சத்தம் வருவதுபோல கேட்கும். அதை கடல் அலையின் ஓசை என்று நினைப்பார்கள். உண்மை அதுவல்ல. காதுகளில் உள்ள ரத்தக் குழாயில் ரத்தம் பாய்ந்து செல்லும் சத்தம்தான் சங்கில் எதிரொலித்து நமக்கு கடலலை ஓசையாகக் கேட்கிறது. *********************************************************************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக