சனி, 19 ஜனவரி, 2013

குட்டீஸ் கேள்வி பதில் 21

குட்டீஸ் கேள்வி பதில் 21 *சுனாமி வருவதை முன்கூட்டியே விலங்குகள் அறியும் என்பது உண்மையா? - கு.ரம்யா கலைவாணி, திருச்சி. சுனாமி, பூகம்பம் போன்றவற்றை பறவைகளும் விலங்குகளும் உணர்ந்துகொள்கின்றன என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆனால், இவற்றிற்கு எல்லாம் விஞ்ஞானப்பூர்வமான ஆதாரம் இல்லை. சீனா, ஜப்பான், இந்தோனிஷியா போன்ற நில நடுக்கம் அதிகம் ஏற்படக்கூடிய நாடுகள் பூகம்பம் வருவதை முன்கூட்டியே தெரிந்துகொள்ளும் ஆற்றல் விலங்குகளுக்கு உண்டு என்று நம்புகின்றன. விலங்குகள் உண்பது உறங்குவது எல்லாம் தரையில்தான். அவை தரைமீதுதான் காதை வைத்துக்கொண்டு உறங்கும். அதனால் பூமியில் ஏற்படும் மெல்லிய அதிர்வுகளைக்கூட அவற்றால் உணர்ந்துகொள்ள முடிகிறது என்கிறார்கள். ரயில் தண்டவாளத்தில் காதை வைத்துக்கொண்டு கேட்கிறபோது துõரத்தில் வரும் ரயிலின் ஓசையைக் கேட்க முடிகிறது போல் தொலைவில் ஏற்படும் நிலநடுக்க ஓசையை விலங்குகளால் அறியமுடிகிறது என்று சொல்லப்படுகிறது. இந்த விலங்குகளைப்போலவே கற்கால மனிதனும், இயற்கை பேரழிவுகளை முன்கூட்டியே அறிந்து கொண்டு இடம்மாற்றம் செய்தான் என்றும் கூறப்படுகிறது. *விசிறி கொண்டு விசுறும்போது காற்று நன்றாக வீசுவது எப்படி? - எஸ். ஆகாஷ், திருப்பூர். அடிக்கடி கரன்ட் கட் ஆவதால் மின் விசிறி இயங்காமல், புழுக்கத்தில் விசிறி காற்றில் இளைப்பாறும் போது இப்படி ஒரு கேள்வி கேட்க நினைத்தாயா, ஆகாஷ்! நாம் கையில் விசிறியை வைத்துக்கொண்டு அப்படியும் இப்படியுமாக அசைக்கும் போது நம்மை சுற்றி உள்ள குறைந்த அளவுள்ள காற்று அகற்றப்படுகிறது. அதாவது வெளியேற்றப்படுகிறது. அதனால் நம்மை சுற்றி காற்று இல்லாத வெற்றிடம் ஏற்படுகிறது. அந்த வெற்றிடத்தை நோக்கி, அதிக அளவு உள்ள காற்று வேகமாகப் பாய்ந்து வருகிறது. அவ்வாறு வருகிற காற்றின் குளுமையில்தான் அப்பாடா காற்று சுகமாக இருக்கு என்கிறோம்! பொதுவாக வெற்றிடத்தை நோக்கிக் காற்று வீசும் என்பது விதி! *விமானத்தில் பயணம் செய்வோரின் பேனாவிலிருந்து மை தானாகவே வெளியேறுவது எப்படி? - த. திவ்யா, பாண்டமங்கலம். பூமியிலிருந்து உயரமான இடத்துக்குச் செல்ல செல்ல பேனாவில் இருந்து மை கசியத்தான் செய்யும். இதற்கு காரணம் உயரம் கூட கூட அங்கு நிகழும் அழுத்தம் குறையும். ஒரு குறிப்பிட்ட அளவில் அடைக்கப்படும் ஒரு பொருளின் திண்மை, அந்தந்த இடத்தில் இருக்கும் அழுத்தத்திற்கு ஏற்ப மாறுபடும் என்பது விஞ்ஞான கோட்பாடு. எனவே கீழே அதிக அழுத்தத்தில் நிரப்பப்பட்ட பேனாவின் மை, உயரத்தில் குறைந்த அழுத்தத்தில். திண்மை குறைந்து கசிகிறது. ********************************************************************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக