வெள்ளி, 9 ஏப்ரல், 2010

கோடையை சமாளிக்க எளிய வழிமுறைகள்!

கோடையை சமாளிக்க எளிய வழிமுறைகள்!
கோடையும், உஷ்ணமும் பிரிக்க முடியாதது. அதனால் கோடையில் அதிக சூடு உடலைத் தாக்குகிறது. அப்போது, சூபாடி டெம்பரேச்சர் ரெகுலேஷன்' எனப்படும் உடல் உஷ்ணத்தில் சமச்சீரற்ற தன்மை உருவாகிறது. இதனை இளம் பருவம் மற்றும் நடுத்தர வயதினரால் ஓரளவு தாக்குப்பிடிக்க முடியும். குழந்தைகள் மற்றும் முதியோர்கள் இந்த உஷ்ண ஏற்றத் தாழ்வை எதிர்கொள்ள முடியாமல் பாதிக்கப்படுவார்கள்.

* ஹீட் கிராம்ப்ஸ்

* ஹீட் எக்ஸ்டாஸ்ட்ஷன்

* ஹீட் ஸ்ட்ரோக்

ஆகியவை ஏற்படும்.

இதில் முதல்வகை அதிக பாதிப்பை தராது. இரண்டாவது வகையான சூஹீட் எக்ஸ்டாஸ்ட்ஷன்' என்பது உடலில் இருக்கும் உப்புத்தன்மை குறையும்போது ஏற்படும் பாதிப்பாகும். கோடையில் நம் உடலில் இருந்து நிறைய வியர்வை வெளியாகிக்கொண்டே இருக்கும். அதில் உப்பும் சேர்ந்து வெளிப்பட்டுக் கொண்டிருக்கும். வியர்வையோடு வெளிப்படும் உப்பு பற்றாக்குறையையும் சமன் செய்ய வேண்டும். வெறுந் தண்ணீரை மட்டும் குடிக்காமல் எலுமிச்சை சாறில் உப்பு கலந்து, மோரில் உப்பு கலந்து பருகுவது அவசியமாகும். அதற்கு வாய்ப்பு இல்லாமல் இருந்தால் சூஓ.ஆர்.எஸ்' எனப்படும் மருத்துவ தன்மை வாய்ந்த பொருளை தண்ணீரில் கலக்கி உட்கொள்ள வேண்டும்.

மூன்றாவது வகையான, சூஹீட் ஸ்ட்ரோக்' தான் அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. இதன் மூலம் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். நாடித்துடிப்பு குறையும். 107 டிகிரிவரை காய்ச்சல் ஏற்படும். நினைவிழப்பு ஏற்பட்டு, கோமா நிலைக்கு செல்லவும்கூடும். இந்த பாதிப்பிற்குள்ளானவர்களுக்கு உடனடியாக சிகிச்சை தராவிட்டால் உயிரிழப்புகூட ஏற்பட்டு விடும்.

கோடை காலம் என்றாலே மாம்பழம் அனைவரின் நினைவுக்கும் வரும். எல்லோரும் பழம் சாப்பிடுகிறார்கள். மற்ற எல்லா பழங்களையும் விட மாம்பழங்களில் கழிவு அதிகம். அவைகளை சரியாக கையாளாதபோது அதில் இருந்து செயல்படும் ஈ மற்றும் கொசுக் களால் பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன.

கோடை காலத்தில் ஏற்படும் வயிற்றுப்போக்கை சூசம்மர் டயாரியா' என்கிறோம். இதில் அமீபியாசிஸ் கிருமியால் ஏற்படும் வயிற்றுப்போக்கு சாதாரண நிலை கொண்டதாகும். பாக்டீரியல் டிசன்ட்ரி என்பது அதிக பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் கோடை காலத்தில் மிகுந்த சுகாதாரதன்மையுடன் உணவுகளை சாப்பிட வேண்டும்.

கோடைகாலத்தில் சிறுவர்கள் நீச்சல் குளங்களில் விளையாடுவதை சுகமான அனுபவமாக கருதுவார்கள். அந்த தண்ணீர் சுகாதாரமற்றதாக இருந்தால் காதுகளில் தொற்று, கண் களில் எரிச்சல், சரும நோய் போன்றவை தோன்றும். உடலில் இருக்கும் காயத்தில் அந்த அழுக்கு நீர் படும்போது டைபாய்ட், எலி ஜுரம் போன்ற நோய்கள்கூட ஏற்படக்கூடும்.



கோடை வெயிலில் சூஅல்ட்ரா வயலட் கதிர்கள்' தாக்கம் மிக அதிகமாக இருக்கும்.. இந்தியர்களின் சருமம் அனேகமாக கறுப்பு நிறத்தில் இருப்பதால், இந்த கதிர்களின் தாக்குதலில் இருந்து பெருமளவு தப்பிக்க முடிகிறது. உஷ்ணம் நிறைந்திருக்கும் இந்த காலகட்டத்தில் காட்டன் ஆடைகளை அணிவது நல்லது. செயற்கை ஆடைகளை தவிர்க்க வேண்டும். அடர்த்தியான நிறத் திலான ஆடைகள் அணிந்தால் அவை உஷ்ணத்தை உடலுக்குள் ஈர்க்கும். அதனால் உடல் பாதிக்கும். இள நிறம் உஷ்ணத்தை நிராகரிக்கும். அதனால் இளநிற ஆடை களையே அணிய வேண்டும். கோடையில் சூடுகட்டி உடலில் உருவாகும். எல்லா வயதின ருக்கும் இது உருவாகும் என்றாலும் சர்க்கரை நோயாளிகளை அதிக தொந்தரவிற்கு உள்ளாக்கும்.

கோடை காலத்தில் பெரும்பாலானவர்கள் சிறுநீரகக்கல் நோயால் பாதிக்கப்படுகிறார்கள். உடல் உஷ்ணமாகும்போது உடலில் இருக்கும் தண்ணீரின் அளவு குறையும். ஆனால் வியர்வை அதிகமாக வெளியேறிக்கொண்டே இருக்கும். அதன் தொடர்ச்சியாக உடலில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும். சிறுநீர் வெளியேறுவது குறைந்துகொண்டே போகும். அப்போது உடலில் ஏற்படும் வேதிவினை மாற்றங்களால் சிறுநீரக கல் தோன்றுகிறது. தண்ணீர், எலுமிச்சை சாறு, இளநீர், மோர் போன்றவற்றை அதிகம் பருகி வந்தால், தர் பூசணி, வெள்ளரிக்காய் போன்றவைகளை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் நன்றாக வெளி யேறும். கல் உருவாகாது.

கோடை காலத்தில் குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டால் சூ உடலில் ஐஸ் அல்லது குளிர்ந்த நீரால் ஒத்தடம் கொடுத்து காய்ச் சலை கட்டுப்படுத்தலாம். குழந்தைகள் உணவு சாப்பிடும் நிலையில் இருந்தால் பிரச்சினை இல்லை. சாப்பிட்ட உணவு வாந்தியாக வந்துகொண்டிருந்தால் உடனே டாக்டரிடம் அழைத்துச் சென்றிட வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக