வெள்ளி, 26 மார்ச், 2010

மறக்க முடியாத வார்த்தைகள்...

மறக்க முடியாத வார்த்தைகள்...
பச்சை வயல் மனசு!
வார்த்தைகள் என்பவை எழுத்துக்களின் தொகுப்பு என்று சர்வசாதாரணமாக சொல்லிவிடுகிறோம். ஆனால், சிலர் எழுதும் வார்த்தைகளும், பேசும் வார்த்தைகளும் இந்த பூமியை புரட்டிப்போடும் நெம்புகோலாக இருந்திருக்கின்றன! வார்த்தைகளுக்கு மயக்கும் சக்தியும்; மந்திர சக்தியும் ,வசீகரிக்கும் சக்தியும் உண்டு.
"செய் அல்லது செத்துமடி' இந்த சாதாரண வார்த்தை காந்தியின் வாயிலிருந்து புறப்பட்டு,இளைஞர்களின் மனதில் சுதந்திர வேட்கையை விதைத்து,இந்தியா சுதந்திரம் பெற காரணமாக இருந்த மந்திரச்சொல்லாக ஆகிவிட்டதை இன்றும் அறிகிறோம்.
"இது எப்படி இருக்கு?'
"அந்த மான் இந்த மானுக்குத் தான் சொந்தம்'
80களில் வெளியான திரைப்படத்தில் வந்த இந்த வார்த்தைகளை இன்று வரை ரசிக்காதவர்கள் உண்டா என்ன? இப்படியான சில மறக்க முடியாத வார்த்தைகள் ஒவ்வொரு மனிதர்களிடமும் இருக்கின்றன. அதை தான் இந்த பக்கத்தில் நீங்கள் ரசிப்பதற்கு தருகிறோம்.
நான் தினமும் அலுவலகத்திற்கு வரும் பஸ்சில் கிரானைட் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் மாறன் என்பவர் பஸ்சில் தினமும் எதாவது ஒரு புத்தகம் படித்துக்கொண்டுதான் இருப்பார். அவரிடம் நீங்கள் படித்த எழுத்தாளர் கதையில் உங்களுக்குப்பிடித்த, மறக்க முடியாத வார்த்தை ஒன்றை சொல்லுங்கள் என்றேன்.
அவரோ சிரித்துக்கொண்டே எதை சொல்வேன்... என்று யோசித்தவர். சரி, சொல்றேன் கேட்டுகுங்க. எனக்குப்பிடித்த எழுத்தாளர் பாலகுமாரன் அவர் எழுதிய கதையில் வரும் ஒருவார்த்தை மறக்கமுடியாதவை.அது"பச்சை வயல் மனசு' என்ற வார்த்தை. ஒவ்வொருத்தருக்கும் ஒரு மனசு.ஆனா, மனசுல விதைக்கிற விசயம் இருக்கே அது ஆயிரம் ஆயிரம்... ஒரு கூட்டு குடும்பத்துல, அண்ணன், தம்பி, அக்கா ,தங்கைன்னு ஏகப்பட்ட பேர் இருக்கிற குடும்பத்தில இருக்கும் ஒரு முதிர்கன்னியின் மனசில் வந்துப்போகி காதலை அவள் ரசிக்கறா.ஆனா அதை அங்கிகரீக்கமுடியாம கை கழுவிடுறா.இப்படி ஐந்து, ஆறு காதல் அவளைத்தேடி வருகிறது. எல்லாத்தையுமே குடும்பத்துக்கா உதறிவிடுகிறாள். காலம் கடந்து , என்னன்னவோ நடந்து விடுகிறது. ஆனாலும் மனசு எத்தனை காயம் பட்டும், நல்லதுக்கு கெட்டதுக்கு சிரிச்சும் அழுதும் இருந்து கடைசிவரை அவள் மனசு எந்த நிலையிலும் பட்டுபோகாம, பசுமையாகவே இருக்கு. அவளின் மனசு எப்படிபட்டதுன்னு சொல்ல வந்த பாலகுமாரன் அவள் மனசு பச்சை வயல் மனசு... என்று முடித்திருப்பார்.மரம் எத்தனை முறை இலைகளை உதிர்த்தாலும் ,அதுக்கா மரம் பட்டமரமா ஆயிடறதில்லை.மீண்டும் மீண்டும் தளிர்விட்டு மரம் பசுமையாக தான்இருக்கும்.அதை மாதிரி தான் அவள் மனசும் இழந்த காதலை பற்றி கவலைப்படாம, வர்றகாதலை நேசிக்கிட்டு இருக்கான்னு சொல்லியிருப்பாரு.
பொதுவாகவேஒரு மனுஷன் மனசுக்கு எ த்தனை பிரிவுகள், இழப்புகள்,காயங்கள் வருது. ஆனா அதுக்கா மனசு மரத்துபோயிடுதா என்ன? செத்துபோயிடுதா என்ன? அதான் மனசை "பச்சை வயல் மனசு'பாலகுமாரன் எழுதியஅந்த வார்த்தையின் அழுத்தம்; அடர்த்தி; நயம் இப்போதும் மனசில் வட்டமடிச்சிக்கிட்டுதான் இருக்கு என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக