சனி, 19 ஜனவரி, 2013

குட்டீஸ்கேள்வி பதில் 14

குட்டீஸ்கேள்வி பதில் 14 *அணில் ஏன் தன் முன் பற்களைக் கொரித்துக்கொண்டே இருக்கிறது? - ம. முரளிதரன், மல்லசமுத்திரம். அணில்கள் கொரிக்கும் பாலுõட்டி இனத்தை சேர்ந்தவை. இதன் வாயின் முன்பக்கத்தில் மேலும் கீழுமாக இரண்டிரண்டு உளிப்பற்கள் இருக்கும். இவை தினமும் வளரும். அதனால் கடின ஓடுகள், மரக் கிளைகள் இவைகளை எலிகளைப் போலவே துருவும். எதுவும் கிடைக்கவில்லை என்றால், மேலும் கீழுமாக அதுவே பற்களை அரைத்துக் கரைத்துக் கொள்ளும். இப்படிப் செய்யவில்லையாயின் உளிப்பற்கள், நீளமாக வளர்ந்து எதுவும் சாப்பிட முடியாமல் இவை இறந்து விடும். உலகெங்கிலும் 250வகையான அணில்கள் உள்ளன. ஆஸ்திரேலியா, அண்டார்டிகா பகுதிகளில் இவை காணப்படுவதில்லை. மர அணில் ,தரை அணில், பறக்கும் அணில் போன்றவை நாம் அன்றாடம் பார்க்கும் வகைகளில் சில. ஆப்ரிக்க பிக்மி அணில்கள் உருவில் மிகச் சிறியவை. இவை 7 முதல்10 செ.மீ நீளமும், 10 கிராம் எடையும் கொண்டவை. நீர் நாய் வகை அணில்கள் 5 முதல் 8 கிலோ எடையும், 50--70 செ.மீ நீளமும் கொண்டதாக உள்ளன. *இடிதாங்கி பற்றி விளக்கமா சொல்லுங்க அங்கிள்! - ஏ. சந்திரசேகர், பசுபதிபாளையம். இடிதாங்கி என்பது கட்டடத்தின் உயர்ந்த பகுதியில் இடி, மின்னல் தாக்காமல் இருப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட கருவி. இதன் முனைப்பகுதி காந்தச் சக்தியால் ஆனது. இந்தக் கருவியைக் கட்டடத்தின் உயர்ந்த பகுதியில் வைத்து தடித்த காப்பர் பட்டையின் மூலம் பூமியில் எர்த் செய்து விடுவார்கள். இடி தாக்கும்போது இடிதாங்கி, மின்னலை ஈர்த்து பட்டை வழியாக பூமியைச் சென்றடைய செய்கிறது. இதனால், கட்டடங்கள் பாதுகாக்கப்படுகின்றன. அதோடு சேர்ந்து நாமும் பாதுகாக்கப்படுகிறோம். இடி, மின்னலில் உண்டாகும் மின்சாரம் பல லட்சக்கணக்கான வோல்ட் அழுத்தமுடையது. இந்த உயர்ந்த அழுத்த மின்சாரம் நம்மையும், கட்டடங்களையும் தாக்குவதால் பேரிழப்பு ஏற்படுகிறது. இடிதாங்கி கூர்மையான அம்பு போன்ற அமைப்பு உடையதாகக் காணப்படுகிறது. கூர்மையானப் பகுதியில் எலக்ட்ரான், புரோட்டான்கள் மிக வேகமாக தயார் நிலையில் இருக்கும். தட்டையான வடிவமுடையதாக இருந்தால் எலக்ட்ரான், புரோட்டான் சிதறிய நிலையில் காணப்படும். இடி தாக்கும்போது இடிதாங்கி கூர்மையான பகுதியாக இருந்தால் எலக்ட்ரான், புரோட்டான்கள் வேகமாக செயல்பட்டு தன்னகத்தே இழுத்து பூமிக்குச் செலுத்த வசதியாக இருக்கிறது. அதனால்தான் கூரிய அமைப்பைக் கொண்டதாக இடிதாங்கி வடிவமைக்கப்பட்டுள்ளது. *சோலார் சக்தி, அதில் இயங்கக்கூடிய மின்சாதனங்கள் எவை பற்றி கூறுங்கள். -ஆர். சண்முகம், ராமநந்தீஸ்வரம். மின்சாரத்துக்கு மாற்றாக சோலார் பவர் பயன்படுத்தப்படுகிறது. நம் நாட்டில் 300 நாட்கள் சூரிய ஒளி கிடைக்கிறது. இப்படிக் கிடைக்கும் அபரிமிதமான சூரிய சக்தியைக் கொண்டு ஆண்டு முழுவதும் தடை இல்லாமல் மின்சாரம் கிடைக்கும்படி செய்யலாம். ஆனால் நம் நாட்டில் ஒரு சதவிகிதம் சூரிய சக்தியைத்தான் உபயோகிக்கிறோம். சூரிய சக்தியைக்கொண்டு நாம் மிகப் பெரிய அளவில் மின்சாரம் தயாரிக்கலாம். நாட்டிற்கும் வீட்டிற்கும் தேவையான மின்சாரம் மிகச் சுலபமாக கிடைக்கும்படி செய்யலாம். வீடுகளில் சிறிய கருவிகளைக் கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்யலாம். இவ்வளவு இருந்தும், மக்களிடையே சூரிய சக்தி மூலம் மின்சாரம் எடுப்பது பற்றிய போதுமான விழிப்புணர்வு இன்னும் ஏற்படவில்லை. சோலார் பவர் மூலம் வாட்டர் ஹீட்டர்கள், மின் விளக்குகள், மின் விசிறி, கணினி, வாஷிங் மெஷின், ஏ. சி. முதலியவற்றை இயக்கலாம். சோலார் சாதனங்களை அமைக்க ஆரம்ப செலவு அதிகம் என்றாலும், நாளடைவில் நாம் உபயோகிக்கும் மின்சாரக் கட்டணத்தை விட செலவு குறைவு தான். ******* *************************************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக