சனி, 29 ஜூன், 2013

பூட்டைத்திற! மகிழ்ச்சி வரட்டும்!/96/ 7.7.2013/ நாம், நாள்தோறும் செய்ய வேண்டிய கடமைகள், செயல்கள் பல இருக்கின்றன. காலை எழுவது, பல் துலக்குவது, உடல் சுத்தம் செய்வது, உண்பது, அலுவலகப் பணிகள் செய்வது, உறங்குவது என்பது போன்ற பணிகள் நாள்தோறும் இருக்கின்றன. இதுதவிர, இன்னும் சில கடமைகள் இருக்கின்னற. அது, மனதின் அமைதிக்காகத் தியானம், கடவுள் வழிபாடு, யோகா போன்ற செயல்களையும் செய்யவேண்டும். உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்க உதவ நம் உடம்பில் கோசம் என்ற தொகுதி இருக்கிறது. இக்கோசங்கள் ஐந்து . அவை அன்னமய கோசம், பிரணாமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞான மய கோசம், ஆனந்த மய கோசம். தினமும் நம் உடலில் இருக்கும் இந்த ஐந்து கோசங்களும் ஒழுங்காகச் செயற்பட்டால் மட்டுமே அமைதியாக, ஆனந்தமாக உயிர் வாழஇயலும். தினமும் குளிக்கிறோம். வயிற்றின் அழுக்கு நீக்குகிறது. இதன் மூலம் அன்னமய கோசம் சுத்தம் ஆகின்றது. மூச்சுப் பயிற்சியின் காரணமாக பிரணாமய கோசத்தை சுத்தப்படுத்தலாம். தினம் தினம் மனதின் அழுக்கை நீக்க, இறைவனை தவறாது வணங்கி, வழிபாடு செய்தால் மனோமய கோசமும் சுத்தம் பெறும். எதிலும் நன்மை, தீமை இருப்பது போல அறிவிலும் அழுக்குச் சேரும். அந்த அழுக்கைப் போக்க நல்ல நுõல்களைப் படிக்கவேண்டும். இவற்றின் காரணமாக துன்பம், கவலைகளை போக்கி ஆனந்த மய கோசத்தின் எல்லையைத் தொட முடிகின்றது. இவை எல்லாம் தினமும் நம்மால் செய்ய முடிந்தவைதான்! இதற்கு மேலான தத்துவ மயத்தை நல்லகுருவின் துணையால் அடைய முடியும். வாழும் வாழ்க்கையில் நாள்தோறும் உடல், மூச்சு, மனம், அறிவு ஆகியன இயங்குகின்றன. தினம் தினம் ஓய்வின்றி அவை செயல்படுவதால் அவை பழுது ஆகலாம் இல்லை? அசுத்தம் ஆகலாம் இல்லையா? அதனால் அவற்றைத் தினமும் சுத்தம் செய்ய வேண்டியுள்ளது. நல்ல எண்ணங்கள் மூலமாக, நல்ல செயல்களை செய்வதும், நல்லதே நினைப்பதும், நம் துணையாக இறைவனை எப்போதும் வைத்திருக்கும் செயல்கள் வழியாக ஐந்து கோசங்களை தினம் தினம் சுத்தி செய்யலாம். அப்படி செய்து வந்தால் என்றும் மனதில் ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம்தான்! எனவே நாளும் பொழுதும் குற்றம் நீக்க வேண்டும். நாளும் குறைகள் களைய வேண்டும். உடல் வளர்க்கவேண்டும். உயிர் வளர்க்க வேண்டும். நல்ல மணம் வளர்க்க வேண்டும். நல்லறிவு வளர்க்க வேண்டும். நல் ஆனந்தம் துõய்க்க வேண்டும். இறைவன் நம் உடலில் கொடுத்த ஐந்து கோசங்கள்தான் நிம்மதிக்கான, ஆனந்தத்திற்கான சாவி. அந்தச் சாவியை நாம் நன்றாக பராமரித்து, பயன்படுத்தி வந்தால் போதும். கையில் சாவி இருக்கும் போது கவலை எதற்கு? பூட்டைத் திற, மகிழ்ச்சி வரட்டும்! - தேவராஜன். *********************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக