சனி, 19 ஜனவரி, 2013

குட்டீஸ் கேள்வி பதில்35

குட்டீஸ் கேள்வி பதில்35 6.10.2012 மலைகளின் மீது இருக்கும்போது வெப்பம் குறைவாக இருப்பது ஏன்? - ஏ. முத்து, வாழைப்பந்தல். கோடைக்காலத்தில் கடும் வெயில் வீசுகிற நேரத்தில் ஊட்டியில் சுகமாக குளுகுளு என்று இருக்கிறது. மணாலி, சிம்லா, டார்ஜிலிங் போன்ற மலை உச்சிகளில் உள்ள இடங்களில் எல்லாம் குளிர் வீசுகிறது. இதற்கு காரணம் காற்று அழுத்தக் குறைவுதான். கடல் மட்டத்தில் காற்று அழுத்தம் 1000 மில்லி பார் அளவில் உள்ளது. தரையிலிருந்து உயரே செல்லச் செல்ல காற்று அழுத்தம் குறைகிறது. அதே போல காற்று அடர்த்தியும் குறைகிறது. ஓரிடத்தில் வெப்பம் அதிகரிக்கும் போது காற்று மூலக் கூறுகள் ஒன்றோடு ஒன்று முட்டி மோதுகின்றன. அவை இவ்விதம் வேகமாக முட்டி மோதுகிற நிலையில் தான் வெப்பம் அதிகமாக உணரப்படுகிறது. தரையிலிருந்து உயரே செல்லச் செல்ல காற்று மூலக்கூறுகள் குறைகிறது. அவற்றின் இடையே மோதலும் குறைகிறது. ஆகவே வெப்பம் குறைகிறது. தரையிலிருந்து உயரே செல்லச் செல்ல 1000 அடிக்கு 3.6 டிகிரி பாரன்ஹீட் வீதம் வெப்பம் குறைவதாக நிபுணர்கள் கணக்கிட்டுள்ளனர். பொதுவாக மலைபிரதேசங்கள் உயரத்தில் உள்ளதால் அங்கு காற்று அழுத்தம் குறைவாகவும் அதன் விளைவாக வெப்பம் குறைவாக - அதாவது குளுகுளு என்று இருக்கிறது. ஓடும்போது இதய துடிப்பு அதிகரிப்பது ஏன்? -வி.என். மல்லீஸ்வரன், நாமக்கல். உடலுக்குத் தேவையான ரத்தத்தை இதயம் சீராக பம்ப் செய்தபடி இருக்கும். இதன் மூலம் உடலுக்குத் தேவையான ஆக்ஸிஜன் கிடைக்கும். ஓடும் போதும் அதிக ஆக்ஸிஜனுக்காக அதிகமாக மூச்சு இழுக்க வேண்டியிருக்கும். அதிகமாக மூச்சு இழுக்கும் போது இதய துடிப்பும் அதிகமாக துடிக்க வேண்டியிருக்கும். இதுதான் ஓடும்போது இதய துடிப்பு அதிகரிக்க காரணம். இதயத் துடிப்பு பலகாரணங்களால்அதிகரிக்கக்கூடும். ஆனால், உடலியல் காரணங்களால் ஏற்படும் அதிகப்படியான இதயத் துடிப்பு, தானாகவே மீண்டும் பழைய நிலையை அடையும். ஆனால், நோய்கள் காரணமாக இதயத் துடிப்பு அதிகரித்தால், அந்தந்த நோய்க்கு உரிய சிகிச்சை அளித்தால்தான் இதயத் துடிப்பு சீராகும். உடற்பயிற்சி செய்யும்போது, கோபம், அதிர்ச்சி போன்ற உணர்ச்சிகளுக்கு ஆளாகும்போது, உடலில் வெப்பநிலை அதிகரிக்கும்போதும் இதயத் துடிப்பு அதிகமாகும். பிறகு தானாகக் குறைந்து விடும். *புரை ஏறினால் யாரோ நினைக்கிறார்கள் என்கிறார்களே, உண்மையா? - ச. தையல்நாயகி, ராமநந்தீஸ்வரம். உணவுக்குழாயும் மூச்சுக்குழாயும் வாய்க்குக் கீழ்புறம் அடுத்தடுத்து உள்ளன. உணவு சாப்பிடும் போது மூச்சுக் குழாய் தானாக மூடிக்கொள்ளும். உணவு மூச்சுக் குழாயில் போய்விடாமல் இருக்க இயற்கையாக அமைந்துள்ள ஏற்பாடு இது. சில சமயம் தப்பித் தவறி உணவுத் துணுக்கு அல்லது நீர்த்துளி மூச்சுக்குழாய்க்குச் சென்று விடுகிறது. அப்போது மூச்சுக்குழாயின் தசைகள் அதை வெளியேற்றத் தீவிரமாக இயங்குகின்றன. இதைத்தான் புரை ஏறுதல். புரை ஏறினால் யாரோ நினைக்கிறார்கள் என்பதற்கும் இதற்கும் சம்பந்தம் எதுவும் இல்லை. ******************************************************************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக