புதன், 28 ஏப்ரல், 2010

இறைவனை அழைப்பது எப்படி? தேவராஜன்

1. இறைவனை அழைப்பது எப்படி? தேவராஜன்

எல்லாம் வல்ல இறைவனை நாம் அனேக நாமங்கள் சொல்லி அழைத்து வழிபடுகிறோம்.
உதாரணமாக இறைவன், பரம்பொருள்,கடவுள், ஆண்டவன், ஈஸ்வரன், இயற்கை, பதி இப்படி
இறைவனின் பெயர் பட்டியல் நீண்டுகொண்டே போகும்...
இறைவன் ஒருவன் என்றால் அவனுக்கு எதற்கு இத்தனை நாமங்கள்? அதுபற்றி கொஞ்சம் இந்த
வார ஆன்மிக சிந்தனையாக சிந்திப்போமா?
முதலில் "இறைவன்' என்ற நாமத்தை எடுத்துக்கொண்டோமானால் அதன் கடைசி எழுத்து "ன்'
என்று முடிகிறது. இலக்கணப்படி "ன்' என்று முடியும் பெயர்ச்சொல்லெல்லாம் ஆண்பாலைக்
குறிப்பவை. அப்படி என்றால்,ஆண்பால் மனிதனை அல்லவா சுட்டும்? அப்படி எனில் இறை
வனுக்கு சமமா மனிதன்? மனிதன்,அண்டசராசரத்தை படைத்த ஒன்றை ஓர் ஆண்மகனாக அழைப்
பது தவறல்லவா?
நமக்கு மேலே ஒரு சக்தி இருக்கிறது. அது உயிர் இனத்தை மட்டுமல்ல, உலகையே "நிர்வகிக்
கிறது' என்றால் நிர்வகிக்கிறது என்ற சொல்லின் ஈற்றெழுத்து "து' என்பது இறைவனை அஃறி
ணையாக்கி விடுகிறது. அப்படியானால் இறைவன் மேஜை, நாற்காலி,ஆடு,மாடு களுக்கு இணை
யாகிவிடுகிறான். இது எப்படி சரியாகும்? பிறகு எப்படி தான் இறைவனை அழைப்பதாம்?
கண்ணுக்குத் தெரிவதில்லை. தொட்டு உணரமுடியவில்லை. அறிவுக்கு புலப்படவில்லை.
விஞ்ஞானத்தாலும் அறிந்து கொள்ள முடியவில்லை. இதன் காரணமாக ஒன்றுமே இல்லை என
நாத்திகம் பேச முடியுமா என்ன?
இயற்கை என்று அழைப்பது சரியாக இருக்குமா? அப்படியும் அழைக்க முடியாது. ஏனெனில்
அது மரம், செடி, கொடி, சூரியன், நிலவு என அவற்றோடு ஒன்றாகிவிடுமே!
ஓரணு உயிர் முதல் சூரியன், நிலவு வரை படைத்த இறைவனை எப்படி அவற்றிற்கு சமமாக
பாவிக்கமுடியும்?
பரம்பொருள் என்றால் என்ன?
அதுவும் தவறாக முடியும். ஏனெனில் இறைவன் ஒரு சாதாரண பொருள் ஆகிவிடுவான்.
சரி கடவுள் என்கிறார்களே அது சரியோ? கடவுள் என்றால் என்ன பொருளைத்தருகிறது?
உள்+ கட = கடவுள். அதாவது உள்ளத்தைக் கடப்பது கடவுள். முற்றும் துறந்த முனிவன்கூட
உள்ளத்தை கடந்து விடுகிறான். அப்படியானால் முனிவனும் இறைவனும் ஒன்றா?
தெய்வம் என்று அழைக்கலாமா? இது தமிழ் சொல்லா? வடச்சொல்லா? புரியவில்லை.
இலக்கணப்படி இச்சொல்லை பிரித்தால் பொருள் தருவதில்லை. பகாபதமாக இருக்கிறது.
பொருளற்ற சொல்லால் சுட்டினால் இறைவன் பொருளற்றவனாக ஆகிவிடுவானே?
ஆண்டவன் என்று அழைக்கலாமா?
சக மனிதனை ஆண்ட அரசனும் ஆண்டவனே. ஈண்டு அரசன் கடவுளுக்கு இணையாகி விடுவான்.
ஆதலால் ஆண்டவன் என்றழைப்பதும் சரியாகயிருக்காது.
ஈஸ்வரன் என்றழைத்தால் என்ன?
ஈஸ்வரன் வடச்சொல். தமிழில் இதன் பொருள் ஈபவன். ஒன்றை பிறருக்கு கொடுப்பவன் எல்லாம்
இறைவனாகி விடுகிறான். இறைவனோடு ஈபவனை ஒப்பிடுவது சரியாகாது.
சரி, என்ன பெயரிட்டுதான் இறைவனை அழைப்பது?
சுட்டிக்காட்ட முடியாத, சொல்லுக்கும் ஆய்வுக்கும் அப்பாற்பட்ட, ஒப்பற்ற, ஒன்றே பலவாகி,
பலவே ஒன்றாகி,ஊனக்கண்ணால் காணமுடியாத, அறிவுக்கு எட்டாத, ஞானத்துக்கு மட்டுமே
எட்டக் கூடிய இறைவன் எல்லோருக்கும் விளங்க வேண்டும் என்பதற்காகவும் எளியோனாகி,
மனிதனாகி, அவனாகி, அதுவாகி, அஃறிணையாகி, எல்லார் மனிதில், சிந்தனையில், செயலில்,
பொருளில், அர்த்தத்தில் இருந்து இறைவன் அருள்கிறான்.
முடிவாக, இறைவனை ஒருவாறாக இப்படி அழைத்து வழிபடலாமே! அது "இறை' என்ற
நாம் சூட்டி அழைக்கலாமே! எப்படி எனில், அருளை, கருணையை, அன்பை, பக்தியை
உலகத்துக்கு இறைக்க வந்ததினால் இறைவனை இறை என்று அழைத்து அவன் அருளுக்கு
உட்படுகிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக