சனி, 20 ஏப்ரல், 2013

தசாவதாரமும் மனித இன பரிணாமமும்/87/


தசாவதாரமும் மனித இன பரிணாமமும்/87/ மகா விஷ்ணு எடுத்த பத்து அவதாரங்கள் ஒவ்வொன்றிலும் மிக நுட்பமான, ஆழமான தத்துவங்கள் இருக்கின்றன. அந்த பத்து அவதாரங்களும் இந்த உலகின் தோற்றம், மனித இனம் வளர்ச்சியின் ஒவ்வொரு படிநிலைகளை விரிவாக எடுத்து கூறும் கருவூலம். உலகத்தைக் காத்து அருள்வதற்காக மகாவிஷ்ணு எடுத்த பத்து அவதாரங்கள் தான் தசாவதாரங்கள். இந்த உலகில் உயிர்கள் எப்படி படிப்படியாக வளர்ச்சிப் பெற்று உருமாற்றம் பெற்றுத் தோன்றின என்பதை விளக்கும் விதியை டார்வின் கோட்பாடு என்பர் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள். இந்த உலகத்தில் உயிர்களின் பரிணாம வளர்ச்சியின் ஆரம்பம் முதன் முதலில் நீரில் இருந்து வருகிறது. அல்லது துவங்குகிறது. இதை உணர்த்தும் விதமாக இருப்பது தான் தசாவதாரத்தின் முதல் அவதாரமான மச்ச அவதாரம். மச்சம் என்றால் மீன் என்று பொருள். மீன் என்பது தண்ணீர் தொடர்புடையது. இரண்டாவது அவதாரம் கூர்ம அவதாரம். கூர்மம் என்றால் ஆமை. ஆமை என்பது நீரில் இருந்து நிலத்துக்கு வரும். அதாவது நீரில் தோன்றிய உயிரினம் அடுத்தப்படியாக நிலத்துக்கு வருகிறது என்பது கூர்ம அவதாரத்தின் பொருள். மூன்றாவது அவதாரம் வராகம். வராகம் என்றால் பன்றி. இந்த உயிரினம் தரையில் வாழ்வன. நான்காவது அவதாரம் நரசிம்மம். அதாவது மனித உருவில் உள்ள சிங்கம். மனிதனும் மிருகமும் கலந்தது. படிப்படியாக இந்த <உலகில் மனிதனும் அவனைச் சார்ந்து விலங்குகளும் வாழத்தொடங்கின என்பது பொருள். ஐந்தாவது அவதாரம் வாமனன். உயினத்தின் பரிணாம வளர்ச்சியில் இரு காலில் நடக்கும் மனித இனம். ஆறாவது பரசுராம அவதாரம். வளர்ச்சி அடைந்த மனிதன் கோபத்தைக் கட்டுப்படுத்தத் தெரியாத நிலையைச் சொல்வது. ஏழாவது ராமவதாரம். இந்த அவதாரம் மனப் பக்குவம் பெற்ற ஒரு மனிதனின் நிலையை அப்படியே படம்பிடித்து காட்டுவது. எட்டாவது அவதாரம் பலராம அவதாரம். இந்த அவதாரம் ஒரு மனிதனின் ஆற்லை, திறமையை, மதி நுட்பத்தை சொல்வது. ஒன்பதாவது அவதாரம் கிருஷ்ண அவதாரம். இந்த அவதாரம் மற்ற உயிர்களிடமிருந்து வேறுபட்டு, முழுமையடைந்து இந்த உலகையே எப்படி வென்று காட்டுகிறான் என்பதைப் பற்றிசொல்வது. பத்தாவது அவதாரமான கல்கி - கலியின் முடிவில் நிகழும் என்று புராணங்கள் கூறுகின்றன. இந்த அவதாரம் அயல்கிரகவாசிய இருக்கப்போகிறதோ என்னவோ? உலகில் உயிரின தோற்ற வளர்ச்சியில் படிப்படியாக வளர்ந்து மனித சாயல் பெறும் ஸ்ரீநரசிம்மர் அவதாரத்திற்கும், முழு மனித சாயலும், மனிதத்தன்மையும் பெற்ற அவதாரங்களான ஸ்ரீராமபிரான், ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவுக்கு அதிக அளவில் திருக்கோயில்கள் காணப்படுகின்றன. இக்கோயில்களின் நம் முன்னோடிகளான ஸ்ரீநரசிம்மர், ஸ்ரீராமர், ஸ்ரீகிருஷ்ணரை வணங்கி வாழ்வாங்கு வாழ்வோம்! - தேவராஜன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக