ஞாயிறு, 16 டிசம்பர், 2012

சுவரா(ஹா)ஸ்யம் பக்கம்---1

சுவரா(ஹா)ஸ்யம் பக்கம் (தினமலர்- சிறுவர் மலரில் 7.9.2012 முதல் நான் எழுதி வரும் தொடர்கட்டுரைகள்) ***************************************************************************************** ***************************************************************************************** இன்று முதல் தோசைக்கு சீனி இல்லை /1/ 7.9.12 ******************** ******************** * ஒரு ஓட்டலில் வழக்கமாக ஒருவர் சாப்பிட்டு வந்தார். அவர் தோசைக்கு சீனி வைத்து சாப்பிடுவார். சீனி விலை ஏற்றம் காரணமாக ஓட்டல்காரர் தோசைக்கு சீனி கொடுப்பதில்லை என்று தீர்மானித்தார். அதை சாப்பிடுவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக‘இன்றுமுதல் தோசைக்கு சீனி இல்லை’ என்று எழுதி வைத்தார். வழக்கமாக சாப்பிட வந்தவர், ஒரு தோசையை சாப்பிட்டுவிட்டு, கொஞ்ச நேரத்தில் ‘சீனி கொண்டு வாங்க’ என்றார். உடனே ஓட்டல்காரர் , ‘அதான் பலகையில் எழுதிப் போட்டிருக்கே. படிக்க தெரியலையா? படிக்கலையா?’ என்றார். அதற்கு சாப்பிட வந்தவர், ‘இது இரண்டாவது தோசை. இதுக்கு சீனி இல்லைன்னு எழுதி வைக்கலையே! கொண்டு வாங்க சீனியை’ என்றார். அவர் வாசித்தது ‘ இன்று, முதல் தோசைக்கு சீனி இல்லை’என்பதாகும். அடுத்த நாள்- இனிமேல் தோசைக்கு சீனி இல்லை என்று போர்டு எழுதி வைத்தார் ஓட்டல்காரர். சாப்பிட வந்தவர். போர்டை படித்தார். சாப்பிட அமர்ந்தார். கொஞ்ச நேரத்தில் ‘தோசைக்கு சீனி கொண்டு வாங்க’ என்றார். ‘அதான் இனிமேல் தோசைக்கு சீனி இல்லைன்னு எழுதியிருக்கே’ என்றார். ‘இனி, மேல் தோசைக்குத்தான் சீனி இல்லைன்னு எழுதியிருக்கு. கீழ் தோசைக்கு சீனி கொண்டு வாங்க’ என்றார். ஓட்டல்காரர் திகைத்தார். மறுநாள்- தோசைக்கு சீனி இல்லை என்று எழுதி வைத்தார். வழக்கமாக சாப்பிட வருபவர் வேறு ஓட்டலுக்குச் சாப்பிட சென்று விட்டார். *** வரவேற்கிறது- வர வேர்க்கிறது *மிக தொலைவில் இருந்து ஒரு பேச்சாளரை பேசுவதற்கு அழைத்திருந்தனர். ஊரின் நுழைவு இடத்தில் ‘திருச்சி வரவேற்கிறது’ என்று வைக்க வேண்டிய விளம்பர பலகையில் ‘திருச்சி வர வேற்கிறது’என்று எழுதி விட்டார்களாம். அதனை வாசித்த பேச்சாளர், ‘திருச்சி வர, வேர்க்கும்தான்‘ என்றாராம். சீனி தின்றால்... * நண்பன் ஒருவன் ‘சீனி தின்றால் இனிக்கும்‘ என்று எழுதினான். உடனே குறும்புகார நண்பன் ஒருவன்‘அதெப்படி, சீனி தின்ன, றால் இனிக்கும்?’ என்று பிரித்து படித்தான். அவன் அர்த்தம் கொண்டது, சீனி தின், றால் இனிக்கும். ******************************************************************************************************** *************************************************************** ************************************************************************************* சுவராஸ்யம்/2/ 14/9/12 சோறு எங்கே விக்கும்? ********************** முன்பு ஒரு காலத்தில் நாகைக்கு வந்திருந்தார் காளமேக புலவர். அவர் பசியால் வாடிப் போய் உட்கார்ந்திருந்தார். அவர் சாப்பாட்டுக்குக் காத்திருந்த காத்தான் சத்திரத்தில் சாப்பாடு தயாராகத் தாமதம் ஆகிக் கொண்டிருந்தது. தெருவில் சிறுவர்கள் பாக்குக் கொட்டையை( கோலி விளையாட்டு) வைத்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். இப்போதைய பசிக்கு சாப்பாடு காசு கொடுத்து வாங்கியாவது சாப்பிட நினைத்தார் காளமேகம். விளையாடிக்கொண்டிருந்த ஒரு சிறுவனை அழைத்து, “தம்பீ, சோறு எங்கப்பா விக்கும்?” என்று பசி மயக்கத்தில் கேட்டார். அந்தச் சிறுவன் சிரித்துக் கொண்டே“சோறு தொண்டைலே விக்கும்” என்று சொல்லிக் கொண்டே மீண்டும் விளையாட ஓடி விட்டான். சிலேடை மன்னன் என்று புகழ் பெற்ற காளமேகத்திற்கு, அந்தச் சிறுவன் சிலேடையாக சொன்ன பதில் வியப்பைத் தந்தது. பசியையே மறந்தார். சமையல் அறை பக்கம் கிடந்த ஒருகரித் துண்டை எடுத்துக்கொண்டு, காத்தான் சத்திரத்தின் சுவற்றில் ‘பாக்குத் தெறித்து விளையாடும் பாலகர் நாவில் தமிழ் தெறிக்கும் திருநாகை’ என்று எழுதினாராம். *உப்புமா குத்துமா? குழந்தைக்கு அதன் அம்மா உப்புமா ஊட்டிக் கொண்டிருந்தார். அந்தப் பழைய உப்புமா குழந்தைக்குப் பிடிக்கவில்லை. அருகில் இருந்தார் கி.வா.ஜ. “உப்புமாவைத் தின்ன முடியலையா? உப்புமா தொண்டையைக் குத்துகிறதா” என குழந்தையை அதட்டினார் அம்மா. கி.வா.ஜ. அந்தப் பழைய உப்புமாவை வாங்கி வாயில் போட்டுக்கொண்டு பார்த்தார். பிறகு, ”ஆமாம். இந்த உப்புமா தொண்டையைக் குத்தத்தான் செய்யும்” என்றார். ஏன் என்று அந்த அம்மா கேட்டார். உப்புமா ‘ஊசி இருக்கிறது’ என்று கூறிச் சிரித்தார் கி.வா.ஜ.! ********************************************************************************************** ************************************************************************* ********************************************************************************************* சுவராஸ்யம்/3/ 21.9.2012 அரசன் ஆனையும் பூனையும் தின்பவன் ******************** அரசனைப் புகழ்ந்து பாடி பரிசு பெறுவதற்காகப் புலவர் ஒருவர் அரசபைக்கு வந்தார். சிம்மாசனத்தில் மன்னர் அமர்ந்திருந்தார். அடுத்து சுற்றில் அமைச்சர்களும், அடுத்தடுத்து சேனாதிபதிகளும் அமர்ந்திருந்தனர். சிம்மாசனத்தில் சிங்கம் போல அமர்ந்திருந்த மன்னன், பாட வந்த புலவரைப் பார்த்து, “ வாரும் புலவரே! இன்பத் தமிழால் இனிய பாடல் பாடுங்கள்! யாமும், அவையோரும் கேட்டு மகிழ்கிறோம்!” என்றார் பூரிப்பாக. புலவர் மன்னரை வணங்கி,“ சீரும் சிறப்புமாக நாடாளும் நம் மன்னர் ஆனையும் தின்பார்; பூனையும் தின்பார்’ என்றார். புலவர் இப்படி சொன்னதும் மன்னருக்கு கோபம் கொப்பளித்தது. மீசை துடித்தது. அவையில் இருந்தவர்களுக்கெல்லாம் அதிர்ச்சி! “நிறுத்தும் புலவரே! இதுதான் ஒரு மன்னவனை புகழ்ந்து பாடும் லட்சணமா?”என்றார் கடும்கோபத்துடன். “ மன்னிக்க வேண்டும் மன்னரே! இது இன்பத் தமிழின் புலமை விளையாட்டு. நீங்கள் தவறாக பொருள் புரிந்துகொண்டீர்கள்! கோபத்தில் இருக்கிறீர்கள்.” என்றார் பணிவுடன் புலவர். “ இப்போது நீங்கள் சொன்னதற்கு வேறு என்ன பொருள் இருக்கிறது. நொடியில் விளக்கம் தராவிட்டால், அடுத்த நொடி உன் தலை இங்கே உருளும்” என்று மன்னர் கர்ஜித்தார். அதற்குப் புலவர், “மன்னா! தாங்கள் ஆ+நெய், அதாவது பசுவின் நெய்யையும், பூ + நெய் அதாவது பூவிலிருந்து கிடைக்கும் தேனையும் உண்பீர்கள் என்றுதான் சொன்னேன். வருந்தற்க”என்றார். புலவர் சொன்ன விளக்கத்தைக்கேட்டு ஆச்சரியமடைந்த மன்னர், புலவரைப் பாராட்டி,பரிசும் கொடுத்து அனுப்பி வைத்தார். வாயிலில் போடுவேன்! கி.வா.ஜகன்நாதனிடம் ஒருவர், “சாப்பிட்ட பிறகு வெற்றிலை போடும் பழக்கம் தங்களுக்கு உண்டா?” என்று கேட்டார். அதற்கு அவர், “ஓ...! உண்டே...! ஆனால் வெற்றிலையை நீங்கள் நினைப்பது போல வாயில் போட மாட்டேன். அதை வாயிலில்தான் போடுவேன்” என்றார். அப்படி அவர் சொன்னதும் அதை கேட்டஅங்கிருந்த அனைவருக்கும் ஒன்றும் புரியவில்லை. விளக்கம் அளித்தார் கி.வா.ஜ. “ சாப்பிட்ட பிறகு வெற்றிலையை அதாவது வெறும் இலையை வாயிலில் உள்ள குப்பைத் தொட்டியில்தானே போட வேண்டும்?” என்று கூறி அனைவரையும் சிரிக்க வைத்தார். *********************************************************************************************** ********************************************************************** ************************************************************************************************** சுவாரஸ்யம் 4/ 28.9.2012/ வேம்பும் அரசும் ******************** ராமநாதபுரம் சேதுபதி மன்னரின் சபையில் ஒருநாள் தமிழ்ப் புலவர் சபை கூடியிருந்தது. எல்லாப் பகுதிகளில் இருந்தும் புலவர்கள் வந்திருந்தனர். மன்னரும் சபைக்கு வந்து அமர்ந்தார். சபை தொடங்குவதற்குமுன் தாமதமாக வேம்பத்துõரைச் சேர்ந்த ‘வெண்பா பாடுவதில் புலி’ என்று அழைக்கப்பட்ட பிச்சு புலவர் வந்து சேர்ந்தார். அவரைப் பார்த்த மன்னர் சிலேடையாக, “வேம்புக்கு இங்கு இடமில்லை” என்றாராம். ’வேம்பு’ என்றால் கசப்பு. இந்த இனிய சபையில் கசப்புக்கு இடமில்லை என்றும், வேம்பத்துõரைச் சேர்ந்த உமக்கு இடமில்லை என்றும் இருபொருள் கொள்ளலாம். புலவர் சற்றும் தயங்காது வெகுவேகமாக வந்து மன்னரின் சிம்மாசனத்தின் அருகிலிருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டு, “வேம்பு அரசோடுதான் இருக்கும்” என்றாராம். அதாவது வேம்பு என்று தன்னை மன்னன் சொன்னதும், அரசனும், வேம்பாகிய தானும் சேர்ந்தே இருப்போம் என்றும், வேப்ப மரமும், அரச மரமும் சேர்ந்து இருந்தால் அது கோயிலாகும் என்றும் இருபொருள்படக் கூறினாராம். சபையே வியந்து சிரிக்க, மன்னரும் சிரித்து மகிழ்ந்தாராம். சாகையில பார்... ஓர் ஊரில் இனிமையாக பாடுவதில் வல்லமை பெற்ற ஒரு புலவர் இருந்தார். அவர் பாடலைக் கேட்க அந்த ஊர் மக்கள் எப்போதுமே விரும்புவார்கள். ஒரு நாள் காலை அந்தப்புலவர் கடைத் தெருவுக்கு வந்துகொண்டிருந்தார். அவர் பாடும் இனிமைபற்றி பக்கத்து ஊர்க்காரருக்கு சொல்லிக்கொண்டிருந்தார் அந்த ஊர் ஆசாமி. பக்கத்து ஊர்க்காரர் சரியான கிண்டல் பேர் வழி. சும்மா இருப்பாரா? பாடகரை உசுப்பேத்த நினைத்தார். புலவரிடம் ஓடிச்சென்று, அவருக்கு வணக்கம் சொல்லி, “ஐயா, புலவரே, நீங்கள் நல்லா பாடுவீங்களாமே! நான் உங்களைப் ‘பாடையில’ பார்க்கணும்” என்றான் குசும்பாக. அதாவது பாடும்போது பார்க்க வேண்டும்’ என்பதை அப்படிச் சொல்லியிருக்கிறான். புலவருக்கு பக்கத்து ஊர்காரரின் நக்கல் புரிந்தது. புலவரும் அசராமல், ”அப்ப, சாகையில வந்து பார்” என்றார். அதாவது’சாகை’ (ஜாகை) என்பது இருப்பிடத்தைக் குறிக்கும். வீட்டில் வந்து பார் என்பதை இப்படி அழகாக சிலேடையில் கூறினார் புலவர். நையாண்டி செய்த ஆசாமி திகைத்து நின்றார்! ********************************************************************************************************** ********************************************************** ***************************************************************************************************** கடைமடையர் /5/ 5.10.2012 *********************** ஒரு மடாதிபதி தமிழ்ப் புலவர்களை எல்லாம் அழைத்து விருந்து ஒன்று வைத்தாராம். எல்லா ஊர்களில் இருந்தும் புலவர்கள் வந்து அந்த விருந்தில் அமர்ந்தனர். ஸ்ரீவைகுண்டம் என்ற ஊருக்குப் பக்கத்தில் கடைமடை என்ற ஊர் இன்றைக்கும் இருக்கிறது. அவ்வூரைச் சேர்ந்த புலவர் ஒருவர் விருந்திற்கு மிகத் தாமதமாக வந்து சேர்ந்தார். மிக தாமதமாக வந்திருக்கு அந்தப் புலவரை, வரவேற்கும் விதமாக, “வாரும் கடைமடையரே!’ என இருபொருள்பட மடாதிபதி அழைத்தாராம். கடைமடை என்ற ஊரைச் சேர்ந்தவரே என்பது ஒரு பொருள். கடைசியாக வந்த மடையரே என்பது மற்றொரு பொருள். அந்தப் புலவரும் சாதாரண ஆள் இல்லை. பெரிய குறும்பர். விடுவாரா, என்ன? அவரும் பதிலுக்கு, “வந்தேன் மடத்தலைவரே...” என்றாராம் சிரித்தப்படி. இதற்கு மடத்திற்குத் தலைவரே என்பது ஒரு பொருள். மடையர்களுக்கெல்லாம் தலைவரே என்பது மற்றொரு பொருள். ** பையனாக... கி.வா.ஜகநாதன் நல்ல தமிழ் அறிஞர். நகைச்சுவையாக பேசுவதில் வல்லவர். ஒரு முறை அவரை ஒரு ஊரில் நடந்த கூட்டம் ஒன்றிற்கு தலைமை தாங்க அழைத்திருந்தனர். கி.வா.ஜ அவர்கள் அதற்கு சம்மதித்து, அந்த ஊருக்குச் சென்று, சிறப்பாக கூட்டத்தை நடத்திக் கொடுத்தார். கூட்டம் முடிந்த பின், அந்த ஊர்காரர்கள் அவருக்கு கொஞ்சம் பழங்களையும், பிஸ்கட்டுகளையும் ஒரு பையில் போட்டு அவரிடம் அன்பளிப்பாக கொடுத்தனர். அந்தப் பையைப் பெற்றுக் கொண்ட கி.வா.ஜ அவர்கள் “ இந்த ஊருக்கு வரும்போது என்னைத் ’தலைவனாக’த் தலைமை தாங்க அழைத்து கவுரவித்தீர்கள். இப்போது புறப்படும்போது அன்பளிப்பு பையைக் கொடுத்து ’பையனாக‘ அனுப்புகிறீர்களே?’ என்றார். அவரின் சிலேடை நகைச்சுவையை கேட்டு அங்கிருந்த அனைவரும் ரசித்தனர்; வாய்விட்டுச் சிரித்தனர். ******************************************************************************************************** *********************************************** ******************************************************************************************************* சுவார(ஹா)ஸ்யம் /6/ 12.10.2012/ வேட்டி அவுருதுங்க! ************************* திருப்பூர் கிருஷ்ணன் எழுத்தாளர்; பேச்சாளர்; பத்திரிகையாளர். அவர் ஒருமுறை ஜவுளிகடைக்குச் சென்று ஜவுளி எடுத்தபோது, கடையில் நடந்த நகைச்சுவை சம்பவம் இது. திருப்பூர் கிருஷ்ணன், காதியில் தள்ளுபடியுடன் கதர் வேட்டி எடுக்கச் சென்றார். கடையில் கூட்டம். பலரும் கதர் வேட்டி வாங்க வந்திருந்தனர். வெவ்வேறு நிறங்களில் கறையிட்ட ஐந்து வேட்டிகளைத் தேர்ந்தெடுத்தார் திருப்பூர் கிருஷ்ணன். அந்த வேட்டிகளை ஒரு கட்டாக கட்டினார் ஓர் ஊழியர். இன்னொரு நபரும் ஐந்து கதர் வேட்டிகளைத் தேர்ந்தெடுத்தார். அதையும் ஒரு கட்டாக கட்டினார் ஊழியர். பணம் செலுத்தும் இடத்தில் பணத்தைச் செலுத்திவிட்டு, தமக்குரிய வேட்டி கட்டுகளை எடுக்க வந்தார் திருப்பூர் கிருஷ்ணன். ஒரே அளவான இரு வேட்டி கட்டுகள் இருந்ததால், திருப்பூர் கிருஷ்ணனின் கட்டினை இன்னொரு நபர் எடுக்கச் சென்றார். அதைப் பார்த்த ஊழியர் பதட்டத்தில் “ வேட்டி அவுருதுங்க” என்றார். அதற்கு அந்த நபர், “அடடா, இன்று பெல்ட் சரியாகப் போடவில்லை!” எனச் சரி செய்யத் தொடங்கினார். பிறகு தான், தான் எடுத்த வேட்டிக்கட்டு திருப்பூர் கிருஷ்ணனுடையது என விளங்கிக்கொண்டார். ** தையலுக்கு உதவும்! - ஒரு புலவரின் மனைவி ஒரு நாள் வடை செய்தார். புலவரும் மனைவியும் சாப்பிட்ட பிறகு சில வடைகள் மீதி இருந்தன. மறுநாள் காலை புலவரின் மனைவி, அந்த வடைகளை புலவரிடம் சாப்பிடக் கொடுத்தார். முந்தைய தினம் செய்த வடை என்பதாலும் கோடை காலம் என்பதாலும் வடைகள் ஊசிப் போயிருந்தன. புலவர் வடையை பிய்த்தார். ஊசிய வடையாக இருந்ததால் உள்ளே இருந்து நுõல் நுõலாக வந்தது. “இந்தா, வடை. ஊசிப் போய்விட்டது” என்று சொல்லியபடியே மனைவியிடம் அவற்றைக் கொடுக்க வந்தார். “ஊசிப் போய்விட்டால் குப்பையில் போடுங்கள். ஏன் என்னிடம் கொடுக்கிறீர்கள்?” என்று சற்று கோபமாகக் கேட்டாள். புலவர் சிரித்தபடி சொன்னார். “வடை ஊசிப் போனதால், நுõல் வந்தது. ஊசியும், நுõலும் இருப்பதால் அவை தையலுக்கு உபயோகப்படுமே என்று உன்னிடத்தில் கொடுத்தேன்” என்றார்! ******************************************************************************************************* ********************************************************************* ****************************************************************************************************** சுவார(ஹா)ஸ்யம்/7/ 19.10.2012 விலை உயர்ந்த பொருள் ************************* உலகின் மிகப்பெரிய தத்துவ ஞானி எனப் போற்றப்பட்டவர் ரஸ்ஸல் பெர்னாட். அவர் வெளிநாட்டுப் பயணம் முடித்து தாய்நாடு திரும்பினார். அங்கு விமான நிலைய அதிகாரிகள் அவரைச் சோதனையிட்டனர். “உங்களிடம் இருக்கக் கூடிய விலைமதிப்பு உள்ள பொருட்கள் என்ன? அதையெல்லாம் வெளியே எடுத்துக் காட்டி விடுங்கள்.” என்று விமான நிலைய அதிகாரிகள் கண்டிப்பான குரலில் கேட்டனர். ரஸ்ஸல் பொறுமையாக, “என்னிடம் விலைஉயர்ந்த பொருள் ஒன்று மட்டும்தான் உள்ளது. அதை வெளியில் எடுக்கவோ, உங்களிடம் காட்டவோ முடியாது” என்றார். அதிகாரிகளுக்கு கோபம் வந்தது. “நீங்கள் எடுத்துக் காண்பிக்காவிட்டால் நாங்கள் பறிமுதல் செய்ய நேரிடும். அப்பொழுது மிகவும் வருத்தப்படுவீர்கள்” என்று எச்சரித்தனர். ரஸ்ஸல் புன்னகையுடன், “என்னிடம் உள்ள விலையுயர்ந்த பொருள் என்னுடைய அறிவுதான். அதைத் தாங்கள் எப்படி பறிமுதல் செய்ய முடியும்?” என்று கேட்டார். அப்போது அங்கு வந்த சிலர், “இவர் நம்நாட்டு தத்துவஞானி ரஸ்ஸல் பெர்னாட்” என்றனர். உடனே விமான நிலைய அதிகாரிகள், “அய்யா, எங்களை மன்னித்து விடுங்கள். நீங்கள் போகலாம்” என்று அவரை வழியனுப்பி வைத்தனர். *** அண்டம் காக்கைக்கு... அதிவீரராம பாண்டியனும் வரதுங்கப் பாண்டியனும் சகோதரர்கள். இருவரும் புலவர்கள். புரவலர்கள். அவர்களைப் பற்றிப் புகழ்ந்து பாட ஒரு புலவர் வந்தார். வந்தவர் இருவர்களையும் பார்த்து, “அண்டம் காக்கைக்கு ஜனித்தவர்கள்”என்று பாட ஆரம்பித்தார். அதிவீரராம பாண்டியனுக்கும் வரதுங்கப் பாண்டியனுக்கும் வந்தது கோபம். இருவரும் கறுநிறம் கொண்டவர்கள். நாம் கறுப்பாக இருப்பதால் தான் புலவர் நம்மை காக்கை என்று பாடுகிறாரோ என எண்ணி கோபம் அடைந்தார். அவர்கள் அடைந்த கோபத்தைப் பார்த்து,புலவர் சொன்னார், “ நீங்கள் இருவரும் உலகத்தைக் காக்கவே பிறந்தவர்கள். அதனால் தான் “அண்டம் காக்க ஜனித்தவர்கள் எனப் பாடினேன்” என்று விளக்கம் கொடுத்தார். **************************************************************************************************** **************************** ********************************************************************************************************** நா நுõறு பொற்காசு தருகிறேன்!/8/ 26.10.12/ *********************** ஒரு புலவர் மன்னனைப் புகழ்ந்து பாடினார். புலவர் பாடலில் மனம் மகிழ்ந்தார் மன்னர். தன்னைப் புகழ்ந்து பாடிய புலவருக்கு நுõறு பொற்காசுகள் பரிசாக வழங்க முடிவு செய்தார் மன்னர். “ யாரங்கே, கஜானாவில் இருந்து நுõறு பொற்காசுகளை எடுத்து வா” என்று உத்தரவிட்டார். பிறகு, புலவர் பக்கம் திரும்பி, “ புலவரே,கொஞ்சம் இரு, நான் நுõறு பொற்காசுகள் உனக்குப் பரிசளிக்கிறேன்” என்றார். சேவகர்கள் தங்கத் தட்டில் நுõறு பொற்காசுகளை எடுத்து வந்தனர். அதை வாங்கி, அப்படியே புலவரிடம் கொடுத்தார் மன்னர். அதைப் பார்த்த புலவர், “மன்னா, தாங்கள் இப்போது தானே இருநுõறு பொற்காசு தருகிறேன் என்றீர்களே?” என்றார். மன்னரும் இரு என்பதை இருநுõறு என்று நினைத்துவிட்டாரோ என நினைத்து இரு நுõறு பொற்காசுகளை கொண்டு வந்தார். உடனே புலவர், “மன்னா, முன்னுõறு தருகிறேன் என்றீர்களே? அதையே கொடுங்கள்” என்றார். மன்னரும் சிரித்தப்படி முன்னுõறு பொற்காசுகளை கொண்டு வந்தார். மறுபடியும் புலவர், “ மன்னா, நானுõறு தருகிறேன் என்றீர்களே? அதையும் கூடவா மறந்து விட்டீர்கள்” என்றார். மன்னருக்கு ஒன்றும் புரியவில்லை. புலவர் ஏதோ நம்மிடம் வார்த்தை விளையாட்டு விளையாடுகிறார் என்று எண்ணி, அவர் கேட்ட நானுõறு பொற்காசுகளை கொண்டு வந்தார். நானுõறு பொற்காசுகளை புலவரிடம் கொடுத்த மன்னர் அவரிடம், “புலவரே, ஏன் இப்படி மாற்றி, மாற்றி கேட்டீர்கள். நான் எங்கே அப்படி எல்லாம் சொன்னேன்” என்று மன்னர் கேட்டார். புலவர் விளக்கினார். “நீங்கள் இரு, நுõறு பொற்காசுகள் கொண்டு வருகிறேன் என்றீர்கள். மறந்தீர்களா?” “ ஆமாம். கொஞ்சம் இரு என்ற பொருளில் அதைச் சொன்னேன்.” என்றார். உடனே புலவர் ,“இப்படிதான், இரு, நுõறு தருகிறேன் என்றீர்கள். முன்னால் நுõறு தானே தருவேன் என்றீர்கள். அதை முன்னுõறு என்று சொன்னேன். அடுத்து நான் நுõறு தருவேன் என்றீர்கள். நான் அதை நாநுõறு என்று நினைத்து கேட்டேன். இதுதான் நடந்தது.” என்று புரியும்படி சொன்னார். புலவரின் வார்த்தை விளையாட்டை பாராட்டி, அவருக்கு கை நிறைய பொற்காசுகளைக் கொடுத்து அனுப்பி வைத்தார் மன்னர். ******************************************************************************************************* *********************************************************************** ******************************************************************************************************** சுவாரஸ்யம்/9/ கன்னா பின்னா பாராட்டு! 2/11/12 ********************** வறுமையில் இருந்த ஒரு புலவர் அரசனைப் பாடிப் பரிசு பெற விரும்பினார். ஏற்கெனவே அரசனைப்பாடி பரிசு பெற்ற புலவரிடம் எப்படி பாடினால் அதிக பரிசு கிடைக்கும் என்று டிப்ஸ் கேட்டார். பரிசு பெற்ற புலவரோ கடுப்பாகி, “எதையாவது கன்னா பின்னா என்று பாடு” என்று சொன்னார். விவரம் தெரியாத அந்த புலவரோ அரசனைப்பார்க்கச் சென்றார். செல்லும் வழியில் ஒரு காகம் கரைந்து கொண்டிருந்தது. அதைப்பார்த்து ‘காவிறையே‘ என்றான். இன்னும் கொஞ்சம் துõரம் சென்றபோது, குயில் கூவும் குரல் கேட்டது. அதைப்பார்த்துக் ‘கூவிறையே‘ என்றான். ஓரிடத்தில் சோழ மன்னனின் தகப்பனால் கட்டப்பட்ட கோயில் ஒன்றிலிருந்து எலியொன்று வெளியே ஓடியது. அதைக் கண்டதும் ‘உங்களப்பன் கோயிலில் பெருச்சாளி‘ என்று சொலிக்கொண்டு அரசவையை அடைந்தார். அரசனையும் ஏனையோரையும் வணங்கினார், அரசரும் பாடச் சொன்னார். உடனே புலவர்‘காவிறையே கூவிறையே உங்களப்பன்கோயிலில் பெருச்சாளி கன்னா பின்னா தென்னா மன்னாசோழமங்கப் பெருமானே.’ என்று பாடினார் புலவர். பாடலைக் கேட்டு சபையேர் சிரிக்க அரசனுக்குக் கோபம் வந்தது. புலவரை சிரச்சேதம் செய்ய ஆணையிட்டார். புலவர் மேல் பரிதாபப்பட்டு, சபையிலிருந்த கம்பர் அவர் சரியாகத்தான் பாடியுள்ளார் என்று விளக்கம் சொன்னார். காவிறையே ‘கா’ என்றால் ஆகாயம். அங்கு இறைவனாக அரசனாக இருப்பவன் இந்திரன். ‘கூ‘ என்றால் பூமி. பூமிக்கு அதிபதியானவனே. உன் தந்தையானவர் ‘கோ’ அரசன். அவர் இந்திரன் போன்று வில்வித்தையில் சிறந்த பெருமைமிக்க தேர்ச்சியுடையவர். ‘உங்களப்பன் கோயிலில் பெருச்சாளி‘ ‘கன்னா‘ கொடையிற் சிறந்தவன் (கர்ணன்) ‘பின்னா’ கண்ணனுக்குப் பின் பிறந்தவன் ‘தர்மன்‘. இவ்வாறு கொடை வழங்குவதில் கர்ணணுக்கும் அறசெயல்களில் தர்மனுக்கும் இணையாணவர் எங்கள் சோழ மன்னன் என்று பாடலுக்குப் பொருள் கூறினார். சோழமன்னன் மகிழ்ந்து அந்த ஏழைப் புலவருக்கு பரிசு வழங்கி பாராட்டினான். ****************************************** ******************** *************************************** ******************************************** சுவாரஸ்யம்/10/ விடிய விடிய சமைத்த உணவு/9.11.12 ********************** நாகைப்பட்டினத்தில் காத்தான்வருணகுலாதித்தன் என்பவர் தர்ம அன்னசத்திரம் நடத்தி வந்தார். அந்த வழியாய் வந்த காளமேகம் பசி தீர்க்க, மாலை இருட்டும் நேரத்துக்கு நுழைந்தார். சத்திரத்து நிர்வாகி அவரை வரவேற்று,‘கொஞ்சம் பொறுங்கள், சாப்பாடு தயாரானதும் அழைக்கிறேன்‘ என்றார். வெகு நேரம் காத்திருந்தும் கூப்பிடுவதாய் இல்லை. காளமேகத்துக்கோ அகோரப்பசி. பொறுமை இழந்து சத்தம் போட்டார். உடனே,‘ நிர்வாகி ‘இதோ ஆயிற்று; கொஞ்சம் பொறுங்கள்’என்று அமைதிப் படுத்தினார். நேரமானது. சாப்பாடு தாயாராகவில்லை. பசி அதிகமாகி காளமேகத்துக்கு கோபம் வந்தது. அப்போதுதான் அவரை சாப்பிட அழைத்தனர். காளமேகம் ‘என்னய்யா சத்திரம் நடத்துகிறீர்கள்? சாப்பிட வந்தவன் என்றால் அவ்வளவு இளக்காரமா?’என்று கத்தினார். அதற்கு நிர்வாகி ‘கொஞ்சம் தாமதம் ஆகிவிட்டது’ என்றார். ‘கொஞ்சம் தாமதமா? பொழுது விடிந்து விடும் போல இருக்கிறதே!’ என்றறு நக்கல் பண்ணி ஒரு பாடல் பாடினார். ‘ஒலிக்கும் கடல்சூழ்ந்த நாகைப் பட்டினத்துக் ’காத்தான்’ என்பவனது சத்திரத்தில் சூரியன் அஸ்தமிக்கும் நேரத்தில்தான் சமைப்பதற்கு அரிசி வந்திறங்கும்; அரிசியைக் களைந்து உலையிலே இடும்போதோ ஊர் அரவம் அடங்கி நள்ளிரவு ஆகிவிடும். சோறு தயாராகி, வந்தவர்க்கு ஒரு அகப்பைச் சோற்றை இலையில் இடும்போது வெள்ளி நட்சத்திரம் தோன்றுகிற விடியற்காலம் தோன்றிவிடும்.’ என்று பாடி முடித்தார். பாடலைக் கேட்ட நிர்வாகி, பயந்தார். வந்திருப்பது கவி காளமேகம் என்று தெரிந்து விட்டது. காளமேகத்திடம் தன்னைப் பொறுத்தருளுமாறு வேண்டினார். ‘தங்கள் பாடலால் என் சத்திரத்துப் பெயர் கெட்டுப்போகும்; தயவுசெய்து மாற்றிப் பாட வேண்டும்‘ என்று கேட்டுக் கொண்டார். அதற்குள் சாப்பிட்டுப் பசி தணிந்த காளமேகம், ‘மாற்றிப் பாட வேண்டியதில்லை; இதையே பாராட்டாகக் கொள்ளலாம்’ என்றவர், ‘காத்தானது சத்திரத்தில் அத்தமிக்கும் போதில் - அதாவது பஞ்ச காலத்தில் அரிசி மூட்டை மூட்டையாய் வந்திறங்கும். ஊரே அங்கு இடும் உணவை உண்டு பசி அடங்கும். இலையில் விழும் ஒரு அகப்பை அன்னம் வெள்ளி நட்சத்திரம் போலப் பளீரென்று வெண்மையாக இருக்கும்’. என்றார் காளமேகம். ****************************************** ********************* ***************************************** ******************************************* சுவாரஸ்யம்/11/ 16.11.2012/ நான் பெருமாளைவிட பெரியவன்! காளமேக புலவர் சரியான கிண்டல் பேர்வழி. சிலேடையாக பேசுவதில் வல்லவர். தான் பெருமாளைவிட பெரியவன் என்று குசும்பு செய்த சம்பவம் இது. இடம் திருக்கண்ணபுரம். ஒருமுறை காளமேகம் திருக்கண்ணபுரம் வழியே போய்க் கொண்டிருந்தார். அது மழைக்காலம். திடீரென்று கனமழை பிடித்துக் கொண்டது. ஒதுங்க இடம் பார்த்தார். அருகில் பெருமாள் கோயில் தென்பட்டது. மழைக்கு ஒதுங்க அங்கே ஓடியபோது, அங்கிருந்த வைணவர்கள் உள்ளே வரக் கூடாது என்று தடுத்தனர். காரணம் காளமேகம் தீவிர சிவபக்தர். அதோடு வைணவர்களின் எதிரியும் கூட. சிவனைப் பற்றி ஏராளமாகப் பாடி உள்ளாரே தவிர, பெருமாளைப் பற்றிப் பாடாதவர்; பாட மறுப்பவர். இந்த சந்தர்ப்ப சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு வைணவர்கள், ‘எங்கள் பெருமாளை, நீ வணங்கும் சிவனை விட உயர்த்தவர் என்று பாடினால் உள்ளே விடுவோம்’என்றனர். உடனே, ‘சரி, உங்கள் பெருமாளைத்தானே உயர்த்திப் பாட வேண்டும்? என்று சொல்லி ‘கன்னபுர மாலே கடவுளிலும் நீ அதிகம்’என்று முதலடியைப் பாடினான்ர். தடுத்த வைணவர்கள் இப்போது மகிழ்ந்து காளமேகத்தை உள்ளே விட்டார்கள். மண்டபத்துக்குள் நுழைந்துவர், துணியைப் பிழிந்து துடைத்துக் கொண்டு, ‘என்ன சொன்னேன்? என் கடவுளை விட உங்கள் கடவுள் அதிகம் என்றா சொன்னேன்? அடுத்துக் கேளுங்கள். ‘கன்னபுர மாலே கடவுளிலும் நீ அதிகம்; உன்னை விட நான் அதிகம்’ என்று சொல்லி நிறுத்தினார். வைணவர்கள் திகைத்தனர். ‘அதெப்படி?’ என்றார்கள். ‘ஒன்று கேள்- உன் பிறப்போ பத்தாம், உயர் சிவனுக்கு ஒன்றுமில்லை, என் பிறப்போ எண்ணத் தொலையாதே‘ என்று புதிரை விடுவித்தார். அதாவது, சிவன் தன் பக்தர்களை ரட்சிக்க பிறவி ஏதும் எடுத்ததில்லை. ஆனால், பெருமாளோ பத்து அவதாரம் எடுத்தார். அந்த வகையில் சிவனை விடப் பெருமாள் அதிகம். ஆனால் மனிதனான எனக்கு எண்ண முடியாத பிறவிகள். இதில் நான் பெருமாளை விட அதிகம். இல்லையா?’ என்று விளக்கம் சொன்னார். அவர் பாடிய பாடல் இதோ: கன்னபுர மாலே கடவுளிலும் நீ அதிகம் உன்னை விட நான் அதிகம்- ஒன்று கேள் உன் பிறப்போ பத்தாம்உயர் சிவனுக்கு ஒன்றுமில்லை என் பிறப்போ எண்ணத் தொலையாதே. **************************************** ********************************** ************************************** ************************************** சொல்லின் செல்லாதவர்!/12/ 23.11.12 ***************************** கிருபானந்த வாரியார் பேச்சை கி.வா.ஜ. ரசித்து கேட்பதுண்டு. அதுபோல் கி.வா.ஜ.வின் சிலேடை பேச்சுகளை வாரியார் ரசிப்பதுண்டு. ஒருமுறை வாரியாரின் சொற்பொழிவைக் கேட்க வந்திருந்தார் கி.வா.ஜ. கடைசிவரை இருந்துகேட்டு விட்டுப் போகுமாறு வாரியார் கேட்டுக்கொண்டார். “இயன்றவரை கேட்கிறேன். எனக்கு பல பணி உள்ளது. இறுதிவரை இருக்க இயலுமா தெரியவில்லை” என்று சொல்லிவிட்டு கி.வா.ஜ. சொற்பொழிவு கேட்க அமர்ந்தார். சிலேடை மன்னரைப்பார்த்ததும் வாரியாருக்கும் சிலேடைத் தமிழில் பேச உற்சாகம் ஏற்பட்டது. ராமாயணத்தின் இறுதிப் பகுதியை எடுத்துக் கூறிய வாரியார், பல சிலேடை வாக்கியங்களை இடையிடையே உதிர்த்தார். வாரியாரின் சிலேடைப் பேச்சில் தன்னை மறந்து, தன்பணிகளை மறந்து இறுதிவரை வாரியார் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்தார் கி.வா.ஜ. கூட்டம் முடிந்ததும் கி.வா.ஜ. விடம் சென்று “கடைசிவரை இருந்து கேட்டீர்களே” என்று வாரியார் நன்றி சொன்னார். அதற்கு அவர், “உங்கள் சொற்பொழிவு அருந் தேன்(அருமையான தேன்). அதை அருந்தேன்( அருந்த மாட்டேன்) என்று எவன் சொல்வான்? அருந்தவே( பருகவே) இருந்தேன். நீங்கள் சொல்லின் செல்வர்” என்று வாரியாரைப் பாராட்டினார் கி.வா.ஜ. உடனே வாரியர், “சொல்லின் செல்வர் நான் அல்ல. அது அனுமனுக்கு உரிய பட்டமல்லவா?” என்றார். “உண்மை தான். நீங்கள் சொல்லின் செல்வர் அல்ல. நீங்கள் சொல்லின் எல்லாரும் செல்லாமல் இருந்தல்லவா கேட்கிறோம்!” என்றார் கி.வா.ஜ. * ஏபிசிடி... ஸ்டாப்! அண்ணா அமெரிக்காவில் உள்ள யேல் பல்கலைக்கழகத்திற்குச் சென்றிருந்தார். அங்குள்ள மாணவர்களிடம் உரையாடினார். உரையாடலின் இடையே ஒரு மாணவர் எழுந்து, “தாங்கள் ஆங்கிலத்திலும் வல்லவராமே! ஆங்கில எழுத்துகளான ‘அ,ஆ,இ,ஈ’ எழுத்துகள் வராத நுõறு வார்த்தைகளைக் கூற முடியுமா?” எனக் கேட்டார். உடனடியாக அண்ணா, ஒன்று முதல் தொண்ணுõற்று ஒன்பது வரையிலான எண்களை ஆங்கிலத்தில் சொல்லி கொண்டு வந்தார். நுõற்றை ஆங்கிலத்தில் சொன்னால் அதில் ’ஈ’ என்னும் எழுத்து வந்து விடும் என எல்லாரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், அண்ணா, ’குகூOக’ எனக் கூறி நிறைவு செய்தார். *** ***************** *************************************************************************************** *********************************************************** ********************************************************************************************************** சுவாரஸ்யம்/13/ 30.11.12/ ஐந்துதலை நாகம் குத்தினால்... இரு புலவர்கள் ஒரு காட்டுப் பாதையின் வழியே சென்றுகொண்டிருந்தனர். நடந்து கொண்டிருந்த ஒரு புலவர் காலில் நெருஞ்சி முள் ஒன்று குத்தியது. அவர் குனிந்து அதைப் பிடுங்கி எறிந்தார். நெருஞ்சி முள்ளுக்கு ஐந்து தலை நாகம் என்று ஒரு வழக்குப் பெயர் உண்டு. உடனே அவர்‘ஐந்து தலை நாகம் ஒன்று என் காலைக் குத்தியது. என்ன செய்ய?’ என்றார். அதற்கு அடுத்தவர்,‘பத்துரதன் புத்திரனின் மித்திரனின் சத்துருவின் பத்தினியின் காலை எடுத்துத் தேய் சரியாகிவிடும்’என்றார். அதாவது பத்துரதன் என்றால் தசரதன். தசரதனின் புத்திரன் என்றால் ராமன். ராமனின் மித்திரன்(நண்பன்) என்றால் சுக்ரீவன். சுக்ரீவனின் சத்துரு(எதிரி) என்றால் வாலி. வாலியின் பத்தினி(மனைவி) என்றால் தாரை. தாரையின் கால் எடுத்து என்றால் தாரை என்ற சொல்லில் உள்ள கால் (õ) நீக்குவது. இந்த வாசகத்தின் பொருள், தசரதனின் மகனான ராமனின் நண்பன் சுக்ரீவன். அவன் எதிரி வாலி. வாலியின் மனைவி தாரை. அந்தத் தாரை என்ற சொல்லில் உள்ள காலை நீக்கினால் தரை. முள் குத்திய காலைத் தரையில் தேய் என்பது பொருள். ** ஐ நோ யுனோ! அண்ணாவைப் பார்க்க இங்கிலாந்தைச் சேர்ந்த செய்தியாளர் ஒருவர் வந்திருந்தார். அண்ணாவுக்கு ஆங்கிலத்திலும் உலகச் செய்திகளிலும் வல்லவர் இல்லை; பன்னாட்டு அவை‘க்NO’பற்றி அவருக்கு ஒன்றும் தெரியாது’ என்று நினைத்தார். அண்ணாவை எப்படியாவது கேள்வியில் மடக்கி விட வேண்டும் என நினைத்துக்கொண்டு ‘பன்னாட்டு அவை(யுநோ)யைப் பற்றித் தங்களுக்குத் தெரியுமா?’ என்று கேள்வி கேட்டார். அதற்கு அண்ணா கொஞ்சம் கூட தாமதிக்காமல்,‘ஐ நோ யுனோ. ஐ நோ யு நோ யுனோ. பட் யு டோன்ட் நோ ஐ நோ யுனோ.“ஐ டுணணிதீ க்NO. ஐ டுணணிதீ – தூணித டுணணிதீ க்NO. ஆதt தூணித ஞீணிண’t டுணணிதீ ஐ டுணணிதீ க்NO” என்று சரவெடியாக வெடித்தார். அண்ணாவின் பதிலைக்கேட்டு, அதிர்ந்த அந்த செய்தியாளர் தன்னுடைய தவறாண கணிப்பை நினைத்து தலைகவிழ்ந்து நின்றார். ** ********************************************************************************************************* ******************************************************* ****************************************************************************************************** காக்கையும் இந்தியும்/14/ 7.12.12/ அப்பொழுதுஅண்ணா தமிழகத்தில் முதலமைச்சராக இருந்த காலகட்டம். அப்பொழுதுதான் இந்திக்கு எதிராக பல எதிர்ப்புப் போராட்டங்கள் தமிழகத்திலும் இந்தியாவிலும் நடந்து கொண்டிருந்தன. ஒருவழியாக இந்தி ஆட்சி மொழியாக ஏற்றுகொள்ள முடியாது என்று புறக்கணித்து அதைப் பற்றிய பேச்சே வேண்டாம் என்று இந்திய அரசு முற்றுப்புள்ளி வைத்திருந்தது. அப்பொழுது அண்ணா டில்லிக்கு ஒரு பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்ள சென்றிருந்தார். அனைவரும் பேசி முடித்தப் பிறகு அண்ணாவை பேச அழைத்தார்கள். அப்பொழுது அந்தக் கூட்டத்தில் இந்தி மொழிக்கு ஆதரவான பல ஊடகங்கள் குவிக்கப்பட்டு இருந்ததாம். அப்பொழுது பேசத் தொடங்கிய அண்ணாவிடம், ஒரு பத்திரிக்கையாளர் எழுந்து, “நீங்கள் இந்தக் கூட்டத்தில் பேசுவதை விட எங்களின் கேள்விகளுக்கு பதில் கொடுத்தால் நன்றாக இருக்கும்’ என்று கேட்டு இருக்கிறார். அதற்கு எதுவும் மறுப்பு சொல்லாமல் அண்ணாவும் பதில் அளிக்க சம்மதித்து இருக்கிறார். அப்பொழுது அந்த பத்திரிகையாளர் “நீங்கள் எதற்கு இந்தியை ஆட்சி மொழியாககூடாது என்று மறுக்கிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு அண்ணா “நீங்கள் எதற்கு இந்தியை ஆட்சி மொழியாகவேண்டும் என்று எண்ணுகிறீர்கள்.?” என்று திருப்பி கேள்வி எழுப்பி இருக்கிறார். அதற்கு பத்திரிக்கையாளரோ “இது ஒரு பொதுவுடமையான நாடு. இங்கு யாருக்கு அதிக பெரும்பான்மை இருக்கிறதோ, அவர்களுக்குத் தான் முன்னுரிமை. அந்த வகையில் இந்தியாவில் அதிகமான மக்கள் பேசும் மொழி இந்திதானே! அப்படியென்றால் இந்திதானே தேசிய மொழி?” என்றுக் கேட்டு இருக்கிறார். அப்படி அவர் சொன்னதும் அண்ணாவோ சிறிதும் தயங்காமல் “நீங்கள் சொல்வதுபோலப் பார்த்தால் நமது இந்தியாவில் மயில்களின் எண்ணிக்கையைவிட காக்கைகளின் எண்ணிக்கைதானே அதிகம் நாம் காக்கைகள் அதிகமாக இருப்பதால் அதை தேசியப் பறவையாக வைக்கவில்லையே மயிலைத்தானே தேசியப் பறவையாக வைத்திருக்கிறோம் என்றாராம்”. அண்ணாவின் இந்த பதிலைக் கேட்டு அரங்கத்தில் இருந்த அனைவரும் வியந்து கைதட்டும்ஓசை நிற்க, பல நிமிடங்கள் ஆனது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். ***************************************************************************************************** ******************************************************************* ******************************************************************************************************** ஒரு சட்டைக்கு மூன்று சட்டை/15/ 14.12.12 புதுச்சேரியில் பாரதியார் இருந்தபோது இந்த சம்பவம் நடந்தது. பாரதியார் வீட்டின் முன்பு, தகர குவளையை வைத்துக்கொண்டு, குதித்தவாறே பாட்டுபாடியபடி ஆடிக்கொண்டிருந்தாள் ஒரு சிறுமி. அவள், மேல் சட்டையின்றி குட்டைப் பாவாடை மட்டுமே அணிந்திருந்தாள். காலில் சிறிய சலங்கை அணிந்திருந்தாள். கழுத்தில் பாசி மாலைகளும் கிடந்தன. அந்தச் சிறுமியின் ஆட்டத்தை பார்த்துக் கொண்டிருந்த பாரதியின் மகளான சிறுமி சகுந்தலா, ‘அப்பா! இந்த பொண்ணு சட்டை போடாமல் இருக்கிறாளே ஏன்?’என்று பாரதியாரிடம் கேட்டாள். ‘பாவம்! அவள் ஒரு ஏழை. சட்டை வாங்க பணம் இல்லை!’ என்றார். உடனே, வீட்டுக்குள் ஓடிச் சென்ற சகுந்தலா, தனது சட்டையை எடுத்து வந்து அந்தச் சிறுமியை நோக்கி சென்றவள், மேலாடையின்றி காணப்பட்ட சிறுமிக்கு அந்த சட்டையை கொடுத்தாள். ‘இந்த சட்டை உனக்குத் தான். நீ போட்டுக்கொள்‘ என்றாள் சகுந்தலா. அந்த சிறுமியும் ஆசையுடன் வாங்கிக் கொண்டாள். மகளின் இந்த செயலை ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டிருந்தார் பாரதியார். அந்தநேரத்தில், ஒரு தட்டில் சாதத்தை எடுத்துக்கொண்டு வீட்டுக்குள் இருந்து வெளிப்பட்டார் பாரதியின் மனைவியான செல்லம்மாள். ‘எங்கே அந்த சிறுமி?’ என்றுகேட்டார். ‘அவள் போய்விட்டாள். நாங்கள் தான் அவளுக்கு சட்டை கொடுத்து அனுப்பினோம்‘ என்றார் பாரதியார். ‘சட்டையா? யார் கொடுத்தது? நாம இருக்கிற இருப்பில் உன் சட்டையை கொடுத்து விட்டாயே. பள்ளிக்கூடம் போக சட்டைக்கு என்ன செய்வாய்?’ என்று மகளை செல்லமாய் கடிந்து கொண்டார் செல்லம்மாள். உடனே, சகுந்தலா, ‘அப்பா... அம்மா கோபப்படுறாங்களே, நான் செய்தது தப்பா? தர்மம் தலை காக்கும்ன்னு நீங்க தானே சொன்னீங்க?’என்று கேள்வி கேட்டாள். ‘கவலைப்படாதே மகளே! நமக்கு அந்த பராசக்தி ஒன்றுக்கு மூன்றாய் தருவாள். நீ செய்தது தப்பே இல்லை. இல்லாதவர்களுக்கு இருக்கிறவர்கள் கொடுப்பது தான் தர்மம்’ என்று மகளைப் பார்த்து வாஞ்சையோடு கூறினார் பாரதியார். இதை கவனித்துக் கொண்டிருந்த செல்லம்மாள், ‘எப்படியோ போங்க; அப்பாவுக்கு ஏத்த பொண்ணு. அப்படியே அப்பாவின் குணத்தை உறிச்சுட்டு பொறந்திருக்கா...‘ என்று அலுத்துக்கொண்டு வீட்டுக்குள் சென்று விட்டார். உண்மையில் அந்த நம்பிக்கை பொய்த்துவிடவில்லை. பாரதி கூறியபடியே, ஒரு சட்டை தானமாக கொடுக்கப்போய் மூன்று சட்டை சகுந்தலாவை தேடி வந்தது. மறுநாள் சிறுமி சகுந்தலாவுக்கு பிறந்த நாள். ******************************************************************************** ********************************************************************************** ********************************************************************************************************** / 16/21.12.12 காளமேகப் புலவர் என்றாலே இருபொருள் வைத்துபாடுபவர்; நையாண்டிபேர்வழி என்பது தெரிந்து விஷயம். நாம் மோர் சாதம் சாப்பிடுகிறோம். வெயிலுக்கு மோர் அருந்துகிறோம். ஆனால், மோர் பற்றி நமக்கு ஏதாவது வித்தியாசமான சிந்தனை தோன்றி இருக்கிறதா என்ன? தினமும் நாம் குடிக்கும் மோரைக் கூட திருநாராயணனின் அவதாரமாகப் பாடுகிறார். அந்தப் பாட்டில் தனக்கே உரிய நையாண்டியும் வைத்துள்ளார். அது கோடைக்காலம். அக்கினி நட்சத்திரத்தால் தகிக்கும் நண்பகல் நேரம். காளமேகத்துக்கு நா வறட்சி; நல்ல தாகம். தாகம் தீர்க்க ஏதாவது கிடைக்காதா என்று சுற்றி சுற்றி பார்க்கிறார். அப்போது, எதிரே மோர் விற்று வரும் மூதாட்டி வருகிறார். அவரிடம் மோர் வாங்கிக் குடிக்கிறார். தாகம் தீர்ந்தது காளமேகத்துக்கு. இருந்தாலும் அவர் பருகியது நீரா அல்லது மோரா அல்லது இரண்டும் கலந்த மோர்த் தண்ணீரா என்றே தெரியவில்லை. ஆனாலும் வெயிலுக்கு இதமாக இருக்கிறது. அந்த மூதாட்டியோ காசுக்கு பதிலாக கவிதை கேட்கிறாள். காளமேகம் நையாண்டியாக நீ கொடுத்த மோர் ஸ்ரீராமநவமி போல இருந்தது. அதுமட்டுல்ல, அந்த மோரும் பாற்கடலில் துயிலும் பரந்தாமனும் ஒன்றே என்று கூறி பாடல் பாடுகிறார்: ‘கார் என்று பேர்படைத்தாய் ககனத் துறும்போது நீர் என்று பேர்படைத்தாய் நீணிலத்தில் வந்ததற்பின் வார் ஒன்று பூங்குழலார் ஆய்ச்சியர்கை வந்ததற்பின் மோர் என்று பேர் படைத்தாய் முப்பேரும் பெற்றாயே!’ அதாவது மோரே நீ கார்முகில் வண்ணனான கண்ணனுக்கே சமமானவன். உன்னுடைய முதல் அவதாரம் மேகமாக சஞ்சரித்தது. பின் நீராய் பிறவி எடுத்தது. மூன்றாவதாக தேவகியிடம் பிறந்தாலும் யசோதையிடம் புகுந்தது போல், நீயும் பூமியில் பிறந்து இந்த இடைச்சியின் குடத்தில் புகுந்து கொண்டாய். அவளும் உனக்கு மோர் எனப் பெயர் சூட்டி மகிழ்கிறாள். *............................... உணவில் நாட்டுப்பற்று! ஒருமுறை கி.வா.ஜ. அவர்கள் ஒரு விஷேச நிகழ்ச்க்கு சென்றிருந்தார். கா உணவு நடந்து கொண்டிருந்தது. பந்தியில் கி.வா.ஜ. அமர்ந்திருந்தார். வாழையிலையில் சிவப்பு மிளகாய்ப் பொடி மற்றும் பச்சை சட்டினியுடனும் வெள்ளை இட்டிலியை வைத்திருந்தார்கள். அதைப் பார்த்து “ஆஹா உங்கள் நாட்டுப் பற்று எம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது!” என்றார் கி. வா ஜ. அதாவது இந்திய தேசியக்கொடியின் நிறம்போல மிளகாய்பொடி(காவி) நடுவில் இட்லி (வெள்ளை) அடுத்து பச்சை நிறத்தில் சட்டினி என மூன்று வண்ணத்தில் வரிசைபடி இருந்ததால் அப்படி சொன்னார். ***************************************************************************************************** ************************************************************ ********************************************************************************************************* புரூப் ஓகே/ கீச்சுக்கீச்சு/17/ 28.12.2012 ஒரு முறை அவ்வையார் சோழர் அரசபைக்குச் சென்றிருந்தார். சபையில் பல புலவர்கள் அமர்ந்திருந்தார்கள். அந்தப் புலவர்கள் எல்லாம் அரைகுறை ஞானம் கொண்டவர்கள் என்பது அவர்களின் செயல்களில் இருந்தே புரிந்து கொண்டார் அவ்வையார். சபையில் அந்தப் புலவர்கள் எல்லாம் தம்முடைய அருமை பெருமைகளை மட்டுமே தம்பட்டம் அடித்துக்கொண்டிருந்தனர். அரைகுறை ஞானம் கொண்ட சில புலவர்கள் அலட்டலாகத் தங்களுடைய புகழைத் தாங்களே ‘பாடி’க் கொண்டிருந்தார்கள். இதைப் பார்த்த அவ்வையாருக்குச் சிரிப்புதான் வந்தது. உடனே அவர்களைப் பார்த்து இந்தப் பாடலைப் பாடினார்: ‘காணாமல் வேணதெல்லாம் கத்தலாம்; கற்றோர்முன் கோணாமல் வாய்திறக்கக் கூடாதே – நாணாமல் பேச்சுப்பேச்சு என்னும், பெரும்பூனை வந்தாக்கால் கீச்சுக்கீச்சு என்னும் கிளி.’ இதன் பொருள்: உண்மையான ஞானம் கொண்டவர்களைப் பார்க்காதவரை நாம் விருப்பப்படி என்ன வேண்டுமானாலும் கத்தலாம். கற்றவர்கள் முன்னால் பணிவாக நிற்காமல் வாய் திறக்கக் கூடாது. கூண்டில் வளரும் கிளி சொல்லித் தந்ததை அப்படியே சொல்லும். எந்நேரமும் அதே வார்த்தைகளைப் பேசியபடி உட்கார்ந்திருக்கும். இப்படி ஓயாமல் கீச்சுக் கீச்சு சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லும் கிளியின் முன்னால் ஒரு பெரிய பூனை வந்து நின்றால் அவ்வளவுதான். கிளி பேச்சையெல்லாம் மறந்து, உயிர் பயத்தில் கீச்சுக் கீச்சென்று கத்த ஆரம்பித்துவிடும். அதுபோல இருக்கிறது சோழர் சபையில் இருக்கும் புலவர்களின் நிலை என்று சொல்லாமல் சொல்கிறார் அவ்வையார். * சொல் விளையாட்டு தப்பும் தவறுமாகப் பேசி எக்கச்சக்கமாக மாட்டிக் கொள்ளும் போது “இல்லையே... நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லையே” என்று சமாளிப்பது நம் எல்லாருக்கும் கை வந்த கலை. அதுவே புலவர்கள் என்றால் சொல்லவே வேண்டாம். அவர்களின் மொழிப் புலமையில் எதை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் மாற்றிச் சொல்லிவிடுவார்கள். இதோ ஒரு சின்ன சம்பவம்: “வாரும் ‘மட’ த் தடிகளே” (மடத்து அடிகளே என்பது பொருள்) என்கிறார் வந்தவர். பதிலுக்கு அவர் “வந்தேன் ‘கல்’ விக்ரகமே” (கல்விக் கிரகமே என்பது பொருள்) என்கிறார். இதைக் கேட்டதும் அவரும் சிரித்துக்கொண்டே “அறிவில்லாதவனே” (அறிவில் ஆதவனே என்பது பொருள்) என்று சிலேடையாய் சொல்கிறார். ...............................................

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக