சனி, 19 ஜனவரி, 2013

குட்டீஸ் கேள்வி பதில் 16

குட்டீஸ் கேள்வி பதில் 16 மே18 *நிபுரூ என்று ஒரு கோள் இருக்கிறதா, அந்தக்கோள் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் உலகத்தை அழிக்கும் என்பது உண்மையா? -சு. ஸ்ரீப்ரதா, மேட்டூர். நிபுரூ என்று ஒரு கோள் இல்லை. அப்படி இருக்க, அந்தக்கோள் எப்படி டிசம்பர் 2012ல் உலகத்தை அழிக்க முடியும்? என்று விண்வெளி விஞ்ஞானிகள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். அதனால் ஸ்ரீப்ரதா அச்சப்படவேண்டாம். நிபுரூ கோள் பற்றி பல வதந்திகள் உலாவருகின்றன. அவை: நிபுரூ என்பது நாசா நிறுவனம் அனுப்பிய கபுள் என்ற செயற்கைக் கோள் தொலைநோக்கியால் கண்டறியப்பட்டதாக சொல்லப்படும் கருஞ்சிவப்பு கோள். இதற்கான போதிய அறிவியல் ஆதாரங்கள் இல்லை. நிபிரூ கோளானது பிளானட் எக்சு எனவும் அறியப்படுகிறது. இது பூமியை நோக்கி வந்து கொண்டு இருப்பதாகவும் அது 2012 ல் பூமியை நெருங்கும் எனவும் சொல்லப்படுகிறது. இது ஒளியற்ற கோள் என்பதால் நம் கண்களுக்கு தெரிவதில்லை என்றும் நம்புகின்றனர். இந்தக் கோள் இருக்கும் நிலையில், சாதாரண தொலைநோக்கிகளால் இது நமக்கு தெரிவதற்கு சாத்தியமில்லாத துõரத்தில் இருப்பதாகவே பலர் கருதுகிறார்கள். 1984ம் ஆண்டு நாசா ஒரு செய்தியை வெளியிட்டது. 50 பில்லியன் மைல்கள் தொலைவிலிருந்து ஒரு மிகப்பெரிய மர்மபொருள் நம் பூமியை நோக்கி நெருங்கி வருவதாக. மீண்டும் 1992 ம் ஆண்டு நாசா இன்னொரு செய்தியை வெளியிட்டது.7 பில்லியன் மைல்கள் தொலைவிலிருந்து ஒரு கோள் நம் பூமியை நோக்கி நெருங்கி வருவதாக. இதற்கு அப்புறம் நாசா இதைப் பற்றி எதுவும் கூறவில்லை. நாசாவின் டெலஸ்கோப்புகளில் காணப்பட்ட மர்மகோள் முன்பெல்லாம் பெரும் அழிவை உண்டாக்கிய “நிபுரூ” தான் என்கின்றனர். *அணுக்கடிகாரம் பற்றி சொல்லுங்க அங்கிள்! - ஏ. சந்திரசேகர், செல்லாண்டிபாளையம். அணுக் கடிகாரம் என்பது நேரத்தைக் காட்ட அணு சார்ந்த ஒத்ததிர்வு அலைவரிசையை ஒப்பிட்டு மாதிரியாகக் கொண்டு இயங்கும் கடிகாரம் . நேரம், அலை வரிசை ஆகியவற்றுக்கான மிகத் துல்லியமான தரம் வாய்ந்த கடிகாரமாக அணுக் கடிகாரமே உள்ளது. சர்வதேச நேரக் கட்டுப்பாட்டுக்கும், தொலைக்காட்சி போன்றவற்றின் அலைவரிசை ஒப்பீட்டுக்கும் அணுக் கடிகாரமே அடிப்படையாக உள்ளது. அணுக்கடிகாரங்கள் கதிரியக்கத்தைப் பயன்படுத்தி இயங்குவது கிடையாது. ஒரு பொருளின் கட்டமைப்பில் இலத்திரன்கள் பல வட்டப் பாதைகளில் சுழன்று கொண்டிருக்கும். அவ்வாறு கழன்று கொண்டிருக்கும் இலத்திரன்கள் வட்டம் விட்டு வட்டம் தாவவும் செய்யும். அப்போதெல்லாம் அந்தக் தாவலுக்கு இலத்திரன்கள் செலவழித்து வெளியிடும் சக்தியை மட்டுமே பலமாகக் கொண்டு அணுக்கடிகாரங்கள் இயங்குகின்றன. நடுக்கடலில் பல நாட்கள் பயணமாகும் கப்பல்களில் நேரம் அறிவது, கதோட்டுக் கதிர்களைக் கொண்டு இயங்கும் தொலைக்காட்சி போன்ற நவீன உபகரணங்களின் அலைவரிசைகள், ரேடியோ அலைவரிசைகள் சார்ந்த பிரபஞ்சக் கதிர்களின் ஆய்வு, விண்வெளி ஆய்வு போன்றவற்றில் எல்லாம் அணுக்கடிகாரம் பயன்படுத்தப்படுகிறது. *மின்சாரம் எப்படி தயாரிக்கப்படுகிறது? -ச. பாவனா, ராமநந்தீஸ்வரம். உலகெங்கும் மின்சாரம் என்பது ஒரே ஒரு முறையில் மட்டுமே தயாரிக்கப்படுகிறது. நமது சைக்கிள் டைனமோவில் பயன்படுத்தப்படும் மின் காந்தப் புலம் தொழில் நுட்பம் தான். பெரிய டைனமோக்களை சுற்றுவதன் மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. அணையில் நீரைத் தேக்கி மேலிருந்து கீழே வரும் நீரின் விசையால் டைனமோவைச் சுழலச் செய்து தயாரிக்கப்படுவது நீர் மின்சாரம். காற்றின் மூலம் விசிறியைச் சுற்றச் செய்து தயாரிக்கப்படுவது காற்றாலை மின்சாரம். நீரைக் கொதிக்க வைத்து, நீராவியாக்கி அதன் மூலம் டைனமோவைச் சுழலச் செய்து தயாரிக்கப்படுவது அனல் மின்சாரம். (இதற்கு நிலக்கரி பயன்படுத்தப்படுகிறது). டீசல், பெட்ரோல், எரிவாயு மூலமும் சுழலச் செய்து மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. யுரேனியம் போன்ற சில தனிமங்கள் பிளக்கப்படுவதால் அதிக வெப்பமும் ஆற்றலும் கிடைக்கின்றன. அவற்றை முறைப்படுத்தி அதைத் தொடர் நிகழ்வாக மாற்றி நீரைக் கொதிக்க வைத்து நீராவியாக்கி அதன் மூலம் டைனமோவைச் சுழல வைத்துப் பெறப்படுவது தான் அணு மின்சாரம். *********************************************************************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக