செவ்வாய், 20 ஏப்ரல், 2010

ஞாபக மறதியா? ஆப்பிள் சாப்பிடுங்க!

ஞாபக மறதியா? ஆப்பிள் சாப்பிடுங்க!

நினைவுத்திறன் அதிகரிக்க, ஞாபக மறதியை நீக்க வல்லாரைக் கீரை சாப்பிடுங்க! என்று சொல்வது வழக்கம். இனி, ஆப்பிளும் சாப்பிடுங்க! என்று சொல்லலாம் என்று புதிய விஞ்ஞான ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிள் சாறுக்கும் மூளையின் ஆரோக்கியத்திற்கும் தொடர்பு உண்டு என சமீபத்திய ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது.
நம்மில் பலருக்கு வயது ஏற, ஏற நினைவாற்றல் குறைந்து மறதி ஏற்படுவது இயல்பாகவே உள்ளது. மறதியை மறக்க வேண்டுமானால் தினமும் ஓர் ஆப்பிள் சாப்பிடவேண்டும். ஆப்பிள் சாப்பிடுவதாலும், ஆப்பிள் சாறு அருந்துவதாலும் மூளை மன அழுத்த பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கப்படும். மேலும், வயது ஏற ஏற ஏற்படும் ஞாபக மறதியும் தடுக்கப்படும் என்று மெசக்யுசெட்ஸ் லோவெல் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள புதிய ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்வு கட்டுரை அல்ஜிமீர் நோய் என்னும் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஆய்விற்காக வயதான எலிகள் பயன்படுத்தப்பட்டன. சாதாரண உணவு, ஊட்டச் சத்து குறைவான உணவு, ஊட்டச்சத்து குறைவான ஆனால் ஆப்பிள் சாறுடன் கூடிய உணவு என மூன்று வகையான உணவுகள் எலிக்கு கொடுக்கப்பட்டன.
ஊட்டச் சத்து குறைவான உணவு உட்கொண்டதால் உயர்வளியேற்ற அழுத்தம் மிகுந்திருந்தது. ஊட்டச்சத்து குறைவான உணவுடன் ஆப்பிள் சாறு சேர்ந்த உணவு கொடுக்கப்பட்டதால் உயர் வளியேற்ற அழுத்தம் குறைந்து காணப்பட்டது. மேலும், மனிதர்கள் குடிப்பது போல 23 கோப்பை ஆப்பிள் சாறு பருகியதாலோ, 24 ஆப்பிள் பழம் சாப்பிட்டதாலோ வயதான ஞலிகளின் பார்வை மற்றும் கேட்கும் திறன் மேம்பட்டன என்பதும் ஆய்வில் உறுதி செய்யப்பட்டன.
எனவே, ஆரோக்கியமான மூளைக்கு உத்தரவாதம் தருவதுடன் ஆப்பிள்கள் அதிக நார்ச்சத்துள்ள உணவாகும். இவை செரிமானத்துக்கும், எடை குறைவுக்கும் ஆப்பிள்கள் ÷ற்றவையாக உள்ளன. ஆப்பிள்களில் அதிக ஊட்டச்சத்து இருப்பதால் ஆரோக்கியத்தை மேம்படுத்தி நோய்த் தடுப்பு ஆற்றலை அதிகரிக்கிறது.
உலக அளவில் 7, 500 ஆப்பிள் வகைகள் பயிரிடப்படுகின்றன. இவற்றுள் மிகச் சிறந்த உயர் ரக ஆப்பிள்கள் வாஷிங்டன் தோட்டங்களில் பயிராகின்றன.
என்ன படித்து முடிச்சாச்சா! இப்ப படிச்சதை அப்படியே மறக்காம இருக்க, உடனே பக்கத்தில் எதாவது ஒரு பழக்கடை இருந்தால் அங்க போய் ஒரு ஆப்பிள் வாங்கி சாப்பிடுங்க!
தேவராஜன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக