வெள்ளி, 17 ஜனவரி, 2014

தற்கொலை பறவைகள்! - தேவராஜன்.


தற்கொலை பறவைகள்! - தேவராஜன். ஜதிங்கா ஒரு அழகிய மலைவாசஸ்தலம். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் இயற்கை அழகின் மடியில் அமர்ந்து மகிழ்கின்றனர்.இங்குள்ள வானுயர் மரங்கள், பரந்த செடி கொடிகள்,அடர்ந்த பசுமை, தெளிந்த நீரோடைகள் , தலைக்கு மேல் குளிர் துõவும் மேகங்கள் என மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விஷயங்கள் பல உண்டு. இந்த ஜதிங்கா மலைக்கிராமம் சில்சார் நகரத்தில் (அசாம் மாநிலம்) இருந்து 80 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இங்கு ஆச்சரியப்பட வைக்கும் சம்பவம் ஆண்டுதோறும் நிகழ்கிறது! அந்த நிகழ்வில் அடங்கி இருக்கும் மர்மம் மட்டும் இன்று வரை வெளிபடவே இல்லை! ஜதிங்காவில் ஒரு பெரிய பள்ளத்தாக்கு இருக்கிறது. அந்தப் பள்ளத்தாக்கில்தான் அந்த பயங்கரம் நடைபெறுகிறது! உலகில் இன்னும் தெளிவுபடுத்தப்படாத பல மர்மங்கள் இருக்கின்றன. இந்த வரிசையில்தான் செப்டம்பர் முதல் நவம்பர் வரை இந்தியாவின் அசாம் மாநிலத்தில் ஜதிங்கா கிராமத்தில் நடைபெறும் ‘பறவைகள் தற்கொலை’யும் புரியாத புதிராக இருக்கிறது. ஜதிங்காவின் அழகிய பள்ளத்தாக்கில் தான் கொத்து கொத்தாக ஆயிரம் ஆயிரம் பறவைகள் பறந்து வந்து தற்கொலை செய்து கொள்கின்றன! என்னது பறவைகள் தற்கொலை செய்து கொள்கின்றனவா! ஆச்சரியமாக இருக்கிறதா! மனிதர்கள் தான் விரக்தி, தோல்வி, கஷ்டம் இப்படி பல விஷயங்களால் மன உளைச்சல் உந்துதலில் தற்கொலைö சய்து கொள்வான் அல்லது கொள்வார்கள். பறவைகள் எப்படி? எதற்காக? எதனால்? அட பறவைகளுக்குக்கூடவா மனிதர்கள் போல துன்பம், துயரம், தோல்வி, விரக்தி எல்லாம் இருக்கும்? விடை யாருக்குத் தெரியும்? அந்தப் மர்மப் புதிருக்குப் பறவைகள்தான் விடை சொல்ல வேண்டும். இந்தக் கிராமத்தில் வழங்கப்படும் நாட்டுப்புற கதைகளின் படி இந்த கிராமத்தில் பறவைகள் தற்கொலை செய்து கொல்வதாக நம்பப்படுகிறது. எனவே இந்தக் கிராமம் சுற்றுலா பயணிகள் மத்தியில் புகழ் பெற்று விளங்குகிறது. அறிவியல் ஆய்வுகள், பறவைகள் உண்மையில் தற்கொலை செய்து கொள்வதில்லை, ஆனால் கொலை செய்யப்படுகின்றன என்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இலையுதிர் மாதத்தில் (செப்டம்பர், நவம்பர்) வரும் அமாவாசை இரவுகளில், இந்தப் பள்ளத்தாக்கில் பறக்கும் பறவைகள் தங்களது இலக்கிலிருந்து தவறி விடுவதாக கூறப்படுகிறது. இந்தப் பள்ளத்தாக்கு பகுதியில் பறக்கும் பறவைகள் அனைத்தும் ஒரே நாளில் உயிரை விடுகின்றன. அதாவது தற்கொலை செய்துகொள்கின்றன. இங்கு குறிப்பிட்ட 1.5 கி.மீ. தொலைவில் 200 மீட்டர் சுற்றளவில் பறக்கும் பறவைகள் மட்டும் தற்கொலை செய்து கொள்ளும் முடிவைத் தேர்ந்தெடுக்கின்றன. இங்கு பறந்து வந்த குறிப்பிட்ட பறவைகள் ஏதேனும் தொற்று வியாதியால் இறந்து இருக்கலாம் என நம்பிய மருத்துவர்கள் ,அவைகளை ஆய்வு செய்தபோது, இறந்த எந்தப் பறவையும், எந்த வித நோயாலும் தாக்கப்பட்டிருக்கவில்லை என்பதை அறிந்தனர். அந்த நாளில் நிலவிய சூழ்நிலை, தட்பö வப்பம் மற்றும் அன்று எதிர்பாராமல் பெய்த பலத்த மழையின் காரணமாக , தங்கள் இருப்பிடத்தையும், உணவு வரத்தையும் அழித்ததை எண்ணி மனம் வெதும்பி இறந்திருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தனர். கிராமங்களில் இரவு நேரங்களில் காடுகளுக்குத் தீவைப்பதால் தப்பி ஓடும் பறவைகள், திக்கு தெரியாமல் தத்தளித்து ஏதாவது ஒரு இடத்தில் பயத்துடன் ஒதுங்கும். அப்போது அதன் உடலில் ஏற்படும் மாறுபாடுகள், ரத்த ஓட்டத்தைப் பாதித்து, பின் மூளையும் பாதிக்கப்பட்டு சுய உணர்வின்றி, இவை தற்கொலை முடிவை மேற்கொள்கின்றன என்ற கருத்தும் சொல்லப்படுகிறது. மின்னல் தாக்கி இருக்கலாம், அல்லது ஆலங்கட்டி மழை தாக்கி இறந்திருக்கலாம், அல்லது புது வருடப் பிறப்பினையொட்டி வான வேடிக்கை கேளிக்கையினை தொடர்ந்து இப்படி ஆகியிருக்கலாம், அல்லது விஷமேறிய உணவை உண்டிருக்கலாம் என்று பல கோணங்கள் முன்வைக்கப்படுகிறது. பொதுவாக வயிறு உபாதை ஏற்படும்போது பறவைகளும், விலங்குகளும் சில மூலிகைகளை உண்டு சரி செய்துகொள்கின்றன என்பது கிராமங்களில் அறியப்படும் அனுபவத் தகவல்கள். மனிதனின் சுயநலமும், பேராசையும், காலநிலை மாறுபாடும், இயற்கையைச் சீரழித்து ,மாறுபாடுகளுக்கு உள்ளாக்குவதுமே இவ்வாறான விநோத நிகழ்வுகளுக்கு முக்கிய காரணங்கள் என்பதை மனிதன் ஏற்றுக்கொள்ளும் வரை இது போல மர்மங்கள் தொடரத்தான் செய்யும். பாக்ஸ் செய்தி கடந்த சில ஆண்டுகளாக வருடப்பிறப்பின் வார இறுதியில் கூட்டம் கூட்டமாய் பறந்த பத்தாயிரம் பறவைகளுக்கும் மேல் வானத்தில் இருந்து பொத், பொத்தென்று செத்து ஒரு சதுர மைல் அளவில் உள்ள ஏரியா முழுதும் விழுந்திருக்கிறதாம்! இந்த சம்பவம் நடந்ததுஅமெரிக்காவில் உள்ள அர்க்கான்சஸ் என்ற மகாணத்தில். அதுமட்டுமல்ல அமெரிக்காவில் லுõசியானா, ஓசார்க், பீபீ டவுன் சாலைகளில் ஆயிரக்கணக்கான பறவைகள் கொத்து கொத்தாக செத்து வீழ்ந்துகிடந்ததாம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக