சனி, 19 ஜனவரி, 2013

19

19 ஜூன்8/ *ஸ்னுõக்கர் விளையாட்டுபற்றி சொல்லுங்க அங்கிள்! - வி. சுப்ரமணியம், பி.கொமாரபாளையம். ஸ்னுõக்கர் என்னும் மேடைக் கோல்பந்தாட்டம் என்பது ஒரு கம்பள விரிப்பு கொண்டு மூடப்பட்டுள்ள, நான்கு புறங்களிலும் பக்கவாட்டில் துளைகளைக் கொண்டுள்ள, ஒரு பச்சை நிற மேசையின் மீது விளையாடும் ஒரு கோல் விளையாட்டாகும். இந்த விளையாட்டில் ஒரு கோல் கொண்டு பந்துகளை வீழ்த்த வேண்டும். ஒரு வெள்ளை மற்றும், ஒரு மதிப்பெண் கொண்ட பதினைந்து சிவப்பு பந்துகள், வெவ்வேறான கலரில் ஆறு பந்துகள், மஞ்சள் (2 மதிப்பெண்கள்), பச்சை (3), பழுப்பு (4), நீலம் (5), இளஞ்சிவப்பு (6) மற்றும் கறுப்பு (7)ஆகியவற்றைக் கொண்டது. ஒரு விளையாட்டு வீரர் மேடைக் கோல்பந்தாட்டத்தில், கோல்பந்தைப் பயன்படுத்தி, சிவப்பு மற்றும் வண்ணப் பந்துகளைச் செலுத்தி, எதிராளியை விடவும் அதிகமான மதிப்பெண்கள் எடுத்தால் வெற்றி பெற்றவராவார். பிரிட்டிஷ் ராணுவ அதிகாரிகளால் இந்தியாவில் <கண்டுபிடிக்கப்பட்டதாகப் பொதுவாகக் கருதப்படும் விளையாட்டு இது. சீனாவில் <இந்த விளையாட்டு புகழ் பெற்று வருகிறது.19ம் நுõற்றாண்டின் பிற்பகுதியில்தான் மேடைக் கோல்பந்தாட்டம் உருவானதாகப் பொதுவாக கருதப்படுகிறது. *கம்ப்யூட்டர் கீ போர்டில் எழுத்துகள் வரிசைப்படி இல்லையே, ஏன்? - டி. சிவகாமசுந்தரி, ஈரோடு. கீ போர்டில் எழுத்துகள் டைப் செய்ய வசதிக்கேற்றவாறு அமைக்கப்பட்டுள்ளன. அதிகமாக பயன்படும் எழுத்துகள் விரைவாகவும், எளிதாகவும் டைப் செய்ய விரல்களுக்கு எட்டும்படிஅமைத்திருக்கிறார்கள். அதிகமாக பயன்படும் எழுத்துகள் கீ போர்டில் இரண்டாவது வரிசையில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வரிசை எழுத்துகள் மீதுதான் டைப் செய்யும் விரல் முனை சாதாரண நிலையில் இருக்கும். அதிகம் பயன்படாத எழுத்துகள் மேல் வரிசையிலும், அரிதாக பயன்படும் எழுத்துகள் கீழ் வரிசையிலும் அமைக்கப்பட்டுள்ளன. டைப் செய்வோர் எல்லாம் இந்த வகை அமைப்பில் பழக்கப்பட்டுவிட்டதால் பழைய முறையே பயன்பாட்டில் இருந்துவருகிறது. எதிர்காலத்தில் திருத்தம்பெற்ற புது கீ போர்டுகள் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. *கண்ணாடிப் பொருட்கள் கீழே போட்டால் உடைந்து விடுவது எதனால்? -எஸ்.எம். முகேஷ், அரையபுரம். ஒரு பொருளில் அடங்கி இருக்கும் அணுக்கள் மற்றும் மூலக்கூறுகளின் பிணைப்பு ஆற்றலுக்கு ஏற்ப அப் பொரும் கடினமாக அல்லது மென்மையாக இருக்கும். ஒரு பொருளின் இருக்கும் அணுக்கள், மூலக்கூறுகள் தமக்குள்ளே இருக்கும் இணைப்புகளை விட்டுவிடாமல் இணைந்தபடியே இடப்பெயர்ச்சியாகும் தன்மை கொண்டிருந்தால், அப்பொருள் மீது செலுத்தப்படும் வெளிவிசையைத் தாங்கிக் கொள்ளும். அதனால் உடையாமல் இருக்கும். கண்ணாடிப் பொருட்களைப் பொறுத்தவரை அதில் பலவகைப்பட்ட அணுக்கள் இருக்கின்றன. அந்த அணுக்கள் ஒன்றுடன் ஒன்றாக உறுதியுடன் பிணைக்கப்பட்டுள்ளன. இந்த அணு பிணைப்புகள் வெளிவிசை அல்லது அழுத்தத்தின் காரணமாக சிதைந்தால், அந்த அணுக்கள் இடம் பெயர்ந்து மற்ற அணுக்களுடன் மீண்டும் இணைப்பைப் பெறமுடிவதில்லை. எனவேதான் கண்ணாடிப் பொருள்கள் எளிதில் உடைந்து விடுகின்றன. *******************************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக