வெள்ளி, 12 மார்ச், 2010

அட அப்பிடியா?

பருத்த தொடை, இடை, பிட்டம் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது



தடித்த பின்னழகும், இடையும், தொடையும் கொண்டவரா நீங்கள்? மற்றவர்கள் கிண்டல் செய்கிறார்களா? பருமனை மறைக்க, படாதபாடு படுகிறீர் களா? கவலையை விடுங்கள்! உலகிலேயே ஆரோக்கியமானவர், நீங்கள் தான்! ஆம்... லண்டன் ஆராய்ச்சியாளர்கள் இந்த பேருண்மையை கண்டுபிடித்துள்ளனர்.

லண்டனில் உள்ள ஆக்ஸ் போர்டு பல்கலைக் கழக உடல் கூறு இயல் அறிஞர்கள், அளவுக்கு அதிகமாக வளர்ச்சியடைந்த பிட்டம், இடை, தொடை கொண்டவர்களை வைத்து ஆராய்ச்சியில் ஈடுபட் டனர். இதய நோய், உடலின் வளர்சிதை மாற்றம் ஆகியவற்றுக்கும், உடல் பருமனுக்கும் என்ன தொடர்பு உள்ளது என்று ஆராய்ச்சி செய்ததில், மேற் குறிப்பிட்ட மூன்று உடல் பாகங் களிலும் கொழுப்பு சேர்வது, இதயத்துக்கு நல்லது என்று தெரிய வந்தது. "இடைப் பகுதியில் சேரும் கொழுப்பு, கெட்ட கொழுப்பு அமிலங்களை அப்புறப்படுத்துகிறது; வீக்க எதிர்ப்புச் சக்தியை உருவாக்கி, ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படாமல் பாதுகாக்கிறது.

பிட்டத்தில் சேரும் கொழுப்பும் இதே பயனைத் தருகிறது. ஆனால், வயிற்றுப் பகுதியில் மட்டும், கொழுப்பு சேரக் கூடாது' என்று கூறும் இந்த அறிஞர்கள், "உண்மையைச் சொல்வதெனில், இடைப் பகுதியில் மிகக் குறைந்த அளவு கொழுப்பு சேர்வது, வளர்சிதை மாற்றத்தில் பெரிய பாதிப்பை உருவாக்கி விடுகிறது. தொடையிலும், பின்புறத் திலும் சேரும் கொழுப்பு, கடினமாக இருப்பதால், உடலின் வேறு பகுதிகளுக்குச் செல்வதில்லை' என்கின்றனர். "கொழுப்பு கரையாமல் ஒரே இடத்தில் இருப்பது நல்லது. ஏனெனில், கொழுப்பு கரையும் போது, "சைடோகைன் 'என்ற ரசாயனம் சுரக்கிறது. இது, இதய நோய், நீரிழிவு ஆகியவற்றை உண்டாக்கி விடும். இந்த நோய்கள், உடலில் வீக்கத்தை அதிகரித்து விடும்' என்றும் இவர்கள் கூறுகின்றனர்.

கான்ஸ்டன்டினோஸ் என்ற ஆராய்ச்சியாளர் கூறுவதாவது: கட்டுக்கோப்பான உடல் இருப்பது அவசியம் தான். ஆனால், உடலின் எந்த உறுப்பில் கொழுப்பு சேர்கிறது என்பதைக் கண்டறிவது, அதை விட அவசியம். வயிற்றுப் பகுதியில் சதை போடாமல், தொடையில், இடுப்பில், பிட்டத்தில் சதை போடுவது நல்லது தான். ஆனால், துரதிருஷ்டவசமாக, இந்த நான்கு உறுப்புகளுமே ஒன்றோடொன்று தொடர்புடையவை; இடுப்பில் கொழுப்பு சேர்ந்தால், வயிற்றிலும் சேர்ந்து விடும். எனவே, உடல் பருமனாக இருப்பவர்களுக்கு, இடுப்பு பகுதியில் சதை போடத் துவங்கி விட்டாலே, அவர்கள், உணவு முறையையும், வாழ்க்கை முறை யையும் அடியோடு மாற்றிக் கொள்ள வேண்டியது அவசியம். தொடர்ந்து உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு ஆகியவற்றை மேற் கொண்டால் மட்டுமே, இதய நோய் போன்ற ஆபத்துகளிலிருந்து தப்ப முடியும். இவ்வாறு கான்ஸ்டன்டினோஸ் கூறுகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக