வெள்ளி, 21 பிப்ரவரி, 2014

காவல் காக்கும் கற்பனை பூதங்கள்! --தேவராஜன்.


காவல் காக்கும் கற்பனை பூதங்கள்! --தேவராஜன். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே இப்போது இருக்கும் கிராப்பிக்ஸ் தொழில் நுட்பம் அப்போதும் இருந்திருக்கிறது போலும்! பண்டைய காலத்தில் கற்பனையான உருவங்களை கிராப்பிக்ஸ் தொழில் நுட்பத்தில் உருவாக்கி இருக்கின்றனர். எதற்காக? ஏன்? என்பது புரியாத மர்மமே! அன்னப்பறவை. இதுபற்றிய புராணக்கதை உண்டு. இப்படி ஒரு பறவை இருந்ததா, இல்லையா தெரியவில்லை. நம் ஊர் கோயில்களில் இருக்கும் துõண்களில், கோபுரங்களில், தேர்களில் பயமுறுத்தும் ஓர்உருவம் இருப்பதுண்டு. அதற்குப் பெயர் யாளி! இது ஒரு கற்பனை மிருகம்தான்! இதுதொடர்பான குறிப்புகள் புராணங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. இப்படி இந்த உலகில் ஏதேதோ கற்பனை பறவைகள், விலங்குகள் இருக்கின்றன. இவற்றை படைத்ததன் நோக்கம் என்னவென்று இது புரியவில்லை! மர்மமாகவே இருக்கிறது. எகிப்து நாட்டில் ஒரு கற்பனை விலங்கு ஒன்று இருக்கிறது. அது பற்றிய எகிப்து புராணங்களில் பல கதைகள் சொல்லப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. அந்த கற்பனை விலங்கின் பெயர் சிபிங்ஸ். இந்த விலங்கின் உருவம் என்பது, சிங்கத்தின் உடலும், செம்மறி ஆடு, வல்லூறு, மனிதன் ஆகியவற்றுள் ஒன்றின் தலையுடனும் கூடிய ஒரு உருவத்தைக் குறிக்கும். இது பண்டைய எகிப்தியர்களின் பழைய அரசுக்காலத்து உருவாக்கம். இது கிரேக்கத் தொன்மங்களிலும் இடம் பெற்றுள்ளது. எகிப்திய சிற்ப மரபில் இவை காவலுக்கு உரியவையாகக் கருதப்படுகின்றன. சிபிங்ஸ்கள் மூன்று விதமான வடிவங்களில் காணப்படுகின்றன. அண்ட்ரோ சிபிங்கஸ் இவை சிங்க உடலும் மனிதத் தலையும் கொண்டவை. கிரியோ சிபிங்ஸ் சிங்க உடலும் செம்மறியாட்டுத் தலையும் கொண்டு அமைந்தவை. ஹையெரொகோ சிபிங்ஸ் சிங்க உடலும் வல்லூறு அல்லது பருந்தின் தலையும் கொண்டவை. எகிப்தில் உள்ளவற்றில் பெரியவையும், புகழ் பெற்றவையுமான சிபிங்ஸ்கள் கீசாவில், நைல் நதியின் மேற்குக் கரையில், வடக்கு நோக்கியபடி, அமைந்து இருக்கின்றன. இதன் பாதங்களுக்கு இடையில் சிறிய கோயிலொன்றும் உள்ளது. கீசாவின் பெரிய சிபிங்சின் தலை எகிப்திய பாரோவான கப்ரா என்பவருடையது அல்லது அவருடைய தம்பியான ஜெடெப்ரா என்பவருடையது எனக் கருதப்படுகின்றது. எகிப்தில் இருக்கும் பெரிய பெரிய பிரமிடுகள் முன்பாக இவ்வகையான சிபிங்கள் இருக்கின்றன. காலை மடித்துப் படுத்தபடி, தலையை நிமிர்த்தி நேர்ப் பார்வை பார்க்கும் சிங்கத்தின் உடலும் மனிதத் தலையும் கொண்ட சிபிங்ஸ் வடிவச் சிலை எகிப்தின் பிரமிடுகளுக்கு அருகில் காணப்படுகிறது. எகிப்தின் புராதனச் சின்னமான பிரமிடுகளைப் போல் அவற்றின் அருகாமையில் சிபிங்ஸ் சிலைகளும் இடம்பெறுகின்றன என்பது ஏதோ ஒரு முக்கியத்துவத்தை அவை சொல்லாமல் சொல்லுகின்றன. பொதுவாக பிரமிடுகள் என்பவை நம் ஊர் சமாதி போலதான். எகிப்தில் பிரமிடுகளுக்குள் அரச பரம்பரையினர், உயர்குடிப் பிறந்தோர் ஆகியோரின் உடல்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்தப் பிரமிடுகளைத் காக்கும் காவல் தெய்வங்களாக சிங்க உடலும் மனிதத் தலையும் கொண்ட சிபிங்ஸ் சிலைகள் கருதப்படுகின்றன. அதாவது எல்லைச்சாமி மாதிரி. உண்மையில் அதற்காகத்தானா என்பது இதுவரை உறுதிபடுத்தவில்லை. இந்தச் சிபிங் சிலைகள் பற்றிய மர்மம் இன்னும் முற்றாகத் துலங்கவில்லை. கிறிஸ்துவின் பிறப்பிற்கு முந்திய 2,500-3,000 ஆண்டுகளுக்கு இடையே சிபிங்ஸ் சிலைகள் எழுப்பப்பட்டிருக்கலாம் என்பது தொல்பொருள் ஆய்வுகளின் முடிவு. அதாவது இன்றைக்கு 5000 வருடங்களுக்கு முந்தியவையாக அவை இருக்கலாம். மனிதத் தலையின் நுண்ணறிவும் சிங்கத்தின் உடற் பலமும் ஒரு சேர்ந்த இலட்சிய வடிவம் என்று சிபிங்ஸ் பற்றிக் கூறப்படுகிறது. சிபிங்ஸ் போன்ற சிலைகள் வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு உருவ அமைப்பில் பல காணப்படுகின்றன. அவைகளின்வடிவங்கள்,ö பயர்கள் வித்தியாசப் பட்டாலும் அவைகளின் உருவாக்க எண்ணம் அல்லது அவை பற்றிய தொன்ம கதைகள் பொதுமையாக இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. பாக்ஸ் செய்தி ராம அவதாரத்தில் ஒன்று நரசிம்ம அவதாரம். இந்த அவதாரம் இரணியனை வதம் செய்வதற்காக மனிதனும் சிங்கமும் கலந்த உடலமைப்பைக் கொண்டதாக இடம்பெறுகிறது. இந்த அவதாரம் சிபிங்ஸ் சிலைக்குப் பிந்தியதாக இருக்கலாம் என்று அறிவியலாளர்கள் கருதுகின்றனர் * மனிதத் தலையும் சிங்க உடலும் கொண்ட உயிரினங்கள் பற்றிய தகவல்கள், தெற்காசியா மற்றும் தென்கிழக்காசிய நாடுகளின் மரபு, தொன்மங்கள், சிற்பங்கள் முதலியவற்றில் காணப்படுகின்றன. இவை பலவிதமாகப் பெயரிட்டு அழைக்கப்படுகின்றன. இந்தியாவில் புருஷமிருகம், நரசிம்ஹ என்றும், மனுசிஹ அல்லது மனுதிஹ என மியன்மாரிலும், நோரா நைர் அல்லது தெப்நோரசிங் எனத் தாய்லாந்திலும் சிபிங்சைக் குறிக்கப் பெயர்கள் வழங்குகின்றன. ********

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக