சனி, 19 ஜனவரி, 2013

குட்டீஸ் கேள்வி பதில்27

குட்டீஸ் கேள்வி பதில்27 *யார் ரத்த தானம் செய்யக்கூடாது? 9.8.2012 - சி. சுகுமார், காரைக்கால். உயர் ரத்த அழுத்தத்துக்குச் சிகிச்சை பெறுபவர்கள், சர்க்கரை நோய்க் கட்டுப்பாட்டில் இல்லாதவர்கள், எய்ட்ஸ் நோயாளிகள், பால்வினை நோய் உள்ளவர்கள், வலிப்பு நோயாளிகள், நுரையீரல் நோய் உள்ளவர்கள், ஹெபடைடிஸ் பி, சி வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானோர், போதைப் பழக்கம் உள்ளவர்கள், உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொண்டவர்கள் ஆகியோர் ரத்ததானம் செய்யக்கூடாது. *பான் கார்டு என்பதன் பொருள் என்ன? அதன் பயன்பாடு பற்றி சொல்லுங்க அங்கிள்! -ஒய்.எல். ஸ்ரீரவிராகுல், அவ்வையார்பாளையம். பான் (கஅN) என்பது நிரந்தரக் கணக்கு எண் (கஞுணூட்ச்ணஞுணt அஞிஞிணிதணt Nதட்ஞஞுணூ) என்ற பத்து இலக்க எண் என்பதை குறிக்கும். இந்திய வருமான வரி செலுத்தும் ஒவ்வொரு இந்தியரும் இந்த எண்ணைப் பெற்றிருப்பது அவசியம். வங்கிக் கணக்கு தொடங்க, தொலைபேசி இணைப்பு பெற, வங்கிக் கணக்கில் 50 ஆயிரத்துக்கு மேல் பணம் போடவோ எடுக்கவோ, பான் எண் வேண் டும். மியூச்சுவல் பண்ட், பங்குச் சந்தை முதலீடு போன்றவற்றிற்கு பான் எண் அவசியம். இந்த பான் கார்டை பெற நாடு முழுக்க உள்ள ஐ.டி. பான் சேவை மையங்களில் ஏதாவது ஒன்றில் நீங்கள் விண்ணப்பிக்கலாம். கட்டணம் 94 ரூபாய். ஆன்லைன் மூலமும் (டttணீ://தீதீதீ.தtடிடிண்டூ.ஞிணி.டிண/) விண்ணப்பிக்கலாம்! உங்கள் புகைப்படத்துடன் கூடிய அடையாள ஆவணம் ஒன்றின் நகல், பாஸ் போர்ட் அளவு புகைப்படம் ஒன்றையும் இணைத்து, படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்தால், 15 நாட்களில் பதிவுத் தபாலில் பான் கார்டு வீடு தேடி வந்து விடும்.! *இரும்பு எவ்வாறு துருபிடிக்கிறது? மற்ற உலோகங்களும் துருப்பிடிக்குமா? - அ.ஆரிமுத்து, வாழைப்பந்தல். ஒவ்வொரு பொருளும் இயற்கையில் வேறு வடிவத்தில் கிடைக்கிறது, குறிப்பாக உலோகங்கள் அதன் தாதுக்களாக தான் கிடைக்கிறது , இரும்புத்தாது (டஞுட்ச்tடிtஞு)., அலுமினியத்தாது (ஞணிதுடிtஞு). தாமிரத்தாது (ஞிதணீணீணூடிtஞு) போன்றவைகளாகும். இப்படி கிடைக்கும் தாதுக்களில் உலோகம் தனித்து இல்லாமல் அதன் ஆக்ஸைட் வடிவத்தில் இருக்கிறது. இப்படி இருக்கும் உலோகம் அதன் இயற்கை வடிவத்தில் இருந்து தனியே பிரித்து எடுக்கப்படுகிறது, இப்படி தனித்து எடுக்கப்படும் உலோகம் மீண்டும் அதன் இயற்கை வடிவதிற்க்கு மாறும் வேதியல் மாற்றம் தான் துருப்பிடித்தல். அலுமினியம் பாத்திரத்தில் அலுமினியம் ஆக்ஸைட் இயற்கையிலே படர்ந்து விடுவதால் அது மேலும் துருப்பிடிப்பதில்லை. நாம் வீடுகளில் பயன்படுத்தும் பூஜை பாத்திரங்கள் பித்தளையில் (அது தாமிரம் உலோகம் கலந்த கலவை) தாமிரம் இருப்பதால், அதில் காப்பர் ஆக்ஸைட் ஆக நம் கண்களுக்கு தெரியும் பச்சை நிறமாக படியும் படற்கையும் துரு தான். தங்கம் இயற்கையில் தனி தனிமம் ஆக கிடைக்கிறது, ஆதலால் அது ஆக்ஸைட் வடிவம் மாறாமல் துருப்பிடிக்காமல் இருக்கிறது. ****************************************************************************************************** *********

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக