புதன், 31 மார்ச், 2010

எப்படி எல்லாம் யோசிக்கி றாய்ய்ய்ங்க!

எப்படி எல்லாம் யோசிக்கி றாய்ய்ய்ங்க!


ஒலியின் வேகத்தை விட அதிவேகத்தில் குதிக்கும் சாதனை!


சாதனை செய்து பிரபலமடைய நினைக்கும் சில சாதனையாளர்கள் செய்யும் சாதனைகளைப் பட்டியலிட்டால் நமக்கு தலைச்சுற்றும். இதில் எல்லாம்கூட சாதனை செய்வார்களா என்று நினைக்கத்தோன்றும்.
சமீபத்தில் ஒரு சாதனையாளர் ஒலியின் வேகத்தை விட அதிக வேகத்தில் குதித்து சாதனை செய்ய முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
அவர் பெயர் பீலிக்ஸ்.ஆஸ்திரியாவைச் சேர்ந்தவர். இவர் ஏற்கெனவே குதித்து சாதனை பல செய்துள்ளார். தனது அடுத்த கட்ட சாதனையாக 120,000 அடி உயரத்திலிருந்து பாராசூட்டில் குதிக்க தயாராகி வருகிறார்.
இதே ஒரு சாதனையை 50 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கரான ஜோ கிட்டிங்கர் என்பவர், 102,800 அடி (31 கி.மீ) உயரத்திலிருந்து பலுõனைப் பயன்படுத்தி குதித்து நிறைவேற்றிய சாதனையை இவர் முறியடிக்க உள்ளார். இந்த சாதனையை முறியடிக்க பலரும் முயன்று தோற்றதுடன் சிலர் அந்தச் சாதனை முயற்சியில் இறந்தும் உள்ளனர்.
இருந்தும் பீலிப்ஸ் தான் மேற்கொண்ட சாதனையை செய்து முடிக்க ஆர்வம் கொண்டுள்ளார். அதற்காக,
புவீயிர்ப்பற்ற நிலையில் போதிய அழுத்தத்தை வழங்க கூடிய விசேஷ கவச ஆடையை அணிந்தவாறு ஒலியை விடவும் அதிகமான வேகத்தில் பீலிக்ஸ் குதிக்கவுள்ளார்.
இந்த சாதனையை நிகழ்த்த உள்ள பீலிப்ஸ்,
""நான் என்னால் முயன்ற அளவு, வரையறைகளை உடைத்து சாதனை படைக்க விரும்புகிறேன்''என்று பீலிப் கூறியுள்ளார்.
அத்துடன் அவர் இந்தச் சாதனை முயற்சியின் போது, குதித்த 5 நிமிட நேரத்திற்கு பிறகே பூமியை வந்தடைவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. பீலிக்ஸ் இந்தச் சாதனையை நிறைவேற்றும் பட்சத்தில், இயந்திரத்தின் துணையின்றி ஒலியை விடவும் அதிகமான வேகத்தில் குதித்த உலகின் முதலாவது நபர் என்ற பெருமையை பீலக்ஸ் பெறுவார்.
இவர், 2003ம் ஆண்டு இறக்கை பொருத்தப்பட்ட ஆடையை அணிந்தபடி ஆங்கிலக் கால்வாயில் குதித்து பீலிக்ஸ் சாதனைப் படைத்திருக்கிறார். அத்துடன் அவர் மலேசிய கோலாம்பூரில் உள்ள பெட்ரோனஸ் கோபுரத்திலிருந்து குதித்து உலகிலேயே மிக உயரமான கட்டிடத்திலிருந்து குதித்து சாதனையை நிறைவேற்றியுள்ளார். அவரது உலக சாதனையை நாஸர் அல் நியாடி மற்றும் ஓமர் அல் ஹெகேலன் ஆகியோர் கடந்த ஆண்டு ஆம்திகடை துபாயிலுள்ள உலகின் அதி உயரமான கட்டிடமான புரூஜ் கஹ்லிபாவிலிருந்து குதித்து முறியடித்திருந்தனர்.
தன் சாதனை முறியடிக்கப் பட்டுவிட்டதால், ஒரு லட்சத்து,20 ஆயிரம் அடி உயரத்திலிருந்து ஒலியின் வேகத்தை விட அதிகமான வேகத்தில் அசுரத்தனமாக குதிக்கும் சாதனையை மேற்கொள்கிறாரோ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக