சனி, 19 ஜனவரி, 2013

குட்டீஸ் கேள்வி பதில்45

குட்டீஸ் கேள்வி பதில்45 வாயில் அடிக்கடி உமிழ்நீர் சுரக்கிறது. அதனால் என்ன நன்மை? - அ. விமல்நாத், விருதுவிளங்கினான். ஒரு மனிதனின் வாயில், அவன் வாழ்நாளில் மொத்தம் 30 ஆயிரம் லிட்டர் எச்சில் உற்பத்தி ஆகிறது . உணவுக்கு குழைவைச் சேர்த்து, அதைச் சுலபமாக வயிற்றுக்குள் அனுப்புவது எச்சில்தான் . எச்சில் இல்லையேல், உங்களால் சரளமாகப் பேச முடியாமல், வாய் ஒட்டிக்கொள்ளும் . வாயில்தான் ஜீரணம் துவங்குகிறது . அதைச் செயல்படுத்தும் ணீtதூச்டூடிண பையாலின் என்கிற ’ என்ஸைம் ’ எச்சிலில்தான் இருக்கிறது . எச்சிலில் உள்ள தற்காப்பு புரோட்டீன்கள் வாயில் ரணங்கள் வராமல் தடுத்துக் காப்பாற்றுகிறது . இந்தியா மட்டும் இல்லை ; ஆசியா முழுவதும் பொது இடங்களில் எச்சில் துப்பும் பழக்கம் பரவலாக உண்டு . அமெரிக்காவில் 19 ம் நுõற்றாண்டு முடியும் வரை, யாரைப் பார்த்தாலும், எல்லா இடங்களிலும் எச்சில் துப்பிக்கொண்டே இருப்பார்கள் . அப்போது முக்கால்வாசி அமெரிக்கர்களுக்குப் புகையிலை மெல்லும் பழக்கம் இருந்தது . துப்புவதற்கான கிண்ணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள்கூட அங்கே நிறைய இருந்தன . ’ மேஜை, நாற்காலிகள் மீது மட்டும் எச்சில் துப்பாதீர்கள் ! ’ என்று எழுதப்பட்ட போர்டுகள் பல கட்டடங்களில் வைக்கப்பட்டன. அடிக்கடி எச்சில் துப்புவது ஆரோக்கியமான செயல் அல்ல. *********************************************************************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக