சனி, 19 ஜனவரி, 2013

குட்டீஸ் கேள்வி பதில் 13

குட்டீஸ் கேள்வி பதில் 13 ஏப்20 *வாயில் உமிழ்நீர் சுரப்பது ஏன்? அதன் பயன் என்ன? - ஆர். ஸ்ரீஜா, ஸ்ரீரங்கம். புளிப்பு, இனிப்பு இவற்றின் சுவையை உணர்ந்தால் வாயில் உமிழ்நீர் தானாக ஊறும். உடலுக்கு ஒவ்வாமை ஏற்படுத்துகின்ற உணவுகளை சாப்பிட்டாலும் உமிழ்நீர் அதிகம் சுரக்கும். உமிழ்நீர் அதிக என்சைம்களைக் கொண்டது. இதில் ஆன்ட்டிபயாடிக் அதிகம் உள்ளது. இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. உமிழ்நீர் சராசரியாக ஒரு மனிதனுக்கு 1,500 மி.லி. அளவு சுரக்கிறது. உமிழ்நீர் சுரப்பு அளவு உண்ணும் உணவின் அளவைப் பொறுத்தும் மன எண்ணத்திற்கும் ஏற்றவாறும் மாறுபடுகிறது. உமிழ் நீரின் முக்கிய பணி ஜீரணமாக்குவது. உணவை மெல்லும்போது உமிழ்நீர் உணவுடன் நன்கு கலந்து அதில் உள்ள என்சைம்கள் உணவின் நச்சுத்தன்மையைப் போக்கி உணவுக் குழலுக்குச் செல்ல ஏதுவாகிறது. மேலும் இதில் கலந்துள்ள நொதி உணவை எளிதில் ஜீரணிக்க உதவுகிறது. பொதுவாகவே அஜீரணம், வாந்தி, தலைச்சுற்றல் உண்டானால் கூட உமிழ்நீர் அதிகம் சுரந்து உடலை சீர்படுத்துகிறது. வாய்ப்புண்ணை ஆற்ற உதவுவதும் உமிழ்நீர்தான். * நட்சத்திரம் என்றால் என்ன? அவை எப்படி மின்னுகின்றன? - எம். கோகுல், பசுபதிபாளையம். நட்சத்திரம் என்பது பல வாயுக்கள் கலந்த மேகம் போன்ற ஒரு தொகுப்பு. இந்த மேகத்திற்குள் ஹைட்ரஜன் வாயு இருக்கும். வாயுத் துகள்கள் ஒன்றுடன் ஒன்று கொஞ்சம் கொஞ்சமாக இணைந்து ஒரு பெரிய வாயுக் கூட்டமாக மாறிவிடும். அதன் அளவு கூடும்போது வெப்பமும் கூடுகிறது. அது ஒரு வெடிகுண்டைப்போல வெடிக்கும் வரை சேர்ந்துகொண்டே இருக்கும். அது வெடிக்கும்போது, எரியும் தன்மைகொண்ட ஹீலியம் வாயு வெளியிடப்படும். நட்சத்திரங்கள் வெளியிடும் ஒளியும் வெப்பமும் மிக நீண்ட தொலைவைக் கடந்து வருகின்றன. அப்படி வரும்போது மிகச் சொற்பமான வெளிச்சமே தொடர்ச்சியாக நம்மை வந்தடைகிறது. அப்படி, நம்மை வந்தடையும் முன் பூமியின் வளி மண்டலம் வழியாக அந்த ஒளி பயணிக்கிறது. வளி மண்டலத்தில் உள்ள துõசுகள் அவ்வப்போது அந்த ஒளி பயணிக்கும் பாதையின் இடையே செல்கின்றன. எனவே நட்சத்திரங்கள் சில நேரம் நமக்குத் தெரிகின்றன. துõசு அதிகமாக இருக்கும்போது தெரிவதில்லை. இது வேகமாகவும் தொடர்ந்தும் மாறி மாறி நடப்பதால்தான் நட்சத்திரங்கள் மின்னுவதுபோன்ற ஒரு மாயத் தோற்றம் ஏற்படுகிறது. நட்சத்திரம் எல்லா நேரமும் மின்னுவதில்லை. மேலும் சில நட்சத்திரங்கள் எப்போதுமே மின்னுவதில்லை. இதற்குக் காரணம் அவை நட்சத்திரங்கள் அல்ல, கோள்கள். கோள்கள் மின்னுவதில்லை. *செல்போனில் புளுடூத் என்ற ஒன்று இருக்கிறதே, புளுடூத் என்றால் என்ன? - அ.தனுஷ், பள்ளூர். புளுடூத் தொழில் நுட்பம் செயல்படும் விதத்திற்கும், இந்த பெயர் தரும் பொருளுக்கும் எந்த தொடர்பும் இல்லை. டென்மார்க், ஸ்வீடன், நார்வே மற்றும் பின்லாந்து நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த தொழில் நுட்பத்தை உருவாக்கினார்கள். இந்த விஞ்ஞானிகளுக்கு சரித்திரத்தில் புகழ் பெற்ற டென்மார்க் அரசர் மீது மதிப்பும், மரியாதையும் பிரியமும் இருந்தது. அந்த மன்னர் பெயர் ஹெரால்ட் புளுடூத். அவரின் நினைவாகவே இந்த தொழில் நுட்பத்திற்கு புளுடூத் எனப் பெயரிட்டனர். அவர் அப்படி என்ன சாதனை செய்தார்? என்று கேள்வி எழுகிறதா, தனுஷ்? 900ம் ஆண்டில் ஹெரால்ட் புளுடூத் மன்னர் டென்மார்க்கை ஆண்டு வந்தார். டென்மார்க்கையும் நார்வே நாட்டின் ஒரு பகுதியையும் இணைத்தார். பின்னர், கிறித்தவ மதத்தை தன் நாட்டில் அறிமுகப்படுத்தினார். தன்னுடைய பெற்றோர் நினைவாக ஜெல்லிங் ரூன் ஸ்டோன் என்னும் நினைவுச் சின்னத்தினை உருவாக்கினார். 986ல் போரில் மரணமடைந்தார். நாடுகளை இணைத்தது, கிறித்தவ மதத்தை அறிமுகப்படுத்தியது, நினைவுச் சின்னம் அமைத்தது போன்ற செயல்களால் புகழடைந்தார். ********************************************************************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக