வெள்ளி, 12 மார்ச், 2010

கொம்பு patti

சீனாவில் உள்ள ஹெனான் மாநிலத்தை சேர்ந்தவர் ஜாங்க் ரூய்பாங்க். இவருக்கு 101 வயது ஆகிறது. கடந்த ஆண்டு இவர் நெற்றியில் ஒரு கொம்பு முளைத்தது. இப்போது அதன் நீளம் 6 செ.மீ. ஆக உள்ளது. இப்போது நெற்றியின் இன்னொரு பாகத்திலும் ஒரு கொம்பு முளைத்து இருக்கிறது. இந்த கொம்பு காரணமாக எந்த வேதனையும் கிடையாது என்கிறார் ரூய்பாங்க்.

அவரது 60 வயது மகன் ஜாங்க் குவோஷெங் கூறுகையில் முதலில் நாங்கள் இது குறித்து அதிகம் கவனம் செலுத்தவில்லை. ஆனால் காலம் செல்ல செல்ல, இந்த சதைக்கட்டி வளர்ந்து கொண்டே போகத் தொடங்கியது. இப்போது இன்னொரு பக்கத்திலும் கொம்பு முளைத்து வருகிறது என்று குறிப்பிட்டார். ரூய்பாங்க்குக்கு 7 குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருத்தி மட்டும் தான் மகள்.மற்றவர்கள் அனைவரும் மகன்கள். அவரது மூத்த மகனுக்கு 82 வயது ஆகிறது.

ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெறுவதற்கு அந்த குடும்பத்திடம் பணவசதி இல்லை என்று கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக