வெள்ளி, 8 அக்டோபர், 2010

தினமலர் பெண்கள் மலரில் வெளிவரும் மருத்துவத் தொடர்:

தினமலர் பெண்கள் மலரில் வெளிவரும் மருத்துவத் தொடர்:
டாக்டர் வேல்விழி நேர்காணல் மருத்துவக் கட்டுரைகள்:
தொகுப்பு தேவராஜன் பாகம் ... 3 ( 38ல் இருந்து 47 வரை)

சகல நோய் நிவாரணி பப்பாளி!

இது ஒரு பழந்தரும் மரமாகும். முருங்கை மரத்தைப் போன்று அதிக பலம் இல்லாத மரவகையைச் சேர்ந்தது. இதன் பூர்வீகம் மெக்சிக்கோ. தற்போது மேற்கிந்தியத் தீவுகள், ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, தென் அமெரிக்கா முதலான நாடுகளிலும் பப்பாளி விளைகிறது. இதன் விளைச்சல் காலம் பிப்ரவரி, மார்ச் மாதங்களும், மே முதல் அக்டோபர் வரையான மாதங்களும் என சொல்லப்படுகிறது. பப்பாளி காயாக இருக்கும் போது பச்சையாகவும், நன்கு கனிந்ததும் மஞ்சளாகவும் தோற்றமளிக்கும். விதைகள் கசப்பாக இருக்குமும். பார்ப்பதற்கு கரு மிளகு போன்றிருக்கும்.
இது மத்திய அமெரிக்காவிலிருந்து 16ம் நுõற்றாண்டில் டச்சு வணிகர்களால் இந்தியாவுக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
மற்றவகை பழங்களைக்காட்டிலும் பப்பாளியில் குறைந்த அளவு கலோரி உள்ளது. மேலும் ஆப்பிள் ஆரஞ்சு பழங்களைவிட அதிகபடியான உயிர்ச்சத்துக்கள் பப்பாளியில் அதிகம் உள்ளது. இருப்பினும் ஏனோ மற்ற பழங்கள் பெறும் மதிப்பை அதிக சத்து இருந்தும், விலை மலிவாக இருந்தும் மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாமல் மதிப்பை பெறாமல் இருக்கிறது.
இதன் கனிகள், காய், விதைகள், இலை ,பால் மருத்துவ பயன் உடையது.
காய், பால் ருது உண்டாக்கி, சிறுநீர்ப் பெருக்கி, மலமிளக்கி.
பழம்: உரமாக்கி, சிறுநீர்ப்பெருக்கி, மலமிளக்கி.
100 கிராம் பப்பாளியில் உள்ள சத்துகள்:
39 கலோரி, கார்போஹைட்ரேட் 9.81 கிராம், சர்க்கரை சத்து 5.90 கிராம், நார்சத்து 1.8 கிராம், கொழுப்பு 0.14 கிராம்,புரதச்சத்து 0.61 கிராம், விட்டமின் எ 55 மி.கிராம், பி.கரோட்டீன் 276 மி.கிராம், தையமின் 0.04 மி.கிராம், ரிபோப்ளோவின் 0.05 மி.கிராம், நியாசின் 0.338 மி.கிராம், விட்டமின் பி6 0.1 மி.கிராம், கால்சியம் 24 மி.கிராம், இரும்பு சத்து 0.10 மி.கிராம், மெக்னீசியம் 10 மி.கிராம், பாஸ்பரஸ் 5 மி.கிராம், பொட்õசியம் 257 மி.கிராம், சோடியம் 3 மி.கிராம்.
மேலும் இதில் புரதங்களை சிதைக்கும் நொதி ( என்சைம்கள்) பப்பைன் இருக்கிறது. மாலிக் அமிலும், அஸ்கார்பின் அமிலம் உள்ளது. உடலுக்கு தேவையான அனைத்து உயிர்சத்துக்களும் நிறைந்த கொழுப்பு அற்றி உணவுப்பொருளமாகும்.
பப்பாளியினால் குணமாகும் நோய்கள்:
செரியாமையை நீக்கும்.
வயிற்றுப் புழுவை அழிக்கும்.
எலும்பு மூட்டுகள் வலியை ( அர்த்ரிட்டிஸ்) குணப்படுத்தும்.
ரத்தம் உறைதலை அகற்றும்.
தீப்பட்ட புண்ணை ஆற்றும்.
ரத்த ஓட்டத்தை சீர்ப்படுத்தும்.
மலச்சிக்கலை நீக்கும்.
மன அழுத்த நோயை குணப்படுத்தும்.
வீங்கிய நிணநீர் சுரப்பினை கரைக்கிறது.
கண்நோய்களை நீக்கும்.
பித்தப்பை கல்லை கரைக்கும்.
வாயு தொல்லையை போக்கும்.
ரத்த குழாய் தடிப்பை நீக்கும்.
இதயநோயைத் தடுக்கும்.
மூலநோயை போக்கும்.
தோல் நோயான காளான்சக பபையை குணமாக்கும்.
சுவாச கோளாரை போக்கும். கட்டிகள், புண்கள் குணமாகும்.
சிறுநீர்பை தாபிதம் குணமாகும்.
முகப்பொலிவை உண்டாக்கும்.
உடல்கொழுப்பை குறைத்து உடல் பருமனை குறைக்கும்.
பப்பாளியும் மருத்துவ குணங்களும்:
பப்பாளியில் விட்டமின் இ இருப்பதால் வயது முதிர்ச்சியினால் ஏற்படும் தோல் சுருக்கத்தை தடுத்து இளமையை தருகிறது.
பப்பாளியின் அதிக அளவு விட்டமின் சி இருப்பதால் மூட்டுவலி, இடுப்புவலி வராமல் தடுக்கிறது.
ப்பாளியின் நார்சத்து அதிகளவு இருப்பதால் தொடர்ந்து 4 வாரம் பப்பாளியை உண்டால் உடலில் மொத்த கொழுப்பில் 19.2 சதவீதத்தைக் குறைத்து அதிக உடல் எடையை குறைக்கிறது.
பப்பாளிச்சாறு கல்லீரல் புற்று நோயை தடுக்கிறது.
பப்பாளியில் நார்ச்சத்து, இரும்பு சத்து, விட்டமின் சி, பி கரோட்டீன், விட்டமின் இ இருப்பதால் புற்று நோய் தடுக்கிறது.
பப்பாளி விதையில் இருந்து எடுக்கப்படும் சத்து சிறுநீரக செயலிழப்பை தடுக்கிறது.
விட்டமின்கள் எ,சி, இ இருப்பதால் இதயநோயை வராமல் தடுக்கும்.
நரம்புகளை பலப்படுத்தி ஆண்மை தன்மையை அதிகரிக்கும்.
உடலில் ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தும். ஞாபகசக்தியை அதிகரிக்கும்.
பப்பாளியை தொடர்ந்து சாப்பிட நோய் எதிர்ப்ப சக்தியை அதிகரிக்கும். எந்த தொற்று நோயும் உடலை தாக்காது.
பப்பாளி இலைகளின் பொடி யானைக்கால் வியாதிக்கும், நரம்பு வலிகளுக்கும் மருந்தாக விளங்குகிறது. பப்பாளி மரத்தோலானது கயிறு தயாரிக்கவும், இலைகள் சோப்புக்கு மாற்றாகவும் சில நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. ஜாவா தீவு மக்கள் பப்பாளி பூக்களை சாப்பிடுகின்றனர்.
தேவராஜன்

வலிப்பைக் கட்டுப்படுத்தும் கொ ய்யா!


கொய்யா, இந்தியா முழுவதும் பயிராகும் சிறு மரம். இதில் வெள்ளை கொய்யா, சிவப்பு கொய்யா என்று இரு வகையுண்டு. இரண்டின் பயன், மருத்துவ குணங்களும் ஒன்றேயாகும்.
கொய்யா மரத்தின் இலை,காய், பழம், பட்டை, வேர் ஆகியவை மருத்துவ பயன் உடையவை.

* 100 கிராம் கொய்யாவில் உள்ள சத்துக்கள்

ஈரப்பதம் 77 முதல் 86 கிராம்
நார்ச்சத்து 2.8 முதல் 5.5 கிராம்
புரதம் 0.9 முதல் 1 கிராம்
கொழுப்பு 0.1 முதல் 0.5 கிராம்
சாம்பல் சத்து 0.43 முதல் 0.7 கிராம்
கார்போஹைட்ரேட் 10 கிராம்
கால்சியம் 9.1 முதல் 17 மி.கிராம்
பாஸ்பரஸ் 17.8 முதல் 30 மி.கிராம்
இரும்புசத்து 0.30 முதல் 0.70 மி.கிராம்
கரோட்டீன் 200 முதல் 400 ஐ.யு.
தையமின் 0.046 மி.கிராம்
ரிபோப்ளேவின் 0.03 முதல் 0.04 மி.கிராம்
நியாசின் 0.6 முதல் 1.068 மி.கிராம்
விட்டமின் பி3 40 ஐ.யு
விட்டமின் பி4 35 ஐ.யு
மேலும் இதில் டெர்பினாய்டுகளும் கேலிக் அமிலமும் உள்ளன.

மருத்துவ பயன்கள்

* கனிகள் : மல மிளக்கி. குளுமையுடன் வலிமை தரும். குடல் மற்றும் ஈறுகளின் ரத்தக்கசிவை தடுக்கும். தற்காலிக உணர்வின்மை, தலைசுற்றல், இளைப்பு ஆகியவற்றைக் குணப்படுத்தும். விந்து உற்பத்தியை அதிகப்படுத்தும். உடலில் உள்ள புழுக்களைப் போக்கும்.
* பட்டை : உடலில் உள்ள பாக்டீரியாவை போக்கும். காய்ச்சலை நீக்கும்.
குழந்தைகளின் வயிற்றுப் போக்கை நீக்கும்.
* இலை : இலையைக் குடிநீரில் போட்டுவைத்து அருந்த, மூளையில் ஏற்படும் பாதிப்புகள் நீங்கும். வலிப்பு நோயைப் போக்கும்.
இலையைக் கடித்து உண்ண பல்வலி தீரும். இலையை அரைத்து பற்றிட மூட்டுவலி, வாதம், புண் அடிப்பட்ட காயம் நீங்கும். இதன் இலையுடன் ஆடாதோடை இலை, மிளகு சேர்த்து குடிநீரில் இட்டு அருந்தினால் இருமல், ஆஸ்துமா தீரும்.

பயன்படுத்தும் முறை

கொய்யாப் பழத்தை கொட்டை நீக்கி வெல்லம் சேர்த்து அப்பம், தோசை, ரொட்டியுடன் உண்ணலாம்.
மலச்சிக்கல் தீர ஒரு துண்டு கொய்யாப் பழமே போதுமானது.
இலை பொடியை தேனுடன் சேர்த்து சாப்பிட வாந்தி தீரும்.
இதன் பட்டை, அதிக உதிரப்போக்கை தடுக்கும்.
மூளையில் நரம்பு மண்டல பாதிப்பால் தோன்றும் வலிப்பு நோயைக் குணப்படுத்த கொய்யாவைப் பயன்படுத்தலாம்.
காயை வாரம் இரண்டு முறை உண்ண மலச்சிக்கல் தீரும்.
உடல் பருமனை நீக்கவும், கொழுப்பு சத்தைக் குறைக்கவும் தினம் ஒரு கொய்யாவைத் தொடர்ந்து சாப்பிட ஒரு மாதத்தில் நல்ல பலனை பெறலாம்.
சீறுநீர நோயாளிகள் கொய்யாவைத் தவிர்ப்பது நலம்.

புற்றுநோய் வராமல் தடுக்கும் கேரட்!

தாவர தங்கம் என்று சிறப்பு பெயர் கொண்டது கேரட். இது சமையலுக்குப் பயன்படுத்தப்படும் கிழங்கு வகைகளில் ஒன்று. இதை பச்சையாகவும், சமைத்தும் உண்ணலாம். தென்மேற்கு ஆசியா, ஐரோப்பாவில் காடுகளில் காணப்பட்ட கிழங்கு வகை தாவரம் இந்த கேரட். இது இந்தியாவிலும் பயிரப்படுகிறது. இதில் சிவப்பு, வெள்ளை, மஞ்சள் நிறவகைகளும் உண்டு.
வேர், கிழங்கு உறுப்புகள் மருந்துவக்குணம் கொண்டவையாக உள்ளன.

ஊட்டச்சத்து மதிப்பு:
100 கிராம் கேரட்டில் அடங்கியுள்ள சத்துகள்:
சக்தி 41 கலோரி
கார்போஹைட்ரேட் 9 கிராம்
சர்க்கரை சத்து 5 கிராம்
நார்சத்து 3கிராம்
கொழுப்பு 0.2 கிராம்
புரதச்சத்து 1கிராம்
விட்டமின் ஏ 835 மி.கிராம்
பீட்டா கெரொடீன் 8285 மி.கிராம்
தையாமின் 0.04 மி.கிராம்
ரிபோளேவின் 0.05மி.கிராம்
நியாசின் 1.2 மி.கிராம்
விட்டமின் பி6 0.1மி.கிராம்
இரும்புசத்து 19 மி.கிராம்
விட்டமின்சி 7 மி.கிராம்
கால்சியம் 33 மி.கிராம்
மெக்னீசியம் 18 மி.கிராம்
பாஸ்பரஸ் 35 மி.கிராம்
பொட்டாசியம் 240 மி.கிராம்
சோடியம் 2.4 மி.கிராம்
மேலும் இதில் உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான அனைத்து உயிர்சத்துகளும் உள்ளது.
கேரட் வாங்கும் போது நல்ல ஆரஞ்சு நிறமான கேரட்டை வாங்குவது சிறந்தது. கேரட்டின் ஆரஞ்சு நிறத்திற்கு காரணம் அதிலுள்ள பீட்டா கெரோட்டீனாகும்.
மருத்துவ பயன்கள்:
கண்பார்வை கோளாறுகளுக்கு சிறந்தது.
கேரட் புற்றுநோயை வராமல் தடுக்கும். புற்று நோய் கிருமியை அழிக்கும்.
தோல் நோய்களான கரப்பான், உலர்ந்த தோல், காளாஞ்சகப்படை நோய்களில் தோலை பாதுகாக்கும்.
கேரட்டில் பீட்டா கெரோட்டீன் இருப்பதால் உடல் செல்கள் முதிர்ச்சியை தடுக்கும். எனவே வயது முதிர்தலை தடுத்து இளமையை தரும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். குழந்தைகளுக்கு தினமும் 2 டம்ளர் கேரட் சாறு தொடர்ந்து தர அவர்களது நோய் எதிர்ப்ப சக்தி 70 சதவீதம் அதிகரிப்பதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.
இதய நோய்களை போக்கும்.
கேரட்டும் அதனால் தீரும் நோய்களும்:
அமிலத்தன்மை:
நெஞ்செரிச்சல், புளிஏப்பம் போக்கும். ரத்தத்தில் அமிலத் தன்மை, சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.
முகப்பரு:
ரத்தத்தை சுத்திகரிக்கும். கல்லீரல் நஞ்சுகளை அகற்றி ரத்த அணுக்களை பலப்படுத்தும்.
ரத்தசோகை:
கேரட்டில் உள்ள மூலக்கூறுகள் மனித உடலின் ஹீமோகுளோபினை ஒத்துள்ளதால் ரத்தசோகையை தடுக்கும்.
ரத்தக்குழாய் சுவர் தடிப்பு:
ரத்தக்குழாய் சுவர்களில் அதிக அளவு கொழுப்பு படிவதால் இதயநோய், பக்கவாதம் ஏற்படுகிறது. ரத்தக்குழாய் சுவர்களில் படிந்துள்ள கொழுப்பை படியாமல் தடுக்கிறது. எனவே இதயநோய், பக்கவாதம் வரமால் தடுக்கப்படுகிறது.
புற்றுநோய்:
தினமும் உணவில் குறைந்தது ஒரு கேரட் உண்டு வந்தால் புற்றுநோய் வராமல் தடுக்கலாம்.
கொலஸ்டிரால்:
கேரட்டில் பெக்டின் இருப்பதால் ரத்தத்தில் உள்ள கொழுப்புசத்தை குறைக்கிறது.
கண்நோய்கள்:
இதில் பீட்டா கெரோட்டீன் மற்றும் கண் நோய்களைத் தடுக்கும் எதிர்பு சக்திகள் இருப்பதால் கண்நோய்களுக்கு கேரட் சிறந்த உணவு பொருள்.
தோல் நோய்கள்:
கேரட்டில் விட்டமின் சி இருப்பதால் தோலை பலப்படுத்தி, பளபளப்பாக்கும்
கல்லீரல் நோய்கள்:
மஞ்சள்காமாலை, கல்லீரல் செயல் இழப்பு நோய்களுக்கு சிறந்த உணவாகும்.
பயன்படுத்தும் முறைகள்:
கேரட் சமைத்து பொரியல், கூட்டாக உண்ணலாம்.
கேரட் சாறு சிறந்த டானிக். வயதானவர்கள், குழந்தைகளுக்கு தினமும் ஒரு டம்ளர் öõடுக்க ஒரு மாதக்காலத்தில் உடல் பலப்படும்.
கேரட் ஊறுகாய், துவையலாக சாப்பிடலாம்.
வாரம் 2 முறை சிறுவர்களுக்கு சுண்டலில் கேரட் துருவல் சேர்த்து தரலாம்.
பச்சையாக கேரட்டை உண்பதால் ஒரு சதவீதம் பிடீட்டா கெரோட்டீன் தான் கிடைக்கம். ஆனால் கேரட்டை சாறாக்கி பருக நுõறு சதவீதம் பீட்டா கெரோட்டீன் உடலில் சேரும்.
உடற்பருமன் குறைய தினமும் வெறும் கேரட் சாறு சர்ககரை இல்லாமல் 3 மாதம் பயன்படுத்த உடல் மெலிவதுடன், முகம் பளபளப்பு தோல் பளபளப்பு பெறலாம்.
சர்க்கரை நோயாளிகள் இதை வாரம் ஒரு முறை பயன்படுத்தினால் மட்டும் போதும்.
அதிகளவு கேரட் பயன்படுத்தினால் தோல் ஆரஞ்சு நிறமடையும். அதிகளவு என்பது உடலுக்கு நல்லது என்பதற்காக 3 வேளையும் கேரட் உண்பது அல்லது வருடக்கணக்கில் அதிகம் உண்ணக்கூடாது. வாரம் 3 முறை உண்பது சிறந்தது.அளவாக உண்டு இதன் அதிக பயன்களை பெறலாம்.
கேரட் தீர்க்கும் நோய்கள்:
மலச்சிக்கல், கழிச்சல், கரப்பான், வலிப்பு நோய், வயிற்று பொருமல், இளநரை, முடி உதிரல், செரியாமை, மூட்டுவலி, கல்லடைப்பு, மஞ்சட்காமாலை, அதிக உடற்பருமன், வயிற்று புண், நடுக்குவாதம், கக்குவான், தோல் சுருக்கம், அம்மை, சிறுநீரக தாபிதம், வாய்க்குமட்டல், கல்லீரல் வீக்கம், நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, உயிர்சத்து குறைவு மேலும் கண்நோய்களை போக்கும்.
தேவராஜன்


சீறுநீரக கல்லை கரைக்கும் முள்ளங்கி!

இது கிழங்கு வகையைச் சேர்ந்தது. பொது வெப்ப நாடுகளில் பயிரிடப்படுகிறது. இந்தியாவில் எல்லா பகுதியிலும் பயிரிடப்படுகிறது.
வகைகள்:
இதில் அளவு, நிறம், விளையும்காலம் பொருத்து வகைப்படுத்தப்படுகிறது. வெள்ளை, சிவப்பு, மஞ்சள் ந்த மூன்று வகைகள் தான் அதிகம் பயிரிடப்படுகிறது. ஆனால் இதன் பண்புகள் இந்த மூன்று வகைக்கும் ஒன்றேயாகும்.
பயன்படும் உறுப்புகள்:
இலை, கிழங்கு, விதை. இதில் இலை, கிழங்கு கார்ப்பு சுவையுடையது. விதை இனிப்பு சுவையுடையது.
ஊட்டச்சத்து மதிப்பு:
100 கிராம் முள்ளங்கி கிழங்கில் அடங்கியுள்ள சத்துக்கள்:
கலோரி16 கே, கார்போஹைட்ரேட் 3.40 கிராம், சர்க்கரை1.86 கிராம், நார்ச்சத்து1.6கிராம், கொழுப்புச்சத்து 0.10கிராம், புரதச்சத்து0.68 கிராம், விட்டமின் பி1 0.012மி.கிராம், விட்டமின் பி20.039 மி.கிராம், விட்டமின் பி3 0.254 மி.கிராம், விட்டமின்பி5 0.165 மி.கிராம், விட்டமின்பி6 25 மி.கிராம், விட்டமின்பி914.8 மி.கிராம்,கால்சியம் 25 மி.கிராம், இரும்புசத்து 0.34 மி.கிராம்,மெக்னீசியம்10 மி.கிராம், பாஸ்பரஸ்233மி.கிராம், ஜிங் 0.28 மி.கிராம்.
100 கிராம் உலர்ந்த இலையில்:
கலோரி 287, புரதம்28.7 கிராம், கொழுப்பு5.2 கிராம், கார்போஹைட்ரேட் 49.6 கிராம், நார்ச்சத்து 9.6 கிராம், சாம்பல்சத்து 16.5 கிராம்.
தாது உப்புக்கள்:
கால்சியம் 1913 மி.கிராம், பாஸ்பரஸ் 261 மி.கிராம், இரும்புச்சத்து 35.7 கிராம், சோடியம் 956 மி.கிராம், பொட்டாசியம் 4348 மி.கிராம்.
முள்ளங்கி போக்கும் நோய்கள்:
வாத நோய்கள், கரப்பான், வயிற்றெரிச்சல், குத்தல், குடல் பருமன், இருமல், கபநோய்கள், தலைவலி, நீரேற்றம், பல்போய், குன்மம், இரைப்பு, மூலக்கடுப்பு முதலியன.
முள்ளங்கி இலை:
முள்ளங்கி இலையால் வாதமும், பித்தமும் பெருகும். வயிற்றில் இருக்கும் புழு, மார்பெரிச்சல் உண்டாகும். வயிற்று நோய் தீரும்.
சிறுநீர்ப் பெருக்கி, மலமிளக்கி, கோழையகற்றி.
கிழங்கு:
சிறுநீர்ப்பெருக்கி, இசிவகற்றி, பித்தநீர்ப்பெருக்கி
விதை:
வயிற்றிலுள்ள வாயுவை அகற்றும். சிறுநீர்ப்பெருக்கி, கோழையகற்றி, மலமிளக்கி, ஆண்மை பெருக்கி, வெப்பமுண்டாக்கி, பசித்துõண்டி.
முள்ளங்கியின் மருத்துவப் பயன்கள்:
முள்ளங்கி கிழங்கு இது உடலைப்பலப்படுத்தும்.
சீரணத்தை துõண்டி பசியை அதிகப்படுத்தும்.
பித்தநீர் சுரப்பை அதிகரித்து கல்லீரல், குடலை துõண்டி பசி, சீரணத்தை அதிகப்படுத்துவதுடன் மலமிளக்கியாக செயல்பட்டு மலச்சிக்கலை போக்குகிறது.
முள்ளங்கி சிறுநீரக கல்லை கரைக்கிறது. இதற்கு சிறுநீர்ப்பெருக்கி செய்கை இருப்பதால் கல்லடைப்பை நீக்கி சிறுநீர்ப் பெருக்கை அதிகப்படுத்தி சிறுநீர் தொற்று நோய் போக்குகிறது.
பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்று நோய் நுண்கிருமிகளுக்கு எதிராக செயல்பட்டு அவற்றால் ஏற்படும் நோய்களை நீக்குகிறது.
முள்ளங்கி இலை ஆஸ்துமாவை குணப்படுத்தும். இலையை பருப்புடன் சேர்த்து உண்ண சிறுநீர்ப்பெருக்கை அதிகப்படுத்தும். கழிச்சலை போக்கும்.
முள்ளங்கி விதை செரியாமையை போக்கும். வயிற்று உப்பிசத்தை போக்கும். நெஞ்சுசளியை நீக்கும். விந்து ஞூணுக்கள் உற்பத்தியை அதிகரிக்கும். ஆண்மையை பெருக்கும்.
பயன்படுத்தும் முறைகள்:
முள்ளங்கி இலையை சுத்தம் செய்து இடித்து சாறு பிழிந்து அருந்த இருமல், சளி, மூச்சுத்திணறல் குணமாகும்.
முள்ளங்கி இலையை நீர் சேர்த்து கொதிக்கவைத்து வடிகட்டி அருந்த கழிச்சல் நீங்கும்.
முள்ளங்கி இலையை இடித்து சாறுபிழிந்து அதனுடன் சீரகத்துõள் சேர்த்து அருந்த வாயுதொல்லை நீங்கும்.
முள்ளங்கி கிழங்கை இடித்து சாறுபிழிந்து அருந்த கல்லடைப்பு தீரும்.
அதிக உடல் பருமன் உள்ளவர்கள், பெருவயிறு நோயாளிகள், சிறுநீர் சரியாக பிரியாமல் அவதிப்படுபவர்கள் தினமும் முள்ளங்கி சாறை 30 மில்லி முதல் 60 மில்லி வரை ஒரு மாதம் தொடர்ந்து உண்ண நல்ல பலனை பெறலாம்.
முள்ளங்கி விதையை பொடித்து தினமும் ஒரு டஸ்பூன் வீதம் இளநீரில் கலந்து அருந்த விந்து நஷ்டம், ஆண்மையின்மை முதலியன குணமாகும். ஆண்மையை பெருக்கும். உடல் பலப்படும்.
தேவராஜன்


மண்ணீரலைக் காக்கும் உருளைக்கிழங்கு!


பூமியின் கீழ் விளையக்கூடிய ஒரு கிழங்கு வகையைச் சேர்ந்தது உருளைக்கிழங்கு. குளிர்ப்பிரதேசங்களில் நன்றாய் விளையக்கூடியது. இது இந்தியா முழுமைக்கும் கிடைக்கிறது.
பயன்படும் உறுப்பு: இலை, கிழங்கு
செய்கை:
இலை இசிவகற்றி. சுவை இனிப்பு.
கிழங்கு: இது மலத்தை இளகச் செய்வதால் மலமிளக்கி, சிறுநீரை மிகுதியாகப் போக்குவதால் சிறுநீர்ப் பெருக்கி,பாலுõட்டும் தாய்மார்களுக்கு பால் சுரப்பை அதிகப்படுத்துவதால் பால் பெருக்கி, நரம்புகளுக்கு சிற்றயர்வை உண்டாக்கி, உற்சாகத்தை உண்டு பண்ணுவதால் நரம்பு வெப்பகற்றி.
ஊட்டச்சத்து மதிப்பு:
உருளைக்கிழங்கில் பல இன்றியமையாத உயிர்ச்சத்துக்கள், தாது உப்புக்கள் உள்ளன.
150 கிராம் எடையுள்ள ஒரு உருளைகிழங்கில் தோ லுடன் 27 கிராம் விட்டமின் சி( 45 சதவீதம் ஒரு நாளைக்குத் தேவைப்படுகிறது), 620 மி.கிராம் (18 சதவீதம் தினசரி தேவைப்படுகிறது) விட்டமின் பி6 0.2 மி.கிராம்( ஒரு நாள் தேவை 10 சதவீதம் தேவைப்படுகிறது) கிடைக்கிறது. மேலும் இதில் தையமின், ரிபோலேவின், நியாசின், போலேட், மெக்னீசியம், பாஸ்பரஸ், இரும்புசத்து, நாகச்சத்து கிடைக்கிறது.
தோலுடன் கூடிய 100 கிராம் பச்சை உருளைகிழங்கில் உள்ள சத்துக்கள்:
கலோரி 77, கார்போஹைட்ரேட் 19 கிராம், ஸ்டார்ச் 15 கிராம், நார்சத்து 2.2 கிராம், கொழுப்பு 0.1 கிராம், புரதச்சத்து 2 கிராம், நீர்சத்து 75 கிராம், தையாமின் 0.08 மி.கிராம், ரிபோளேவின் 0.03 மி.கிராம், நியாசின் 1.1 மி.கிராம், விட்டமின் பி6 0.25 மி.கிராம், விட்டமின் சி 20 மி.கிராம், கால்சியம் 12 மி.கிராம், இரும்புசத்து 1.8 மி.கிராம், மெக்னீசியம் 23 மி.கிராம், பாஸ்பரஸ் 57 மி.கிராம், பொட்டாசியம் 421 மி.கிராம், சோடியம் 6 மி.கிராம் உள்ளது.
மருத்துவ பயன்கள்:
இது மண்ணீரலை பலப்படுத்தி உடலை தேற்றும்.
வயிற்றில் உள்ள வாயுவை அகற்றி வயிற்று வலி, வீக்கத்தை போக்கும்.
கிழங்கில் அட்ரோபின் சிறிது உள்ளதால் வயிற்றில் உள்ள அமிலசுரப்பை குறைக்கும். எனவே, வயிற்று எரிச்சல் குறையும்.
இதில் உள்ள ஸ்டார்ச் நார்சத்தாக செயல்படும்.
புற்று நோயை தடுக்கும்.
ரத்தத்தில் கொழுப்புசத்தை குறைக்கும்.
சிறிதளவு உண்டாலே வயிற்றை நிரப்பி, உடற்பருமனை குறைக்கும்.
உடல் பலப்படுத்துவதோடு, வளர்ச்சியை அதிகப்படுத்தும்.
நாட்பட்ட இருமல் நோயால் துõக்கமின்றி அவதிப்படுபவர்கள் இதன் இலைசாற்றை உண்டு வர துõக்கம் வரும்.
இதை வேகவைத்து தோல் நீக்கி நெய்யில் வறுத்து புசிக்க உடல் எடை கூடுவதுடன் முகம் பொலிவடையும், அழகை தரும்.
இது சிறந்த கற்ப மருந்தாகும். இதை தொடர்ந்து ஒரு மண்டலம் புசிக்க நரை, திரை, மூப்பு இன்றி நீண்டகாலம் இளமையாக வாழ்வதுடன் நோயின்றி ஆரோக்கியமாக வாழலாம்.
குறிப்பு: சர்க்கரை நோயாளிகள், வாத நோயாளிகள் இதை தவிர்ப்பது நன்று.
தேவராஜன்


கல்லீரலுக்கு கவசம் கத்தரிக்காய்

இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவினைச் சார்ந்த குறுஞ்செடி. வெப்ப மண்டல பகுதிகளில் அதிகமாக பயிரிடப்படுகிறது. குளிரான பகுதிகளில் கண்ணாடி கூரைவேய்ந்த அறைகளில் வளர்க்கப்படுகிறது. இந்தியாவின் எல்லாப் பகுதியிலும் பயிரிடப்படும் முக்கிய சமையல் காய் தாவரமாகும்.
இது எளிதாக கிடைக்கக்கூடியது. எல்லா பருவங்களிலும், எல்லா இடங்களிலும் ஆண்டு முழுவதும் கிடைக்கக்கூடியது.
ஏழை, பணக்காரர் என இரு தரப்பினரும் பயன்படுத்தக்கூடிய விலை மலிவான காய்ஆகும். ஆனால் இதன் ஊட்டச்சத்து மதிப்போ மிக அதிகம்.
இதில் உயிர் வாழ இன்றியமையாத அனைத்து உயிர்சத்துக்கள் நிரம்பியுள்ளது. இதில் விட்டமின் ஏ2, விட்டமின் பி அதிகம் இருப்பதால் ஏழையின் முக்கிய உணவாக கருதப்படுகிறது.
மருத்துவ பயன் உடைய பகுதிகள்:
இலைகள், கனி, விதை, வேர்.
ஊட்டச்சத்து மதிப்பு:
100 கிராம் பச்சை கத்தரிக்காயில் உள்ள சத்துகள்:
சக்தி 20 கே கலோரி, கார்போஹைட்ரேட் 5.7 கிராம், சர்க்கரைச்சத்து 2.35 கிராம், நார்ச்சத்து3.4 கிராம், கொழுப்புச்சத்து 0.19 கிராம், தையாமின் 0.0039 மி.கிராம், ரிபோளேவின் 0.037 மி.கிராம், நியாசின் 0.649 மி.கிராம், பேன்டோதெனிக்அமிலம் 0.281 மி.கிராம், விட்டமின் பி6 0.084 மி.கிராம்,விட்டமின் பி6 22 மி.கிராம், விட்டமின்சி 2.2மி.கிராம், கால்சியம் 9 மி.கிராம், இரும்புசத்து 0.24 மி.கிராம், மெக்னீசியம் 14 மி.கிராம், பாஸ்பரஸ் 25 மி.கிராம், பொட்டாசியம் 230 மி.கிராம், துத்தநாகம் 0.16 மி.கிராம், மாங்கனீசு 0.25 மி.கிராம்.
மேலும் நிகோடினிக் அமிலம், லுஸைன், அர்ஜினைன், டையோஸ் ஜெனினி, டிரான்ஸ் கெபெய்க் அமிலம், டேடுரடியோஸ், சொலசோடைன் போன்ற மருத்துவ குணங்களுக்கு அடிப்படையான வேதிப்பொருள்கள் உள்ளன.
மருத்துவப் பயன்:
கத்தரியின் இலை ஆஸ்துமா, மூச்சு குழல் நோய்களை போக்குகிறது.
கத்தரியின் இலை சிறுநீர்கழிப்பின் போது ஏற்படும் வலியை குணப்படுத்தும்.
கனிகளில் புரதம், கார்போஹைடிரேட் மற்றும் விட்டமின்கள் ஏ,பி1,பி2,சி காணப்படுகின்றன. விட்டமின் அதிகமாக இருப்பதால் நாக்கு அழற்சியினைப் போக்க வல்லது.
கனிகள் கொழுப்பு சேர்வதை கரைக்கிறது.
கத்தரிக்காய் கல்லீரல் நோய்களுக்கு நல்ல மருந்தாகும்.
அதிகரித்த ரத்த அழுத்தத்தை கத்தரிக்காய் குறைக்கிறது.
ரத்தத்தில் கொழுப்பு அளவை குறைக்கிறது.
மூல நோய்க்கு மேல் பூச்சாக பயன்படுகிறது.
நசுக்கப்பட்ட கனி வெங்குரு, வெயில் காரணமாக முகம்கன்றி சிவந்திருத்தலை போக்க வல்லது.
வேர் ஆஸ்துமா மற்றும் மூக்கில் தோன்றும் புண்களுக்கு மருந்தாகிறது.
வேரின் சாறு காதுவலி போக்க பயன்படுகிறது.
ஜெர்மனி நாட்டில் நடத்தப்பட்ட ஆய்வுகள் கத்தரியின் மருத்துவப் பயன்பாட்டினை உறுதிப்படுத்தியுள்ளன. சுத்த ரத்த குழாய்களில் கொழுப்பு படிவதை தடுக்க உதவுகிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.
புற்றுநோய்யை தடுக்கும்.
மலேரியாவால் வீக்கமடைந்த மண்ணீரலை கத்தரிக்காய் பலப்படுத்தி வீக்கத்தை குறைக்கும்.
துõக்கமின்மை தீர வேகவைத்த கத்தரிக்காயை தேனுடன் அருந்த நன்கு ஆழ்ந்த நித்திரை கிடைக்கும்.
வாயு தொல்லை, சளி தீர கத்தரிக்காயை வேகவைத்து உப்பு, பெருங்காயம் சேர்த்து அருந்தவும்.
பசியை அதிகரிக்கவும், சீரண சக்தியை துõண்ட வேகவைத்த கத்தரிக்காயை தக்காளியுடன் சூப்பாக்கி மிளகுதுõள், உப்பு சேர்த்து அருந்த பசி அதிகரிக்கும்.
சீனமருத்துவத்தில் கத்தரிக்காயின் எல்லா பகுதிகளும் குடல் ரத்தக்கசிவை நிறுத்த பயன்படுத்தப்படுகிறது.
கத்தரிக்காயில் உள்ள மருத்துவ பயன்மிக்க வேதிப்பொருட்கள் புற்றுநோய், வலிப்பு நோய் வராமல் தடுக்கும் சிறப்பு குணமுடையது.
குறிப்பு: அதிக அமிலத்துவம் உடையவர்கள், கருத்தரித்த பெண்கள், சிறுநீரக கல் நோயாளிகள் கத்தரிக்காயை பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
தேவராஜன்


ஆரோக்கிய கருவூலம் பீட்ருட்!

நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பீட் ருட் பயிரிடப்படுகிறது. பாபிலோனியர்களால் முதலில் பயன்படுத்தப்பட்டது. கிரேக்க, ரோமானியர்கள் இதன் வேரை மருத்துவத்திற்காகவும், இலையை காய்கறியாகவும் பயன்படுத்தினர்.
பீட்ருட்டில் பல வகைகள் காணப்படுகிறது. வெள்ளை மற்றும் சிவப்பு வகைகள் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.
பயன்படுத்தப்படும் பகுதி: கிழங்கு, இலை
செய்கை: குளிர்ச்சி உண்டாக்கி, உடல் வலிமையாக்கி, புற்று நோய்க்கு எதிரானது, ருதுஉண்டாக்கி, மலமிளக்கி, பசித்துõண்டி, காமம் பெருக்கி.
தாது உப்புக்கள்: பொட்டாசியம், பாஸ்பரஸ், கால்சியம், சல்பர், அயோடின், இரும்புச்சத்து,மாங்கனீசு, குளோரின், தாமிரச்சத்து.
உயிர் சத்துகள்: தையாமின், ரிபோளேவின், நியாசின்,விட்டமின் சி,பி6, கரோட்டின், ருபிடகியம், சீசியம், அமினோ அமிலங்கள், பீட்டைன்.
ஊட்டச்சத்து மதிப்பு:
100 கிராம் பச்சை பீட்ருட்டில் அடங்கியுள்ள ஊட்டச்சத்து.
சக்தி43 கலோரி, நீர்சத்து87.58 கிராம், புரதம்1.61 கிராம், கொழுப்பு0.17 கிராம், நார்சத்து 2.8 சதவீதம், கார்போஹைட்ரேட் 9.56 சதவீதம், உயிர்சத்துஏ 2 மி.கிராம், பீட்டா கரோட்டின் 20 மி.கிராம், தையாமின்0.031 மி.கிராம், ரிபோளேவின்0.040 மி.கிராம், நியாசின் 0.334 மி.கிராம், விட்டமின்பி50.155 மி.கிராம், விட்டமின்பி6 0.067மி.கிராம், போலேட் 109 மி.கிராம், விட்டமின்சி 4.9 மி.கிராம், கால்சியம் 16 மி.கிராம், பொட்டாசியம் 325 மி.கிராம், பாஸ்பரஸ் 40 மி.கிராம், இரும்புசத்து 0.80 மி.கிராம், மெக்னீசியம் 23 மி.கிராம், துத்தநாகம் 0.35 மி.கிராம்.
பீட்ருட் தீர்க்கும் நோய்கள்:
முகப்பரு, ரத்தசோகை, புற்றுநோய், மூலம், கழிச்சல், மாதவிடாய் வலி, மஞ்சள்காமாலை, வாய்குமட்டல், மலச்சிக்கல், ரத்தப்புற்றுநோய், உடல் சோர்வு, கல்லடைப்பு, பித்தபைகல், மூச்சுதிணறல், தலைவலி, கண்பார்வை குறைவு, பொடுகு,அதிக ரத்த அழுத்தம், அதிக கொழுப்புசத்து, இதயநோய்கள்.
பயன்படுத்தும் முறைகள்:
வயிற்றுப்புண்: அல்சர் குணமாக தினமும் 30 மில்லி பீட்ருட் சாறை 2 ஸ்பூன் தேனுடன் கலந்து வெறும் வயிற்றில் அருந்த வயிற்றுப்புண், வயிற்று வலி தீரும். தொடர்ந்து ஒரு மாதம் அருந்த முழுவதும் குணமடையலாம்.
வாந்தி: தினமும் பீட்ருட் சாறு 50 மில்லி, எலுமிச்சை சாறு 15 மில்லி சேர்த்து 15 நாட்கள் அருந்த வாந்தி, பித்த வாந்தி, வாய்க்குமட்டல், கழிச்சல் தீரும்.
சிறுநீரக கல்லடைப்பு: பீட்ருட், கேரட், வெள்ளரி சாறு தலா 30 மில்லி எடுத்து தினமும் ஒரு வேளை என ஒரு மாதம் பருக சிறுநீரக, பித்தப்பை கல் கரையும்.
உடல் எடை அதிகரிக்க: பீட்ருட் சாறு 30 மில்லி, கேரட் சாறு 30 மில்லி, பால் 40 மில்லி தேவையான அளவு சர்க்கரை சேர்த்து தொடர்ந்து ஒரு மாதம் ஒருவேளை பருகி வந்தால் உடல் எடை ஒரு மாதத்தில் 3 முதல் 4 கிலோ அதிகரிக்கும். உடல் சோர்வு, அசதி நீங்கும். உடலில் ரத்த அணுக்கள் கூடம். தோல், முகம் பொலிவடையும்.
மலச்சிக்கல்: பீட்ருட் வாரம் 3 முறை சாறாக பருகி வர சிறுகுடல், பெருங்குடல் சுருங்கி விரிதல் அதிகரித்து மலச்சிக்கல் போக்கும். ரத்த மூலம் தீரும்.
புற்றுநோய் ஒழிக்கும்: பீட்ருட்டில் ப்ளேவினாய்டு இருப்பதால் புற்றுநோய் அழிக்கும்.
கொழுப்புசத்து குறைய: இதில் நைட்ரேட் இருப்பதால் இதயத்திற்கு செல்லும் ரத்தம் மற்றும் ஆக்ஸிஜன் அளவை அதிகரித்து ரத்த குழாய் விரிவடைய செய்து இதயத்தை பலப்படுத்துகிறது.
கல்லீரலை பலப்படுத்த: இதில் பீடெய்ன் இருப்பதால் கல்லீரல் பாதிப்பு, மது அருந்துவோர் இதை உணவில் அதிகம் பயன்படுத்த பீட்டெய்ன் வேதிப்பொருளானது கல்லீரல் செல்களை துõண்டி கல்லீரலை பலப்படுத்தும்.
9.புற்றுநோய்க்கு: இதில் பீட்டாசையனில் வேதிப்பொருள் இருப்பதால் இது உடலில் உள்ள தீங்கு தரும் நச்சுபொருட்களை நீக்கி புற்றுநோயுடன் போராடும்.
உடல் வலிமையாக: பீட்ருட்டில் உள்ள இரும்புசத்து, ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். முகத்தை பொலிவடைய செய்யும். நகங்கள், தோல், முடியை பலப்படுத்தும். வயது முதிர்வை தடுத்து இளவயது தோற்றத்தை தரும்.
பால் உணர்வை அதிகரிக்க: பீட்ருட்டில் போரான் என்ற வேதிப்பொருள் இருப்பதால் மனித உடலில் ஆண் பெண் இருபாலாருக்கும் பால் உ<ணர்வை துõண்டும் ஹார்மோன்கள் உற்பத்தியை அதிகரிக்கும்.
மன அழுத்தம் தீர: மூளையை துõண்டி, மூளையில் உள்ள நச்சு பொருட்களை அகற்றும். இதனால் மன அழுத்தம், குழப்பம் தீர்ந்து புத்துணர்வோடு, சிரித்த முகத்துடன் இனிதாக வாழலாம்.
கண் பார்வைக்கு: விட்டமின் ஏ இருப்பதால் பார்வை குறைவை நீக்கும்.
குறிப்பு: சர்க்கரை நோயாளிகள் வாரம் ஒரு முறை மட்டும் பயன்படுத்தவும்.
தேவராஜன்


முதுமை தடுக்கும் முட்டைக்கோஸ்

உலக முட்டைக் கோஸ் தினம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 17ம் தேதி கொண்டாடப்படுவதன் மூலம் உடல் ஆரோக்கியத்திற்கு முட்டைக்கோஸின் முக்கியத்துவம் வலியுறுத்தப்படுகிறது.
இந்தியாவில் மலைப்பாங்கான இடங்களில் அதிகம் வளர்க்கப்படுகிறது.
பயன்படும் உறுப்பு: விதை, இலை
வகைகள்: பச்சை, சிவப்பு என 2 வகை. இரண்டுமே மருத்துவப்பயன் உடையது.
செய்கை: புற்று நோய்க்கு எதிரானது.
கிருமி நாசினி.
வயது முதிர்வை தடுக்கும்.
மலமிளக்கி.
100 கிராம் முட்டைக்கோசில் உள்ள ஊட்டச்சத்துகள்:
சக்தி 25 கலோரி, கார்போஹைட்ரேட் 5.8 கிராம், சர்க்கரை 3.2 கிராம், நார்சத்து2.5 கிராம், கொழுப்பு0.1 கிராம், புரதம்1.28 கிராம், தையாமின் 0.061 மி.கிராம், ரிபோளேவின் 0.040 மி.கிராம், நியாசின் 0.234 மி.கிராம், பான்டோதெனிக் அமிலம் 0.212 மி.கிராம், விட்டமின் பி6 0.124 மி.கிராம், போலேட் 53 மி.கிராம், விட்டமின்சி 36.6 மி.கிராம், கால்சியம் 40 மி.கிராம், இரும்புசத்து 0.47 மி.கிராம், மெக்னீசியம்12 மி.கிராம், பாஸ்பரஸ் 26 மி.கிராம், பொட்õசியம் 170 மி.கிராம், துத்தநாகம் 0.18 மி.கிராம் என்று முட்டைக்கோசில் உடல் வளர்ச்சிக்கும், மூளை வளர்ச்சிக்கும் இன்றியமையாத அனைத்து தாது உப்புக்கள், உயிர்சத்துக்கள் அதிக அளவில் உள்ளது.
மருத்துவப் பயன்கள்:
முட்டைக்கோசில் அதிகளவு கந்தகசத்து மற்றும் குளோரின் சத்து இருப்பதால் இதற்கு வயிறு, உணவு பாதையின் சவ்வு மற்றும் சுவரில் உள்ள நஞ்சை அகற்றி குடலை சுத்தப்படுத்தும். ஆனால், முட்டைக்கோசை பச்சையாக உப்பின்றி உண்ண மட்டுமே இந்தப் பலனை பெறலாம்.
முட்டைக்கோசில் குடல் புண்ணுக்கு எதிரான உயிர்சத்து இருப்பதால் வயிற்று புண்ணை குணப்படுத்தும். சமைத்து உண்டால் விட்டமின் சத்து அழிந்துவிடும்.
முட்டைக்கோசில் டார்ட்ரானிக் அமிலம் இருப்பதால் அதிக உடல் பருமனை குறைக்கிறது. டார்ட்ரானிக் அமிலமானது நாம் உண்ணும் சர்க்கரை மற்றும் மாவுப் பொருள் கொழுப்பாக மாறுவதை தடுத்து உடல் பருமனை குறைக்கிறது.
முட்டைக்கோசில் அதிகளவு பீட்டாகரோட்டின் இருப்பதால் உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள கண்ணில் புரை வளர்தல் தடுக்கப்படுகிறது.
முட்டைக்கோசை கர்ப்பிணிகள் தவறாது வாரம் 2 முறை உணவில் சேர்த்துக்கொள்ள குழந்தையின் தண்டுவடம் எவ்வித குறையுமின்றி குழந்தை பிறக்கும்.
முட்டைக்கோசில் உள்ள போலிக் அமிலம் தண்டுவட என்புகள் வளர்ச்சியை பலப்படுத்தும்.
முட்டைக்கோசில் அதிகளவு பீட்டாரோட்டில் இருப்பதால் இவை நம் உடலில் ரத்த ஓட்டத்தில் தீங்கு விளைவிக்கும் வயது முதிர்வுவை அதிகப்படுத்தும் செல்லை அகற்றி இளமை தரும். எனவே வயது முதிர்வு, நரை, உடல் சோர்வை தடுக்க உணவில் அதிகளவு முட்டைக்கோசை பயன்படுத்தணும்.
முட்டைக்கோசில் உள்ள கந்தகசத்து, ஹிஸ்டிடின், கரோட்டின் இவை மூன்றுமே புற்று நோய் நம் உடலில் அணுகாதவாறு தடுக்கும்.
முட்டைக்கோசில் உள்ள இண்டோல்3 கார்பினால் புற்றுநோய் செல்கள் வராமல் தடுக்கிறது.
முட்டைக்கோஸ் மூட்டுவலி, வாத நோய்களை நீக்குகிறது. இதில் உள்ள குளுட்டாமிக் அமிலம் மூட்டுகளை பலப்படுத்துகிறது.
பயன்படுத்தும் முறைகள்:
வயிற்றுபுண் தீர: முட்டைக்கோஸ் சாறு 2550 மில்லி பச்சையாக தினமும் அருந்த வயிற்றுவலி, அமிலத்தன்மை குணமாகும்.
இரைப்பிருமல் தீர: முட்டைக்கோஸ் சாறு, துளசி இலை, தேன் சேர்த்து அருந்த ஆஸ்துமா குணமாகும்.
கல்லீரலை பலப்படுத்த: மது குடிப்பதால் ஏற்படும் கல்லீரல் பாதிப்பை நீக்க முட்டைக்கோசை வாரம் 2 அல்லது 3 முறை கரிசலா ங்கண்ணி சாறுடன் சேர்த்து அருந்த குடிப்பதால் ஏற்படும் நஞ்சை அகற்றுவதோடு கல்லீரலை பலப்படுத்தும்.
பால்சுரப்பை அதிகரிக்க: பால் ஊட்டும் தாய்மார்களுக்கு போதிய அளவு பால் சுரக்க வில்லை என்றால் வாரம் 3 முறை பருப்புடன் சேர்த்து சமைத்து உண்ண பால் சுரப்பை அதிகப்படுத்தும்.
புற்றுநோய் வராமல் தடுக்க:
முட்டைக்கோஸ் இலையை வாரத்தில் 3 நாட்கள் வீதம் தொடர்ந்து உண்பவர்களுக்கு மார்பகம், வயிறு, பெருங்குடலில் புற்று நோய் வராமல் தடுப்பதாக அறிவியல் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது.
தசைகளை பலப்படுத்த: தசைகள் பலமின்றி காணும் குழந்தைகளுக்கு பருப்புடன் சேர்த்து கூட்டாக சமைத்து தர தசைகளை பலப்படுத்தும். முட்டைக்கோசில் அதிகஅளவு உள்ள அயோடின் சத்து தசை வளர்ச்சியை பலப்படுத்துகிறது.
தலைவலி நீங்க: இதன் இலையை நெற்றிப் பொட்டில் அரைத்து பற்றிட ஒற்றை தலைவலி, தலைவலி தீரும்.
கட்டி, வீக்கம் நீங்க: முட்டைக்கோஸ் இலையை அரைத்து மஞ்சளுடன் சேர்த்து பற்றிட வீக்கம், கட்டி, புண் நீங்கும்.
தோல் பளபளப்பாக: முட்டைக்கோஸ் சாறுடன், தேன் அல்லது பன்னீர் சேர்த்து முகத்தில் தடவி 30 நிமிடம் ஊறவைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவ தோல் பளபளப்பாகும். தோல் சுருக்கம் நீங்கும்.
குறிப்பு: தைராய்டு நோயாளிகள் முட்டைக்கோஸ் தவிர்ப்பது நல்லது.
சிவப்பு முட்டைக்கோஸ்:
சிவப்பு முட்டைக்கோசில் ஆன்த்தோசயனின் வேதிப்பொருள் அதிகளவில் இருப்பதால் மூளை செல்களை பாதுகாத்து வயோதிக ஞாபகமறதியை போக்குகிறது.
இந்த வகை முட்டைக்கோசில் நார்சத்து, உயிர்சத்து, கால்சியம், இரும்பு சத்து, பொட்õசியம் இருப்பதால் குழந்தைகள், வயதானவர்கள், உடல்பலவீனமானவர்கள் இதை அதிகம் பயன்படுத்தினால் ஆரோக்கியமாக வாழலாம்.
தேவராஜன்


எலும்பை பலப்படுத்தும் பச்சை பட்டாணி!

இந்தியாவில் வெப்பமண்டல பகுதிகளில் அதிகம் பயிரிடப்படுகிறது. உத்திர பிரதேசத்திலும், வங்காள தேசத்திலும் அதிகம் பயிரிடப்படுகிறது.
சுவை: விதை இனிப்பு சுவையுடையது.
செய்கை: பசித்துõண்டி, குளிர்ச்சி உண்டாக்கி, உடல் வலிமை ஏற்றி.
ஊட்டச்சத்துகள்:
பச்சை பட்டாணியில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. 8 விதமான உயிர்சத்துக்களும், 6 விதமான தாது உப்புகளும் மற்றும் நார்சத்து, புரதம் அதிகம் உள்ளது. புரதம் அதிகளவாக 15.5 முதல் 39.7 சதவீதம் வரை காணப்படுகிறது.
எனவே வளரும் குழந்தைகளுக்கு இதை உணவாக சமைத்து தர உடல் வளர்ச்சி, எலும்பு வளர்ச்சி ஏற்படும்.
100 கிராம் பச்சை பட்டாணியில் உள்ள சத்துக்கள்:
சக்தி 44 கலோரி, நீர்ச்சத்து 75.6 சதவீதம், புரதம் 6.2 கிராம், கொழுப்புச்சத்து 0.4 கிராம், கார்போஹைட்ரேட் 16.9 கிராம், நார்சத்து 2.4 கிராம், சாம்பல் சத்து 0.9 கிராம், கால்சியம் 32 மில்லி கிராம், பாஸ்பரஸ் 102 மி.கிராம், இரும்புசத்து 1.2 மி.கிராம், சோடியம் 6 மி.கிராம், பொட்டாசியம் 350 மி.கிராம், பீட்டாகரோட்டீன் 450 மி.கிராம், தையாமின் 34 மி.கிராம்,ரிபோளேவின் 16 மி.கிராம், நியாசின் 2.7 மி.கிராம், அஸ்கார்பிக் அமிலம் 26 மி.கிராம், விட்டமின்ஏ 680 ஐயு.
மருத்துவ பயன்கள்:
பச்சை பட்டாணியில் நிகோடினிக் அமிலம் என்ற வேதிப்பொருள் இருப்பதால் இது ரத்தத்தில் அதிகளவு கொலஸ்டீரால் இருந்தால் அதை குறைக்கிறது.
பச்சை பட்டாணியில் லேக்டின் என்ற புரதப்பொருள் இருப்பதால் ரத்த சிவப்பு அணுக்கள் உறைந்து ரத்தக் கட்டுகளாக மாறுவதை தடுக்கிறது. இதனால் மாரடைப்பு, பக்கவாதம் வராமல் தடுக்கலாம்.
பச்சை பட்டாணியில் அதிகளவு விட்டமின்லு, விட்டமின் சி இருப்பதால் எல்லா வகையான புற்று நோய்களால் நாம் பாதிக்காதவாறு பாதுகாக்கிறது.
பச்சை பட்டாணியில் கரையாத நார்சத்து இருப்பதால், கொழுப்பு சத்தை குறைத்து இதயநோய், பக்கவாதம் வராமல் தடுக்கிறது.
பச்சை பட்டாணியில் லுõட்டின் என்ற கரோட்டீனாய்டு இருப்பதால் வயதானவர்களுக்கு கண்ணில் ஏற்படு புரை வளர்தலை குறைக்கிறது.
பச்சை பட்டாணியில் அதிகளவு இரும்புசத்து இருப்பதால் நம் உடலில் ரத்த அணுக்கள் உற்பத்தியை அதிகரித்து ரத்த சோகையை போக்கி உடல் சோர்வு, நோய் எதிர்ப்பு சக்தி குறைதல், கவனக்குறைவு ஆகியவற்றை போக்குகிறது.
விட்டமின் கே இருப்பதால் எலும்புகளை பலப்படுத்தி, பாதுகாக்கிறது.
பச்சை பட்டாணியில் விட்டமின் சி இருப்பதால் ரத்த புற்று, நுரையீரல் புற்று, ஆசனவாய் புற்று போன்ற எல்லா புற்று நோய் வராமல் தடுக்கிறது.
பச்சைபட்டாணியில் உள்ள விட்டமின் பி6 ரத்த குழாய் சுவர் சுருங்குதலைத் தடுத்து, இதய நோய்களிலிருந்து பாதுகாக்கிறது.

பச்சை பட்டாணியும் தீரும் நோய்களும்:
பச்சைபட்டாணியில் விட்டமின் பி6, இரும்பு சத்து இருக்கிறது. இவை இரண்டுமே ஹோமோசிஸ்டைன் என்ற ஆபத்தை விளைவிக்கும் வேதிப் பொருள் உடலில் உருவாவதை தடுக்கிறது. இந்த வேதிப்பொருள் தான் மாதவிடாய் நின்ற பெண்களுக்கும், வயதானவர்களுக்கும் எலும்பு பலம் குன்றல் ஏற்பட காரணமான மூலப்பொருள். எனனே மாதவிடாய் நின்ற பெண்கள், வயதானவர்கள் பச்சை பட்டாணியை உட்கொண்டால் எலம்பு பலமடையும். மூட்டு வலி, எலும்பு முறிவு வராமல் தடுக்கலாம்.
மேலும் இந்த ஹோமோசிஸ்டைன் ரத்த குழாய் சுவர் சுருங்குதல் ஏற்படவும் காரணமான மூலப்பொருள் எனவே ரத்த குழாய் சுவரை பாதுகாத்து மாரடைப்பை தடுக்க பச்சை பட்டாணியை வாரம் 2 முறை உட்கொள்ள வேண்டும்.
மேலும், ரத்த சோகை தீர, புற்றுநோய் தடுக்க, ரத்தத்தில் உள்ள கொலஸ்டீராலை குறைக்க பச்சைபட்டாணி உதவுகிறது.
பயன்படுத்தும் முறைகள்:
பச்சை பட்டாணியை வேகவைத்து உப்பு, மிளகு சேர்த்து வாரம் 2 முறை வளரும் குழந்தைகளுக்கு தர உடல், மனம் பலப்பட்டு ஆரோக்கியமாக காணப்படுவர்.
பச்சை பட்டாணி, கேரட், புதினா, பீன்ஸ் சேர்த்து வேகவைத்து உப்பு சேர்த்து சூப்பாக சிற்றுண்டிக்கு பதில் குழந்தைகளுக்குத் தரலாம்.
உடல் எடை அதிகரிக்க இதனுடன் உருளைகிழங்கு சேர்த்து சமைத்து தரலாம்.
குறிப்பு: பச்சை பட்டாணியில் ப்யூரின் என்ற வேதிப்பொருள் இருக்கிறது. ப்யூரின் பொதுவாக தாவரங்கள், விலங்குகள், மனித உடலிலும் காணப்படும். ப்யூரின் தொடர்பான கோளாறு உள்ளவர்கள், சிறுநீரக நோயினர் இதை பயன்படுத்தக்கூடாது.
தேவராஜன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக