சனி, 19 ஜனவரி, 2013

குட்டீஸ் கேள்வி பதில் 9

குட்டீஸ் கேள்வி பதில் 9 மார்ச்23 *அக்னி நட்சத்திரம் என்றால் என்ன? - எம். நிகேஷ் குமார், காட்டூர். பொதுவாக சித்திரை, வைகாசி மாதங்களில் பூமிக்கும், சூரியனுக்கும் இடைப்பட்ட துõரம் சற்று குறையும். அதனால் சூரியனிடம் இருந்து வரும் கதிர் வீச்சு பூமியில் செங்குத்தாக விழும். இதனால் சாதாரண நாட்களை விட இந்த இரு மாதங்களில் பூமியில் சூரிய வெப்பம் சற்று கூடுதலாக இருக்கும். பெரும்பாலும் சித்திரை மாத இறுதி பத்து நாட்களும் வைகாசி மாத முதல் பத்து நாட்களும் இணைந்த கடும் கோடை பகுதியாகும். இந்நாட்களில் முதல் ஏழு நாட்கள் சுமாராகவும் இடையில் ஏழு நாட்கள் மிக அதிகமாகவும் கடைசி ஏழு நாட்கள் சுமாராகவும் வெப்பம் தகிக்கும். இப்படி தகிக்கும் காலத்தை அக்னி நட்சத்திர காலம் என்பது நடைமுறை. இந்த ஆண்டு மே 3ம் தேதியிலிருந்து மே 28ம் தேதி வரை அக்னி நட்சத்திர காலமாகும். *பனி மழை பொழிவது எப்படி? - எஸ். சரண்குமார், கோபி. வானத்தில் வெப்பநிலை மிக குறைவாக இருக்கும் போது மழை பனியாகிறது. அந்தப் பனி பூமி வரும் வரை வெப்பநிலை குறைவாகவே இருந்தால் மழை பனியாக பொழிகிறது. வெப்பநிலை, நீர் உறையும் அளவோ, அதைவிட குறைவாகவோ (மைனஸில்) இருந்தால் மழை பனியாக பொழிய வாய்ப்புண்டு, இந்த வெப்பநிலை கூணூணிணீணிண்ணீடஞுணூஞு முழுவதும் நிலவ வேண்டும் . மேலே சொன்ன அதேப்பனி காற்று மண்டலத்தில் ஏற்படும் வெப்ப மாற்றம் காரணமாக சிறு பனி கட்டி மழையாக பெய்யும். பனியாக ஆரம்பிக்கும் மழை காற்றில் புகுந்து பூமிக்கு வரும் வழியில், காற்று மண்டலத்தில் எங்காவது வெப்பம், உறையும் வெப்ப நிலையை விட அதிகமாக இருக்கும் போது மீண்டும் நீராகி, நிலத்தை நெருங்கும் முன் மீண்டும் குறைந்த வெப்பம் காரணமாக சிறு ஐஸ் கட்டிகளாக விழும். இந்த கட்டிகள் சிறு கற்கண்டு அளவிலோ இல்லை அதை விட கொஞ்சம் பெரியதாகவோ இருக்கும். * விமானம் பறப்பது எவ்வாறு என்பதை விளக்குங்க. - ஆர். கோகுல், பாலா, பள்ளூர். ஒரு பறக்கும் பொருளில் நான்கு விதமான விசைகள் உண்டு. < அவை மேல்நோக்கி இழுக்கும் லிப்ட், முன்னோக்கி இழுக்கும் த்ரஸ்ட், கீழ்நோக்கி இழுக்கும் எடை , பின்னோக்கி இழுக்கும் டிராக். ஒரு விமானம் ஒரே உயரத்தில் , நேராக பறக்க வெயிட்= லிப்ட் டிராக்= த்ரஸ்ட் சமமானதாக இருக்க வேண்டும். த்ரஸ்ட், டிரேகைவிட அதிகமாக இருக்கும்போது விமானத்தின் வேகம் கூடும். டிராக், த்ரஸ்டை விட அதிகமாக இருக்கும்போது விமானத்தின் வேகம் குறையும். விமானத்தின் எடை, லிப்ட் விசையை விட கூடுதலாக இருக்கும்போது விமானம் கீழிறங்கும். விமானத்தின் லிப்ட் விசை விமானத்தின் எடையைவிட அதிகமாக இருக்கும்போது விமானம் மேல் எழும்பும். விமானத்தில் கீழ் நோக்கு விசையை கொடுப்பது விமானத்தின் எடை மற்றும் புவி ஈர்ப்பு விசை. விமானத்தின் மேல் நோக்கு துõக்கு சக்தி உற்பத்தி செய்யப்படுவது அதன் இறக்கை, விமானத்தின் வேகம், மற்றும் காற்றின் கூட்டணி . இந்த மூன்றில் ஒன்று இல்லாவிட்டாலும் துõக்கு சக்தி உருவாகாது , விமானம் பறக்காது. அதாவது இறக்கை இல்லாவிட்டாலும் பறக்க முடியாது, விமானத்தில் வேகம் இல்லாவிட்டாலும் பறக்க முடியாது, காற்று இல்லாமல் மீதி இரண்டும் இருந்தாலும் பறக்க முடியாது. ஒரு டெயில் பீஸ்: இந்த இறக்கை மேட்டர் எல்லாம் காற்று உள்ள இடங்களில் மட்டும்தான். பூமியை தாண்டி விண்வெளிக்கு சென்றுவிட்டால் பறப்பதற்கு இறக்கை தேவைப்படாது *************************************************************************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக