சனி, 19 ஜனவரி, 2013

குட்டீஸ் கேள்வி பதில்39

குட்டீஸ் கேள்வி பதில்39 * சி.எப்.எல். பல்பு மின்சாரத்தை மிச்சப்படுத்தும் என்கிறார்களே, உண்மையா? 2.11.12 - ஆர். ஸ்ரீநிஜாராம்குமார், ஸ்ரீரங்கம். சி.எப்.எல். (காம்பாக்ட் புளோரசண்ட் விளக்குகள்) மிகக்குறைவான மின்சாரத்தை எடுத்துக்கொள்வதால், மின்சார செலவைக் குறைக்கின்றன. அத்துடன் அதிக அளவு வெப்பத்தையும் வெளியிடுவதில்லை. ஒரு சி.எப்.எல். பல்பு, வழக்கமான பல்பைக் காட்டிலும் ஐந்து மடங்கு வெளிச்சத்தைத் தருகிறது. சி.எப்.எல். எரியும் நேரம் சாதாரண பல்பைவிட எட்டு மடங்கு அதிகம். நீங்கள் 60 வாட்ஸ் சாதாரண பல்புக்கு பதிலாக 15 வாட்ஸ் சி.எப்.எல். பல்புகளை உபயோகித்தால், குறைந்தபட்சம் ஒரு மணிநேரத்திற்கு 45 வாட்ஸ் மின்சாரத்தை மிச்சப்படுத்த முடியும். ஒரு மாதத்திற்கு 11 யூனிட் மின்சக்தியைச் சேமிக்க முடியும். செலவையும் குறைக்க முடியும். சி.எப்.எல். பல்புகள் 5 முதல் 8 மாதங்கள் வரை உழைக்கும். ஆனால் சி.எப்.எல் பல்புகளை தயாரிப்பதிலும், பயன்படுத்தியபிறகு அழிப்பதிலும் அதிகமான பாதரச நச்சு காற்றில் கலந்துவிடுகின்றன. பாதரச நச்சு வளிமண்டலத்தில் கலந்துவிடும் ஆபத்து இருப்பதாகவும் சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ***************************************************************************************************** *புயல் எப்படி உருவாகிறது, அங்கிள்! 9/11/12/ - ஆர். பாலா, அரக்கோணம். இது மழைக்காலம். புயல் உருவாக சந்தர்ப்பங்கள் நிறைய உண்டு. பொதுவாக, புயல் உருவாவதற்கு முக்கிய காரணம் பூமியின் அமைப்புதான். ஒரு ஆரஞ்சுப்பழம் போல அமைப்புடைய பூமி, அதன் அச்சில் நேர் செங்குத்தாக நிற்காமல் ஒருபக்கமாக அதாவது 23 அரை டிகிரி சாய்ந்து சுற்றுகிறது. இதனால், சூரியனிடமிருந்து வரும் வெப்ப கதிர்கள் பூமியின் எல்லாப் பரப்பின் மேலும் ஒரே சீராகப்படுவதில்லை. இதன் காரணமாக பூமியின் ஒரு பகுதி அதிக வெப்பமாகவும், இன்னொரு பகுதி குறைவான வெப்பமாகவும் இருக்கும். வெப்பம் அதிகமாக உள்ள பகுதிகளில் காற்று விரிவடைந்து மேலே செல்கிறது. அப்போது அந்த இடத்தில் காற்றின் அழுத்தம் குறைந்து ஒரு வெற்றிடம் உண்டாகிறது. அந்த வெற்றிடத்தை நோக்கி காற்றின் அழுத்தம் அதிகமாக உள்ள பகுதியிலிருந்து காற்று வேகமாய் வீச ஆரம்பிக்கிறது. அப்போது பூமியின் சுழற்சியின் காரணமாக காற்று அலைக்கழிக்கப்பட்டு சூறாவளியாக மாறி புயலாய் அதாவது குறைந்த காற்று அழுத்த மண்டலமாக உருவாகிறது. இதுதான் புயல் உருவாவதற்கான காரணங்கள். *சிலரின் கண்கள் நீல நிறத்தில் இருக்கிறதே! கண்களின் நிறத்தில் வேறுபாடு இருக்க காரணம் என்ன? - எஸ். சந்திரிக்கா, நடுகாவேரி. கண்களின் நிறம் கறுப்பு நிறத்தில் இருந்து மிக மென்மையான நீல நிறம் வரை வெவ்வேறாக வேறுபடுகிறது என்பது சரிதான்! கண் நிறம் ஒரு பாலிஜெனிக் கூறு ஆகும். கண்களின் நிறம் கண்களில் உள்ள கருவிழியில் உள்ள நிறப்பொருட்களில் அளவை பொருத்து அமைகிறது. மனிதர்களில் கண்களின் நிறம் கருவிழியின் மெலனோசைட்டுகளால் உற்பத்தி செய்யப்படும். மெலனின் என்ற நிறப்பொருளின் வேறுபடும் விகிதாசாரத்தினால் நிற வேற்றுமைகள் ஏற்படுகின்றது . மனிதர்களின் கண்ணில் ஒளி புகுந்து செல்லக்கூடிய விழிவெண்படலம் முன்னாலும், அதற்குப் பின்னால் கருவிழிப் படலம் (டிணூடிண்) என்ற தசையாலான திரையும் உள்ளன. கருவிழிப் படலம், ஒளி உள்ளே செல்வதைக் கட்டுப்படுத்துவது; மெலனின் என்ற நிறமிப் பொருளுடன் கூடிய உயிரணுக்களால் அமைந்தது. கண்களின் நிறத்திற்குக் காரணமாக அமைவது இந்நிறமிப் பொருளே. கருவிழிப்படலத்தில் மெலனின் என்ற நிறமிப் பொருள் இல்லாமற் போகுமானால் கண் நீல நிறமாகத் தோன்றும். இதற்குக் காரணம் கண்ணின் விழிப்படலத்திற்கும் ஒளி வில்லைக்கும் இடையேயுள்ள கண்முன்நீர் என்ற திரவப் பகுதியில் ஒளிக்கதிர் ஊடுருவிச் சென்று நீல நிறத்தை உண்டாக்குவதாகும். *குண்டூசிகளை கண்டுபிடித்தவர் யார்? அதன் பயன்கள் என்ன? - ஏ. முத்து, வாழைப்பந்தல். நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே குண்டூசிகள் பயன்பாடு இருந்து வருகிறது. இரும்பால் ஆன குண்டூசிகள் பயன்பாடு சுமேரியன் காலத்தில் இருந்தே இருந்துள்ளது. ஆகையால் முதலில் குண்டூசிகளை கண்டறிந்தவர் யார் என்பதை திட்டவட்டமாக அறியமுடியவில்லை. குண்டூசிகள் காகிதம், ஆடை போன்ற இணைப்புகளுக்கு உதவுகிறது. பிளாஸ்டிக்களான குண்டூசியை 1903ம்ஆண்டில் எட்வின் மூர் என்பவர் கண்டுபிடித்தார். அதன் பெயர் தம்டேக் என்று பெயர். ‘சேப்டி பின்’ என்பதை வால்டர் ஹன்ட் கண்டுபிடித்தார். *****************************************************************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக