புதன், 28 ஏப்ரல், 2010

14. ஐந்துக்குள் எல்லாம் ஐக்கியம்! தேவராஜன்

14. ஐந்துக்குள் எல்லாம் ஐக்கியம்! தேவராஜன்
இந்த பேரண்டம் ஆகிய உலகம் அணுக்களால் ஆனது. இந்த உலமும் அதில் காணப்படும் ஒவ்வொரு பொருளும் அணுக்களால் ஆனவை. இந்த ஒவ்வொரு அணு துகள்களில் கடவுள் ராஜாங்கம் நடத்துகிறான். ஏழ் உலகத்தில் அடர்ந்திருக்கும் அணு கூட்டங்களை ஒன்று தொகுத்தால் கடவுளின் முப்பரிமாண வடிவத்தை உணரலாம். நாம் காணும் எந்த உயிரிலும் சரி, ஜடப்பொருளிலும் சரி கடவுள் நீக்கமற உறைந்திருக்கிறான். அதை உணர ஊனக்கண்ளை மூடி, ஞானக்கண்ணால் பார்த்தால் புரியும்!
"தெய்வம் மனுஷ ரூபம்' என்பது கூட கடவுளின் பிம்பம் அல்லது கடவுள் கட்டமைப்பான அணு நம் ஒவ்வொரிடமும் இருப்பதால் தான் அப்படி சொல்லப்பட்டிருக்கிறது.
நாதமும் நாமும் ஒன்றானவன் ஈஸ்வரன். நாத வட்டத்தில் தான் இந்த அண்டம் மிதந்துக் கொண்டிருக்கிறது. இந்த உலகம் ஒலிமயம். அந்த ஒலியும் ஓங்காரத்தின் மூலத்தில் இருந்து தான் எங்கும் வியாப்பித்திருக்கிறது.
நாதன் நாமம் "நமசிவாய' ஐந்தெழுத்து. இந்த ஐந்துக்குள் ஐம்பூதங்கள் அடக்கம். அந்த ஐம்பூதங்களுக்குள் எல்லாம் ஐக்கியம்! எப்படி என்பதை சுருக்கமாக அறியலாம்!
மனித ஜென்மம் எடுக்கும் எந்த உயிரும் பிறந்த முதல் மாதத்திலிருந்து பிண்டத்துக்கும் அண்டத்துக்கும் ஆன தொடர்பை புதுப்பித்துக்கொள்கிறது.
எப்படி எனில், ஆகாயம் தன்னுடைய தன்மையான சப்தத்தை, கேட்கும் உணர்ச்சியாக குழந்தையின் கேட்கும் உறுப்பான செவிக்கு அளித்து வளரச்செய்கிறது. மேலும் குழந்தை தன் கை கால்களை அசைத்துக்கொள்வதும் ஆகாயத்தின் தன்மையே! இது ஐந்தின் முதல் படி!
அடுத்தது காற்றாகிய வாயு, உடலில் சுவாசிக்கும் உறுப்புகளை நன்கு இயங்குச் செய்து மூச்சு விட வைக்கிறது. இதனால் சுவாசம் நடைபெறுகிறது. சுவாசத்தால் உயிர்ப்பு உடலில் நிலைகொண்டு தான் வாழும் கூடான உடல் கொண்டகுழந்தையை புரண்டு படுக்கவும், எழவும், தவழவும் உதவுகிறது. இது ஐந்தின் இரண்டாம்படி.
அக்னி எனப்படும் உஷ்ணம் பித்த கோசத்தை நன்கு இயங்கச் செய்வதோடு, குழந்தையின் தோலுக்கு அழகிய நிறத்தையும் தந்து, வயிற்றிலே ஜீரண உறுப்புகளையும் நன்கு செயல்பட வைக்கிறது. உடம்புக்கு தேவையான சூட்டை தந்து, உயிரை ஒரு நீள்வட்ட சுழல் பாதையில் சுழல வைக்கிறது. இது ஐந்தின் மூன்றாம்படி!
நீர் இது குழந்தையின் உடம்பு பையில் முக்கால் விழுக்காடு நிரம்பியிருந்து, சுவையையும் ரத்தத்தையும் தந்து உடலில் உள்ள கழிவுப் பொருட்களை வியர்வையாக , சிறுநீராகவும் வெளிப்படுத்துகிறது. இது ஐந்தின் நான்காம் படி!
பூ வுக்கு மட்டுமல்ல;பூமிக்கும் வாசம் உண்டு. அதை மண் வாசனை என்றழைக்கிறோம். அந்த வாசனையை பூமி தன்னுடையசீதனமாக முகரும் உணர்ச்சியைத் தந்து மூக்கோடு பாலம் அமைத்துக்கொள்கிறது. அத்தோடு நகங்கள், மயிர் முதலான வைவளர்வதற்கும் உதவி செய்கிறது. குழந்தையின் உடல் கனத்துக்கும் பூமியே ஆதாரமாக இருக்கிறது.பூமியில் தான் பொருள்கள் எடையை பெறும். மற்ற கோள்களில் எந்தப் பொருளும் எடையிழக்கும். இது ஐந்தாம் படி!
ஆக, ஒருவனுடைய உடல், பஞ்சபூதங்களான நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயத்தால் உண்டாக்கப்பட்டு அவற்றின் தன்மையாலேயே வளர்கிறது என்பதை ஒருவாறாக நாம் அறியமுடிகிறது.
இந்த ஐந்தெழுத்தே ஐம்பூதங்களாக விசாலமாகி பரந்து பட்டு உலகை சூழ்ந்திருக்கிறது. இதில் ஏதேனும் ஒன்று குறைந்தாலும் நாம் வாழமுடியாது.
ஒருவனுடைய உடல் வளர்வதற்கும், உயிர் நீடிப்பதற்கும், இயக்க சக்தி கிடைப்பதற்கும் உணவு முக்கியமானதாக இருக்கிறது. இந்த உணவு வகையும் அறு சுவைகளாக இருக்கிறது. இந்த ஆறு சுவையும்கூட ஐம்பூதங்களோடு அடங்கி விடுகின்றன.
இனிப்பு இது பூமி மற்றும் நீரையும்; கசப்பு வாயு மற்றும் ஆகாயத்தையும்; புளிப்பு நெருப்பு மற்றும் பூமியையும்; உப்பு நீர் மற்றும் நெருப்பையும்; காரம் நெருப்பு மற்றும் வாயுவையும்; துவர்ப்பு பூமி மற்றும் வாயுவையும் ஆதாரமாக கொண்டுள்ளன.
இப்படி ஐந்து பூதங்களை தன்னகத்தே கொண்ட உணவை நாம் சாப்பிடும் போது அவற்றுக்குண்டான மூன்று குணங்கள் உருவாகின்றன. அவை தாமஸ குணம், ராஜச குணம், சாத்வீக குணம்.
தாமஸ குணத்தால் மோகம், கோபம், பயம், சந்தோஷம், பாபம் செய்ய துõண்டல், அறியாமை, சோம்பேறித்தனம், தாகம், பசி, கர்வம், துக்கம் இவை உண்டாகின்றன.
விருப்பம், வீரம், யாகம் முதலிய கர்மாக்கள் செய்வதில் ஆர்வம், தற்புகழ்ச்சி, அலட்சியம் ஆகியவை ஏற்படுகின்றன.
நல்லதையே செய்யும் எண்ணம், உறுதி, அகல பந்தங்களிலிருந்து விடுபட்டு பிறவாப் பேரின்பத்தை அடைவதில் ஆசை, கடவுளிடம் அந்தியந்த பக்தி, இரக்கம், ஒரே லட்சியம் இவை சாத்வீக குணத்தால் உண்டாகின்றன.
நம்மை படைத்த "நமசிவாய' எனும் கடவுள் சக்தி, ஐம்பூதங்களாக எளிமையாகி, அந்த ஐம் பூதங்களும் மேலும் எளிமையாகி நம்முள் எளியோனாய் ஈசனாகி நீக்கமற நிறைந்திருக்கிறான். நம்முள் நிறைந்திருக்கும் ஐந்தெழுத்துக்கு உரியவனான ஈஸ்வரனை அணுக, உணர ஒன்றே ஒன்று செய்தால் போதும். அது ஐந்தெழுத்தான "நமசிவாய' இதை கணந்தோறும் நினைத்துக்கொண்டிருந்தாலே போதும். நாம் கடவுளில் மறைவோம். நம்மில் கடவுள் மறைவார். அக மொத்தம் ஐந்துக்குள் எல்லாம் ஐக்கியமாகிவிடும்!
தேவராஜன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக