வெள்ளி, 9 ஏப்ரல், 2010

கோடையை சமாளிக்க கிச்சன் பார்மஸி!

கோடையை சமாளிக்க கிச்சன் பார்மஸி!

வந்து விட்டது கோடை! தாக்குது அனல்! கொதிக்குது உடம்பு... கொட்டுது வியர்வை...
தலைவலி, வயிற்று வலி, வாய்புண், தோல் வெடிப்புகள் என உடல் ரோதனைகள் வரிசைக்கட்டி நிற்கின்றன! இதை எப்படி சமாளிப்பது?
கோடையை சமாளிக்க கிச்சன் பார்மஸியே போதும். நமது உணவுப்பழக்க வழக்கங்கள் சரியாக, சமச்சீராக இருந்தால் போதும். அதற்கு கோடை காலத்தில் எதை உண்ணலாம், எதைத் தவிர்க்கலாம் என்பதை அறிந்து கொள்வது மிக அவசியம்.
கோடையில் உடலின் தண்ணீர் அளவை சரியான அளவில் பார்த்துக்கொள்வது மிக அவசியம். அதே சமயம் தண்ணீர் மட்டுமே கோடை இம்சைகளை துரத்திவிடாது. காய்கறிகளில் ஏராளமான நீர்ச்சத்து உண்டு. முடிந்த அளவு காய்கறிகளை பச்சையாகவோ, கொஞ்மாய் வேக வைத்தோ உண்பது நல்லது. அதிகமாய் வேக வைத்து அல்லது பொரித்து உண்பதில் பலன் கிடைக்காது.
தாகத்துக்கு குளிர்பானங்கள், எனர்ஜி டிரிங் தவிர்ப்பது நல்லது. குளிர்சாதனப் பொருட்கள் பாட்டில்களில் கிடைக்கும் பழச்சாறுகள் இவை எல்லாம் உடலில் தேவையற்ற கலோரிகளைச் சேர்ப்பதைத் தவிர வேறெதுவும் செய்வதில்லை. தெருவிவில் விற்கும் குச்சி ஐஸ்களை உண்ணக்கூடாது.
நன்றாக பொரித்த உணவுவகைகளை விலக்குங்கள். சிப்ஸ், பிரஞ்பிரைஸன், சிக்கன், பிரை வகைகள் ஒதுக்க வேண்டும். மூன்றுவேளையும் வயிறு முட்ட சாப்பிடக்கூடாது. ஐஸ் காபி, ஐஸ்டி அருந்தக்கூடாது. அதற்கு பதில் இளநீர், மோர், எலுமிச்சை சாறு பானங்கள் நல்லது.
உணவு நேரம் ஒழுங்கு முறையில் இருக்க வேண்டும். டிபன் 8 மணி, மதிய உணவு 12 மணி, மாலை சிற்றுண்டி 6 மணி, இரவு உணவு 8 மணிக்குள் எடுத்துக்கொள்ள வேண்டும்.
உணவில் அதிக புரோட்டீன் மற்றும் குறைந்த ஹார்போஹைட்ரேட் உள்ள உணவு வகைகளை கோடையில் சாப்பிட்டு வரவேண்டும். கொழுப்பு அதிகமுள்ள உணவு வகைகளையும், எண்ணைய் பலகாரங்களையும் சாப்பிடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
உருளை, தக்காளி, வெங்காயம், கடலை வகை, கீரைவகைகள், மிளகு, இஞ்சி,மீன் , பால் இவை உணவில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
துரித உணவுகள், நொறுக்குத்தீனிகள், பிரைட்டு உணவுகள், கார்போஹைட்ரேட், காபீன்னேட், ஆல்கஹாலிக் இவைகளை முற்றிலுமா கோடையில் தவிர்க்கவேண்டும்.
குளிர்ந்த நீர், பூண்டு, பீட்ரூட், ரெடீஸ், மிளகு, திராட்சை, பைன் ஆப்பிள், மாம்பழம் இவைகளை கோடையில் தள்ளியே வைக்கவும்.
வெள்ளரிப்பிஞ்சு: கோடையை சமாளிக்க ஒரு எளிய வரம் வெள்ளரிப்பிஞ்சு. தர்பூசணி. வெள்ளரி தாகத்தை தணிப்பதுடன் பல நோய்களுக்கும் பயன்படக்கூடியது. இதில் 93 சதவீதம் நீர்சத்து உள்ளதால் அப்படியே பச்சையாக உண்பது தான் முழுமையான பலனைத்தரும்.விரும்பினால் மிளகுப்பொடி சேர்த்துக்கொள்ளலாம்.
கோடையில் அதிகமாக ஏற்படும் வியர்வை உடலில்இருந்து வெளியேறும் நீர்ச்சத்தை ஈடு செய்யக்கூடியது வெள்ளரிப்பிஞ்சு . வெயிலில் அதிகம் அலைவதால் உடலில் குறைந்து போன நிறத்தை மீண்டும் பெற வெள்ளரி சாறை சருமத்தின் மீது பூசலாம்.
வெள்ளரியில் சோடியம் அதிக அளவில் உள்ளது. கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ், குளோரைட், இரும்புச்சத்து போன்றவையும் உண்டு. விட்டமின் ஏபி,சி உள்ளன.
கோடைக்கு குளிர்ச்சித்தருவது வெட்டி வேர். இது புல் வகையைச் சேர்ந்தது. வெட்டி வேர் மிகுந்த மணம் கொண்டது. இது வாசனைப் பொருள் தயாரிக்க பயன்படுகிறது. வெட்டி வேருடன் சந்தனக் கட்டையை சேர்த்து நீரிட்டு அந்தண்ணீரை அருந்துவது உடல் வெப்பத்தை தணிக்கும். மேலும், வியர்க்குரு, வேனல் கட்டிகளை குணப்படுத்தும். வெட்டி வேர் விசிறியை நீரில் நனைத்து விசிறிக்கொள்ள குளிர்ச்சியாக இருக்கும்.
கோடை காலத்திற்கு ஏற்றது இளநீர், தேங்காய் நல்லது. இளநீரில் விட்டமின் பி,சி, சோடியம், பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம், இரும்பு, காப்பர், பாஸ்பரஸ், கந்தகம் போன்ற பல தாது உப்புகள் உள்ளன.
ஆரஞ்சு : ஆரஞ்சு சாறுடன் வெந்நீர் கலந்து குடிக்கலாம். இரவுபடுக்கப்போகும்முன் ஒன்று இரண்டு பழம் சாப்பிட்டு படுக்கலாம். இதனால் மலைச்சிக்கல் தீரும். ஆஸ்துமா, நெஞ்சக நோயாளிகளுக்கு ஆரஞ்சு நல்லது. காய்சலுக்கு நல்ல மருந்து. செரிமானத்தை அதிகமாக்கி பசியைத்துõண்டும். குடல்பாதையில் தொற்று தடுக்கும்.
சாத்துக்குடி: குளிர்ச்சியான பழம் சாத்துக்குடி. தாகத்தை தணிக்கும்; வீரியத்தைக்கூட்டும். வயிற்று பொறுமல், வாயு, இருமல், வாந்தி, வறட்சி, செரிமானமின்மை போன்ற உபாதைகளுக்கு நல்ல நிவாரணம் சாத்துக்குடி. நோய் எதிர்ப்பு துற்றலையும் கொண்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக