ஞாயிறு, 16 டிசம்பர், 2012

சமயத்தின் மேன்மை!/62/11.11.2012/

சமயத்தின் மேன்மை!/62/11.11.2012/ ஒரு சாதாரணமனிதன் – உயர்ந்தவனாக, சிறந்தவனாக, மேம்பட்டவனாக ஆவதற்கு உதவுவது சமயம். ‘ உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே” என்கிறது தொல்காப்பியம். உலகம் உயர்ந்தோர்களின் பண்பை வைத்தே அளவீடப்படுகிறது. சமூகத்தில் வாழும் மனிதன் சில கொள்கைகளை ஏற்பதினாலும் அவற்றில் நம்பிக்கை வைப்பதினாலும் ஒரு மேலான நிலைக்கு செல்கிறான். அதற்கு நம் முன்னோர்கள் காட்டிய வாழ்வியல் முறை அடித்தளமாக இருக்கிறது. முன்னோர்களை வழிய நடத்திய பாதையாக சமயம் இருந்து வருகிறது. இப்படித் தான் வாழவேண்டும் என்று வழிகாட்டும் சமயத்தினை சார்ந்து வாழ்பவன், சமயத்தினைச் சார்ந்து ஒழுக்கமானவன் ஆகின்றான். இன்ப துன்பங்களை ஏற்பதால் அவனது மனம் பக்குவப்படுகிறது. சமயம் என்னும் சொல் கொள்கை, கோட்பாடு, குறிக்கோள் என்னும் பொருளைத் தருகிறது. ஆனால், சமயத்தின் உண்மையான பொருள் அனுபவம் சார்ந்தே உணரக்கூடியது. அதாவது, ஒருவர் பசிக்கு உணவு பொருளை நேரடியாக உண்ணாமல், சமைத்த பிறகே அதாவது அவித்து, வேகவைத்துச் உண்ணுகிறோம். அது போல் பக்குவமில்லாத, பண்பில்லாத, ஒழுக்கமில்லாத நிலையில் வாழும் மனிதனை,அன்பு, இரக்கம், கருணை, செய்யதக்கன, செய்யத்தகாதனவைகளை எல்லாம் சொல்லி, அதன்படி வாழ்க்கையை அமைத்துக் கொள்ள மனதை சமைத்துப்பக்குவப்படுத்த தோன்றியவை சமயம் என்று பொருள் கொள்வதே சரியாக இருக்கும். கடவுள்- மனித வாழ்வு என்ற இவை இரண்டிற்கும் உள்ள தொடர்பு , வாழ்விலிருந்து கடவுளை அடையும் நெறிமுறைகளை தெளிவுப்படுத் உதவுவது சமயம். மனிதரை நெறிப்படுத்துவதற்கும் முறைப்படுத்துவதற்கும் தோன்றியது சமயநெறி. துõயவாழ்க்கை முறை, மனிதனை நெறிப்படுத்திப் பக்குவப்படுத்தும் வாழ்வியல் அனுபவமுறை,மனிதனுடைய குறை நீக்கத்திற்கும், புலன்களை பக்குவப்படுத்தவும், அன்பு பெருகவும், அருள் பெருகவும். சமயம் உதவும். சமயத்தின் முக்கிய நெறி அன்பை மையமாக் கொண்டது. ‘ஆருயிர்க் கெல்லாம் அன்பு செயல் வேண்டும்’ என்னும் வள்ளலார் காட்டிய வாழ்வு நெறிதான் சமயம் காட்டும் நெறி. அன்பின் வழியே , ஆண்டவனை அடையமுடியும் என்கிறது நமது சமயம். காலம் மாறலாம். நாகரீகம் மாறலாம். நம் வாழ்க்கை முறை மாறலாம். ஆனால் சமயம் சொல்லும் வாழ்வியல் உண்மைகள் என்றும் மாறாதவை. கட்டுபாடு நிறைந்திருக்கலாம். கசப்பாக இருக்கலாம். நடைமுறை வாழ்கையில் பின்பற்ற இயலாமல் போகலாம். ஆனால், சமயம் வலியுறுத்தும்படி வாழ்பவர்கள் என்றுமே இறைவனுக்கு பிரியமானவர்களாக, வாழும் போது நிம்மதியாக வாழலாம்! வாழ்ந்து பாருங்கள் புரியும்! - தேவராஜன். ****************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக