சனி, 19 ஜனவரி, 2013

20

20 ஜூன்22 மெட்டல் டிடெக்டர் எப்படி செயல்படுகிறது? - கா. தாமரைச்செல்வன், திட்டை. முக்கியமான அரசு அலுவலகங்கள், பஸ், ரயில், விமான நிலையங்களில் நுழைவு வாயிலில் மெட்டல் டிடெக்டர் கருவி பொருத்தி இருப்பார்கள். இந்த வழியின் வழியே செல்பவர்கள் வெடிகுண்டுகளையோ, ஆயுதங்களையோ வைத்திருந்தால் கண்டுபிடித்துவிடலாம். போலீசார் கையில் நீள்வட்டவடிவமான கருவி வைத்திருப்பார்கள். இதுவும் ஒருவகை மெட்டல் டிடெக்டர் கருவிதான். இதை ஒருவரின் உடல் அருகில் கொண்டு சென்றால், அவர் வைத்திருக்கும் பைகளின் மீது காட்டுவதன் மூலம் அவரிடம் ஆபத்தான பொருட்கள் ஏதும் இருக்கிறதா என்பதை கண்டுபிடிக்கலாம். ஒருவர் மறைத்து வைத்திருக்கும் உலோகத்தை மெட்டல் டிடெக்டர் எப்படி கண்டுபிடிக்கிறது என்றால், ஒரு காந்தத்துண்டின் அருகே குண்டூ சியோ இரும்பு பொருளோ அருகே கொண்டு சென்றால் அதை காந்தம் ஈர்க்கும். காந்தத்தின் சுற்றுப்புறத்தில் உருவாகும் காந்தப்புலத்தால் இந்த ஈர்ப்புத்தன்மை உருவாகிறது. மெட்டல் டிடெக்டர் கருவிகளில் மின்சாரம் செல்லும் சர்க்யூட் பாதைகள் மிகவும் நுட்பமான வகையில் அமைக்கப்பட்டிருக்கும். காந்தப்புலங்களில் மிகவும் நுணுக்கமாக ஏற்படும் பாதிப்புகளைக்கூட உணர்ந்து எச்சரிக்கை ஒலி எழுப்பும் வகையில் அந்தக்கருவி தயார் செய்யப்பட்டிருக்கும். கையடக்கமாக உள்ள மெட்டல் டிடெக்டரில் காயில் எனப்படும் இரண்டு கம்பி சுருள்கள் இருக்கும். இவை இரண்டும் ஒரே சக்திகொண்ட காந்தப்புலங்களை உருவாக்கும் திறன்கொண்டிருக்கும். இந்தக்கருவியின் அருகே ஒரு உலோகப்பொருள் வந்தால், ஒரே வகையான ஈர்ப்புத்தன்மையை கொண்டு அந்தக் காந்தப் புலங்களின் சமநிலையில் பாதிப்பு ஏற்படுகிறது. அது மின்கம்பிச் சுருளுக்குக் கடத்தப்பட்டு எச்சரிக்கை ஒலி எழுப்பும். *நம் உடலில் எத்தனை ஆயிரம் வியர்வை சுரப்பிகள் உள்ளன? - மதி. தேவதர்ஷன், கயத்துõர். நம் உடலில் வெப்பம் அதிகமானால், அதை கட்டுப்படுத்தி ஒரே சீராக வைத்துக்கொள்ள ஏற்படுவதுதான் வியர்வை. உடலின் வெப்பத்தை 85 சதவீதம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது இந்த வியர்வைதான். உடலில் எங்கெல்லாம் சருமம் இருக்கிறதோ அங்கெல்லாம் வியர்வை சுரப்பிகளும் இருக்கும். வியர்வை என்பது பெரும்பாலும் தண்ணீர்தான். அதனுடன் சில ரசாயனங்களையும் கழிவுப் பொருட்களையும் உடல் வெளியே தள்ளுகிறது. இந்த வியர்வை, சருமத்தில் 20 லட்சத்தில் இருந்து 50 லட்சம் <நுட்பமான துவாரங்கள் மூலம் வழிகிறது. இந்த நுண்ணிய துவாரங்கள் உடல் முழுவதும் பரவியுள்ளன. *ரயில் செல்லும் வழியில் ஙி/ஃ என்று ஒரு போர்டு எழுதிவைத்துள்ளார்களே, ஏன்? முகமது அசாருதீன், வல்லம். ரயில் பயணங்களில் வேடிக்கைப் பார்ப்பது எல்லாருக்கும் பிடிக்கும். அந்த வேடிக்கை பார்த்ததில் அர்த்தமுள்ள ஒரு கேள்வியை கேட்டிருக்கும் அசாருதீனுக்கு ஒரு பாராட்டு! தண்டவாளம் செல்லும் பாதையில் இரு பக்கங்களில் இரும்பு கம்பியில் மஞ்சள் நிறத்தில் சதுரவடிவில் ஒரு போர்டை பொருத்தி அதில் ஙி அல்லதுஙி/ஃ என்று எழுதி இருப்பார்கள்.இதில் ஙி என்பது விசில் ஒலி எழுப்பவும் என்ற பொருள் தரும். ஃ என்பது லெவல் கிராசிங் என்று பொருள் தரும். அதாவது லெவல் கிராசிங் வருகிறது, ஆதலால், இந்த இடத்தில் இருந்தே ஹாரன் எழுப்பவும் என்று பொருள். இந்த போர்டு லெவல் கிராசிங் இருக்கும் துõரத்தில் இருந்து 250 மீட்டர் துõரத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டிருக்கும். ****************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக