புதன், 31 மார்ச், 2010

இப்படி எல்லாம் நடக்குதுங்க

இப்படி எல்லாம் நடக்குதுங்க!


ஹஸ்பண்டை சஸ்பெண்ட் செய்யும் சிறுமி!


பணம் பத்தும் செய்யும். ஆனால், ஒரு குடுகுடு கிழவனுக்கு, 12 வயது சிறுமியை மனைவியாக்குமா என்றால் முடியும் என்றுதான் சொல்ல வேண்டும்.

சவூதி அரேபியாவை சேர்ந்த 12 வயது சிறுமி 80 வயது முதியவருக்கு 85 ஆயிரம் ரியால்களுக்கு மனைவியாக விற்கப்பட்டாள். அந்த சிறுமி இப்போது அந்த முதியவரிடமிருந்து விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த சம்பவம் சவுதியை கலங்கடுத்துள்ளது.
விவாகரத்து கோரி மனு செய்துள்ள 12 வயது சிறுமி, அவரது தந்தையின் 80 வயது உறவினருக்கு கடந்த ஆண்டு திருமணம் செய்து வைக்கப்பட்டார். இதற்காக வரதட்சணையாக அந்த சிறுமிககு 85 ஆயிரம் ரியால்கள் கொடுக்கப்ட்டது.
இந்த திருமணத்தை எதிர்த்து தனது மகளுக்கு விவாகரத்து அளிக்கும் படி கோரி சிறுமியின் தாயார் மனு செய்திருந்தார்.பின்னர் என்னகாரண மும் கூறாமல் இந்த மாத தொடக்கத்தில் அந்த மனுவை அவர் திரும்ப பெற்றுக்கொண்டார். இந்த நிலையில் தான் 80 வயது கணவரிடமிருந்து விவாகரத்து கோரி நீதிமன்றத்தை அணுகியுள்ளார் அந்த சிறுமி. இந்தசிறுமிக்கு தேவையான சட்ட உதவிகளை அரசு செய்ய உள்ளது.
அரசின் மனித உரிமை ஆணையம் இந்த சிறுமிக்கு வாதாட வழக்கறிஞரை நியமித்து உள்ளது. புரைதா கோர்டில் இந்த வழக்கு விசாரணைக்கு வரஉள்ளது. மனித உரிமை ஆணைய வழக்கறிஞர் அலனாட் அல் ஹெஜைலான் கூறுகையில், எங்களது முக்கிய கவலையே அந்தச் சிறுமியின் உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும் என்பது தான். அது கோர்ட்டின் கையில் இருக்கிறது. இருப்பினும் சிறுமிக்கு ஆதரவாக நாங்கள் நிற்கபோகிறோம். என்கிறார்.

காதலுக்கு ஜே! போட்ட ஆஸ்திரேலியா!

காதல், கற்பு எல்லாம் என்னவோ அது இந்தியர்களுக்கு மட்டுமே என்று தானே நினைத்துக்கொண்டிருந்தோம். வெளிநாட்டினர்கள் எல்லாம் கற்பு, காதல் இவற்றில் எல்லாம் நம்பிக்கை இல்லாதவர்கள் என்று நினைத்த நினைப்பை எல்லாம் பொய்யாக்கும் ஒரு ஆய்வு வந்துள்ளது.
கண்டதும் காதல் எனும் கோட்பாட்டில் ஆஸ்திரேலியர்களுக்கும் அதிக நம்பிக்கை இருப்பது தெரியவந்துள்ளது. ஆஸ்திரேலிய இளைஞர்கள் மத்தியில் சமீபத்தில் காதல் தொடர்பான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் 56 சதவீதம் பேர் உடல்இன்பத்தைவிட, காதல் உணர்வே பெரிது என்று கருது கின்றனர். இதில் 80 சதவீதத்தினர் தங்கள் காதலியை முதன் முதலில் பார்த்த போதே காதல் கொண்டு மயங்கிவிட்டதாக கூறியுள்ளனர். மேலும் பலருக்கு காதல் வாழ்க்கையில் தான் ஒட்டுமொத்த மகிழ்ச்சியும் இருந்தது என்ற எண்ணம் வந்ததாக குறிப்பிடுகின்றனர். காதல் என்றால் மேம்போக்காக நினைக்கும் மேலை நாட்டினர் மத்தியில் ஆஸ்திரேலியாவில் உள்ள இளைஞர்கள் காதலை உயர்வாக எண்ணியிருப்பது ஆச்சரியப்படவைக்கிறது.



புலி ஆண்டில் திருமணத்துக்கு

தடா போட்டிருக்கும் சீனா

மக்கள் தொகையில் மட்டுமல்ல மூட நம்பிக்கையிலும் சீனா முதலிடம். இத்தனைக்கும் அது ஒரு கம்யூனிஸ கொள்கைகளை பின்பற்றும் நாடு வேறு. நம் நாட்டில் பச்சை புடவை பீதி போல சீனாவிலும் ஒரு லேட்டஸ்ட் பீதி கிளம்பியுள்ளது. அந்த பீதியை கிளப்பி கிலி ஏற்படுத்தியிருப்பது புலி ஆண்டு.
சீனா பொருளாதார வளர்ச்சி பெற்றிருந்தாலும், தொடர்ந்து கம்யூனிசனிச ஆட்சி அமைந்தும் கூட மூட நம்பிக்கை மட்டும் ஒழிந்த பாடில்லை. வரும் புத்தாண்டில் திருமணம் செய்து கொள்ள போவதில்லை என்று சீனர்கள் தெரிவித்துள்ளனர். ஏனென்றால் இந்த ஆண்டில் திருமணம் செய்து கொண்டால் கணவருக்கு ஆகாதாம்.
சீனாவில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு விலங்கின் பெயரால் 12 ஆண்டுகள் கொண்டாடப்பட்டு வருகிறது. திருமணம் செய்து கொள்வதற்கு ,வீடுகட்டுவதற்கு குழந்தைப் பெற்றுகொள்வதற்கு என ஒவ்வொரு ஆண்டையும் ராசியாக நினைக்கின்றனர். இந்த நம்பிக்கையில் தான் வரும் 14 தேதி பிறக்க உள்ள புலிஆண்டில் திருமணம் செய்து கொள்ளக்கூடாது. புலி ஆண்டில் திருமணம் செய்து கொண்டால் கணவருக்கு ஆகாது என்று உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றும் நினைக்கின்றனர். அதுவும் இந்த புலியாண்டில் மதியம் நேரத்தில் குழந்தைகள் பிறந்தால் பஞ்சத்தில் கஷ்டப்படும் என்றும் கருதுகின்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக