சனி, 19 ஜனவரி, 2013

குட்டீஸ் கேள்வி பதில் 31

குட்டீஸ் கேள்வி பதில் 31 சிலர் பேசும்போது திக்குகிறார்கள். திக்கு எதனால் ஏற்படுகிறது? எனக்கும் இந்தப் பிரச்னை உள்ளது. - சூ. ரேவதி, நாகப்பட்டினம். 7.9.12 தட்டுத்தடங்கல்களோடு சரளமாக பேச முடியாத குறைதான் திக்குவாயாகும். திக்குவாய் உடல்ரீதியான பிரச்சனை இல்லை. திக்கித்திக்கி பேசுவது மனரீதியான பிரச்சனை. உச்சரிக்க வேண்டிய அல்லது சொல்ல வேண்டிய சொற்களை தெளிவாகவும், சீராகவும், கோர்வையாக வும் சொல் ல இயலாதநிலையை திக்குவாய் என்று கூறுவதுண்டு. குழந்தைகள் பேசக் கற்கும் காலத்தை பொதுவாக மருத்துவர்கள் 2 முதல் 5 வயது வரை என கணித்துள்ளார்கள். இந்த கால கட்டத்தில் தான் பெரும்பான்மையான குழந்தைகளுக்கு திக்குவாய் முதன் முத லாக தோன்றுவது வழக்கமாகும். பேசும் ஒலியைக் கேட்பதில் ஏற்படும் காலதாமதத்தின் விளைவாக திக்கு வாய் ஏற்படுகின்றது . நலமான நிலையில் நாம் பேசும் ஒலியை காதானது, 17 மில்லி செகண்ட் நேரத்தில் கிரகித்துக் கொள்வது வழக்கம். ஆனால் திக்குவாயினால் அவதியுறுவோர்களுக்கு பேசும் ஒலியை காதானது ஈர்க்கும் நேரமானது, வழக்கத்திற்கு மாறாகவும், இயற்கைக்கு மாறாகவும் மிகவும் அதி கமாகின்றது. இந்த இடைவெளி அதிகமாதலால் உச்சரிக்கும் சொல்லை கேட்க இயலாததால் இவர்கள் சொன்ன சொற்களை திரும்பத் திரும்ப சொல்லி அவதியுற வேண்டியநிலை ஏற்படுகின்றது. மூளைத் தாக்கம், சிறு மூளை பாதிப்பு, மூளையில் ஏற்படும் பலவகையான காயங்கள் போன்ற நோய் காரணங்கள் சில சமயங்களில் இதற்கு வழி வகு க்கக் கூடும். காது, மூக்கு, தொண்டைப் பிரிவிலுள்ள சிறப்பு மருத்து வரை அணுகினால், அவர் வழிகாட்டுதலின் பேரில், திக்குவாயை சரிசெய்ய இதற் கென சிறப்புப் பயிற்சி பெற்ற திக்குவாயை சரிசெய்யும் சிறப்புப் பயிற்சியாளர்கள் உங்களுக்கு தினம்பயிற்சி அளித்து திக்குவாயைச் சரிசெய்வார். கிரிக்கெட்டில் பவர் பிளே என்றால் என்ன? - ஏ. திருமலைவாசன், ஆர்.பி.புதுõர். ஒருநாள் போட்டிகளில் விறுவிறுப்பை அதிகரிக்க, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கொண்டு வந்த மாற்றங்களில் ஒன்றுதான் ‘பவர் பிளே.’ இந்த மாற்றத்தால் ஒரு நாள் போட்டிகளில் மக்களுக்கு ஆர்வம் அதிகரிக்கத் தொடங்கியது. பவர்பிளே ஓவர்களில் அதிவிரைவாக ரன் சேர்க்கும் போது போட்டியின் நிலைமை தலைகீழாக மாறிவிடுகிறது. ஆரம்ப காலத்தில் ஒருநாள் போட்டிகளில் விக்கெட் கீப்பர் உட்பட அனைத்து வீரர்களையும் களத்தடுப்பின் எல்லைக் கோட்டுக்கு அருகே கூட நிறுத்தலாம். இதனால் பேட் மேன் ரன் குவிப்பது சிரமமாகிவிடும். போட்டிகளில் விறுவிறுப்பை அதிகரிக்க நினைத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ. சி. சி) களத்தடுப்பில் சில கட்டுப்பாடுகளை கொண்டுவந்தது. முதல் 15 ஓவர்களில் 9 பீல்டர்கள் ஆடுகளத்தை சுற்றியுள்ள 27 மீட்டர் துõர, வட்டத்துக்குள் தான் நிற்க வேண்டும். 2 பீல்டர்கள் இந்த வட்டத்துக்கு வெளியே நிற்கலாம். இதன் பேட்ஸ் மேன்அதிக பவுண்டரிகள், சிக்சர்கள் அடிக்க முடியும். முதன் முதலாக 1996ல் நடந்த உலக கோப்பை தொடரில், இந்த ‘களத்தடுப்பு கட்டுப்பாடுகள்’ அறிமுகம் செய்யப்பட்டது. பவர் பிளே விதிகள்: ‘பவர் பிளே-1’ (முதல் 10 ஓவர்கள் கட்டாயம்). ‘பவர் பிளே-2’ (5 ஓவர்கள்) ‘பவர் பிளே – 3’ (5 ஓவர்கள்) என அழைக்கப்பட்டது. பீல்டிங்கில் ஈடுபடும் கேப்டன் போட்டியின் தன்மைக்கு ஏற்ப இந்த இரண்டு, மூன்றாவது ‘பவர் பிளேயை’ தேர்வு செய்து கொள்ளலாம். அப்போது 3 பீல்டர்கள் உள் வட்டத்துக்கு வெளியே நிற்க வேண்டும். இந்த விதிமுறை கடந்த 2005 ஜூலை 7ல் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் அறிமுகம் செய்யப்பட்டது. மூன்றாவது ‘பவர் பிளேயை’ தேர்வு செய்யும் உரிமை பேட்டிங் செய்யும் அணிக்கு கொடுக்கப்பட்டது. கடந்த 2008ல் நடந்த நியூசிலாந்து பங்களாதேஷ் அணிகள் பங்கேற்ற ஒருநாள் தொடரில் நடைமுறைப்படுத்த ப்பட்டது. இப்போது வரை இதுதான் நடைமுறையில் இருந்து வருகிறது. ****************************************************************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக