சனி, 19 ஜனவரி, 2013

குட்டீஸ் கேள்விபதில்கள் 3

குட்டீஸ் கேள்விபதில்கள் 3 மனித இனத்தைச் சேர்ந்ததா மனித குரங்கு? - பிரபு, கள்ளக்குறிச்சி மனிதக் குரங்கு என்பது ஹொமினோய்டியே இனம் சேர்ந்த ஒரு உயர் விலங்கினம். பொதுவாக இது மனித இனத்தைச் சேர்ந்தது என்று கருதுவதில்லை. எனினும், அறிவியல் வகைப்பாட்டு அடிப்படையில் மனிதரும் இவ்வகையுள் அடங்குபவர். மனித குரங்கு இனத்தில் இரண்டு ஹொமினோய்டு உள்ளன ஹைலோபட்டிடே குடும்பம்: லார் கிப்பன் , சியாமாங் என்னும் குரங்கினம் குறிப்பிடத்தக்கவை. இந்த குரங்கினத்தை ‘குறைந்த மனிதக் குரங்குகள்‘ என அழைப்பர். ஹொமினிடே குடும்பம்: இது ஒராங்குட்டான்கள், கொரில்லாக்கள் சிம்ப்பன்சிகள் என்பவற்றுடன் மனிதர்களையும் உள்ளடக்கும். இவை பெரு மனிதக் குரங்குகள் . பார்பேரி மனிதக் குரங்குகள் போன்ற சில உயர் விலங்குகளில் வாலில்லாத் தன்மையை வைத்து மனிதக் குரங்குகள் எனப்பட்டாலும், இவை உண்மையான மனிதக் குரங்குகள் அல்ல. மனிதரையும், கொரில்லாக்களையும் தவிர்த்துப் பிற உண்மையான மனிதக் குரங்கு இனத்து விலங்குகள் அனைத்தும் சுறுசுறுப்பாக மரம் ஏறும். இவை விதைகள், இலைகள், பழங்கள் பல சந்தர்ப்பங்களில் முதுகெலும்பிலிகளின் ஓரளவு இறைச்சி, எளிதில் செரிமானம் அடையக்கூடிய எல்லாவற்றையும் உண்ணும். ஆபிரிக்காவும் ஆசியாவும் இவற்றின் தாயகம் . * ஜி.யு. போப், வீரமாமுனிவர் போன்றவர்கள் தமிழ் இலக்கியம் எழுதியுள்ளார்கள். நம் இந்தியர்கள் ஆங்கில இலக்கியம் எழுதியிருக்கிறார்களா? - விமலா, திருச்சேரை. பலர் எழுதி இருங்காங்க விமலா. ஆர்.கே.நாராயணன், புக்கர் பரிசு வென்ற அரவிந்த் அடிகா, விக்ரம் சேத். சஷி தரூர், அருந்ததி ராய், குஷ்வந்த் சிங், அனிதா தேசாய், இந்திய வம்சாவளியினரான சல்மான் ருஷ்டி, வி.எஸ்.நேய்பால், போன்றவர்கள் இந்தியர்கள் தான்! இன்னும் சிலர் ஆங்கிலத்தில் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். ******************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக