சனி, 8 செப்டம்பர், 2012

அங்கம்பாக்கம் வெ. சந்திராமணி

அங்கம்பாக்கம் வெ. சந்திராமணி ................................................ பிரதிபலன் எதிர்பாராது உதவி செய்வதன் மூலம் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடையலாம் என்ற உண்மையை தியானமோ, தவமோ செய்யாமல் இயல்பாகவே பெண் அறிந்திருந்தா ள். பிறரைச் சார்ந்தும் அரவணைத்தும் செல்வதுதான் வாழ்க்கைக்கு ஆதாரம் என்ற இலக்கணத்தையும் யாரும் சொல்லாமலே புரிந்து கொண்டவள் பெண். ஆதரவளிப்பது, ஆறுதலாக இருப்பது,ஆலோசனை கூறி, வாழ்வதற்கும், வளர்வதற்கும் எதை செய்ய முடியுமோ அதையெல்லாம் தயங்காமல் செய்யக் கூடியவள் பெண். பிறரை சந்தோஷப்படுத்தி, அந்த சந்தோஷத்தைப் பார்ப்பதே தன்னுடை சந்தோஷமாக பாவிக்கும் குணத்தால் குடும்ப விருட்ஷம் பட்டுபோகாமல் காப்பது தான் ஒரு பெண்ணின் புத்திசாலிதனம். சொந்தக் காலில் நிற்க வேண்டும் என ஆணுக்கு வலியுறுத்தப்படுகிறது. பெண்ணுக்கு இணக்கமாகவும், பணிந்தும் இருக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. இதனால் குடும்பத்தில் ஈகோ என்ற நெருப்பு எழுந்து, அழித்துவிடாமல் அந்த குணமே நீராக இருந்தது பெண்ணை காக்கிறது. திருமணத்துக்கு முன்பு அறிமுகமே இல்லாத ஒருவனுடன் புகுந்த வீடு செல்லும்போதே, புதிய சூழ்நிலையில், புதிய மனிதர்களோடு இணைந்து போக வேண்டும் என்ற மனப்பக்குவத்துடன்தான் எக்கலாலத்துப் பெண்ணும் செல்கிறாள். இது பெண்ணின் இரண்டாவது புத்திசாலிதனம். கணவனுக்காக விட்டுக் கொடுப்பது, அவன் கருத்துகளோடு ஒத்துப்போகுதல், தான் வேறு, தனது கணவன் வேறு என்ற எண்ணம் இல்லாமல் அவன் நோக்கம், லட்சியம் எல்லாம் தனது எனக் கருதி, அவனோடு தன்னை இணைத்துக் கொள்கிறாள். கணவன் சிலவற்றை வெளிப்படையாக வெளிப்படுத்தா விட்டாலும், குறிப்பால் அவனது எண்ணங்களை அறிந்து, தன்னோடு இருப்பவர்களின் எண்ணங்களையும் குறிப்பால் அறிய கற்றுக் கொள்கிறாள். இது பெண்ணின் மூன்றாவது புத்திசாலிதனம். பெண் எதையும் அன்பினால்அளவீடு செய்கிறாள். ஆண் குழந்தை தனது தாயிடம் இருந்து விலகிச் செல்வதைப் போல், பெண் குழந்தை செல்வதில்லை. தாயிடம் இருந்து நகலாக தன்னை உருவாக்கி கொள்கிறாள். இது பெண்ணின் நான்காவது புத்திசாலிதனம். வாழ்நாள் முழுவதும் ஒரு பெண் அப்பா, அம்மா,கணவன், பிள்ளைகள், உடன்பிறப்புகள் என எல்லாரையும் நேசித்து கொண்டே இருப்பதால் அதுவே அவளுக்கு ஆன்ம சக்தியை அளிக்கிறது. இந்த ஆன்ம சக்திதான் அவளை இறைவனுக்கு ஒப்பாக பேச வைத்துவிடுகிறது. இது பெண்ணின் ஐந்தாவது புத்திசாலிதனம். ஆணின் இதயத்தில் புதைந்து கிடக்கும் மென்மையான உணர்வுகளை ,வெளிப்படுத்த தயார்படுத்துவதும்,ஆணுக்குள் இருக்கு பெண்மையை அவனுக்கு அடையாளம் காட்டி சாந்தப்படுத்துவதற்கு பெண் கருவியாக இருக்கிறாள். உணர்வு ரீதியாக அனைவரையும் கவரும் வகையில், ஆணை விட பெண் சிறப்பு பெறுகிறாள். ( 8.9.2012 தினமலர் பெண்கள் மலரில் வெளிவந்த என் மனைவி எழுதிய கட்டுரை)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக