சனி, 19 ஜனவரி, 2013

18

18 ஜூன்1 *கிரிக்கெட்டில் சில தடவை கேட்ச் பிடித்தவர்களை ‘சப்’ என்று சொல்கிறார்களே. ‘சப்’ என்றால் என்ன என்று சொல்லுங்கள் அங்கிள்? -ஸ்ரீகர்.ர.ராவ், திருச்சி. ‘சப்’ என்பதன் முழுமை‘சப்ஸ்ட்டியூட்’ ஆகும். அதற்கு ‘மாற்று’ என்று பொருள். கிரிக்கெட் போட்டியின் போது 11 வீரர்கள் இருப்பர். ஆட்டத்தின் போது ஆடும் 11 வீரர்களில் யாரேனும் ஒருவருக்கு அடிபட்டாலோ (அ) சோர்வுடன் விளையாட முடியாதவர்களுக்கு பதிலாக மாற்று வீரராக ஒருவர் களமிறக்கப்படுவார். அவரை நாம் ‘சப்’ என்று அழைக்கிறோம். அவரை பீல்டிங் மற்றும் பைரன்னராகப் பயன்படுத்துவர். அவரால் பந்து வீசவோ, பேட்டிங் செய்யவோ முடியாது. இந்த மாதிரி ‘சப்ஸ்ட்டியூட்’ வீரர்கள் அனைத்து விளையாட்டுகளிலும் இருப்பர். *வியர்ப்பது ஏன்? வியர்வை சுரபிகள் பற்றி சொல்லுங்க அங்கிள்! - ஆர். ஜெயப்பிரியா, கோபி. வியர்வை என்பது, வியர்த்தல் செயல் மூலம் உடலிலிருந்து தோல் வழியாக வெளியேற்றப்படும் ஒரு திரவம். < மனிதர்களைப் பொறுத்தவரை வியர்த்தல் என்பது உடற் தோலின் மேற்பரப்பில் இருந்து வியர்வை ஆவியாகும்போது, அது ஆவியாவதற்குத் தேவையான வெப்பத்தை உடலிலிருந்து எடுத்துக் கொள்வதால் உடல் குளிர்ச்சியடைகிறது. இதனால், கோடை காலத்தில் அல்லது வேலை செய்வதன் மூலம் உடற் தசைகள் சூடேறும் போது வெப்பம் உயராமல் தடுப்பதற்காக கூடுதலான வியர்வை சுரக்கப்படுகின்றது. தோலில் நுண்ணிய துவாரங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு துவாரத்தின் கீழும் ஒரு வியர்வை சுரப்பி இருக்கிறது. இதைத் தவிர அபாக்ரின், செபாஷயஸ் சுரப்பிகளும் உள்ளன. அபாக்ரின் சுரப்பிகள் அக்குள்களிலும், ரோமம் வளரும் பகுதிகளிலும் உள்ளன. இவை ஒரு வித திரவங்களை ரோமங்கள் மூலம் சுரக்கும். செபாஷயஸ் சுரப்பிகள் உள்ளங்கை, கால் தவிர எல்லா இடத்திலும் இருக்கிறது. தலையில் உள்ள வியர்வை சுரப்பிகள் சிபம் எனும் எண்ணை திரவத்தை சுரக்கின்றன. *சுமோக் டிடெக்டர் எப்படி தீ யை கண்டுபிடிக்கிறது? - அபிராமி, மயிலாடுதுறை. சுமோக் டிடெக்டர் ( ண்ட்ணிடுஞு ஞீஞுtஞுஞிtணிணூ) என்பது குறிப்பிட்ட பகுதியில் புகை இருப்பதைக் கண்டறியப் பயன்படும் ஒரு கருவி ஆகும். இக்கருவி புகையை உணர்ந்தறிவதன் மூலம் தீப்பிடித்திருப்பதைக் கண்டறிகிறது. அலுவலகங்கள் , வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் போன்ற பொதுக் கட்டடங்களில் பொருத்தப்படும் சுமோக் டிடெக்டர் கருவி புகையை உணர்ந்தவுடன் அக் கட்டிடத்தின் தீத்தடுப்புத் தொகுதிக்கு மின் குறிப்பலைகளை அனுப்பும். இதன் மூலம் எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டு கட்டடத்தில் உள்ளவர்கள் உடனடியாகவே கட்டிடத்தை விட்டு வெளியேற உதவுகிறது. சிறிய வட்டத்தட்டுப் போலிருக்கும் இக்கருவி கட்டடங்களின் உட்கூரைகளில் குறிப்பிட்ட இடங்களில் பொருத்தப்படுகின்றன. தீ பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மட்டுமன்றி, புகைத்தல் தடை செய்யப்பட்டுள்ள இடங்களில், புகைப்பவர்களைக் கண்டுபிடித்துத் தடுப்பதற்கும் இக்கருவிகள் உதவுகின்றன. இது உயிர்களின் பாதுகாப்புத் தொடர்பான விஷயம் என்பதால் , இக்கருவிகளுக்கு தொடர்ச்சியான மின்சாரம் வழங்கப்பட வேண்டும். ***********************************************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக